மாடு மேய்க்கத்தான் லாயக்கு


.
ராமேஸ்வரத்திலிருந்து திரும்பிவரும் வழியில் பஞ்சரான டயரை மாற்றிக் கொண்டிருந்தார் டிரைவர். பக்கத்துல எங்க வல்கனைசிங் இருக்குன்னு விசாரிக்கலாம்னு அருகே வந்த காரை நிறுத்தினேன். காரில் இருந்தவரின் முகம் ஏற்கனவே பழகிய முகம் போல இருந்தது.

”நீங்க பஷீர்தானே?” சந்தேகத்தை நிவர்த்திக்கக் கேட்டேன்.

பஷீர் டிப்ளமாவில் என் கிளாஸ்மேட். பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டன.

”ஆமா நீங்க?”

“என்னைத் தெரியலையா? A24″ அது ஹாஸ்டலில் கடைசி வருடம் என் அறை எண்.

”அட நீயா எப்படி இருக்கே? என்ன செய்யுறே?”

”நான் நல்லா இருக்கேண்டா. கோவையில ஒரு ஆப் செட் பிரஸ் வைத்திருக்கேன். ஓரளவுக்கு வசதியா இருக்கேன்.”

“நீ என்னடா பண்ணுறே பஷீர்?”

“நானும் எங்க ஆளுக மாதிரி துபாய், சௌதி போயிறலாமானு பார்த்தேன். ஒரு தடவ சிங்கப்பூர் போயிருந்தப்ப அங்க ஜெராக்ஸ் மெஷின் சீப்பாக் கிடைக்கும். எடுத்துட்டு வந்து ரிகண்டிசன் பண்ணி வித்தா நல்ல காசு பாக்கலாம்னு எங்க பெரியப்பா பையன் சொன்னான். இப்ப அதுவே என் முழுநேரத் தொழிலாப் போச்சு.”

“வருமானம்லாம் பரவாயில்லையா?”

“ஏதோ மாசம் 10 மெஷின் விப்பேன். மெஷினுக்கு 15 ஆயிரம் கிடைக்கும்”

“அப்புறமென்ன மாசம் ஒரு லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறியே? குழந்தைகள் எத்தனை”

”ரெண்டு பசங்கடா, பெரியவன் +2 படிக்கிறான் சின்னவன் 9ஆவது”

அசைன்மெண்ட் சப்மிட் செய்ய அன்றுதான் கடைசி நாள். சப்மிட் செய்யாதவங்களை எழுப்பி நிறுத்தித் திட்டினார் ஹெச் ஓ டி.

“நீங்கல்லாம் எதுக்குடா வர்றீங்க? படிக்கிறதுல அக்கறை வேணுண்டா. சும்மா வந்து உக்காந்து பெஞ்சத் தேச்சுட்டுப் போனாப் படிப்பு வராது. சும்மா ட்ராமா கிளப்ல இருக்கேன். மெஸ் கமிட்டியில இருக்கேன். ஸ்போர்ட்ஸ் கிள்ப்ல இருக்கேன்னா ஒன்னுத்துக்கும் உதவாது. உருப்படற வழியப் பாருங்கடா “

மூச்சு வாங்கிவிட்டு மறுபடியும் தனி ஆவர்த்தனம் தொடர்ந்தார்.

“இவனிருக்கானே பஷீர் மாடு மேய்க்கத்தான் லாயக்கு. வந்துட்டான் ராமனாத புரத்திலருந்து. காலேஜுக்கு, ஹாஸ்டலுக்குன்னு இவனுக்குச் செலவு பண்ணுன பணத்துக்கு ரெண்டு மாடு வாங்கி விட்டிருந்தாக் கூட இன்னேரம் பால் கறந்து காசப் பார்த்திருக்கலாம். ”

“இவனப் பாரு” துரையரசனைக் கைகாட்டித் தொடர்ந்தார், “இவனும் உங்க ஊர்க்காரன்தானே. எவ்வளவு அக்கறையாப் படிக்கிறான். இப்பவே 90% வச்சிருக்கான். படிச்சு முடிச்ச உடனே அவன் நல்ல வேலையில் இருப்பான் அவங்கிட்ட பியூனாச் சேரக்கூட நீ லாயக்கில்லை”

கடைசி செமஸ்டர் ரிசல்ட் எதிர்பார்த்தது போலத்தான் இருந்தது. துரையரசன் 93% ஓவராலா. பஷீர் மொத்தமா 3 பேப்பர் கைல வாங்கிட்டான்.

