சீரியல் கில்லர்கள்

Doordarshan’s social objectives include that it has to:
a) act as a catalyst for social change;
b) promote national integration;
c) stimulate a scientific temper in the minds of the people;
d) disseminate the message of family planning as a means of population
control and family welfare;
e) provide essential information and knowledge in order to stimulate greater agricultural production; and
f) promote and help preserve environment and ecological balance
-(Doordarshan Handbook 1997, p.23).

தமிழ் தொலைக்காட்சிகளில் ச்மீபத்தில் வருபவை எல்லாம், சீரியல் கில்லர்களே.நம்மைக் கொல்வதாலும், ஒருவரை ஒருவர் மாத்தி மாத்திக் ‘கொல்லுவதாலும்’

பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பதில்லை. இருபாலரும்தான். பெண்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள் அவ்வளவுதான் அதன் பின்னுள்ள மனநிலை ஆராயப்படவேண்டும்.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சுவராஸ்யம் தேவைப்படுகிறது. அதை சினிமாவில் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது தொ கா தருகிறது. இப்பொழுதெல்லாம் சினிமாவிற்குச் சென்று வருவதே ஒரு வேலையாக இருக்கிறது. . சினிமாவிற்கு ஆகும் செலவு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாததாக இருக்கிறது.

இவை எல்லாம் புறக்காரணங்கள், அகக்காரணம் புறக்கணிக்கப்படுதலைத் தாங்க முடியாதது.

திருமணமான புதிதில், நிறைய வேலை இருக்கும். கணவன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆண்களும் ஒரு கவர்ச்சியின் காரனமாகவும், புது சொந்தம் என்பதாலும், அதிக நேரம் மனைவியுடன் செலவிடுகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல இது படிப்படியாகக் குறைகிறது. இடைப்பட்ட காலத்தில் ஒரு குழந்தையும் பிறந்த்து விடுகிறது. புது வரவினால் வந்த கூடுதல் வேலை, குழந்தை பெற்றுத் தந்ததால் கணவனிடமிருந்து கிடைக்கும் திடீர்ப்பாசம் மற்றவர்களின் கூடுதல் அன்பு என்று சிறிது காலம் சென்றுவிடும்.

பிறந்த குழந்தை பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன், திடீரென்று ஒரு வெறுமை சூழ்கிறது. நிறைய நேரம் இருப்பது போல் தெரிகிறது. மெதுவாக தொ.கா வில் ஆர்வம் செல்கிறது. யாரும் இல்லாத பொழுது பார்க்க ஆரம்பித்து, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்த்தே தீருவது என்ற நிலைக்கு அடிமையாக்குகிறது.

ஆண்கள் மட்டுமே அதிக சிரமப்படுவதாகவும், பெண்கள் அவர்களைப் பராமரிக்கவே பிறந்தவர்களாகவும் சிறு வயதிலிருந்தே இருபாலருக்கும் போதிக்கப்பட்டு வருகிறது. எனவே அலுவலகத்திலிருந்து வருபவன், வீட்டிலிருப்பவளைக் கண்டு கொள்வதில்லை. He takes her for granted. பெண்களுக்கும் அவனுக்குச் சேவை செய்தே பழக்கப்பட்டுவிடும். பரஸ்பரம் சேர்ந்தே இருந்தாலும், மனதளவில் பிரிந்துதான் இருக்கிறார்கள்.

கொஞ்சம் சுவராஸ்யம், திகில், சஸ்பென்ஸ், சவால் செண்டிமெண்ட் என்று கலந்து சீரியல்களில் வருவதால் தனக்குப் பிடித்ததில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

இடம் மாறிய டைனிங் டேபிள், புதிதாக விரித்த படுக்கை விரிப்பு,ஸ்பெசலாகச் செய்து கொண்ட அலங்காரம் எதுவ்ம் எதிர்பார்த்த பாராட்டைப் பெற்றுத் தருவதில்லை. மனைவிக்குப் பிறந்த நாள் பரிசாக சர்ப்ப்ரைஸாக என்ன வாங்கித் தருவாய் என்று கேட்டால் ஆண்கள் சொல்லும் பதில் சிரிப்பைத்தான் வரவைக்கும். சொல்லப்படும் பதில், பெரும்பாலும், அவர்களுக்குத் தனிப்பட்ட பரிசாக அல்லாமல், மொத்தக் குடும்பத்திற்கானதாகவே இருக்கும்.

