கதம்பம் – 03/04/09

நெடுநாள் பாக்கி ஒன்றை வசூல் செய்ய நேற்று திருப்பூர் சென்றிருந்தேன். இரவு வெயிலான், பரிசல் மற்றும் சாமினாதனுடன்(ஈரவெங்காயம்) சாப்பாடு மற்றும் நள்ளிரவுக்குப்பின்னும் நீண்ட அரட்டை.

நெடுநாட்களுக்குப் பிறகு மனது லேசானதாக உணர்ந்தேன். அலையிலடித்துச் செல்லப்படும் வாழ்வில் இதுபோல சில ஆசுவாசங்கள் அவ்வப்போது தேவைப்படுகிறது.

********************************************************************************

காலை உணவை ஆரியபவனில் வெயிலானோடு சாப்பிட்டேன்.

“ஆரியபவன் என இந்தியா முழுவதும் இருக்கிறதே, எங்காவது திராவிட பவன் உண்டா?”

வெயிலான் இல்லையென்றார். யாராவது பார்த்திருக்கிறீர்களா?

********************************************************************************

திருப்பூர் கம்பெனிகள் தூங்கி வழிகின்றன. ரிசெசன் பாதிப்பை உணர முடிகிறது. நான் சென்ற கார்ப்பரேட் ஒன்றில் 30 பேர் அமர்ந்து வேலை செய்யும் ஹாலில் பாதி லைட்தான் எரிந்ததை மின்சார சிக்கனம் என தவறாக நினைத்து பெருமைப்பட்டேன். உள்ளே சென்றதும்தான் தெரிந்தது பெரும்பாலோரை நிறுத்திவிட்டார்களாம்.

விளம்பரபிரிவு நபருடன் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்துக் கேபின் பெண்மணி ஒரு உதவி கேட்டார்.

“சார் ஒரு 60 பேருக்கு லெட்டர் அடிக்க வேண்டி இருக்கு. மெயில் மெர்ஜ் சொல்லித்தர முடியுமா?”

என்ன செய்யவேண்டும் எனப் பேப்பரில் எழுதிக் கொடுத்தேன். இருப்பினும் என்னை ஒரு முறை பார்த்து சரியாக இருக்கா எனச் சொல்லச் சொன்னார்.

சரி என அவரது மானிட்டரில் பார்த்தால் அது எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர்.

மொத்தம் 60 பேர். 31-03-2009 அன்று நீக்கப்பட்டவர்களுக்கானது.

********************************************************************************

என் பழைய கவிதை

நேற்று என் பழைய கவிதைப் புத்தகத்திலிருந்து
இரண்டு வரிகளை தூசிதட்டி எடுத்து,
இடம் மாற்றி வைத்தேன்

உவமைகளில் சிக்கி, தவித்துக் கொண்டிருந்த
ஒரு கிளியை பறக்கவிட்டேன்
ஏரியை திறந்துவிட்டேன்

மேலும் ஒரு வார்த்தைக்கு வண்ணமடித்து
பொலிவு பெறச்செய்தேன்

இன்னும் ஒரே ஒரு வார்த்தைதான்
தேவை இருக்கிறது

உங்கள் இதயத்தை துளைக்கப்போகும்
அந்த ஒரு வார்த்தையை நன்றாக
கூர்தீட்டிக் கொண்டிருக்கிறேன்.

மண்குதிரை எழுதிய கவிதை இது.

இவரைப் பற்றிய மேல் விபரங்கள் ஏதும் அவரது வலையில் கிடைக்கவில்லை.
நல்ல கவிதைகள் எழுதுகிறார். நல்ல உயரங்கள் செல்வார்.

நவீன விருட்சம், படித்துறை, திண்ணை போன்றவைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின்றன.

********************************************************************************

நண்பர்கள் சாப்பிடச் செல்கிறார்கள். அதில் ஒருவன் அவர்கள் டேபிளுக்கு சர்வ் செய்யும் சர்வருக்கு டிப்ஸ் கொடுக்கிறான்.

