சில விபத்துக்களும் எதிர்பாராத விளைவுகளும்

.

நல்லா நின்னு பேசிட்டிருந்தவர், திடீர்னு தலை சுத்திக் கீழே விழுகிறார். மருத்துவமணையில் லோ பிரஷர் எனக் கண்டுபிடித்து, தேவையான முதலுதவிகளைச் செய்து, காரமடையில ட்ரீட் பண்ண வசதியில்லன்னு சொல்லி கோயமுத்தூருக்கு அனுப்புறாங்க. ஆம்புலன்ஸாகச் செயல்படும் ஆம்னி வேனை டிரைவர் ஓட்டிச் செல்ல பின்பக்கம் பேஷண்ட் படுத்தவாறும் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் அமர்ந்தவாறும் கோவை நோக்கிப் பயணம்.

வழியிலுள்ள பாலம் மீது ஆம்புலன்ஸைச் செலுத்துவதற்குப் பதிலாக சைடில் செலுத்திவிட்டார் டிரைவர். பள்ளத்தில் கவிழ்ந்து விடுகிறது.

பலன்?

டிரைவர் ஸ்தல மரணம். பேஷண்ட் உயிர் பிழைத்தார். பேஷண்டும், குடும்பத்தினரும் வேறு வேன் ஏற்பாடு செய்து டிரைவர் உடலை வீடு கொண்டுவந்து சேர்த்தனர்.

**************************************************************************

தாராபுரம் ஊருக்கு வெளியே இருக்கும் அமராவதிப் பாலத்தின் மீது ஓடிய லாரி தறிகெட்டு பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு முன் பாதி பாலத்துக்கு வெளியேயும் பின் பாதி ரோட்டிலுமாக ஊஞ்சலாடுகிறது.

டிரைவர் தப்பிக்கும் முன் கிளீனரைப் பார்த்து, ”குதிச்சிர்ரா, தப்பிக்க முடியாது, சீக்கிரம்” எனச் சொல்லிவிட்டு் ஆற்றினுள் குதித்து விடுகிறார். அந்த ஆற்றில் ஒரு விசேசம் என்னன்னா தலை கீழ நின்னா கழுத்தளவு தண்ணீர் ஓடும்.

டிரைவர் குதித்த அதிர்ச்சியில், ஊஞ்சலாடிய லாரி, ஆற்றினுள் விழுந்து விடுகிறது. கை எலும்பு முறிவுடன் கிளீனர் தப்பி விடுகிறார்.

டிரைவர்? ஸ்தல மரணம்.

**************************************************************************

டெக்ஸ்டைல் மில்ல் முதலாளி ஒருவர் என் நண்பர். திருமணமாகி ஆறு வருடமாகியும் குழந்தை இல்லை. கவுண்ட் குறைவுதான் காரணம். விளையாட்டாகச் சொல்லுவார், ”நமக்கு மில்லிலும் கவுண்ட் பிரச்சினை, வீட்டிலும் கவுண்ட் பிரச்சினை”.

ஒரு முறை ஈரோடு கலக்சன் முடித்துவிட்டு காரில் வேகமாக வந்திருக்கிறார். முன் சென்ற லாரி திடீரென்று பிரேக் போட கண்ட்ரோல் இல்லாமல் லாரியின் பின்புறம் மோதி விட்டார். இறங்கிப் பார்த்த டிரைவரும் கிளீனரும் எஸ்கேப்பாகிவிட, இரவானதால் முதலுதவி கிடைக்கத் தாமதமாகி அன்கான்சியஸ் ஆகிவிட்டார்.

ஒரு வழியாக அவரை மீட்டு கோவையிலுள்ள மருத்துவமணையில் சேர்த்தனர். வலது முழங்காலுக்குக் கீழே கூழாகிவிட்ட எலும்புகளைச் சேர்த்து பிளேட்டுகள் வைத்து சரி செய்து அவர் நடக்கவே 9 மாதமாகி விட்டது.