இது இளவயதினருக்கானது. முதியவருக்கோ வேறு விதமான சிரமங்கள். ஒரு குடும்பத்தையே தாங்கியவர்கள், எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாதவர்களாக ஆகிவிட்டோமோ என்று யோசிக்கத் துவங்குகிறார்கள். புறக்கணிக்கப்படுவதாகவும், ஒதுக்கப்படுவதாகவும் நினைத்து உள்ளுக்குள் சுருங்கி விடுகிறார்கள்.

தன் மகனுடன் அளவாகப் பேசும் பெரியவர்கள், மகனின் நன்பர்களுடன் தோழமையுடன் பேசிப்பழகுவதைப் பார்க்கலாம். காரணம்?. மகனின் நன்பன், அவரது வயது கருதி அனுசரித்துப் போவதும், அவரைப் பற்றிய விமர்சனங்களை நேருக்கு நேர் சொல்லாததுமாகும். அதை விட முக்கியம் மகனின் தயவில் வாழ்வது ஒரு தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கியிருப்பதுதான்.

புறக்கணிப்பின் வேதனையும், ஒதுக்கப்படுதலின் வலியும், வாழ்க்கை குறித்த நிச்சயமின்மையும் அதனால் வரும் நம்பிக்கையின்மையும்தான் காரணம். அவர்களுடன் அமர்ந்து பேசினாலே பிரச்சினையின் வேர்கள் புலப்படும், சரி செய்ய வழியும் தென்படும். செய்ய முனைவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் சீரியலல்லாத மற்ற எந்த நிகழ்ச்சியும் குடும்பத்துடனமர்ந்து பார்க்கும் தரமன்று. போர்வக்குள் பூப் பூக்கச் செய், வேர்வைக்குள் விவசாயம் செய் என்று பாடும் பொழுது அம்மா(60), மகள்(18), இள்யவள்(13) முதலியவர்களுடன் அமர்ந்து எப்படிப்பார்ப்பது? நெளிய வைக்கிறது.

ஜோடி நெ 1 போன்ற நிகழ்சிகளில் தங்கள் அங்கங்கள் குலுங்க ஆடுபவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களது குழந்தைகள் என்ன பாடுபடப்போகின்றனரோ?

என் வீட்டில் 2001 முதல் கேபிள் கனெக்க்சன் இல்லை. நாங்கள் இழந்தது எதுவுமில்லை. என் மனைவி பள்ளி ஆசிரியை. காலையும் மதியமும் சேர்ந்து சாப்பிட முடியாது. இரவு இருவரும் குழந்தைகளுடனும் என் அம்மாவுடனும் சேர்ந்த்தே சாப்பிடுவோம். அப்பொழுது பள்ளியில் நடந்தது அல்லது அலுவலகத்தில் நடந்தது என்று ஏதாவது பேசிக்கொண்டே சாப்பிடுவோம். சில நேரம் யாராவது ஒருவரை எல்லோரும் சேர்ந்து ஓட்டுவோம். பெரும்பாலும் மாட்டிக்கொள்வது நானாகத்தானிருக்கும். கேபிள் இருந்திருந்தால் இது சாத்தியமில்லை. எல்லோரும் தட்டில் போட்டுக் கொண்டு தொ கா முன் அமர்ந்து மெளனமாகத்தான் சாப்பிடக் கூடும்.

