சட்டெனச் சொல்லிய பொய்கள்

.

சட்டுன்னு பொய் சொல்லுறது நம்ம ஆளுகளுக்குக் கைவந்த(வாய் வந்த?) கலை.

ந்தக் கதை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.

ஒரு டிராயிங்க் மாஸ்டர் மாடு புல்லு மேயுறதப் படமாப் போடச்சொன்னாரு. நம்ம குசும்பன மாதிரி ஒருத்தன் வெறும் வெள்ளைப் பேப்பரை வச்சிக்கிட்டு இருந்தான்.

மாஸ்டர், “என்னப்பா வரையலையா”ன்னு கேட்டத்துக்கு, “வரைஞ்சிட்டேன் சார்”ன்னான்.

“புல்லை எங்க?”
“மாடு மேஞ்சிருச்சு சார்”
“சரி, மாட்ட எங்க?”
”புல்லு இருக்க எடம் தேடிப் போயிருச்சு சார்”

து மாதிரித்தான் அன்னைக்கு நம்ம எக்ஸிக்க்யூட்டிவ் 10.30 மனி அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு போக வேண்டியவரு 11.00 மணி வரை ஆபிஸ்லயே இருந்தாரு. “என்னப்ப்பா போகலயா?”ன்னா “போகனுங்க”ன்னாரு.

அதுக்குள்ள கஸ்டமரே கூப்பிட்டாரு லேண்ட் லைன்ல “இதோ வந்திட்டிருக்கேங்க அக்ரி காலேஜ் தாண்டியாச்சு”. அவரும் “சரி சரி”ன்னுட்டு வச்சுட்டாரு போனை.

கூப்பிட்டவருக்கும் அது லேண்ட்லைன்னு உரைக்கல. சொன்னவரும் அதப் பத்திக் கவலைப் படாம அடிச்சு விடுறாரு.

ன் நண்பன் சரவணன் ஹோம் லோன் கலக்சன்ல இருக்கான். இது நடந்தப்ப அவன் மதுரை டிவிஷன்ல இருந்தான்.

சனி இரவு 7 மணிக்கு கோவையில என் பிரஸ்ல இருந்துட்டு அவனோட ஜூனியருக்குப் போன் பண்ணிப் பேசுறான்.

சரவணன் : “என்னப்பா ரிப்போர்டெல்லாம் ரெடியா?”

ஜூனியர் : ”ரெடியாகிட்டு இருக்குங்க. இன்னும் அரை மணி நேரத்துல ரெடியாகிரும்”

சரவணன் : “நான் தூத்துக்குடில இருந்து வர நேரமாகும்னு நினைக்காதே பக்கத்துல வந்துட்டேன் இன்னும் 20 நிமிஷத்துல வந்திருவேன்.”

ஜூனியர் : ”வாங்க சார். நான் வெயிட் பண்ணுறேன்”

அதுக்கப்புறம் போன ஆப் பண்ணீட்டு எங்கூட பாருக்கு வந்திட்டான். 9 மணிக்கு ”என்னடா நீ வருவேன்னு அவன் வெயிட் பண்ண மாட்டானா?”ன்னு கேட்டா, “நான் எப்படி டுமீல் விட்டனோ அதப்போலத்தான் அவனும். பேசும்போது அவன் பஸ்ஸுல போற சத்தம் கேக்குது. இன்னேரம் அவனும் ஏதாவது பார்ல செட்டில் ஆயிருப்பான். சனிக்கிழ்மை எவண்டா ரிப்போர்ட்டெல்லாம் பாக்குறது?”


த்யம்ல சிவாஜி பாத்துட்டிருந்தப்ப என் பக்கத்து சீட்ல இருந்தவர் சொன்னது, “ சார் நான் கஸ்டமரப் பாத்துட்டேன். 5 மணிக்கு வரச்சொல்லியிருக்காரு. இப்பத்தான் சாப்பிடலாம்னு வீட்டுக்கு வந்தேன். ”

எதிர்முனை : “……..”

இவர் : அதுவா வீட்டுல சத்தமா டி வி ஓடுதுசார் குழந்தைங்க பாக்குறாங்க.

Advertisements

23 comments

 1. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா மாதிர்இ, இப்ப எல்லாம் பொய் சொல்வது சகஜமப்பா..

  (இது பொய்யா (அ) நிஜமா)

 2. // சத்யம்ல சிவாஜி பாத்துட்டிருந்தப்ப என் பக்கத்து சீட்ல இருந்தவர் சொன்னது, “ சார் நான் கஸ்டமரப் பாத்துட்டேன். 5 மணிக்கு வரச்சொல்லியிருக்காரு. இப்பத்தான் சாப்பிடலாம்னு வீட்டுக்கு வந்தேன். ”

  எதிர்முனை : “……..”

  இவர் : அதுவா வீட்டுல சத்தமா டி வி ஓடுதுசார் குழந்தைங்க பாக்குறாங்க.//

  ஹி… சாமர்த்தியமாகத்தான் பொய் சொல்றாரு

 3. உண்மைதான்..
  இதுமாதிரி அன்றாட வாழ்க்கைல பொய்கள் சர்வசாதாரணமா தட்டுப்படுது..
  அதுவும் இந்த செல்போன் வந்ததுக்கப்புறம்..

  அவுங்கவுங்க அளந்து வுட்டுக்கிட்டிருக்காங்க!

  நல்லா சொல்லியிருக்கீங்க

 4. பயணத்துலே உறவினர்கள் வீட்டுக்குப்போகும்போது, சாப்பிட வற்புத்துவாங்க பாருங்க…. அப்ப நானும் பொய்தான் சொல்லுவேன்.

