விடையற்ற வினாக்கள்

என்ன பதில் வேண்டும்
என்னிடமிருந்து
என முன் கூட்டியே
முடிவு செய்து
தேர்ந்தெடுத்த கேள்விகளை
வீசுகிறீர்கள் எனை நோக்கி

உங்கள் உள் நோக்கம்
வேறொன்றாக
இருக்கக்கூடுமென
என் பதிலகளை
மாற்றி அமைக்கிறேன்

உங்களுக்குக் கிடைத்ததும்
நீங்கள் விரும்பியதும் வேறு வேறு
நான் சொல்ல நினைத்ததும்
சொன்னதும் வேறு வேறானதைப் போல

எனக்கான கேள்விகளை
அடுக்கி வைத்துக்
காத்திருக்கிறீர்கள்.
எல்லாவற்றிற்கும்
பதிலுண்டு என்னிடம்.

இருந்தபோதிலும்
அவைகளுள் ஒன்றை
உங்கள் மீது வீசினால்
உங்கள் பதில்
“தெரியாது”

கேட்கும் உயரத்தில் நீங்களும்
சொல்லும் நிலையில் நானும்

என்றாலும்,
கரைகளால்
அறியமுடியாதது
கடல்

.

Advertisements

28 comments

 1. வெகு அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வேலன். பாராட்டுக்கள்.

 2. //கரைகளால்
  அறியமுடியாதது
  கடல்//

  இதுக்கு மேல விளக்கம் வேணுமா?

  அருமை.

 3. அண்ணாச்சிக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த கவிஞரை யாரப்பா தட்டி எழுப்பியது!

 4. //தேர்ந்தெடுத்த கேள்விகளை
  வீசுகிறீர்கள் எனை நோக்கி//

  டக்குன்னு குனிஞ்சுக்குங்க!

 5. நிஜமாகச் சொல்கிறேன், நீங்கள் இதுவரை எழுதியுள்ளவற்றில் இதுதான் சிறப்பானது.

  /கேட்கும் உயரத்தில் நீங்களும்
  சொல்லும் நிலையில் நானும்/

  ப்ச்.. இதுதாங்க சங்கடமே…

  நல்ல கவிதை அண்ணாச்சி!

 6. இது சும்மா ஜாலிக்கு :

  இது மாதிரி நிறைய எழுதி பம்பாயில் இருக்கும் யூத் மாதிரியானவரை நீங்கள் காணாமலடிக்கச் செய்ய வேண்டும் 🙂 வயசான பார்ட்டிங்க தொல்லை தாங்க முடியலப்பா 🙂

 7. மிக அருமையான கவிதை. கலக்கீட்டிங்க அண்ணாச்சி

 8. //என்ன பதில் வேண்டும்
  என்னிடமிருந்து
  என முன் கூட்டியே
  முடிவு செய்து
  தேர்ந்தெடுத்த கேள்விகளை
  வீசுகிறீர்கள் எனை நோக்கி//

  எங்க வேலையே இதாங்க!?

 9. கவிதை அழகு. :))))

  ஒரே ஒரு கேள்வி

  இப்படி நீங்க யோசிக்கற அளவுக்கு கேள்விகேட்டுத் தொல்லை செஞ்சது யாரு?

 10. என்னமோ போங்க அண்ணாச்சி.. புரிஞ்சா மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு..

 11. “எல்லாவற்றிற்கும்
  பதிலுண்டு என்னிடம்.என்றாலும்,..

  கரைகளால் அறியமுடியாததுகடல்.

  கவிதை அருமை.

 12. குசும்பன் said…
  அண்ணாச்சிக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த கவிஞரை யாரப்பா தட்டி எழுப்பியது!

  //

  ”வட்டத்திற்குள் பெண்“ எழுதக் கூப்பிட்டு நான் தான் தட்டி எழுப்புனேன் 🙂

 13. கொஞ்சம் நீளமா,ஒரே விசயத்தை திரும்ப திரும்ப விவரிக்கற மாதிரி தெரிஞ்சாலும்,அவசியமான, தொடர்புடைய விவரிப்புகள்தான்.இக் கவிதை என்னோட அனுபவங்களுக்கும் நெருக்கமாயிருக்கு.அப்புறம் என்ன? எனக்குப் புடிச்ச கவிதைதானே. என்னை மாதிரியே எல்லருக்கும் புடிக்கும். சந்தேகமேயில்ல.கடைசியில செம
  நச்.இங்கதான் உங்க ஆழம்.

  எங்கியோ போயிக்கிட்டு இருக்கிங்க அண்ணாச்சி. 🙂

 14. வணக்கம் வேலன்

  அடடா அடடா ……

  நல்லா இருக்கு கவிதை

  \\எல்லாவற்றிற்கும்
  பதிலுண்டு என்னிடம்.என்றாலும்,..