ஒருமுறை உறவினர் வீட்டிற்கு இரவு 10 மணிக்குச் செல்ல வேண்டி இருந்த்தது. வெளியே இருந்து எவ்வளவு கத்தியும் யாரும் வரவில்லை. இருட்டில் காலிங் பெல் எங்கிருகிறது என்று தெரியவில்லை. மெயின் ச்விட்சை ஆப் செய்தால் மொத்தக் குடும்பமே அலறியடித்து வருகிறார்கள். அவ்வளவு பேரும் (அம்மா, அப்பா, பையன், மருமகள், பேரன்) சீரியஸாக சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Disclaimer : All logos are properties of respective owners. Logos acknowledged with thanks.

.

Advertisements

36 comments

  1. ///சில நேரம் யாராவது ஒருவரை எல்லோரும் சேர்ந்து ஓட்டுவோம். பெரும்பாலும் மாட்டிக்கொள்வது நானாகத்தானிருக்கும்.////
    😉

  2. எங்கள் வீட்டில் கேபிள் கனெக்சன் இருந்தாலும் சீரியல்,பாடல்,சினிமா எதற்கும் அனுமதி இல்லை.. தங்கமணி ஆர்டர்! (கிச்சனில் இருக்கும் நேரம் தெரியாமல் பார்த்தாதால் உண்டு… 😦 )

  3. கடைசி பாரா …. உறையவைக்கும் உண்மை!

    -அப்துல்லா
    -பரிசல்
    -ஆதி
    -கார்க்கி

    (சென்னையில் அப்துல்லா அறையிலிருந்து…)

  4. //என் வீட்டில் 2001 முதல் கேபிள் கனெக்க்சன் இல்லை. //

    அட.. எனக்கு இப்பத்தான் ரெண்டு மூணு மாசமா கேபிளை தெரியும்…

    நண்பர் சங்கரைத்தானே சொல்றீங்க????

    :-)))

  5. மிக நல்ல பதிவு…

    நாங்க இங்கிருந்து உறவினர்களுக்குத் தொலைபேசினா, அவங்க வெறும் ‘ம்’, ‘ம்’னு சொல்லிட்டிருப்பாங்க… அப்புறம்தான் தெரியும் அவங்க சீரியல் பாத்துக்கிட்டே எங்ககிட்டே பேசறாங்கன்னு…

    சில பேர் சொல்லிடுவாங்க… ஒரு அரை மணி நேரம் கழிச்சி பண்ணுங்க… இந்த சீரியல் முடிஞ்சிடும் அப்படின்னு…

  6. ///ஒருமுறை உறவினர் வீட்டிற்கு இரவு 10 மணிக்குச் செல்ல வேண்டி இருந்த்தது. வெளியே இருந்து எவ்வளவு கத்தியும் யாரும் வரவில்லை///இது உங்களுக்கு மட்டுமில்லீங்க, சாயந்திரம் 6 மணிக்கு மேல உறவுக்காரங்க வீட்டுக்கு போனவங்களுக்கு பெரும்பாலானவங்களுக்கு இந்த அனுபவம் கெடச்சிருக்கும். ரெண்டு மாசத்துக்கு முந்தி என் தங்கச்சி கல்யாண பத்திரிகை வைக்க உறவுக்காரங்க வீட்டுக்கு வேற வழியில்லாம சாயந்திரம்தான் போக முடிஞ்சது(எல்லோரும் வேலைக்கு போறவிங்க). நாம போற நேரம் சீரியல் ஓடுற நேரமா போச்சோ தொலைஞ்சோம். இதுல காமடி என்னன்னா சீரியல்ல விளம்பரம் ஓடுற நேரம்தான் நமக்கு உபசரிப்பு/விசாரிப்பு எல்லாம். ரொம்ப நாளாவே(ஒரு அஞ்சு ஆறு வருஷமா, எங்க அப்பாவோட சட்டம் ) எங்க வீட்டுக்கு உறவுக்காரங்க வந்தாங்கன்னா, அது எந்த நேரமா இருந்தாலும், அவங்கள உக்கார சொல்லீட்டு டி.வீ ய ஆப் பண்றதுதான் முதல் வேலை. இதுனால நிறைய பேருகிட்ட மனக்கசப்பு வந்திருக்கு. ஆனா இப்போ எங்க உறவுக்காரங்களுக்கு பழகிப்போச்சி(இவங்க வீட்டுக்கு போன இப்பிடிதான்னு).