”டே ஒங்க ஊர்க்காரன் ஒருத்தன் படிச்சானே. அவம்பேருகூட என்னவோ ராசான்னு வரும்?”

“யாரு துரையரசனா?”

”ஆமா அவந்தான். என்னடா பண்ணிக்கிட்டு இருக்கான்?”

“அதையேங் கேக்குற. அவன் சென்னையில கொஞ்ச நாள் இருந்தான். அப்புறம் ஹைதராபாத்துல இருந்தான். ஒன்னும் சரியில்லன்னு இங்க வந்து சும்மாதான் இருந்தான்”

“சரி இப்ப என்ன பண்ணுறான்”

“ எங்கிட்ட சர்வீ்ஸ் என்ஜினியரா இருக்கான்.”

டிஸ்கி : வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து நன்கு படிக்கும் மணவர்கள் இரண்டாம் பெஞ்சில் அமர்ந்து ஆவரேஜாகப் படிக்கும் மாணவர்கள் தொடங்கும் நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். இவர்கள் இருவருக்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் மூன்றாவது பெஞ்ச்காரர்கள் இருக்கிறார்கள்.

இத சமீபத்துல ஒரு வார இத்ழ்ல(குங்குமம்?) படிச்ச ஞாபகம். அத வச்சு முயற்சி பண்ணுனது. சீரியஸா எடுத்துக்காதீங்க, தயவு செஞ்சு.

.

Advertisements

36 comments

 1. நல்ல ஒப்பீடு! ஆனாலும் ரொம்ப வித்தியாசத்தை எதிர்பார்க்க இயலாது!

 2. அண்ணாச்சி,இது உண்மைப்பதிவா வேற இருக்கிறதால, நிறைய்ய யோசிக்க வச்சுடுச்சி. அப்பா! வாழ்க்கைக் கற்றுத்தரும் பாடம்தான் எத்தகைய அனுபவம்!ரொம்ப டிஸ்டொர்ப் பண்ண பதிவு அண்ணாச்சி,இது. நல்ல பகிர்வுக்கு நன்றி.
  பெரிய பெரிய ஆளுங்களுக்கேல்லாம்,இது
  மாதிரியான அசாதாராண சம்பவங்கள் தேடிவந்து
  வாய்க்குதே. அது எப்டி,ஏன் அண்ணாச்சி?

 3. நல்ல கதை அண்ணாச்சி. இன்ஃபாக்ட்.. கதையல்ல… நிஜம்.

  பி.கு: இது நானே போட்ட கமெண்ட்!

 4. அண்ணாச்சி நானும் கடைசி பெஞ்ச்தான். ஆனா முதலாளி இல்லை. முதலாளி அளவிற்கு வருமானம் பார்க்கும் வேலைக்காரன். (இதில் நர்சிம்மும் அடக்கம்)

  🙂

 5. சந்திரபாபு பாட்டு ஞாபகம் வருது
  வெற்றி பெற்ற எல்லாரும் புத்திசாலி இல்லை
  புத்திசாலி எல்லாரும் வெற்றிபெறவில்லை
  இது போல உண்மையில் என்னோட நண்பர் ஒருவர் டிப்ளமா முடிக்கும் போது 10 பேப்பர் அரியர்ஸ் இருந்தது
  இன்னைக்கு அவர்கிட்ட 10 பேர் வேலை பாக்குராங்க