அவனைப் பார்த்து நண்பன் கேட்டான், “சாப்டுட்டுத்தானே டிப்ஸ்கொடுக்கனும் நீ ஏண்டா முன்னாடியே கொடுக்கிறே?”

“கடைசியிலே சொல்றேன்”

சாப்பிட்டு முடிந்து வெளியே வந்ததும் சொன்னான், “ சர்வர் பில்லைக் எங்கிட்டக் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்குத்தான் முன்னாடியே கவனிச்சுட்டேன்”

“அடப்பாவி நல்லா விவரமாத்தாண்டா இருக்கீங்க”

********************************************************************************

Advertisements

32 comments

 1. கடைசி மேட்டர் ஆரியபவனில் நடந்ததா?

 2. //இரவு வெயிலான், பரிசல் மற்றும் சாமினாதனுடன்(ஈரவெங்காயம்) சாப்பாடு மற்றும் நள்ளிரவுக்குப்பின்னும் நீண்ட அரட்டை.

  //

  உங்களிடம் பேசி பின்பு நள்ளிரவில் வீட்டுக்குச் சென்ற பரிசலை உமா அண்ணி “இதே பொழப்பு உனக்கு” என்று கதவைத் திறக்காது விடிய,விடிய வெளியில் நிறுத்தி வைத்தது தெரியுமா உங்களுக்கு??

  பி.கு : இந்த பின்னூட்டம் போட்டது____ அல்ல. நானேதான்

  :)))))

 3. //மொத்தம் 60 பேர். 31-03-2009 அன்று நீக்கப்பட்டவர்களுக்கானது//

  இது குறித்த பதிவு ஒன்று அடுத்த வாரம் எழுதுகிறேன்

 4. அண்ணாச்சி -> மெயில் மெர்ஜ் வழிமுறைகளை மனப்பாடமா எழுதிக் கொடுத்தீங்களாஆஆஆ????? எப்படி இப்படி?????

 5. //“ஆரியபவன் என இந்தியா முழுவதும் இருக்கிறதே, எங்காவது திராவிட பவன் உண்டா?”
  //

  முனியாண்டி விலாஸ் 🙂

 6. // கோவி.கண்ணன் said…
  //“ஆரியபவன் என இந்தியா முழுவதும் இருக்கிறதே, எங்காவது திராவிட பவன் உண்டா?”
  //

  முனியாண்டி விலாஸ் 🙂

  //

  கோவி அண்ணே, சத்தியமாக இதே வார்த்தையை நான் பின்னூடம் போட நினைக்கும் போது உங்கள் பின்னூட்டம் பப்ளிஷ் ஆகுது.

 7. சூப்பர் கதம்பம்.

  எங்க கம்பெனில போன வாரம் 83 பேர தூக்கினாங்க. நமக்கு வேல போகாட்டியும் பயங்கர எரிச்சலா இருக்கு வேல செய்ய !

 8. வேளாங்கண்ணியில திராவிடர் உணவகம் அப்டின்னு ஒரு உணவகம் இருக்கு. ஆனா எங்கயும் திராவிட பவன் பார்த்தது இல்ல.

  60 பேரோட வேலை வாய்ப்பு லெட்டர் அடிக்க மெயில் மெர்ஜ் ஆ?
  அடக்கொடுமையே.

 9. 60 பேரின் வேலை ஒரே நாளில் பறிக்கப்பட்டதா? கொடுமைங்க.

  // “ஆரியபவன் என இந்தியா முழுவதும் இருக்கிறதே, எங்காவது திராவிட பவன் உண்டா?” //

  மிக அருமையான கேள்வி.

  // “ சர்வர் பில்லைக் எங்கிட்டக் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்குத்தான் முன்னாடியே கவனிச்சுட்டேன்” //

  சூப்பர் நண்பர்ங்க..

 10. ஆரிய – என்பது வடமொழியிலும், தமிழ் மொழியிலும் ஏற்கெனவே உள்ள ஒரு சொல்தான். ‘சிறந்த’ (noble) என்ற அர்த்தம். ஆரிய பவன் என்றால் ஆரியர்கள் நடத்துபது என்றெல்லாம் அல்ல. சிறந்த உணவு வழங்கப்படும் என்ற அர்த்தத்தில் அமைந்தது அது.