  7. //ஜோடி நெ 1 போன்ற நிகழ்சிகளில் தங்கள் அங்கங்கள் குலுங்க ஆடுபவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை//

    “சீரியல் கில்லர்கள்”?????

  8. naan calling bell idaikkama…
    compound suvar yeri guthikkum pothu mani iravu 10…

    app roth vantha police patrol kitta matikkittu…
    naan avanga sonthakaran thaan entru solli varuvatharkul …
    pothum pothum entru agi vittathu….

  9. ரொம்ப நல்ல பதிவு. சிந்திக்க வேண்டியதும் கூட.
    //மேலும் சீரியலல்லாத மற்ற எந்த நிகழ்ச்சியும் குடும்பத்துடனமர்ந்து பார்க்கும் தரமன்று//
    இல்ல ஸார். இப்பொல்லாம் சீரியல்ல கூட கொலை, வன்முறைன்னு குழந்தைகள் பார்க்கக் கூடாத காட்சி எல்லாம் நிறைய வருது.
    ”சித்தி” ன்னு ஒரு சீரியல் வந்ததே. அது தான் நான் பார்த்த ஒரே சீரியல். அதைக் கூட முழுசா பாக்கல.
    //என் வீட்டில் 2001 முதல் கேபிள் கனெக்க்சன் இல்லை. நாங்கள் இழந்தது எதுவுமில்லை.// Hats off!
    டிவி பார்ப்பதால் குடும்பங்கள் இழக்கும் சின்னச் சின்னச் சந்தோஷ்ங்களை அழகாகச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்!

  10. நியாயமான ஆதங்கம்தான்.
    இப்படி தொலைக்காட்சிக்கு நடுவில் கிடைக்கும் நேரத்தில் வாழ்வை வாழ்பவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

  11. பயாஸ்கோப்ல படங்களெல்லாம் பட்டையக் கெளப்புது அண்ணாச்சி.

  12. “”ஒவ்வொரு வீட்டிலும் இதுதான் நிலைமை!!==

    அறிவியலால் நாம் இழக்க நேர்ந்த குடும்ப உறவுகள்.””

  13. நேற்று ஒரு நண்பர் வீட்டிற்கு போயிருந்தேன் ஒரு சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. காப்பி கொடுத்தார்கள். அந்த சீரியலில் ரம்யா கிருஷ்ணன் இரட்டைவேடம். ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சீன். சுமார் 15 நிமிடம் முழுக்கடைக்குள் இரு ரம்யா கிருஷ்ணன்களும் கண்ணாமூச்சி ஆடுவதை காட்டினர்கள். தொடரும் போட்டுவிட்டனர். கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு பார்த்த ஒரு தொடரின் பகுதி இது.

    தொடர்கள் மக்களை மிகவும் சோம்பேறிகளாக்கிவிட்டது என்பது மட்டுமல்லாது பல வீடுகளில் பெரிய பிரச்சினைகளையும் உண்டாக்கிவிட்டது என்பதும் உண்மை.

  14. தங்களின் அன்பான ஆதங்கம் மனதை தொடுகிறது.
    இந்த வீணாய் போன சீரிய்ல்களால் இன்று என் குடும்ப உறவினர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார்.
    எங்களால் நம்பமுடியவில்லை என்றாலும் மருத்தவரின் ஒப்புதல் எங்களை உலுக்கிவிட்டது.

    வேண்டாம் சீரியல் மோகம்.
    உலகம் தொலைக்காட்சிபெட்டிக்கு சற்று தள்ளி பக்கத்தில் உங்களுக்காக தினமும் காத்திருக்கிறது.
    கண் திறந்து பாருங்கள்.

