விட்டுக் கொடுத்தலும் கேட்டுப் பெறுதலும்


எல் கே ஜி படிக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பெண் குழந்தையாக இருந்தால் தன்னை ஒரு டீச்சராகக் கருதிக் கொண்டு டீச்சரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளும். ஆண் குழந்தையாக இருந்தால் அவனது ஹீரோ வேன் டிரைவராகவோ அல்லது கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது தல, தளபதி போன்றவர்களாகவோ இருப்பர்,

இது முதன்முதலில் குழந்தையின் மனதில் ஏற்படும் ஆதர்ச பிம்பம். நம்மால் முடியாததை சாதிப்பதின் மீது கட்டமைக்கப்படுவது.நாளாக நாளாக வேறு வேறு ஆட்கள் வயதைப் பொறுத்து அந்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.

ஆனால் எப்போதும் அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களுடைய பங்களிப்பைப் பொறுத்து நமது வாழ்நாள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இதில்தான் பிரச்சினைகள் தோன்றுகிறது இப்போது.

எனக்குத் தெரிந்த தம்பதியர். அவனது அப்பாவின் பிம்பமாக குடும்பம் நடத்த முயலுகிறான். அப்பாவின் நடவடிக்கையைப் போலவே அனைத்தயும் அமைத்துக் கொள்கிறான். அவனது அம்மா கிராமத்து ஆள் என்பதால் வீட்டில் அப்பா சொல்வதை அம்மா கேட்பதுதான் வழக்கம்.

மனைவி கதை நேர்மாறு. அவளது அப்பா குடும்பப் பொறுப்பற்றவர். தனது சம்பளத்தை மாதாமாதாம் வீட்டிற்குக் கொடுத்தால் போதும் என்பது அவரது எண்ணம். அவளது அம்மா உத்தியோகத்திற்கும் சென்று வந்து வீட்டு நிர்வாகம் அனைத்தையும் திறம்படச் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்து இப்பொழு கடைக் குழந்தையை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்.

எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது எங்கு பிரச்சினை?

தம்பதியர் இருவரும் அவரவர் குடும்பம் போலவே தங்கள் குடும்பத்தையும் நடத்த முயலுகின்றனர். ”எங்க வீட்டுல் எல்லாம் இப்படி இல்லை. நாங்க எல்லாம் அப்படிச் செய்ய மாட்டோம்.” எது ஒன்று நடந்தாலும் அவனது அப்பாவிடம் சொல்லி விடுகிறான் அவர் நல்லது செய்கிறேன் என மேலும் விரிசலை உண்டாக்குகிறார். அவளும் அம்மாவிடம் சொல்லுகிறாள், அம்மாவும் அப்படியே. இருவர் சொல்லுவதும் ஒன்றே, “ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்.”

இல்லறம் என்பது எத்தனை காரணிகளை உள்ளடக்கியது? வாழிடம், செய்யும் வேலை, மன நிலை, உடல் நிலை, பொருளாதாரம், நண்பர் வட்டம், படிப்பு, வேறு ஆர்வங்கள் என எண்ணிலடங்கா. உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.

மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். இப்படித்தான் இருப்பேன் என ஆரம்பத்திலியே செய்யும் பிடிவாதமான முடிவுகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

சில வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இந்தச் சில்லறை விஷயத்திற்கா அன்று பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை போட்டோம் என வெட்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.

.

Advertisements

24 comments

 1. ///“ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்.”///
  இதுல தான் நிறைய குடும்பம் தாறுமாறாப் போய்க்கிடக்கு.. 😦

 2. சரியாச்சொன்னீங்க.. ஆனா அந்த காலத்துல அம்மா அப்பா கல்யாணமான பிள்ளைங்களுக்கு இப்படி சொல்லிக்குடுத்தாங்களா தெரியலயே..

 3. அண்ணாச்சி.. உறவுமுறைகளை அதிலுள்ள சிக்கல்களை எழுதறப்போ உங்க எழுத்துல அப்படி ஒரு முதிர்ச்சி வந்துடுது..

  நல்ல பதிவுண்ணா.

 4. நல்ல பதிவு, நல்ல கருத்து மக்கள் சிந்திக்க வேண்டும்

 5. மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  //உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.//

  உண்மைதாங்க. இது இல்லறத்துக்கு மட்டுமின்றி வாழ்வியலுக்கும் பொருந்தும் வார்த்தைகள்.

