எனக்குப் புரியலீங்க


நாம காத்திருக்க பஸ் வராம வேற ரூட்ல போற பஸ்ஸு வரும். அதே சமயம் வேறொரு நாள்ல இந்த பஸ்ஸுக்குக் காத்திருந்தா வேற பஸ்ஸு அடிக்கடி வந்து வெறுப்பேத்தும்.

அதே மாதிரி டிக்கட் கவுண்டர்ல நாம நிக்கிற க்யூ நகராது. பக்கத்து க்யூ எல்லாம் சீக்கிரம் நகரும். டக்குன்னு அதுல போய் நின்னா, நாம் கவுண்டர் கிட்ட வந்ததும் குளோஸ் பன்ணிடுவான்.

இதெல்லாம் ஏன் இப்படின்னு தெரியல. அதே மாதிரி கீழே இருக்கதும் எனக்குப் புரியல(கல்யாணமாகி 20 வருஷம் ஆன பின்னாலும்). யாராவது புரிஞ்சவங்க விளக்குங்க ப்ளீஸ்.

1. நம்ம தம்பிக என்னதான் நல்லாப் படிச்சு நல்ல உத்தியோகத்துல இருந்தாலும் நம்ம தங்கமணிக மதிக்கிறது இல்ல. ஆனா அவங்க தம்பி எத்தனை அரியர் வச்சிப் பாஸ் பண்ணியிருந்தாலும் ரெம்ப உயர்வானவன். செமஸ்டர் எழுதும்போது உடம்பு சரியில்லாம்ப் போயிருக்கும் இல்லைன்னா, வாத்தியார் கஞ்சத்தனமா மார்க் போட்டிருப்பார்.

2. ஊர்ல இருந்து நம்ம அப்பா அம்மா வந்தாலே தங்கமணிக்கு உடம்பு சரியில்லாமப் போயிரும். ஆனா அதே அவங்க அப்பா அம்மா வந்தா சரியில்லாத உடம்புகூட சரியாகிடும் சட்டுன்னு.

3. நம்ம பிறந்த ஊருக்குப் போனா உடனே கிளம்புங்க கிளம்புங்கன்னு அடம்பிடிப்பாங்க. தண்ணி வரும் செடியெல்லாம் வாடும்னு டயலாக்கெல்லாம் சொல்லுவாங்க. ஆனா அதே அவங்க வீட்டுக்குப் போய் நாலு நாளானாலும் இப்பத்தானே வந்தோம் இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்பாங்க.

4. அவங்க ஆசையா எடுத்துக் குடுத்த சட்டை நமக்குப் பிடிக்கலன்னாலும், நல்லா இருக்குன்னு சொல்லிப் போட்டுக்குவோம். அதே நாம எடுத்துக்குடுத்த சேலை கலர் சரியில்லை, டிசைன் சரியில்லை, பார்டர் சரியில்லை குறைஞ்ச பட்சம் அதிக விலைன்னு சொல்லியாவது நம்மள நோகடிப்பாங்க.

5. அவங்க சைடு ஆளுக வரும்போது செய்யுற விசேச சமையல் நம்ம சைடு ஆளுக வரும்போது ஒப்பேத்துன சமையலா மாறுவது என்ன அதிசயம்ங்க.

6. அவங்களுக்குத் தெரியாம வீட்டுக்கு வெளியகூட நம்மால் 10 ரூபாய் சேர்த்து வைக்க முடியல. ஆனா நம்ம வீட்டுலயே நமக்குத் தெரியாம ஆயிரக்கணக்குல ஒளிச்சு வச்சிருப்பாங்க.

7. ஈ பி பில்லக் கட்டி, வீட்டு வாடகை ஒழுங்காக் கொடுத்து, கேபிள், மளிகைன்னு எல்லாத்தையும் சரியாச் செய்வோம். ஆனா ஒரு வேலை செய்யத் துப்பில்லைன்னு திட்டுவாங்க. அதே அவங்க அக்கா வீட்டுக் காரர் ஒருவேலைக்கும் ஆக மாட்டார் அவரை ரெம்பத் தூக்கி வச்சுப் பேசுவாங்க.