    நன்றி வேலன் சார்,
    ~ரங்கன்

  15. //என் வீட்டில் 2001 முதல் கேபிள் கனெக்க்சன் இல்லை//

    நெஜம்மாவா?

    //He takes her for granted /

    நெஜம்மா !!

  16. ஒரு முறை பதிவு போட்டால் போதாது. சமீபத்தில் ரவி கூட இது பற்றி எழுதினார். ஆனால், நிறைய விதயங்களில் நாம் ஒரு வழிப் பாதையில் தான் பயணிக்கிறோம். இது சற்று சிக்கலான சமாசாரம். தனியாக, அறுவை சிகிச்சை செய்ய முடியாது.

    சானல்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். எல்லாம் வியாபார மயம். :((

    ஆயினும், பதிவுக்கு வாழ்த்துகள்.

    அனுஜன்யா

  17. ரொம்ப நல்ல பதிவு. சிந்திக்க வேண்டியதும் கூட.

  18. ரொம்ப நல்ல அலசல் அண்ணாச்சி. தாமிரா அஜால் குஜால் பத்தி எழுதி இருக்கிறார். நீங்க பொதுவான பிரச்சனைப் பத்தி எழுதி இருக்கிங்க. நாளை வெளிவரப் போகும் என் கூட்டஞ்சோறு பதிவில் நானும் டிவி நிகழ்ச்சியைத் தொட்டிருக்கிறேன்.. சங்கிலித் தொடர்.. 😉

    //பெரும்பாலும் மாட்டிக்கொள்வது நானாகத்தானிருக்கும்//
    பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :))

    //மெயின் ச்விட்சை ஆப் செய்தால் மொத்தக் குடும்பமே அலறியடித்து வருகிறார்கள். அவ்வளவு பேரும் (அம்மா, அப்பா, பையன், மருமகள், பேரன்) சீரியஸாக சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.//

    இந்த வயசுலையும் என்னா ஒரு வில்லத் தனம்? ;))

  19. அருமையான பதிவு.

    இந்த டிவிச் சனியன் வந்தபிறகு குடும்ப உறவுகள் நல்லாவே பாதிக்கப்பட்டு இருக்கு. போதாக் குறைக்கு குடும்பம் முழுசும் வெகு சீக்கிரம் செவிடாவும் ஆகிருவாங்க. என்னா சத்தம் என்னா சத்தம்!!!

    இங்கே எங்கள் வீட்டிலும் கேபிள், ஸ்கை கனெக்ஷன் இப்படி எதுவும் எடுக்கலை. ஆனாலும் ஸ்போர்ட்ஸ் பகுதி வரும்போது ஏதோ மோனத்தவம் செய்வார் ரங்கமணி.

    அந்த நிமிஷம் பார்த்து ஏதாவது வைரநெக்லேஸ் வாங்கிக்கப்போறேன்னு சொன்னால்கூட சரின்னு ஒரு தலை அசைப்புதான்.

    நாந்தான் பொழைக்கத் தெரியாதவ. ஓடிப்போய் வாங்கவேணாமோ? ஊஹூம்…..

  20. நன்றி தமிழ் பிரியன்
    நன்றி அப்துல்லா, பரிசல், ஆதி, கார்க்கி

    நன்றி ச்சின்னபபையன்.

    //நாங்க இங்கிருந்து உறவினர்களுக்குத் தொலைபேசினா, அவங்க வெறும் ‘ம்’, ‘ம்’னு சொல்லிட்டிருப்பாங்க… அப்புறம்தான் தெரியும் அவங்க சீரியல் பாத்துக்கிட்டே எங்ககிட்டே பேசறாங்கன்னு…

    சில பேர் சொல்லிடுவாங்க… ஒரு அரை மணி நேரம் கழிச்சி பண்ணுங்க… இந்த சீரியல் முடிஞ்சிடும் அப்படின்னு…//

    வீட்டுக்குப் போனாத்தன் பிரச்சினைன்னு பார்த்தா போனல பேசுவதும் பிரச்சினையா? அவ்வ்வ்வ்வ்

