மண்ணைத் துளைக்கும் வேர்கள்

வஞ்சிபாளையம் பிரிவில்
இறங்கி நடந்தால்
இரண்டு ரூபாய்
மிச்சம் பிடிக்கலாம்;
நடக்கலானார் நாச்சாக் கவுண்டர்

500 ரூபாய்
சேத்துத் தந்திருந்தால்
ஆலன் சோலியில் எடுத்திருப்பேன்
இப்ப
பீட்டர் இங்கிலாண்ட்தான்
அங்கலாய்த்தான்
தனியார் கல்லூரியில்
படிக்கும் அவர் மகன்

பூக்கும் கிளைகளுக்குப்
புரிவதில்லை
வேர்களின் வேதனை

Picture courtesy : QT luong.

.

32 comments

  1. அண்ணாச்சி… வேதனைகளை அப்பிடியே வடிச்சுருக்கீங்க… :(((((

  2. \\
    பூக்கும் கிளைகளுக்குப்
    புரிவதில்லை
    வேர்களின் வேதனை
    \\

    நல்ல வரிகள்…

  3. நெஞ்சைத் துளைத்து விட்டன!

  4. அருமை அண்ணாச்சி! அருமை

  5. நல்லா இருக்குங்க அண்ணாச்சி,

    கவுண்டர் ஐயா, காலம் மாறிடுச்சி, நம்ம அனுபவிக்காததை சின்னஞ்சிறுசுக அனுபவிக்கட்டுமே, அதததுக்கு ஒரு காலம் வந்தா தானா புரிஞ்சிகிடுவாங்க,,,,,

  6. // பூக்கும் கிளைகளுக்குப்
    புரிவதில்லை
    வேர்களின் வேதனை //

    பூக்கும் கிளைகளுக்கு மட்டுமல்ல, அதில் இருக்கு பிஞ்சுகளுக்கும் புரிவதில்லை, நாளை தாங்களும் மரமாகப் போகின்றோம் என்று..

  7. // வஞ்சிபாளையம் பிரிவில்
    இறங்கி நடந்தால்
    இரண்டு ரூபாய்
    மிச்சம் பிடிக்கலாம்; //

    என் தந்தையை நினைவுப் படுத்தி விட்டீர்கள்.

  8. வேலன் கலக்கிட்டீங்க ..நிஜமாத்தான் சொல்றேன் சூப்பர்!

    எனக்கு கவிதைகள் மீது அவ்வளவா நாட்டம் இல்லை..எளிமை கவிதைகள் மட்டுமே பிடிக்கும் ராமலக்ஷ்மி அவர்களுடைய கவிதைகள் போல..

    இது அப்படியே எளிமையோ எளிமை!

    நான் கூட சென்னையில் இருந்த போது LSS ல போகாம சாதா பஸ் ல போனா 25 பைசா மிச்சம் பிடிக்கலாமேன்னு அதுல போவேன்..இந்த கவிதைய பார்த்த (படித்த) போது எனக்கு பல நினைவுகள் என் அப்பாவின் கஷ்டம் உட்பட.

    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  9. அண்ணாச்சி, போட்டொ புடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க

  10. “பூக்கும் கிளைகளுக்குப்
    புரிவதில்லை
    வேர்களின் வேதனை”
    உண்மை, உங்கள் கவிதையும் உங்கள் பதிவைப் போலவே நன்றாக இருக்கிறது

  11. எத்தனை உயரிய கருத்தை எத்தனை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் வேலன்.

    //பூக்கும் கிளைகளுக்குப்
    புரிவதில்லை
    வேர்களின் வேதனை//

    அற்புதம். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  12. //கவுண்டர் ஐயா, காலம் மாறிடுச்சி, நம்ம அனுபவிக்காததை சின்னஞ்சிறுசுக அனுபவிக்கட்டுமே, அதததுக்கு ஒரு காலம் வந்தா தானா புரிஞ்சிகிடுவாங்க,,,/

    யாத்ரா
    இன்றைக்கு நடக்குற சமூக அவலங்களுக்கு வேர்களை பற்றிய
    புரிதல் இல்லாததும் அலட்சிய படுத்தலுமே காரணம்

  13. கவிதை நல்லா இருக்கு. தினம் ஒரு பதிவு, அதுவும் வரைட்டியா என்று தூள் கிளப்பும் அண்ணாச்சிக்கு ஒரு ‘ஓ’ போட்டாச்சு.

    அனுஜன்யா

  14. நானும் உங்களுடன் நடக்க தயாராகிறேன்.

  15. பாராட்ட புது வார்த்தைகளை தேடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டீர்கள் என்னை…வேலன்….அருமை..கலக்கல்..நன்று..சூபர், எக்ஸலண்ட்

  16. //பூக்கும் கிளைகளுக்குப்
    புரிவதில்லை
    வேர்களின் வேதனை//

    நல்லா இருக்கு தலைவரே

  17. கரிகிட்டு தான் தலைவா
    ஆனா நாமளும் படிக்கசொல்ல இதை தானே செய்தோம்!

  18. நன்றி ச்சின்னப்பையன்
    நன்றி மகேஷ்
    நன்றி தமிழன் கறுப்பி
    நன்றி தமிழ் பிரியன்
    நன்றி பாண்டியன் புதல்வி
    நன்றி யாத்ரா
    நன்றி ராகவன்
    நன்றி கிரி
    நன்றி முரளி
    நன்றி செல்வன்
    நன்றி ஓம்கார்
    நன்றி ராமலஷ்மி மேடம்
    நன்றி இரவுகவி
    நன்றி புன்னகை
    நன்றி அமுதா
    நன்றி அனுஜன்யா
    நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி
    நன்றி பிஸ்கோத்துபயல்
    நன்றி டி.வி.ஆர்
    நன்றி மண்குதிரை
    நன்றி வால்
    நன்றி ஹேமா

  19. இப்ப பசங்களுக்கும் கொஞ்சமாவது புரிகிறது.

    வெகு அருமையாக இருக்கிறது. வேர்களின் வேதனைக்கும் வடிகால் வரட்டும்.

  20. இரண்டு மூணு வரிகளை வெச்சு அடி பின்னறீங்க.

    பூக்கும் கிளைகளுக்குப்
    புரிவதில்லை
    வேர்களின் வேதனை

    ரொம்ப நல்லா இருந்தது.

  21. அருமைங்க. அருமை..

    மெல்லிய வரிகள்.ஆனால் அது பல கப்பல்களின் கனத்தை சுமந்து நிற்கிறது.

    நல்ல கவிதை
    வாழ்த்துக்கள்.

  22. /
    பூக்கும் கிளைகளுக்குப்
    புரிவதில்லை
    வேர்களின் வேதனை
    /

    சூப்பர்!
    இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு!
    :)))

Leave a reply to selvan Cancel reply