  கரைகளால் அறியமுடியாததுகடல்\\

  அகநானூற்றில் வரும்

  \\சிறுகல் பொறு நுறை \\

  போல் உள்ளது…

  தொடருங்கள்

  ஆமா யார்மேல் இவ்வளவு கொபம்

  நன்றி
  இராஜராஜன்

 15. ஐயா ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை, இந்த கவிதையிலிருக்கும் உணர்வுகள், எனக்கு பல பழைய நினைவுகளை தூண்டிவிட்டிருக்கிறது,
  சுயமரியாதையையும் தன்மானத்தையும் காத்துக்கொள்ள நிகழ்த்திய மௌனப்போராட்டங்கள்,,,,,, என பல நினைவுகள் சூழ்கிறது,

  //கரைகளால்
  அறியமுடியாதது
  கடல்//

  மிக உண்மை

 16. ரொம்ப நல்லா இருக்கு அண்ணாச்சி. வேற தளத்துக்கு மாறிட்டீங்க.

  @ குருஜி,

  என் இந்த கொல வெறி. எல்லாம் இந்தப் பாழாப்போன சந்தாப் பணம். ஹ்ம்ம். :))

  அனுஜன்யா

 17. அருமை.

  மக்கள் இந்த மாதிரி ஏடாகூடமான கேள்விகள் கேட்டுடுவாங்கன்னுதான் கலைஞர் கேள்விகளையும் அவரே கேட்டுக்குறாரோ??????

 18. @ அப்துல்லா

  ரொம்ப நன்றி.

  வேலன் அண்ணாச்சி,

  எப்பொழுதுமே கேள்விகள் சுலபம், விடைகள்தான் …………

  அன்புடன்
  மாசற்ற கொடி

 19. முதல் பாராட்டே டீச்சரிடமிருந்து. நன்றி டீச்சர்.

  நன்றி மகேஷ்.
  நன்றி குசும்பா. இந்தக் குசும்பனத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு.

  நன்றி சுந்தர். ”வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி”

  நன்றி முரளி
  நன்றி சிவா
  நன்றி TVRK சார்.
  நன்றி கணினி தேசம்.
  நன்றி வெண்பூ. மிக எளிய கவிதைதான் புரியலைன்னா ஆச்சர்யமா இருக்கு.
  நன்றி மாதேவி. முதல் வ்ருகை?
  நன்றி அப்துல்லா
  நன்றி முத்துவேல்
  நன்றி வனம்.
  நன்றி செந்தில். 45 வயதுதான் ஆச்சு எனக்கு. அதுக்கே ஐயாவா. ஹைய்யோ ஹைய்யோ.
  நன்றி அனுஜன்யா. உங்களுக்கும் சுந்தருக்கும் இருக்கும் தாவாவத் தனியாப் பேசித் தீர்த்துக்குங்க. ஆனாலும் அவர் சொன்னது உண்மைதான்.
  நன்றி சத்யா.

 20. நன்றி மாசற்றகொடி.

  அதீத மனஅழுத்தத்தில்தான் இதை எழுதினேன். எழுதியதும் மனது லேசாகியது. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.

 21. !

  \\
  என்றாலும்,
  கரைகளால்
  அறியமுடியாதது
  கடல்
  \\
  இது போதும் இதற்கு மேலுள்ள வரிகள் அத்தனைக்கும்..

  நல்லாருக்கு…

 22. //கேட்கும் உயரத்தில் நீங்களும்
  சொல்லும் நிலையில் நானும்//

  ரொம்பவே சங்கடமான நிலை இதுதான்.

  நிறைய அனுபவிச்சு இருக்கேன்.

 23. பரவாயில்லங்க அவங்க நினைச்சமாதிரி பதிலளிக்காம தப்பிச்சிட்டீங்க.. ஆனா நானெல்லாம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு குழம்பி கடைசியில் அவங்க நினைச்சாப்பலயே இல்ல பதிலக்குடுத்துடறேன்.. சோகம் 😦

 24. அனுஜன்யா கூட சேராதீங்க.. சேராதீங்கன்னு சொன்னேன்.. இங்க யாரு என் பேச்ச கேக்குறா.?

 25. //கரைகளால்
  அறியமுடியாதது
  கடல்//

  உங்களின் தக்கைகள் அறியா ஆழத்துக்குப் பின், மிகவும் ஆழ்ந்து ரசித்த கவிதை இது.

  மிகவும் அருமை.

 26. கேட்கும் உயரத்தில் நீங்களும்
  சொல்லும் நிலையில் நானும்

  என்றாலும்,
  கரைகளால்
  அறியமுடியாதது
  கடல்///

  மிக அருமையான ஆக்கம்!!!

 27. அண்ணாச்சிக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த கவிஞரை யாரப்பா தட்டி எழுப்பியது!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s