    நன்றி சிவக்குமரன். உறவுக்காரங்க வந்ததும் தொ கா பெட்டிய அனைத்துவிடுவது நல்ல பழக்கம்தான். ஆனா அதிலயும் தராதரம் வந்திடும். என் நண்பர்கள் வந்தா மற்றவர்கள் பார்ர்பர். அதேபோல என் பகளின் தோழியர் வரும்போது நாங்கள் பார்பதும் நடக்கும். வீட்டுக்கு வருபவர்களுக்குண்டான மரியாதை செய்யாத மாதிரி இருந்தது. மேலும் பிள்ளைகளின் படிப்புக்காகக் கட் செய்தோம் கேபிளை. ஆரமப்த்தில் என் அம்மாவுக்குத்தான் கஷ்டமாக இருந்தது இப்ப பரவாயில்லை எஃப் எம் கேட்டுச் சமாளித்துக் கொள்கிறார்கள்.

  21. நன்றி சுரேஷ்
    நன்றி maayvee. சில சமயம் காம்பவுண்டுக்குள் இருக்கும் நாய் புடுங்கும்.

    நன்ரி தீபா. நான் சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லல. அட சீரியல்தான் இப்படின்னு பார்த்தா மத்தது இதவிடக் கொடுமையா இருக்கு. இந்த ரியலிட்டி ஷோ இருக்கு பாருங்கு ரெம்பக் கொடுமை அவங்க தயாராகுரதக் காட்டுரேன்னு அஅவங்க பாத்ரூம் போறதெல்லாம் கவர் பண்ணுறாங்க. தோத்தவங்கள நோண்டி நொங்கெடுக்குறெதெல்லாம் உச்ச கட்டம். விளம்பர யுக அவலங்கள் இதெல்லாம்.

    நன்றி பட்டாம்பூச்சி

    நன்றி வெயிலான். அதெல்லாம் மும்பை சென்றபோது எடுத்தது. சூர்யோஒதயம் அனுஜன்யா வீட்டிலிருந்து, அஸ்தமனம் பெங்களூறு தாண்டி ரயிலில் செல்லும்போது எடுத்தது.

  22. நன்றி அசோசியேட்
    நன்றி மஞ்சூர் ராசா. அப்பப்ப நம்ம கடைக்கும் வாங்க. சீரியல்னாவே அதுதானே. மொத்தமே 18 நிமிஷம்தான் அதில ரிகேப் வேற. நான் சில சமயம் யோசிப்பதுண்டு நம்ம மருதமலை அல்லது பழனிமலையில ஏறி சாமி கும்பிடுவதை ஒரு வருடத்திற்கு எடுப்பார்களோ. ஒரு எபிசோடுக்கு 10 படிகள் ஏறுவதைக் காட்டினாலே போதம்.
    //தொடர்கள் மக்களை மிகவும் சோம்பேறிகளாக்கிவிட்டது என்பது மட்டுமல்லாது பல வீடுகளில் பெரிய பிரச்சினைகளையும் உண்டாக்கிவிட்டது என்பதும் உண்மை.//

    நாம்தான் வருமுன் காக்க வேண்டும்.

    நன்றி ரங்கன்.
    //உலகம் தொலைக்காட்சிபெட்டிக்கு சற்று தள்ளி பக்கத்தில் உங்களுக்காக தினமும் காத்திருக்கிறது.
    கண் திறந்து பாருங்கள்.//

    அதேதான் என் கருத்தும்.

    நன்றி மகேஷ். ஆமாம்.