 11. கதம்பத்துல ஒரே சாப்பாடு மேட்டரா இருக்கு???

 12. \\நெடுநாட்களுக்குப் பிறகு மனது லேசானதாக உணர்ந்தேன். அலையிலடித்துச் செல்லப்படும் வாழ்வில் இதுபோல சில ஆசுவாசங்கள் அவ்வப்போது தேவைப்படுகிறது.\\

  இது ஒன்றே நம்மை தொடர்ந்து ஓட
  சக்தி அளிக்கிறது.

  \\திருப்பூர் கம்பெனிகள் தூங்கி வழிகின்றன. ரிசெசன் பாதிப்பை உணர முடிகிறது\\

  உண்மைதான்…

  வாழ்த்துக்கள்…

 13. ///“அடப்பாவி நல்லா விவரமாத்தாண்டா இருக்கீங்க”///

  அட நல்ல ஐடியாவா இருக்கே!!

 14. கதம்பம் நல்லா இருக்கு. விடாமல் தொடருங்கள்.

  அந்த டிப்ஸ் மேட்டர் நல்ல டிப்ஸ். நீங்க மும்பை வரும்போது யூஸ் பண்ணுகிறேன் 🙂

  அப்புறம், நம்ம மண்குதிரை (என்னய்யா பேரு), நீங்க சொன்ன மாதிரியே அருமையான கவிதைகள் எழுதுறாரு. உயிரோசை முதல் இதழிலேயே அவர் கவிதை வந்தது.

  அனுஜன்யா

 15. //உங்களிடம் பேசி பின்பு நள்ளிரவில் வீட்டுக்குச் சென்ற பரிசலை உமா அண்ணி “இதே பொழப்பு உனக்கு” என்று கதவைத் திறக்காது விடிய,விடிய வெளியில் நிறுத்தி வைத்தது தெரியுமா உங்களுக்கு??//

  நாங்க வெவரமா பர்மிஷன் எல்லாம் வாங்கீட்டுத்தானே போவோம்?

  (ஆனா என்ன சொல்லி பர்மிஷன் வாங்கினீங்கன்னு கேட்கக்கூடாது!!!)

 16. கடைசி மேட்டர் புரியல அண்ணாச்சி..
  மொதல்லயே டிப்ஸ் குடுத்தா பில்லை உங்ககிட்ட கொடுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்? ஒருவேளை சொல்லிக் குடுத்தீங்களா?

 17. //நள்ளிரவுக்குப்பின்னும் நீண்ட அரட்டை.

  நெடுநாட்களுக்குப் பிறகு மனது லேசானதாக உணர்ந்தேன். அலையிலடித்துச் செல்லப்படும் வாழ்வில் இதுபோல சில ஆசுவாசங்கள் அவ்வப்போது தேவைப்படுகிறது.//

  கொடுத்து வைத்தவர்கள்

  //வெயிலான் இல்லையென்றார். யாராவது பார்த்திருக்கிறீர்களா?//

  சாப்பாடு நல்லா இருந்தா எந்தபெயர் வைத்தாலும் போவோம். சரக்குதானே முக்கியம். :))

 18. //திருப்பூர் கம்பெனிகள் தூங்கி வழிகின்றன. ரிசெசன் பாதிப்பை உணர முடிகிறது.//

  ஐ.தி கவுத்தா ஏதோ நம்ம ஊர் கம்பெனில வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு இருந்தேன். இப்போ அதுவும் போயிடுச்சா..

  :((((

 19. நல்ல கதம்பம்.

  மெயில் மெர்ஜ் மேட்டர் அதிர்ச்சியாக இருந்தது. ’ஏண்டா சொல்லித் தந்தோம்’னு ஒரு கணம் நினைச்சிருப்பீங்க இல்ல?

 20. நன்றி முரளிக்கண்ணன். அது கோவை அண்ணபூர்ணா ஏசி ஹோடல். பில் தொகை 1124.

  நன்றி அப்துல். பரிசல் ரெம்ப முன் ஜாக்கிரதைக்காரர்.