8. நம்ம குழந்தை குறும்பு பண்ணுனாலோ அல்லது ஏதாவது ஏடாகூடம் பண்ணுனாலோ உங்க வாரிசப் பாருங்கம்பாங்க. அதே நம்ம வாரிசு ஏதோ கோப்பையோ அல்லது பரிசோ வாங்கி வந்தால் எம்புள்ளைன்னு உச்சி முகர்வாங்க.

9. ஆபீஸ்ல முடிக்க முடியாத ஒரு வேலைய எடுத்துவந்து வீட்டுல செய்யும்போதுதான் நொய் நொய்ன்னு ஏதாவது வேலை சொல்லுவாங்க. ஆனா கழிசடையா ஒரு சீரியல் பாத்திட்டிருக்கும்போது நாம ஒரு வேலை சொன்னா சீரியல் பாத்திட்டிருக்கேன்லம்பாங்க.

10. அரைப்பவுன்ல ஒரு மோதிரம் இல்ல அதிகப்பட்சமா ஒரு பவுன்ல ஒரு செயின் அவ்வளவுதான் நமக்கு. ஆனா அவங்க மட்டும் வருஷா வருஷம் புதுசா வாங்குவாங்க. இல்லன்னாலும் அழிச்சு டிசைன் மாத்துவாங்க.

டிஸ்கி : சும்மா தமாசுக்கு.

.

47 comments

  1. அண்ணாச்சி.. 20 வருடமா? கல்யாணமாகி மூன்று வருடத்தில் இதையெல்லாம் அனுபவிச்சாச்சு… இதெல்லாம் ரங்கமணிகளுக்கு டிபால்ட்டா கிடைக்கும் போல இருக்கு.. 😉

  2. அப்புறம் அண்ணிக்கு இந்த பதிவை பிரிண்ட் போட்டு காட்டும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    அளவில்லா வம்புடன்
    தமிழ் பிரியன்

  3. //அவங்க ஆசையா எடுத்துக் குடுத்த சட்டை நமக்குப் பிடிக்கலன்னாலும், நல்லா இருக்குன்னு சொல்லிப் போட்டுக்குவோம். அதே நாம எடுத்துக்குடுத்த சேலை கலர் சரியில்லை, டிசைன் சரியில்லை, பார்டர் சரியில்லை குறைஞ்ச பட்சம் அதிக விலைன்னு சொல்லியாவது நம்மள நோகடிப்பாங்க.//
    ஆம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா அண்ணாச்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  4. //தமிழ் பிரியன் said…
    அப்புறம் அண்ணிக்கு இந்த பதிவை பிரிண்ட் போட்டு காட்டும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    அளவில்லா வம்புடன்
    தமிழ் பிரியன்//

    ரிப்பீட்டேய்………..

  5. 20வருச குடும்ப வாழ்க்கையின் அனுபவம் நல்லாவே தெரியுது அண்ணாச்சி

  6. //அரைப்பவுன்ல ஒரு மோதிரம் இல்ல அதிகப்பட்சமா ஒரு பவுன்ல ஒரு செயின் அவ்வளவுதான் நமக்கு. ஆனா அவங்க மட்டும் வருஷா வருஷம் புதுசா வாங்குவாங்க. இல்லன்னாலும் அழிச்சு டிசைன் மாத்துவாங்க.//

    என்னதான் இரண்டு பவுன்ல வளையல் வாங்கிக் கொடுத்தாலும்…இப்படியா சொல்லிக்காட்டுவது (ஏதோ நம்மல் முடிந்தது :-))))) )

  7. மண்ணின் மகிமை,

    மாற்றுவது சாதனைதான்

    வாழ்த்துக்கள்…

  8. அது எப்படிங்க எங்க வீட்ல நடக்கறதை அப்படி எ போட்டு இருக்கீங்க ?

  9. கல்யாணம் பண்ணா இப்படியெல்லாம் நடக்குமா.. நல்ல வேளை நா மாட்டல..

  10. பதிவு நிதர்சனம்.

    விடை தேடுபவர்களுள் நானும் ஒருவன். தெரிஞ்சா சொல்லியனுப்புங்க.

    இதுமாதிரி பதிவு எழுத நானும் நினைத்தேன்..கொஞ்சம் பயமாயிருந்த்தால விட்டுட்டேன்.
    (என்னோட ப்ரூப் ரீடர் அவங்கதான் !!)

