குள்ளதாராவக் கண்டுபிடிங்க


பதிவர்களே நீங்க உலகத்தில பல மூலையில இருந்தும் என் பதிவப் படிக்கிறீங்க. நான் தேடுற ஒரு பொண்னு(அடக் கல்யாணம் பண்ண இல்லீங்க. அந்த வயசத் தாண்டி 20 வருசம் ஆச்சுங்க. ஆனா இது நான் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டிய பொண்ணுதாங்க) உங்க பக்கத்து வீட்டிலோ, மாடி வீட்டிலோ, கீழ் ஃப்ளோரிலோ, உங்கள் அலுவலகக்திலோ, உங்கள் பகுதியிலோ ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் அவளைச் சந்திக்ககூடும்ங்க.

அப்படிப் பார்த்தீங்கன்னா கீழே இருக்க லெட்டர ஒரு காப்பி எடுத்து அவகிட்டக் கொடுங்க, ப்ளீஸ். எதுக்குன்னா கேக்குறீங்க? அத லெட்டர்ல எழுதியிருக்கேன் படிச்சுக்குங்க. என்னது? அடுத்தவங்க லெட்டர எப்படிப் படிக்கிறதா?

ஹலோ நான் சொல்லலைன்னாலும் நீங்க படிச்சுட்டுத்தான் கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.

அவளோட உண்மையான பேரு ராதா. குள்ளமா இருக்கதால செல்லப் பேரு ”குள்ள தாரா”. மூன்று முகம்னு ரஜனிகாந்த் படம் ஒன்னு பாத்திருப்பீங்க அதுல ராஜலஷ்மினு ஒரு நடிகை வருவாங்க பாருங்க அவள மாதிரி இருப்பா.

அன்புள்ள குள்ள தாரா,

உனக்கு இன்னமும் இந்தப் பேருதானா இல்லை உன் வீட்டுக்காரர் வேற செல்லப் பேரு வச்சிட்டாரா?

எப்படி இருக்க?. நான் நல்லா இருக்கேன்னுதான் சொல்லனும். என்ன உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருப்பேன். நீ எப்படி இருக்கேன்னு ஒரு தகவலும் தெரியல.

நேத்துத்தான் பிரிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள 23 வருஷம் ஓடிப் போயிருச்சு. நீ கடைசியாப் பார்த்த பார்வை, சொன்ன வார்த்தைகள் பிரியும்போது அணிந்திருந்த டிரஸ் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

முதல் ரெண்டு வருஷத்துக்கப்புறமா உன்னோட தொடர்பு சுத்தமா அற்றுப் போயிருச்சு. நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. சரி எங்க இருந்தாலும் நீ நல்லா இருப்பன்னு தெரியும். நல்லா இருக்கியா?

‘அலை பாயுதே கண்ணா’ இன்னும் பாடுறியா இல்ல குடும்பம் நடத்துற ஆயாசத்துல எல்லாத்தையும் ஏறக்கட்டியாச்சா? சரி உங்குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பே. ஒரு மகன்னு தெரியும். கிரிஜா சொன்னா. அவ்வளவுதானா மகள்தான் வேணும்னு சொல்லுவியே?

ஆனா நீ ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ காலேஜ் போறா சின்னவ 8 ஆவது. ஓரளவுக்கு செட்டிலாயிட்டேன்னுதான் சொல்லனும். சரி இவ்வளவு நாள் கழிச்சு இப்ப ஏனிந்த லெட்டர்னு கேகுறியா. இல்ல என் மகளுக்கும் 18 வயசாச்சு. உன் மகனுக்கு 21 இருக்கனும். அவஙக் ரெண்டு பேரும் பழகிட்டு நாளைக்கு நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு அதுக்காகத்தான். இப்பத்தான் படிக்கிறது ஒரு இடம் வேலை பாக்குறது ஒரு இடம்னு எல்லாம் வாய்க்குதே. அதையும் தாண்டி நெட்ல சேட் பண்ணுறாங்க. ஆர்குட்ல, பேஸ்புக்குல பழகுறாங்க.