நல்ல ஓய்வில் இருந்ததால் அவரது கவுண்ட் பிரச்சினை சரியாகி, அந்த விபத்திற்குப் பிறகு அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

மில்லில் கவுண்ட் பிரச்சினை சரியானதா எனத் தெரியவில்லை.

**************************************************************************

”யோவ் நீ பதிவு எழுத வந்ததே விபத்துதானே?” கேட்டது என்னோட தங்கமணி.

”அப்படின்னா எதிர்பாராத விளைவு?”

”உன்னையும் மதிச்சு 4 பேரு பின்ன்னூட்டம் போடுறாங்களே அதுதான்”

அவ்வ்வ்வ்வ்

**************************************************************************

Advertisements

32 comments

 1. மூணாவது மேட்டர் சூப்பர்.. நாலாவது மேட்டர் சூப்பரோ சூப்பர்..:)))

 2. ஹை.. ரொம்ப வருசம் கழிச்சு “மீ த பஷ்டு”… இதுவும் ஒரு விபத்துதானோ.. :))))

 3. சூழ்நிலை மாற்றம் கூட சில சமயம் விபத்துகளாகிவிடும்!

  நல்ல பதிவு!
  முக்கியமாக உங்க பாஸிடிவ் அப்ரோச் எனக்கு பிடித்திருக்கிறது!

 4. //”உன்னையும் மதிச்சு 4 பேரு பின்ன்னூட்டம் போடுறாங்களே அதுதான்”//

  🙂 🙂

 5. அண்ணே இது 6 வது பின்னூட்டம்
  🙂

 6. வேலன்!

  ம்.. முடித்த இடத்தில் சிரிப்பு வந்தது.

 7. Muthal rendu vishayam padicha udane enna solrathune theriyalai. Vidhi valiyathu appadinu thaan solla thoanuthu 😦

  moonavathum vithiyai thaan ninaika veikuthu… aana nallathu nadantha santhosham… ippa antha accident pannavanga avaru kannuku theivama kooda theriyalam.

  Naalavathu onnum solrathuku illai 🙂

 8. அண்ணி கிட்ட சொல்லுங்க தமிழ் பிரியன் 10 வது ஆளா கமெண்ட் போட்டு இருக்கான்னு… 😉

 9. பத்தோட பதினொண்ணு… அத்தோட இதுவும் ஒண்ணுன்னு நான் இருக்கேன்னு சொல்லுங்க…

 10. நான் 12 வது பின்னூட்டமுங்க.. அண்ணி சொன்னதவிட 3 மடங்கு கூட வாங்கிட்டீங்க..

  விபத்துக்களுக்கான காரண, காரியங்கள் சரியாக ஆராயப் படுவதில்லை.

  சில இடங்களில் திரும்ப திரும்ப விபத்துகள் நேருகின்றன. அந்த இடங்களில் விபத்து பகுதி, மெதுவாகச் செல்லவும் என்ற போர்டு போடுவதோடு வேலை முடிந்துவிட்டதாக அரசாங்கம் நினைக்கின்றது. அது மாற வேண்டும்.

  வண்டி ஓட்டும் போது, சற்று நிதானமாக ஓட்ட வேண்டும். வேறு யோசனைகள் எதுவும் இருக்க கூடாது.

  வண்டி ஒட்டும் போது நல்ல ரெஸ்ட் வேண்டுங்க..