    நிஜமா சொல்லுங்க.. எங்கிருந்து வந்துச்சு இந்த தைரியம்? ஊருக்கு போயிருக்காங்களா?

    :))

  11. அட்டகாசம். ஆனா, குறைந்த பட்சம் உங்களால வெளிய சொல்லவாவது முடியுது. ஹ்ம்ம். இதோ வந்திட்டேன்.

    அனுஜன்யா

  12. இப்படி பதிவு போட்டு, பதிவு போட்டே கார்க்கிய கட்டப் பிரம்மச்சாரியா ஆக்கினது போதாதா…?!

  13. வழிமொழிவதைத் தவிர வேற வழி இல்லை எனக்கு!

  14. அண்ணாச்சி
    உங்க தைரியம் வேற எந்த ரங்க்ஸ்க்கும் வராது அப்டின்னு உங்க தைரியத்த வியந்துகிட்டே படிச்சேன், கடைசில நீங்க ஒரு டிஸ்கி போட்ருக்கீங்களே, அங்க நிக்கிறீங்க நீங்க.
    எல்லாத்தையும் கொட்டித் தீர்த்துட்டு கடைசியா நகைச்சுவைன்னு சொன்னீங்க பாருங்க, இது தான் அண்ணாச்சி அனுபவம்னு சொல்றது.

  15. இப்பிடி நேத்திக்கி வந்தவய்ங்கல்லாம் எங்க சப்ஜெக்ட எடுத்துக்கிட்டா நாங்க என்ன பண்றது? கடையை சாத்திகிட்டு கிளம்பிடறதா.?

    முதல்ல காப்பிரைட்ஸ் வாங்கி வச்சுக்கணும்ப்பா..

  16. கலக்கல்ஸ்.. ஆஃப் குடும்பம்.!

  17. வேலன்!

    ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு.

  18. என்ன அண்ணாச்சி பயமுறுத்தறிங்க…

  19. வாங்க வாங்க.. டென் மேட்டர் டீமுக்கு வருக வருகவென வரவேற்கிறோம்!

    அடிவிழாத த.பு.நல்வாழ்த்துகள்!

  20. ‘////நம்ம பிறந்த ஊருக்குப் போனா உடனே கிளம்புங்க கிளம்புங்கன்னு அடம்பிடிப்பாங்க. தண்ணி வரும் செடியெல்லாம் வாடும்னு டயலாக்கெல்லாம் சொல்லுவாங்க. ஆனா அதே அவங்க வீட்டுக்குப் போய் நாலு நாளானாலும் இப்பத்தானே வந்தோம் இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்பாங்க.////

    ரங்கமணி சார் உங்க வீட்டில் இருந்தால் உங்க பர்ஸ் காலி ஆகும் .அவங்க வீட்டில் இருந்தால் …………

    போகும் பொது ஒரு பெட்டியோடு போவாங்க ..வரும் போது பெட்டி குட்டி போட்டு நாலுக்கு குறையாமல் தான வருவாங்க .’

  21. ////நம்ம பிறந்த ஊருக்குப் போனா உடனே கிளம்புங்க கிளம்புங்கன்னு அடம்பிடிப்பாங்க. தண்ணி வரும் செடியெல்லாம் வாடும்னு டயலாக்கெல்லாம் சொல்லுவாங்க. ஆனா அதே அவங்க வீட்டுக்குப் போய் நாலு நாளானாலும் இப்பத்தானே வந்தோம் இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்பாங்க.////

    ரங்கமணி சார் உங்க வீட்டில் இருந்தால் உங்க பர்ஸ் காலி ஆகும் .அவங்க வீட்டில் இருந்தால் …………

    போகும் பொது ஒரு பெட்டியோடு போவாங்க ..வரும் போது பெட்டி குட்டி போட்டு நாலுக்கு குறையாமல் தான வருவாங்க .

  22. //அவங்களுக்குத் தெரியாம வீட்டுக்கு வெளியகூட நம்மால் 10 ரூபாய் சேர்த்து வைக்க முடியல. ஆனா நம்ம வீட்டுலயே நமக்குத் தெரியாம ஆயிரக்கணக்குல ஒளிச்சு வச்சிருப்பாங்க.//

    தெய்வமே!!
    நமக்கே கடனும் கொடுத்து மீட்டர் வட்டி கறக்கற கொடுமைய விட்டுட்டீங்களே அண்ணாச்சி!