  23. //அட சீரியல்தான் இப்படின்னு பார்த்தா மத்தது இதவிடக் கொடுமையா இருக்கு. இந்த ரியலிட்டி ஷோ இருக்கு பாருங்கு ரெம்பக் கொடுமை அவங்க தயாராகுரதக் காட்டுரேன்னு அஅவங்க பாத்ரூம் போறதெல்லாம் கவர் பண்ணுறாங்க. தோத்தவங்கள நோண்டி நொங்கெடுக்குறெதெல்லாம் உச்ச கட்டம். விளம்பர யுக அவலங்கள் இதெல்லாம்.
    //

    அண்ணே.. எதையாவது மிச்சம் வைங்க.. நான் இதை எல்லாம் எழுதி நாளைக்கு பப்ளிஷ் ஆகற மாதிரி செட் பண்ணி வசிருக்கேன். அப்பாலிக்கா காப்பி ரைட்ஸ் பிரச்சனை வந்துடப் போகுது.. 😦

  24. நன்றி அனுஜன்யா.
    நன்றி சிவா.
    நன்றி சஞ்சய்.
    //இந்த வயசுலையும் என்னா ஒரு வில்லத் தனம்? ;))//
    அது நிர்பந்தம்.
    நன்றி துளசி டீச்சர்.

    ஆனா கேபிள் இல்லாததால எனக்கு இன்னொரு வசதியும் உண்டு. வரும் சொந்தங்கள் எல்லாம் என் வீட்டில் கேபிள் பார்க்க முடியாது என்பதால் வந்த வேலை முடிஞ்சதும் பொட்டியக் கட்டிடுவாங்க. இப்படி நெனைக்கிறது தப்புன்னாலும் தேவையில்லாத பிரச்சினைகள்ல நானோ என் தங்கமணியோ இதுவரைக்கும் மாட்டாமத் தப்பி விடுகிறோம். இல்லன்ன நல்ல டேரோ போட்டுட்டு அதுக்கு ஜஸ்டிபை பண்ணுறேன் பேர்வழின்னு உறவுக்காரங்க எதையாவது கொளுத்திப் போட்டுட்டு போய்டுவாங்க. இப்ப அது இல்லை.

  25. ரொம்ப நல்ல பதிவுண்ணா…

    // காலையும் மதியமும் சேர்ந்து சாப்பிட முடியாது. இரவு இருவரும் குழந்தைகளுடனும் என் அம்மாவுடனும் சேர்ந்த்தே சாப்பிடுவோம். அப்பொழுது பள்ளியில் நடந்தது அல்லது அலுவலகத்தில் நடந்தது என்று ஏதாவது பேசிக்கொண்டே சாப்பிடுவோம். சில நேரம் யாராவது ஒருவரை எல்லோரும் சேர்ந்து ஓட்டுவோம். பெரும்பாலும் மாட்டிக்கொள்வது நானாகத்தானிருக்கும்//

    ரொம்ப நல்ல விஷயமும் கூட…

    ஆனா இதுல சில பல பிரச்சனைகள் இருக்கு.

    நான் எங்க அம்மாக்கிட்ட இந்த சீரியல் பத்தி எல்லாம் சண்டை போடும் போது அவுங்க சொன்னது.

    முன்னாடி எல்லாம் மதியம் ரெண்டு மணி ஆச்சுனா அக்கம் பக்கத்துல இருக்கவங்க எல்லாம் ஒரு வீட்ல கூடி நல்லா கதை பேசுவாங்க.

    ஆனா இப்ப யாரும் ஒருத்தவங்க வீட்ல இருந்து மத்தவங்க வீட்டுக்கு போறதே இல்லை. வீட்ல தனியா இருக்க போர் அடிக்கும். இந்த டீவி நாடகம் இல்லைனா தனியா வீட்ல இருந்தா பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடும்னு சொன்னாங்க.

    எனக்கு என்ன சொல்றதுனே தெரியல 😦

  26. சஞ்சய் சொன்னது

    //அப்பாலிக்கா காப்பி ரைட்ஸ் பிரச்சனை வந்துடப் போகுது.. :(//

    தம்பி எனக்கும் உனக்கும் டி லெஃப்ட் பிரச்சினை ஒரு காலத்திலும் வராது.

