மீண்டும் முத்திரைக் கவிதைகள்


ஆனந்த விகடனில் வெளியான முத்திரைக் கவிதைகள் சிலதை ஏற்கனவே இந்தப் பதிவில் வாசித்திருப்பீர்கள். இன்னும் சில இங்கே.

அகத்தகத்தகத்தினிலே

காதலர் தினம்,
அன்னையர் தினம்
என வரிசையாய்
எல்லா தினங்களின் போதும்
நீ கொடுத்த
முத்தங்கள், கடிதங்கள்,
வாழ்த்து அட்டைகள், பரிசுகள்
என எல்லாவற்றையும்
அடிக்கடி நினைத்துப் பார்த்து
உயிர்த்திருக்கிறேன் பலமுறை.
வழக்கமானதொரு
மாலைப்பொழுதில்
என் தலை கோதி, உச்சி முகர்ந்து
‘…..ப் போல் இருக்கிறார்ய்’
என்று அனிச்சையாய்
யாரோ ஒரு நடிகனின் பெயரை
நீ சொன்னபோது
செத்துப்போய்விட்டேன்
ஒரேயடியாக

– ஆதி

நிலாசேனல்

தூக்கம் தொலைந்த இரவில்
எலெக்ட்ரான்கள் ஒளிரும் திரையில்
குறையாடைக் குமரிகளின்
பூனைநடை அலுத்து
கிழநாயகனால் கழுத்து முகரப்பட்ட
இளநாயகியின் பொய்க்கிறங்கலில் சலித்து
ஆண்குரலில் சிரித்த
வெள்ளைக்காரியை வெறுத்து
ஓடுடைந்து வெளியில் வரும்
பறவைக்குஞ்சையும் பார்க்கப்பிடிக்காமல்
ஒற்றைப் பொத்தான் அழுத்தலில்
உலகத்துக் கதவுகளையெல்லாம் மூடிவிட்டு
இருள் சூழ்ந்த அறையின்
ஜன்னலுக்கு அப்பால் விழித்திருந்த
நிலவோடு சிநேகிதமானேன்.

– எஸ்.பாபு

வலி

ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்

– வித்யாஷங்கர்

சிட்டி’சன்

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை

அடுக்குப் பானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று

– தாயம்மா

பாதசாரிகள் கவனத்திற்கு

கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!

– வனவை தூரிகா

நன்றி : ஆனந்த விகடன். முத்திரைக் கவிதைகள் (2002)

.

Advertisements

17 comments

 1. கடந்து போகும்
  ஜோடிக் கால்களின்
  பின்னாலெல்லாம்
  ஓடி ஓடிக் களைத்து
  ஏமாந்து திரும்புகின்றன
  அநாதை நாய்க்குட்டிகள்!
  செய்யாத உதவிக்கு
  வாலாட்டியபடியே!

  யாரினாலும் முடியாது இது போன்ற கவிதை எழுத.

  அன்புடன்
  ஜகதீஸ்வரன்
  http://jackpoem.blogspot.com/

 2. யாரோ ஒரு நடிகனின் பெயரை
  நீ சொன்னபோது
  செத்துப்போய்விட்டேன்
  ஒரேயடியாக

  மிக அருமையான சிந்தனை…
  அன்புடன்
  ஜகதீஸ்வரன்
  http://jackpoem.blogspot.com/

 3. வலி

  காதலின் வலி

  மீண்டும் முத்திரைக் கவிதைகள் என்னை மீண்டும் மீண்டும் கருத்துகளைச் சொல்ல வைக்கிறது.
  அன்புடன்
  ஜகதீஸ்வரன்
  http://jackpoem.blogspot.com/

 4. இந்தப்பதிவின் முதல் கவிதை அந்த கவிஞரின் கடைசி கவிதையாகியிருக்கிறது.

  அந்த கவிதை எழுதிவிட்டு விகடன் பிரசுரத்தில் வருமுன்பே ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்திருந்தார் கவிஞர். ஆதி.. 😦

 5. ஒவ்வொன்றும் மிக அருமை.

  தாயம்மாவின் ’சிட்டி’சன் கவிதை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வலி தருகிறது.

 6. இந்தப்பதிவின் முதல் கவிதை அந்த கவிஞரின் கடைசி கவிதையாகியிருக்கிறது.

  நண்பர் ஆதி(ஹோசிமின்)னின் நினைவு இன்னும் பசுமையாய் மனதில் நிற்கிறது…

  மரணம் தான் எத்தனை பயங்கரமானது!…

  விகடனில் தன் கவிதை பிரசுரமாகவேண்டுமென்பதை ஒரு தவம் போலவே செய்து வந்தான்… கவிதை வெளியான போது படிக்கத் தான் அவன் இல்லை…

 7. நன்றி.
  அண்ணே…கவிதைகள் படித்துவிட்டு எதோ எழுத வேண்டும் என வந்தவனுக்கு பின்னூட்டத்தை படித்தவுடன்…..ஓ.

 8. மீண்டும் மீண்டும் படித்தாலும் சுவாரஸ்யம் அடங்கவில்லை எந்தக் கவிதையிலும்.

 9. வணக்கம்.

  எல்லா கவிதைகளையும் ரசித்தேன்.

  குறிப்பாக வித்யா சங்கரின் கவிதை.

  எஸ் பாபுவினுடைய கவிதை போன்ற பொருள் கொண்டகவிதையை நேற்றுதான் யோசித்தேன். அதையும் ரசித்தேன்.

  பகிர்வுக்கு என் நன்றி.

  என்னுடைய கவிதை அறிமுகத்திற்கும் என் நன்றிகள்.

 10. ஒவ்வொன்றும் ‘முத்திரை’ என்ற தலைப்புக்கு பொருத்தமான முத்திரைப்படைப்புகள். விகடனின் நெடுநாளைய வாசகன்(மிக சமீபத்தில்தான் இல்லை) என்ற முறையில் அனைத்தையும் ஏற்கனவே வாசித்த ஞாபகம் இருக்கிறது. துக்கத்தை ஏற்படுத்திய ஆதியின் கதையையும் அறிவேன்.

 11. ஜகதீஸ்வரன், சென்ஷி, மகேஷ்,தீபா, யாத்ரா, நா.ரமேஷ்குமர், கும்க்கி, அமி.அம்மா, மண்குதிரை, ஆதிமூலகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி.

 12. உங்கள் பதிவு குங்குமம் இதழில் வந்திருப்பதாக நர்சிம் பதிவின் மூலம் அறிந்தேன். வாழ்த்துக்கள்.

 13. மிக அருமையான கவிதைகள்.

  இந்த கவிதை எல்லாம் பிரச்சனை இல்லாம புரியுதே நம்மாளுக எளுதற கவுஜைங்க மட்டும் புடிபடமாட்டிக்குதே ஏன்????

 14. //கடந்து போகும்
  ஜோடிக் கால்களின்
  பின்னாலெல்லாம்
  ஓடி ஓடிக் களைத்து
  ஏமாந்து திரும்புகின்றன
  அநாதை நாய்க்குட்டிகள்!
  செய்யாத உதவிக்கு
  வாலாட்டியபடியே!//

  அருமையான‌ க‌விதை

  ம‌ல‌ரும் நினைவுக‌ளை தூண்டிய‌மைக்கு ந‌ன்றி. என் வாசிப்பு அர‌ம்பித்த‌தே அந்த‌ முத்திரை க‌விதைக‌ளில் இருந்து தான்

 15. கவிதைகள் ஒவ்வொன்றும் தெளிந்த நீரோடை..
  நெஞ்சை மெல்கிறது

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s