என் மகள்கிட்டச் சொல்லியிருக்கேன். ”யாரை வேணும்னாலும் காதலி, ஆனா அவங்க அம்மா பேரு ராதான்னா கொஞ்சம் உஷாரா இரு”ன்னு. நம்ம விஷயம் எல்லாம் அவளுக்குத் தெரியும்.

நீ எப்படி?

இப்படிக்கு உன் முன்னள் காதலனும், உன் சம்பந்தி ஆகிவிட வாய்ப்புள்ள ஆனால் அதைத் தவிர்க்க விழையும், ஒரு பெண்ணின் தகப்பனும் ஆன, ஜாரா என்ற ராஜா.

டிஸ்கி : இத மனசில வச்சிட்டு யாருகிட்டயாவது பேசி அடிவாங்கினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல இப்பவே சொல்லீட்டேன்.

டிஸ்கி 1: இது உங்க சொந்தக் கதையான்னு கேக்குறவங்க லேபிளைப் பாருங்க.

டிஸ்கி 2 : சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.

.

Advertisements

43 comments

 1. //சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.//

  ஆங்…….அப்படியா……..

 2. அண்ணாச்சி.. இந்த மாதிரி எல்லாரும் பாக்கெட்டில் வச்சு இருக்கக் கூடியது டெம்ப்ளேட் மாதிரி தான்.. என்ன கொஞ்சம் வயசும், பேரும், ஊரும் மற்றும் மாற்றனும் அம்புட்டுத் தான்.. ;-))

 3. ஹூம்…
  எல்லாத்தையும் கெளறி விட்டுட்டு வேடிக்கை பார்க்குறதே உங்க பொழுது போக்கா போச்சு.

 4. //இது உங்க சொந்தக் கதையான்னு கேக்குறவங்க லேபிளைப் பாருங்க.//

  :-)))))

 5. நன்றி அத்திரி
  நன்றி தமிழ்.
  நன்றி கும்க்கி. ரெம்ப பாதிக்கப் பட்டிருப்பீங்க போல.
  நன்றி ச்சின்னப்பையன்.

 6. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதயுடன்)
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவன்
  உலவு.காம்

 7. அச்சச்சோ..

  அந்தக் கடிதம் முன்னும் பின்னும் கொஞ்சம் (ப்ளாக்கர்ஸுக்கு பதில் வேறு ஏதாவது) சேர்த்து பத்திரிகைக்கு அனுப்ப வேண்டியதல்லவா…

  கலக்கல்!!

 8. //அவஙக் ரெண்டு பேரும் பழகிட்டு நாளைக்கு நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு //

  இதுக்குத்தான் பிரதர் பிரியும்போது அண்ணன் தங்கைன்னு சொல்லிட்டு பிரியறதே..

 9. // நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு அதுக்காகத்தான். ///

  நல்லாத்தான் திங்க் பண்ணியிருக்கீங்கோ :))

 10. //நகைச்சுவை, மொக்கை//

  நம்பிட்டோம்!

 11. நிஜமாவே இது கற்பனைதானா நம்ப முடியலையே

 12. நான் ரொம்ப சின்னப்பையன்ங்க, உங்கள நான் எப்படி கூப்பிடுவது, ஐயா, அப்பா வயசுல மனசுக்கு நெருக்கமா இருக்கிறவங்கள அப்படி கூப்பிடுவது தான் என் வழக்கம், நீங்க வயது அதிகமாக தெரிவதாக feel பண்ணுவதால் அண்ணா அல்லது எல்லோரும் அழைப்பது போல் அண்ணாச்சின்னு கூப்பிடறேன்,

  உங்க ஆட்டோகிராப்,கடிதம் படிச்சேன், ரொம்ப நல்லா இருக்குங்க, இதே உணர்வு தளத்தில் எப்பவோ படிச்ச ஒரு கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.