  27. //தம்பி எனக்கும் உனக்கும் டி லெஃப்ட் பிரச்சினை ஒரு காலத்திலும் வராது. //

    டீ லெஃப்டா? எனக்கேவா?.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :))

    இந்த காப்பி ரைட் மேட்டரை பொறுத்தவரைக்கும் எழுதறவங்களுக்கும் சுடறவங்களுக்கும் வரதில்லை அண்ணாச்சி. சில பாசக்க்கார புள்ளைக தான் தொவைச்சி தொங்கப் போட்டுடறாங்க. அதை சொன்னேன். :))

  28. //முன்னாடி எல்லாம் மதியம் ரெண்டு மணி ஆச்சுனா அக்கம் பக்கத்துல இருக்கவங்க எல்லாம் ஒரு வீட்ல கூடி நல்லா கதை பேசுவாங்க.

    ஆனா இப்ப யாரும் ஒருத்தவங்க வீட்ல இருந்து மத்தவங்க வீட்டுக்கு போறதே இல்லை. வீட்ல தனியா இருக்க போர் அடிக்கும். இந்த டீவி நாடகம் இல்லைனா தனியா வீட்ல இருந்தா பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடும்னு சொன்னாங்க.//

    சரிதான் பாலாஜி. ஆனா அதுக்காக உருப்படியில்லாத சீரியலப் பார்த்து மேலும் மனசக் கெடுத்துக்கிட வேண்டாமே. நல்ல டிவிடிக்கள வாங்கி க்கொடுங்க அந்தக் கால பழய படங்கள் எல்லாம். நான் அதத்தான் செய்கிறேன்.

  29. நல்ல பதிவு ஆனா எனக்கு மாற்று கருத்து உண்டு இதிலே!!

  30. சீரியலை குறை சொல்லுங்கள்.ஒட்டுமொத்தமாக டீ.வி.யை குறை சொல்லக்கூடாது.ஒரு அதிசய விஞ்ஞான கண்டுபிடிப்பை நாம் வெற்றுக்கு உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.நான் இதில் அபி அப்பா கட்சி

  31. தொலைக்காட்சி லோகோவில் யாரு ஒண்ணா நம்பர் கில்லர்?எனக்கு ஒரு கலைஞர் லோகோ மொட்டைத்தலைதான் தெரியும்.நீங்க ரெண்டு மொட்டை போட்டிருக்கீங்க!(மொட்டை குட்டி போட்டுருச்சோ)

  32. //திருமணமான புதிதில், நிறைய வேலை இருக்கும். //

    வாஸ்தவம் தான்!

  33. மற்றபடி பதிவு பெண்ணீய பதிவாக இருக்கிறது!:)

  34. தன் மகனுடன் அளவாகப் பேசும் பெரியவர்கள், மகனின் நன்பர்களுடன் தோழமையுடன் பேசிப்பழகுவதைப் பார்க்கலாம். காரணம்?. மகனின் நன்பன், அவரது வயது கருதி அனுசரித்துப் போவதும், அவரைப் பற்றிய விமர்சனங்களை நேருக்கு நேர் சொல்லாததுமாகும். அதை விட முக்கியம் மகனின் தயவில் வாழ்வது ஒரு தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கியிருப்பதுதான்.:)-

    மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சார்.

    நல்லவேளையாய் எங்க வீட்டில் எனக்கும் அவருக்கும் இந்த டி.வி. பைத்தியம் கிடையாது. மாறாக மாமனார் கே.டி.வியே கதியாக இருப்பதனால், ரிமோட்டை வாங்கி மாற்றும் எண்ணம் எனக்கு வராது.
    அதனாலயே டி.வி. பக்கம் போறதில்லை.

    வர்ஷினிக்கு சுட்டி டி.வி. மற்றும் அனிமல் ப்ளானட் காட்டுவதற்காக மட்டுமே நான் டி.வி.யை பயன்படுத்துவது. அட்வர்டைஸ்மெண்ட்டும் தான்.

    நோ சீரியல்
    ”சித்தி”யோட போச்சு சீரியல் பார்க்கும் வழக்கம்.

  35. படித்தேன்.நன்றாக இருக்கிறது. உளவியல் ரீதியாக அலசல்.அதுதான்
    சிறப்பு.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s