மாடு மேய்க்கத்தான் லாயக்கு


.
ராமேஸ்வரத்திலிருந்து திரும்பிவரும் வழியில் பஞ்சரான டயரை மாற்றிக் கொண்டிருந்தார் டிரைவர். பக்கத்துல எங்க வல்கனைசிங் இருக்குன்னு விசாரிக்கலாம்னு அருகே வந்த காரை நிறுத்தினேன். காரில் இருந்தவரின் முகம் ஏற்கனவே பழகிய முகம் போல இருந்தது.

”நீங்க பஷீர்தானே?” சந்தேகத்தை நிவர்த்திக்கக் கேட்டேன்.

பஷீர் டிப்ளமாவில் என் கிளாஸ்மேட். பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டன.

”ஆமா நீங்க?”

“என்னைத் தெரியலையா? A24″ அது ஹாஸ்டலில் கடைசி வருடம் என் அறை எண்.

”அட நீயா எப்படி இருக்கே? என்ன செய்யுறே?”

”நான் நல்லா இருக்கேண்டா. கோவையில ஒரு ஆப் செட் பிரஸ் வைத்திருக்கேன். ஓரளவுக்கு வசதியா இருக்கேன்.”

“நீ என்னடா பண்ணுறே பஷீர்?”

“நானும் எங்க ஆளுக மாதிரி துபாய், சௌதி போயிறலாமானு பார்த்தேன். ஒரு தடவ சிங்கப்பூர் போயிருந்தப்ப அங்க ஜெராக்ஸ் மெஷின் சீப்பாக் கிடைக்கும். எடுத்துட்டு வந்து ரிகண்டிசன் பண்ணி வித்தா நல்ல காசு பாக்கலாம்னு எங்க பெரியப்பா பையன் சொன்னான். இப்ப அதுவே என் முழுநேரத் தொழிலாப் போச்சு.”

“வருமானம்லாம் பரவாயில்லையா?”

“ஏதோ மாசம் 10 மெஷின் விப்பேன். மெஷினுக்கு 15 ஆயிரம் கிடைக்கும்”

“அப்புறமென்ன மாசம் ஒரு லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறியே? குழந்தைகள் எத்தனை”

”ரெண்டு பசங்கடா, பெரியவன் +2 படிக்கிறான் சின்னவன் 9ஆவது”

அசைன்மெண்ட் சப்மிட் செய்ய அன்றுதான் கடைசி நாள். சப்மிட் செய்யாதவங்களை எழுப்பி நிறுத்தித் திட்டினார் ஹெச் ஓ டி.

“நீங்கல்லாம் எதுக்குடா வர்றீங்க? படிக்கிறதுல அக்கறை வேணுண்டா. சும்மா வந்து உக்காந்து பெஞ்சத் தேச்சுட்டுப் போனாப் படிப்பு வராது. சும்மா ட்ராமா கிளப்ல இருக்கேன். மெஸ் கமிட்டியில இருக்கேன். ஸ்போர்ட்ஸ் கிள்ப்ல இருக்கேன்னா ஒன்னுத்துக்கும் உதவாது. உருப்படற வழியப் பாருங்கடா “

மூச்சு வாங்கிவிட்டு மறுபடியும் தனி ஆவர்த்தனம் தொடர்ந்தார்.

“இவனிருக்கானே பஷீர் மாடு மேய்க்கத்தான் லாயக்கு. வந்துட்டான் ராமனாத புரத்திலருந்து. காலேஜுக்கு, ஹாஸ்டலுக்குன்னு இவனுக்குச் செலவு பண்ணுன பணத்துக்கு ரெண்டு மாடு வாங்கி விட்டிருந்தாக் கூட இன்னேரம் பால் கறந்து காசப் பார்த்திருக்கலாம். ”

“இவனப் பாரு” துரையரசனைக் கைகாட்டித் தொடர்ந்தார், “இவனும் உங்க ஊர்க்காரன்தானே. எவ்வளவு அக்கறையாப் படிக்கிறான். இப்பவே 90% வச்சிருக்கான். படிச்சு முடிச்ச உடனே அவன் நல்ல வேலையில் இருப்பான் அவங்கிட்ட பியூனாச் சேரக்கூட நீ லாயக்கில்லை”

கடைசி செமஸ்டர் ரிசல்ட் எதிர்பார்த்தது போலத்தான் இருந்தது. துரையரசன் 93% ஓவராலா. பஷீர் மொத்தமா 3 பேப்பர் கைல வாங்கிட்டான்.

”டே ஒங்க ஊர்க்காரன் ஒருத்தன் படிச்சானே. அவம்பேருகூட என்னவோ ராசான்னு வரும்?”

“யாரு துரையரசனா?”

”ஆமா அவந்தான். என்னடா பண்ணிக்கிட்டு இருக்கான்?”

“அதையேங் கேக்குற. அவன் சென்னையில கொஞ்ச நாள் இருந்தான். அப்புறம் ஹைதராபாத்துல இருந்தான். ஒன்னும் சரியில்லன்னு இங்க வந்து சும்மாதான் இருந்தான்”

“சரி இப்ப என்ன பண்ணுறான்”

“ எங்கிட்ட சர்வீ்ஸ் என்ஜினியரா இருக்கான்.”

டிஸ்கி : வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து நன்கு படிக்கும் மணவர்கள் இரண்டாம் பெஞ்சில் அமர்ந்து ஆவரேஜாகப் படிக்கும் மாணவர்கள் தொடங்கும் நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். இவர்கள் இருவருக்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் மூன்றாவது பெஞ்ச்காரர்கள் இருக்கிறார்கள்.

இத சமீபத்துல ஒரு வார இத்ழ்ல(குங்குமம்?) படிச்ச ஞாபகம். அத வச்சு முயற்சி பண்ணுனது. சீரியஸா எடுத்துக்காதீங்க, தயவு செஞ்சு.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s