 6. //ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.
  //

  காதலிலும் அதுதான் அடிநாதம்.. :))))

 7. உறவுகள் எனும் கண்ணாடிப்பந்தை சரியாக பிடிப்பதை விட்டு, வேலை, நண்பர்கள் என்ற ரப்பர் பந்துகளை பிடிப்பதில் கவனம் செலுத்துகிறோம்..விளைவு கண்ணாடி பந்தை தவற விடுகிறோம்.. மற்ற பந்துகள் விழுந்தாலும் எழுந்துவிடும் என்பது கண்ணாடி உடைந்தவுடன் தான் தெரியவருகிறது.

  உபயோகமான பதிவு அண்ணாச்சி

 8. நல்ல பதிவு அண்ணாச்சி..

  //“ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்.”//
  😦

 9. //ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்//

  ஆமாம் இல்லை என்றால் அடி- நா- தம்! (அடி வாங்கிய நாம் புகைப்பிடிச்சு புண் பட்ட நெஞ்சை ஆற்றிக்கவேண்டியதுதான்)

 10. //மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். .//

  100% correct

 11. நன்றி தமிழ.

  நன்றி முத்தக்கா. அந்தக் காலத்துல கூட்டுக் குடும்பம். தனியாச் சண்டை போட வாய்ப்பே இல்ல. சண்டை வந்தாலும் உடனே சமாதானம். கொஞ்ச நாள்ல பழகிடும்.

  நன்றி பரிசல்.

  நன்றி ராகவ்ஜே

  நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

  நன்றி கார்க்கி. இல்லறத்தின் அடைப்படையே காதல்தானே.

  நன்றி நர்சிம்

  நன்றி வெண்பூ

  நன்றி சரண். உன் அனுபவம் பேசுது?

  நன்றி TVRK சார்.

  நன்றி மகேஷ்.

  நன்றி Amazing Photos. உங்கள் போட்டோவெல்லாம் நன்றாக இருக்கிறது.

 12. /உறவுகள் எனும் கண்ணாடிப்பந்தை சரியாக பிடிப்பதை விட்டு, வேலை, நண்பர்கள் என்ற ரப்பர் பந்துகளை பிடிப்பதில் கவனம் செலுத்துகிறோம்..விளைவு கண்ணாடி பந்தை தவற விடுகிறோம்.. மற்ற பந்துகள் விழுந்தாலும் எழுந்துவிடும் என்பது கண்ணாடி உடைந்தவுடன் தான் தெரியவருகிறது.

  உபயோகமான பதிவு அண்ணாச்//

  அடடா.. இவர யாராவது கொஞ்சம் அடக்கி வைங்கப்பா

 13. // பரிசல்காரன் said…

  அண்ணாச்சி.. உறவுமுறைகளை அதிலுள்ள சிக்கல்களை எழுதறப்போ உங்க எழுத்துல அப்படி ஒரு முதிர்ச்சி வந்துடுது..//

  வழிமொழிகிறேன்.

 14. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதயுடன்)
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவன்
  உலவு.காம்

 15. //தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும்//

  சரி தான்..

  பேசினாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் போட்டு வருத்துவதால் எந்த பயனும் இல்லை.

 16. மிகச்சரி நானும் இதைதான் செய்துகொண்டிருக்கிரேன் கடவுள் புண்ணியத்தில் இத்தனை நாள் பிரச்சனை இல்லை. ஆனால் யோசித்துபார்தால் ஒவ்வொரு நிலையிலும் எனது அம்மாவை தான் நான் பிரதிபலித்து கொண்டிருந்திருக்கிரேன். பதிவுக்கு மிகவும் நன்றி.

 17. Counciling செய்யுமளவிற்கு விஷயம் இருக்கு உங்க கிட்ட.

  பரிசல் கமெண்டு கரெக்ட். நரசிம் பின்னூட்டம் அபாரம். சாரி கார்க்கி 🙂

  அனுஜன்யா

 18. /
  தமிழ் பிரியன் said…

  ///“ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்.”///
  இதுல தான் நிறைய குடும்பம் தாறுமாறாப் போய்க்கிடக்கு.. 😦
  /

  அருமையா சொன்னீங்க தமிழ் பிரியன்

 19. /
  மாதவராஜ் said…

  // பரிசல்காரன் said…

  அண்ணாச்சி.. உறவுமுறைகளை அதிலுள்ள சிக்கல்களை எழுதறப்போ உங்க எழுத்துல அப்படி ஒரு முதிர்ச்சி வந்துடுது..//
  //
  வழிமொழிகிறேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s