  “இப்பத்தாங்க சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வந்தேன்”

 5. இதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே!!!

 6. பெரும்பாலும் மார்கெட்டிங்ல இருக்கறவங்க இது போல சொல்லிட்டுதானே இருக்காங்க. இதெல்லாம் பொய்யே இல்லைங்க.

  செல்போன் வந்தபிறகு நாம பொய் சொல்லறது கொஞ்சம் அதிகமா போச்சு 😦

 7. ஆஹா ராத்திரி ரொம்ப நேரம் பச்ச கலர்ல லைட் எரியுதே அப்ப பாக்காம விட்டுட்டமே….

 8. பிறரை பாதிக்காத வரை சரி.செல் வந்த பிறகு இம்மாதிரியான சிறு பொய்கள் சாதாரனமாகிவிட்டமாதிரிதான் தோன்றுகிறது.

 9. இந்தப் பொய்கள் எல்லாம் பொய்களே அல்ல …
  பின்னாட்களில் ஒருநாள் நண்பர்கள் மத்தியில் சொல்லிச் சிரிக்கத் தக்க பொய்கள் இவை ;

  “தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
  தன்நெஞ்சே தன்னைச் சுடும் “

  இப்படிப் பட்ட பொய்கள் தான் குற்றமாகக் கருதப் படும்,மேலே சொன்ன பொய்களால் யாருக்கும் எந்த வித கெடுதலும் இல்லையே .

 10. நன்றி ராகவன். பின்னூட்டம் போடுறத ஒரு தவமாகவே செய்றீங்க போல.

  நன்றி சுரேகா.
  நன்றி டீச்சர். சில சமயம் நாம ஒரு பார்மாலிட்டிக்காகச் சொல்லப் போய் அப்படியா சிங்கன்னுடுவாங்க. அதனால நான் சாப்பாட்டு விஷயத்தில சொல்லுறதில்லை.
  நன்றி சின்னப்பயன்
  நன்றி தாரணி பிரியா
  நன்றி கும்க்கி. உடம்பு சரியாகிடுச்சா?
  நன்றி மிஸஸ்.தேவ். இதெல்லாம் பொய்மையும் வாய்மையிடத்து கேஸுங்க.

 11. :))

  அந்த மதுரை மேட்டர் ஏற்கனவே சொல்லிட்டிங்க. 😉

 12. ம்ம், வசீகரப் பொய்கள். ‘யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்றிருக்கும் வரி ஓகே.

  அனுஜன்யா

 13. // வடகரை வேலன் said…

  நன்றி ராகவன். பின்னூட்டம் போடுறத ஒரு தவமாகவே செய்றீங்க போல. //

  நமக்கு உங்கள மாதிரி எழுத வரமாட்டேங்குது. நானும் பதிவுலகத்தில் இருக்கேன்னு காண்பிச்சுகணும் இல்லையா, அதனால பின்னூட்டமா போட்டுகிட்டு இருக்கேங்க.

 14. நன்றி சஞ்சய்.
  நன்றி அனுஜன்யா.

  ராகவன், எழுத வரலன்னு சொல்லுறத நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்க சீரியஸா முயலவில்லை. ஏன்னா எழுத்து நடை இருக்கு உங்ககிட்ட. கோர்வையா யோசிக்கிறது ஒரு பழக்கம். அது பழகப் பழகத்தான் வரும். ஆரம்பத்துல நானும் உங்கள மாதிரித்தான் எதிர்ப்பதிவு, கதம்பனு ஜல்லியடிச்சேன். அப்புறம் ஒரு நேக்கு வந்திரும்.

 15. பொய் வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்டது!

  நான் ஒரு நாளைக்கு ஒரு பொய் தான் சொல்வேன்!

 16. இதெல்லாம் ரொம்ப சகஜமா போச்சு இப்ப. அதுவும் செல்போன் வந்ததுக்கு பிறது.

  தோ, வந்துகிட்டேன் இருக்கேன்னு அப்படின்ற டயலாக் அரைமணி நேரமாவது சொல்லுவாங்க.

 17. இப்போதெல்லாம் மிக அனாயாசமாக வருகிறது

 18. /எங்கூட பாருக்கு வந்திட்டான்./
  cofee bar க்காங்ணா?
  /சத்யம்ல சிவாஜி பாத்துட்டிருந்தப்ப/
  சிவாஜி இந்தக் கதையை உங்களுக்குச் சொன்னாருங்களாங்ணா?
  /ஒரு டிராயிங்க் மாஸ்டர் மாடு/
  ஏனுங்க்ணா? அவரு மேல இவ்வளவுக் கோவம் உங்குளுக்கு?

  ச்சும்மாங்ணா.தோனிச்சு.
  விளையாடுனேன்.:)

  எல்லாமே ரசிச்சு சிரிச்சேன் அண்ணாச்சி.வழக்கம் போலவே நகைச்சுவையிலக் கலக்குறீங்க.

 19. பதிவு சூப்பர்.!

  (ஒரு நாளைக்கு எத்தனை பதிவுல இந்த மாதிரி சூப்பர்னு பின்னூட்டம் போடுறோம்.. இதுக்குப்பேர் என்ன வேலன்?)

 20. இன்றைய சூழ்நிலைல பொய் சொல்லாம வாழனும்னா அது முடியாத காரியம்னு தான் எனக்குத் தோனுது… எது எப்படியோ எல்லாமே ரொம்பவும் நல்லா இருந்துச்சி…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s