 6. எங்களுக்கு பாலிடெக்னிக்ல சொன்ன வார்த்தை தியேரிட்டிக்கலா இருக்கறது பிராக்டிகலா இருக்காது! பிராக்டிகல் பிராக்டிகலா இருக்காது நினைச்சீங்கன்னா நீங்க வெளங்காமத்தான் போவீங்கன்னு சொன்னாங்க 🙂

  படிச்ச டிபார்மெண்ட் – சிவில் பெரும்பான்மையா உண்மையத்தான் சொல்லியிருக்காங்க :)))

 7. செம அடி அண்ணாச்சி. ஆனா பாருங்க அந்த கடைசி பென்ச் பசங்கள 20 வருசமா திட்டி திட்டி தாழ்வுமனப்பாண்மையில நோகடிச்சு நொங்கெடுத்துடறாங்க. சரி நீ பாட்டுக்கு திட்டிகிட்டு போய்யான்னு தொடச்சுபோட்டுட்டு போய்ட்டே இருக்கும் பசங்க (பாருங்க நம்ம அப்துல்லா, நர்சிம் மாதிரி :P)மேல வந்துடறாங்க. தான் எதுக்குமே லாயகில்லைன்னு மனசுல பதிஞ்சு போய் வீணா போன பசங்க கதி?

  சரி படிப்பைதவிற வேற எதுவுமே தெரியாத சமத்துகள் சிலதும் படிச்சு முடிச்சபின்னாடி சின்ன கல்தடுக்கி விழுத்ததுக்கே எந்திரிக்க தெரியாம முடியாம ஹூம்ம் அதும் கொடுமை.

 8. நன்றி பாலராஜன்கீதா.
  நன்றி சிவா.
  நன்றி தமிழ்
  நன்றி முத்துவேல். பாதி உன்மை பாதி கதை.
  நன்றி பரிசல்.
  நன்றி அப்துல்லா. எல்லாவற்றையும் பொதுப்படுத்திப் பார்க்கக்கூடாது. நான் சொன்னதுபோலவும் இருக்கு.
  நன்றி புன்னகை.
  நன்றி சிபி
  நன்றி ஆயில்யன்.
  நன்றி முரளிக்கண்ணன்.
  நன்றி நந்து.

 9. //டிஸ்கி : வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து நன்கு படிக்கும் மணவர்கள் இரண்டாம் பெஞ்சில் அமர்ந்து ஆவரேஜாகப் படிக்கும் மாணவர்கள் தொடங்கும் நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். இவர்கள் இருவருக்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் மூன்றாவது பெஞ்ச்காரர்கள் இருக்கிறார்கள். //

  I don’t accept this.

  Nalla padikaravangalai discourage panra maathiri iruku 😦

  Naan classla muthal bench, 90+ (engg 80+, ella lablayum 90+ ) nalla stagela thaan irukenu ninaikiren.

  ennai vida nalla padicha pasanga innum nalla nilaimaila irukarathai paakaren.

  nalla padikathavanga pinnadi vizhunthu vizhunthu padichi velai vaangi nalla nilaimaila irukanga. aana avungaluku nalla padikaravanga niraiya help pannanga.

  Kaalam maariduchi. Knowledge is wealth 🙂

 10. பாலாஜி,

  சும்மா ஜாலியாப் போட்ட பதிவுதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.

 11. //வடகரை வேலன் said…
  பாலாஜி,

  சும்மா ஜாலியாப் போட்ட பதிவுதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.
  //

  Paravallana.. but yaarume ithai ethirthu ethuvum sollalaiyenu thaan sonnen 🙂

 12. இது கொஞ்சம் நிஜம்தான்னாலும்…. விதிவிலக்குகளும் உண்டு.

 13. எனக்கு முன்னாடி பின்னாடி மூணு செட்லயும் நான் பாத்துக்கிட்டு இருக்கிற நிஜம்தாண்ணே இது. அது என்ன காரணம்னு புரிஞ்சிக்க முடியல. படிப்ஸ் கோஷ்டிஎல்லாம் ரொம்ப சாதரண வேலையிலும்(வருமானத்துலயும்தான்), படிக்கும்போது உருப்படாத கோஷ்டின்னு பேர் வாங்கினது எல்லாம் இப்போ நல்ல வேலையிலும்(முக்கியமா நல்ல வருமானம் ) இருக்கிறது நிதர்சனமான உண்மை.