  23. அண்ணே…

    மில்லியண் டாலர் கேள்வி அப்படின்னு சொல்லுவாங்க இல்ல…

    அது நீங்க கேட்ட கேள்விகள்தாங்க.

    உங்களுக்கு 20 வருஷம், எனக்கு 16 1/2 வருஷம்.

    விடையில்லாத கேள்விகளைக் கேட்டு இருக்கீங்க…

  24. // ஆதிமூலகிருஷ்ணன் said…

    இப்பிடி நேத்திக்கி வந்தவய்ங்கல்லாம் எங்க சப்ஜெக்ட எடுத்துக்கிட்டா நாங்க என்ன பண்றது? கடையை சாத்திகிட்டு கிளம்பிடறதா.?

    முதல்ல காப்பிரைட்ஸ் வாங்கி வச்சுக்கணும்ப்பா.. //

    இது யூனிவர்சல் ப்ராப்ளம்.

    நோ காப்பி ரைட்ஸ் ப்ளீஸ்.

  25. // //அவங்க ஆசையா எடுத்துக் குடுத்த சட்டை நமக்குப் பிடிக்கலன்னாலும், நல்லா இருக்குன்னு சொல்லிப் போட்டுக்குவோம். அதே நாம எடுத்துக்குடுத்த சேலை கலர் சரியில்லை, டிசைன் சரியில்லை, பார்டர் சரியில்லை குறைஞ்ச பட்சம் அதிக விலைன்னு சொல்லியாவது நம்மள நோகடிப்பாங்க.//

    நான் இந்த வம்பு எல்லாம் வைத்துக் கொள்வதில்லை.

    பணம் கொடுப்பது மட்டும்தான் என் வேலை. அடுத்து கார் ஓட்டுவது.

    இந்த புடவை நல்லா இருக்குங்களா அப்படின்னு கேட்டா…

    சூப்பர் அப்படின்னு ஒரு பதில். பணத்தை கட்டிட்டு லக்கேஜ தூக்கிகிட்டு சமத்தா திரும்பவும் ஓட்டுனர் உத்யோகம்.

    திஸ் இஸ் அ சிம்பிள் ப்ராப்ளம்.

  26. நன்றி தமிழ். 20 வருடம் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியலியே?

    நன்றி அத்திரி

    நன்றி TVRK சார். சைக்கிள் கேப்புல சங்கதிய இழுக்கிறீகளே.

    நன்றி அறிவே தெய்வம்.

    நன்றி வெங்கடேசன், ஹவுஸுக்கு ஹவுஸு ஸ்டெப்புத்தானுங்களே?

    நன்றி லோகு. எப்படின்னாலும் மாட்டத்தான் போறீங்க. சீக்கிரம் மாட்டினா சீக்கிரம் மரத்துப் போகும்.

    நன்றி கணினி தேசம். அதெல்லாம் வீட்டுல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க.

    நன்றி சென்ஷி.

    நன்றி அனுஜன்யா. உங்க சிரமத்தை நான் நேர்ல பார்த்திருக்கேன்.

    நன்றி செல்வா. கார்க்கி பிரச்சினை வேற. அவனுக்கு எதை எடுப்பது எதை விடுவது குழப்பம். முடி உள்ள சீமான்.

    நன்றி சிபி, விழி பிதுங்கி வ்ழி மொழியுறீங்க.

    நன்றி அன்புடன் அருணா.

    நன்றி விக்கி.

    நன்றி பால்ராஜ். இப்படி பால்ராஜ்தான் எழுதச் சொன்னாருன்னு எந்தங்கமணிகிட்டத் தப்பிச்சிக்கலாம்.

    நன்றி தாமிரா. உனக்கு அதுவும் போடாமலா ஏமாத்துனாங்க?

    நன்றி மாதவ். இதுக்கெல்லாம் பயந்தா ஆகுங்களா. எம்புட்டு வாங்கியிருக்கோம் இதையும் ஒரு ஓரத்துல வரவு வச்சிக்கனும்.

    நன்றி தமிழன் கறுப்பி.