  நன்றி கிரி.

  நன்றி சத்யா. அது ஈசிதானே.

  நன்றி கோவி. ஆனா அது அசைவமாச்சே?

  நன்றி மணிகண்டன். சில விஷயங்கள நாம முழுங்கித்தான் ஆகனும்.

  நன்றி மகேஷ். ஆமாம்.

  நன்றி ஜோசப். திராவிடர் உணவகத்தில் ஏதேனும் சிறப்பு உள்ளதா?
  நன்றி ராகவன். ஏற்கனவே பறிக்கப்பட்டவர்களின் அனுபவச் சான்றிதழ்தான் அது.
  நன்றி பெயரிலி. ஆரியபவன் ஓக்கே. அது ஆறிய பவனாக இருந்தால்தான் சிரமம்.
  நன்றி விக்கி
  நன்றி TVRK சார்.
  நன்றி அத்திரி. அதுக்குத்தானே இந்தப் பாடு.
  நன்றி அறிவே தெய்வம்.
  நன்றி சிவா.
  நன்றி அனுஜன்யா.
  நன்றி பரிசல். முதல்லயே டிப்ஸ் கொடுப்பது, பில்ல நம்மகிட்டக் கொடுக்காம கூட இருக்கவங்ககிட்டக் கொடுக்கத்தான்.
  நன்றி கணினி தேசம்.
  நன்றி தீபா. ஆமாம் அதிர்ச்சியாக இருந்தது.

 21. திராவிட பவன்கள் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஆங்காங்கே கூட இருந்தது உண்மை.அண்ணா காலத்துடனே எல்லாம் மூட்டை கட்டிவிட்டார்கள்.

  ஆரிய பவன் ரகசியம் நேரில் மட்டுமே கதைக்கப்படும்.
  பின்னூட்டத்தில் அனானி மொழி
  அறிஞர் சொன்னது போல அல்ல.

 22. நள்ளிரவு தாண்டியும் பேச ஒருவர் அனுமதிதிருக்க மாட்டாரே…விசிறி பயன்படுத்தவில்லையா?

 23. அண்ணே ஒரு 60 பேருக்கு வருத்தப்படறீங்களே…பெங்களூர் போன்ற நகரங்களில் ஒரு மெய்ல் மூலம் 400/500 பேரையெல்லாம் அப்படியே வெளியே அனுப்பி வைத்தார்களே….?
  இதில் உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு வேலை போனது பற்றி கவலைப்படுவதா அல்லது லகரங்களில் திளைத்து பூமியெங்கும் விலைவாசியை உயர்த்திவிட்டு விட்டில் பூச்சிகளைபோல விழுந்து பீட்சா சாப்பிட வழியில்லையே என வருத்தப்படுபவர்களை பற்றி கவலைப்படுவதா?

 24. அண்ணே கதம்பம் சூடான லிஸ்ட்ல. பூவுக்கு சூடு ஆகாதில்ல?

 25. இந்தக் கவிதக்காரங்கள்ல்லாம் ஒரே மாதிதான் யோசிப்பாங்கப்போல.அனுஜன்யா சொன்னதையே ரிப்பீட்டுகிறேன்.

 26. /
  “ சர்வர் பில்லைக் எங்கிட்டக் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்குத்தான் முன்னாடியே கவனிச்சுட்டேன்”
  /

  :)))

 27. /

  மொத்தம் 60 பேர். 31-03-2009 அன்று நீக்கப்பட்டவர்களுக்கானது.
  /

  :((((((
  மிக வருத்தமான விசயம்

 28. திரு.வடகரை அண்ணாச்சி,

  உங்க பார்வைக்கு ஒரு அழைப்பின் சுட்டியை வைக்கிறேன்.

  கலந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

  http://vediceye.blogspot.com/2009/03/blog-post_28.html

  ஸ்வாமி ஓம்கார்
  டிஸ்கி : உங்கள் மின்னஞ்சல் தெரியாததால் இங்கே பின்னூட்டம் வழியாக வருகிறேன். மன்னிக்கவும்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s