  என் மகள் உன்னை ஆண்டி என்றும்
  உன் மகன் என்னை அங்கிள் என்றும்
  அழைக்கும் போதெல்லாம்
  பதட்டமாயிருக்கிறது
  அவர்களுக்கும்
  நேர்ந்து விடுமோ
  நம்நிலையென்று

 13. நாமக்கல் சிபி said…
  //நகைச்சுவை, மொக்கை//

  நம்பிட்டோம்!
  \\

  ரிப்பீட்டு.. 🙂

 14. லேபிள் என்னவோ நகைச்சுவை என்றுதான் சொல்கிறது. ஆனா பதிவு உணர்வுப் பூர்வமா இருக்கிறதே:))!!

 15. //டிஸ்கி 2 : சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.//

  நம்பிட்டோம் :-))

 16. அட்டகாசம் அண்ணாச்சி. பெரும்பாலும் புனைவு, சிறிதேனும் பார்த்த/கேட்ட அனுபவம் இருக்க வேண்டும். ரொம்ப நல்லா வந்திருக்கு.

  அனுஜன்யா

 17. நன்றி TVRK சார்
  நன்றி பரிசல்.
  நன்றி சுரேஷ்
  நன்றி பாலாஜி
  நன்றி மின்னல்
  நன்றி sureஷ்
  நன்றி வண்ணத்துப் பூச்சியார்
  நன்றி ஆயில்ஸ்
  நன்றி சிபி. நம்புங்க.
  நன்றி தாரணி பிரியா. இது கற்பனையான நிஜம்.
  நன்றி செந்தில்.இவ்வளாவு வார்த்தைகளைப் போட்டு எழுதுனதுக்குப் பதிலா அந்தக் கவிதை சுருக்கமாச் சொல்ல வந்ததச் சொல்லிடுது.
  நன்றி தமிழன் கறுப்பி
  நன்றி ராமலக்ஷ்மி மேடம்
  நன்றி குமார்
  நன்றி சென்ஷி
  நன்றி அனுஜன்யா

 18. பதிவர் விக்னேஷ்வரி அவங்க காதலரைப் பற்றி எழுதியிருந்தாங்க. அது மாதிரி நீங்க….. எழுதியிருக்கீங்க.

 19. //பல மூலையில இருந்தும் என் பதிவப் படிக்கிறீங்க//

  நீங்க பெரிய ஆளு அண்ணாச்சி அங்கே இருந்தே நான் மூலையில் இருந்து படிக்கிறேன் என்று எப்படி கண்டுபிடிச்சீங்க மை போட்டு பாத்தீங்களா?

  நான் அமர்ந்து இருப்பது சனி மூலை:)

 20. //உங்க பக்கத்து வீட்டிலோ, மாடி வீட்டிலோ, கீழ் ஃப்ளோரிலோ, உங்கள் அலுவலகக்திலோ,உங்கள் பகுதியிலோ ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் அவளைச் சந்திக்ககூடும்ங்க.
  //

  அவுங்க யாரு வீடு அலுவலகம் எல்லாம் கூட்டி பெருக்கும் ஆயாவா?

 21. //உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். //

  ஆமாம் ஆனா உங்க முகம் மட்டும் மறந்து போச்சு!

  அன்புடன்
  குள்ள மணி

 22. //முதல் ரெண்டு வருஷத்துக்கப்புறமா உன்னோட தொடர்பு சுத்தமா அற்றுப் போயிருச்சு.//

  என்னா பட்டம் அறுந்து போனமாதிரி சொல்றீங்க?

  //நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. //

  இப்ப உங்க வருத்தம் என்னா? கிளியரா சொல்லுங்க ராதா அட்ரெஸ் வேண்டுமா? இல்ல கிரிஜா அட்ரெஸ் வேண்டுமா?

 23. நாளைக்குத்தானே ஏப்ரல் ஒன்றாம் தேதி ?
  :-)))

 24. அப்ப‌டி போகுதுங்க‌ளா ச‌ங்க‌தி. லெட்டர் எல்லாம் ந‌ல்ல‌ தான் எழுத‌றீங்க‌.