    நன்றி பரிசல்

    நன்றி மலர்

    நன்றி gracian junaid

    நன்றி ராகவன். நானும் அப்படித்தான் டிரைவர், போர்ட்டர் வேலை பாத்துத்தான் சமாளிக்கிறேன்.

  27. சுஜாதா அவர்களின் நிர்வாண நகரம் முதல் மூன்று பக்கங்கள் படிக்கவும்.
    – Me.

  28. //டிஸ்கி : சும்மா தமாசுக்கு.//

    இந்த டிஸ்கி யாருக்கு :-))))

    நல்ல இருந்ததுங்க வேலன்

  29. இதெல்லாம் எனக்கு தெரியாது அண்ணாச்சி :))

  30. நன்றி கிரி
    நன்றி செந்தில்
    நன்றி கார்க்கி

  31. இது மாதிரி பதிவெல்லாம் வழக்கமா ஆதி தானே போடுவார், இப்ப நீங்களுமா……….

    நோ கமெண்ட்ஸ்….

  32. கார்க்கி said…
    இதெல்லாம் எனக்கு தெரியாது அண்ணாச்சி :))

    இப்ப தெரியாது

    ஆனா போகப் போக தெரியும். உங்க பதிவையும் படிக்காமலா போகப் போறோம்.!!!!

  33. /டிஸ்கி : சும்மா தமாசுக்கு./
    இதான் பன்ச். சூப்பரப்பு.

  34. அண்ணே பிடிங்க ஒரு பி ஹெச் டி.
    (தாமிரா பதிவத்தான் ராவுல அவிங்க தூங்கினப்பொறவு படிக்க முடியும்..இப்ப உங்க ப்லோக்கும் ரகசிய லிஸ்ட்ல சேர்ந்துடும் போலருக்கே)

  35. அவ்வ்வ்வ்… அண்ணாச்சி… இந்த மாதிரி சப்ஜெக்ட்லாம் நீங்களே எழுதிட்டா, நானெல்லாம் என்ன எழுதறது????

  36. //டிஸ்கி : சும்மா தமாசுக்கு.//

    உங்க ஆத்து காரம்மா வும் உங்க பதிவுகளை பார்பாங்க போல இருக்கே?

  37. அலோ.. இதுக்கு அடுத்த பதிவையும் படிச்சாச்சு.. அதுக்கு பின்னூட்டம் போடமுடியல கொஞ்சம் கவனிக்கவும்..

    அப்புறம் டெம்பிளேட் பின்றீங்கண்ணே.. ஆரு பண்ணிக்குடுக்குறா? ஒங்குளுக்கு அவ்ளவு கம்பியூட்டர் தெரியுமின்னு நா நெனைக்கலைண்ணே.. கலக்கல்ஸ்.. பாராட்டுகள் பண்ணுபவருக்கு.!

    அப்புறம் எதிர்பதிவெல்லாம் வேறு யாராவது போடணும். தனக்குத்தானே போட்டுக்குறதெல்லாம் சேத்துக்கமுடியாது. நா போடலாம்னு பார்த்தேன்.. சரி கொள்கைக்கு இழுக்காயிடுமேன்னு விட்டுட்டேன்.

    அப்புறம் அதுவும் சூப்பரா வந்திருக்குது..

  38. :)))))))))))))

    வீட்டுல எப்பவும் சிரிச்சு சமாளிக்கிறமாதிரி இங்கயும் ஒரு இளிப்பு இளிச்சு வைக்கிறேன். அதுதான் safe.

  39. அண்ணாச்சி

    \\ஊர்ல இருந்து நம்ம அப்பா அம்மா வந்தாலே தங்கமணிக்கு உடம்பு சரியில்லாமப் போயிரும்.\\

    ஹா ஹா ஹா தூள்

  40. \\அவங்களுக்குத் தெரியாம வீட்டுக்கு வெளியகூட நம்மால் 10 ரூபாய் சேர்த்து வைக்க முடியல. ஆனா நம்ம வீட்டுலயே நமக்குத் தெரியாம ஆயிரக்கணக்குல ஒளிச்சு வச்சிருப்பாங்க.\\

    பயங்கர அனுபவம் போல

    (யாருக்குதான் இல்லை)