ஒலக அதிசயம்


ஒலக அதியசயமாம்ல
ஊருக்குள்ள பேசுதாவ

அன்னாடம் கஞ்சி காய்ச்சி
அரை வயிறு குடிச்சாலே
அதியசம் எங்களுக்கு

மொளைக்கப் போட்டா
மழை இல்ல
மொளச்சு வந்தா
களை தொல்லை
அதுக்கு மேல
பூச்சி மருந்து
எல்லாம் முடிஞ்சா
ஆளில்லை அறுக்க
அறுத்து வந்தா
விலை இல்லை
கணக்குப் பார்த்தா
கை நஷ்டம்

இதுல
மும்தாசக் கண்டமா?
சாசகானக் கண்டமா?

பசிக்குது சாமி
கொஞ்சம் தண்ணியாச்சும்
குடிக்க விடுங்க

.

Advertisements

24 comments

 1. //எல்லாம் முடிஞ்சா
  ஆளில்லை அறுக்க
  அறுத்து வந்தா
  விலை இல்லை
  கணக்குப் பார்த்தா
  கை நஷ்டம்//

  உண்மைதான்

  அரசின் திட்டங்களில் பணம் முடக்கப்படுகிறதோ இல்லையோ, ஒழுங்காய் வேலை செய்துக்கொண்டிருந்த மக்களின் மனங்கள் முடக்கப்பட்டு இருக்கிறது !

  மிகுந்த அலட்சிய மனப்பான்மை ஒவ்வொருவரிடமும் அரசின் திட்டங்கள் உரம் போடாமலே வளர்த்து விடப்பட்டிருக்கின்றது உண்மை!

 2. அருமை. படத்துக்காக கவிதையா ? கவிதைக்கான படமா ? இரண்டு கவிதைகளும் சூப்பர்.

  அன்புடன்
  மாசற்ற கொடி

 3. //அன்னாடம் கஞ்சி காய்ச்சி
  அரை வயிறு குடிச்சாலே
  அதியசம் எங்களுக்கு//

  கவிதை நல்லாயிருக்க

 4. மெய் வருத்தக் கூலி தரும் என்பது பொய்தானா?

 5. நல்லா இருக்கு அண்ணாச்சி. புகைப்படம் பார்த்ததும் தோன்றிய கவிதையா?

  டெம்ப்ளேட் மாத்திகிட்டே இருக்கீங்க! அசத்தல்.

  அனுஜன்யா

 6. அண்ணே..

  டச்சிங்கா இருக்குண்ணே..

  யதார்த்தா வாழ்க்கையை அப்படியே சொல்லியிருக்கீங்க..!

  நல்லாயிருக்கு..!

 7. கவிதை நல்லாருந்தது.

  வார்ப்புருவெல்லாம் மாத்தி கலக்கறீங்க.

 8. //பசிக்குது சாமி
  கொஞ்சம் தண்ணியாச்சும்
  குடிக்க விடுங்க///

  எதார்த்தம் மற்று உரிமைகோரல்…. நன்றாக இருக்கு..

 9. வழக்கமான சமுதாயச் சாடல் கவிதைதான்.புதுமை “வட்டார வழக்கில்” சாடுவது.

  இந்த வரியை சேர்க்கலாம்:-
  //எங்களுக்கு எல்லாம்
  தல கீல//

  இதுல
  மும்தாசக் கண்டமா?
  சாசகானக் கண்டமா?
  எங்களுக்கு எல்லாம்
  தல கீல
  பசிக்குது சாமி
  கொஞ்சம் தண்ணியாச்சும்
  குடிக்க விடுங்க

  இந்த வரியை ஏன் சேர்த்தேன் என்று புரிந்திருக்கும்.

 10. மொளைக்கப் போட்டா
  மழை இல்ல
  மொளச்சு வந்தா
  “களை தொல்லை
  அதுக்கு மேல
  பூச்சி மருந்து
  எல்லாம் முடிஞ்சா
  ஆளில்லை அறுக்க
  அறுத்து வந்தா
  விலை இல்லை
  கணக்குப் பார்த்தா
  கை நஷ்டம்”
  மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் விவசாயிகள் துன்பத்தை

 11. நன்றி ஸ்வாமி ஓம்கார்
  நன்றி Mahesh
  நன்றி ஆயில்யன்
  நன்றி மாசற்ற கொடி
  நன்றி T.V.Radhakrishnan சார்
  நன்றி ஆ.முத்துராமலிங்கம்
  நன்றி புன்னகை
  நன்றி பொன்.பாரதிராஜா
  நன்றி அனுஜன்யா
  நன்றி உண்மைத் தமிழன்
  நன்றி வெயிலான்
  நன்றி ஆ.ஞானசேகரன்
  நன்றி ச.முத்துவேல்
  நன்றி கே.ரவிஷங்கர்
  நன்றி SK
  நன்றி ச்சின்னப் பையன்
  நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 12. படமும் கவிதையும், அதுவும் பேச்சு வழக்கிலே கவிதை இருப்பதுவும் ஒரு பலமாய்…

  கவிதை வெகு அழகாய் அருமையாய் இருக்கிறது.

 13. மு சுயம்புலிங்கத்தின் மொழியைப் போல் இருக்கிறது.

  வாழ்த்துக்கள்.

 14. நல்லா இருக்குங்க

  இந்த தளத்தில் ஒரு கவிதை நினைவு வருகிறது, பகிர்ந்து கொள்கிறேன்

  இங்கே அமர வேண்டாம் கண்ணே
  ஒரு திமிர் பிடித்த அரசன்
  ஏழைக்காதலை
  அவமதித்திருக்கிறான்

 15. இந்தப்படத்தை பார்த்தால் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு எண்ணங்கள்..

 16. எங்க ஆளுக சோகத்த கவிதையா சொல்லிப்புட்டீங்க.
  கலக்கல் கவிதை அண்ணாச்சி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s