 25. நான் க‌ருத்து சொல்ற‌துக்கு முன்ன‌மே ந‌ன்றி சொல்லிட்டீங்க‌. அவ‌ங்க‌ மின்னுது மின்ன‌ல் நான் தான் மின்ன‌ல். நான் அவ‌ங்க‌ இல்லைங்க‌

 26. புனைவு அருமை.. அந்த டிஸ்கியச் சொன்னேன் அண்ணாச்சி

  நடந்ததை அழகாச் சொல்லி இருக்கீங்க.. கதையில் நடந்ததை.

 27. குள்ளதாரான்னு பேர பார்த்துவுடனே நினைச்சேன்! இது புனைவா தான் இருக்கனும்னு!.

 28. நன்றி வெயிலான். அதுக்கு சுட்டி இருந்தாக் கொடுங்க பார்க்கலாம்.

  நன்றி கார்க்கி.

  நன்றி குசும்பா.

  நன்றி பாலராஜன்கீதா. ஏனப்படிக் கேக்குரீங்க?

  நன்றி மின்னுது மின்னல். இப்ப கணக்கு சரியாயிருச்சா?

  நன்றி நர்சிம். வர வர வார்த்தையில ரெம்ப விளியாடுறீங்க. வார்த்தைச் சித்தர் வலம்புரி வாரிசா?

  நன்றி அருண்.

 29. அண்ணாச்சி,
  இது ஒரு புது தினுசான மொக்கையால்ல இருக்கு? ( மொக்கைன்னு நீங்களே லேபிள் போட்டுருக்கீங்க).

  நான் கூட சரி நம்ம அண்ணாச்சியோட ஆட்டோகிராஃப் போல இருக்கு, ஏதோ நம்மால முடிஞ்சது இந்த லெட்டர பிரிண்ட் போட்டு, தாராங்கிற பேருல இருக்கவங்களுக்கு எல்லாம் அனுப்புவோம்னு பார்த்தேன்.
  ( அட அந்த பிரிண்டிங் ஆர்டர கூட உங்க பிரஸ்ல தான் குடுக்கலாம்னு இருந்தேன்).

 30. ஜாரா என்கிற ராஜா என்கிற அவருக்குச் சொல்லுங்கள். நான் குள்ளதாராவைக் கண்டுபிடித்துவிட்டேன். ஆனால், அவங்க உங்க, சே, ராஜாகூட டூவாம்.
  இதை நீங்கள் எப்படி மறுக்கமுடியும்?:)

  ஏம்பா யாருப்பா அது ‘மின்னுது மின்னல்.’
  என் கண்ணெப் போச்சு. 🙂

 31. ஓஹோ.. அவுங்க குள்ளதாராவா? உங்களுக்கு என்ன மனசுல ரகுவரன்னு நெனப்போ.?

 32. அண்ணாச்சி நல்லாருக்கு குள்ள தாரா – ஜாராவின் முன்னாள் காதலி – ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  என்ன சொல்ரது தெரில

 33. /
  இத மனசில வச்சிட்டு யாருகிட்டயாவது பேசி அடிவாங்கினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல இப்பவே சொல்லீட்டேன்.
  /

  அதெல்லாம் சாமர்த்தியமா அடிவாங்காம பாக்குற புள்ளைகிட்ட எல்லாம் பேசிருவோம் டோண் வொர்ரி அண்ணாச்சி

  ராதா வயசு என்ன 23 தானே

  என்னாது பிரிஞ்சி 23 வருசம் ஆச்சா அப்ப அது ஆயாவா?????????
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 34. /
  //நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. //

  இப்ப உங்க வருத்தம் என்னா? கிளியரா சொல்லுங்க ராதா அட்ரெஸ் வேண்டுமா? இல்ல கிரிஜா அட்ரெஸ் வேண்டுமா?
  //

  :)))))))))
  ROTFL

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s