 11. வேலன் ஐயா என்ன பண்றது விதின்னு சொல்லலாமா, இதை விடுங்க

  வாழ்த்துகள், நவீன விருட்சத்தில் தக்கைகள் அறியா நீரின் அடியாழம் வாசிச்சேன், அருமை

 12. நன்றி வெண்பூ
  நன்றி சிவா
  நன்றி வால்
  நன்றி டாக்டர்
  நன்றி அப்துல்லா
  நன்றி சுரெஷ்
  நன்றி மாதவ்
  நன்றி வெட்டி
  நன்றி தமிழ்
  நன்றி ச்சின்னப்பையன்
  நன்றி ராகவன்
  நன்றி யாத்ரா

 13. நன்றி வெண்பூ
  நன்றி சிவா
  நன்றி வால்
  நன்றி டாக்டர்
  நன்றி அப்துல்லா
  நன்றி சுரெஷ்
  நன்றி மாதவ்
  நன்றி வெட்டி
  நன்றி தமிழ்
  நன்றி ச்சின்னப்பையன்
  நன்றி ராகவன்
  நன்றி யாத்ரா

  ஹை…
  பதிவும் நல்லா இருக்கு…
  நன்றி சொன்ன விதமும் நல்லா இருக்கு .

 14. சுவாரஸ்யமா இருக்கு. மும்பையிலிருந்து சென்றதும் சுறுசுறுப்பு மேலதிகமாகி விட்டது 🙂

  இந்தப் பின்னூட்டத்துடன் பதினாறும் பெற்று விட்டதற்கு வாழ்த்துகள்.

  நிறைய எழுதுங்கள் வேலன். நவீன விருட்சத்தில் உங்கள் கவிதை வந்ததற்கு வாழ்த்துகள்.

  அனுஜன்யா

 15. //அந்த ஆற்றில் ஒரு விசேசம் என்னன்னா தலை கீழ நின்னா கழுத்தளவு தண்ணீர் ஓடும்//

  இத ரசிச்சேன்

 16. நான் 18ங்க

  விளைவாஆ,

  அப்ப நமக்கு வர்றதும் அதுதானா…
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 17. //டிரைவர் தப்பிக்கும் முன் கிளீனரைப் பார்த்து, ”குதிச்சிர்ரா, தப்பிக்க முடியாது, சீக்கிரம்” எனச் சொல்லிவிட்டு் ஆற்றினுள் குதித்து விடுகிறார். அந்த ஆற்றில் ஒரு விசேசம் என்னன்னா தலை கீழ நின்னா கழுத்தளவு தண்ணீர் ஓடும்.//

  என்னை அணைத்த அமராவதி கழுதை தேஞ்சு கட்டெறும்பு மாதிரி ஆயிப்போச்சே:(

 18. /அந்த ஆற்றில் ஒரு விசேசம் என்னன்னா தலை கீழ நின்னா கழுத்தளவு தண்ணீர் ஓடும்./

  அண்ணாச்சி, சோகமான(வினோதமானதும் கூட) செய்திகள்ல காமெடி.இடுக்கண் வருங்கால் நகுக வா?

 19. //”உன்னையும் மதிச்சு 4 பேரு பின்ன்னூட்டம் போடுறாங்களே அதுதான்”//

  நான் 23 வது ஆளுங்கோ!

 20. வழக்கம் போல சுவையான ரசிக்கும்படியான கதம்பம்.

 21. சிந்திக்க வைக்கக் கூடிய நிகழ்வுகள்!!!!

 22. நன்றி மோனி
  நன்றி அனுஜன்யா
  நன்றி ராஜ்
  நன்றி அ.அம்மா
  நன்றி ஸ்வாமி
  நன்றி ராஜ நடராஜன்
  நன்றி வெயிலான்
  நன்றி குசும்பா
  நன்றி முரளி

 23. விபத்துகள் கூட எவ்வளவு இண்ட்ரெஸ்டிங் பதிவு போட வெச்சுடுது… அதுவே இரு எதிர்பாராத விளைவுதானே?

 24. அண்ணாச்சி,
  நாமக்கு எல்லாம் பதிவெழுத வந்த விபத்து ஒன்னா நடந்துச்சு.

  அருமையா எழுதியிருக்கீங்க.
  விபத்துகளை கூட ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s