 14. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆனால்..எல்லோரையும் அப்படி சொல்லமுடியாது.எனக்கு தெரிஞ்சு கோயம்பத்தூரில் ராஜேந்திரன்னு ஒருவர்..நல்லாவும் படிப்பார்..இன்னிக்கு ஆஃப்செட் பிரஸ் வைச்சு..முதலாளி ஆயிட்டார்.4 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கிறார்.

 15. எல்லா விளக்கும் விளக்கல்ல சிலசமயம்
  கடைசிபெஞ்ச் கடைசி வரைக்கும்!…..

 16. வேலன் ஸார்..

  இப்படி பல கதைகள் உண்மையாகி இருக்கின்றன.

  படிப்போடு அதனை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்கிற அனுபவ அறிவும் சேர வேண்டும் என்று நினைக்கிறேன்..

  கொஞ்சம் குழப்பம்தான்..!

 17. அண்ணாச்சி,

  சில நேரத்தில் இது உண்மைன்னாலும் கதையின் பின்னாலிருக்கும் சிலதையும் யோசிக்க வேண்டி இருக்கு இல்லையா ?

  3ம் பெஞ்ச் மாணவன் நல்லா படிக்கலைன்னாலும், காசு இருந்தது. சிங்கப்பூர் போயி மெட்டீரியல் வாங்கி அதை என்னமோ பன்றான் ஜெயிக்கிறான். இது நல்லா படிக்காதவங்க ஜெயிச்சதுல எத்தனை சதவிகிதம் வரும் ? .5% ? அல்லது 1%

  ( ஜாலிக்கான கதைன்னாலும் சொல்லனும்னு தோணுச்சு )

 18. நல்ல பதிவு. புனைவும் கலந்திருக்கு. பொது உண்மைகளைவிட அவ்வப்போது தென்படும் உச்சங்களைப் பார்த்து எழுதுவதே அழகு. அந்த விதத்தில் சுவாரஸ்யமான பதிவு.

  பள்ளி வரை முதல் பெஞ்சில் பயணித்த நான், சாமர்த்தியமாக கடைசி பெஞ்சுக்குக் கல்லூரியில் தாவியதால் ஓரளவு தப்பித்தேன். முதல் பெஞ்சுக்காரர்கள் minimum guarantee படங்கள் போல. கடைசி பெஞ்சு – பெரும்பாலும் கடைசி. சில ஜாக்பாட்டுகள். தொழிலதிபர்கள் எனக்குத் தெரிந்து பின் பெஞ்சுகளிலேயே உருவாகுவதாக என் அவதானிப்பு. உளவியல் ரீதியில் இதற்குப் பதில் இருக்க வேண்டும்.

  அனுஜன்யா

 19. நன்றி ச்சின்னப் பையன்
  நன்றி மகேஷ்
  நன்றி சிவா
  நன்றி TVRK சார். வாத்தியார் திட்டும்போது நின்னுட்டு இருந்ததுல நானும் ஒருத்தன். ஆவரேஜா 75% எடுத்துத்தான் பாஸ் பண்ணினேன். ஆனா படிக்கும்போது டிராமா கிளப், தமிழ் மன்றம், ரோடராக்ட் கிளப்னு வெளி வேலைகள்தான் ஜாஸ்தி.

  நன்றி வால்பையன்
  நன்றி தத்துபித்து
  நன்றி டில்லிபாபு
  நன்றி உண்மைத்தமிழன்
  நன்றி ரங்க்ஸ்
  நன்றி ஜீவ்ஸ். ஆனா % கொஞ்சம் அதிகம்னு தோனுது. நம்ம கல்வி முறை அப்படி. ஐ டி வரலன்னா இந்த உண்மை இன்னும் நல்லாத் தெரிஞ்சுருக்கும்.
  நன்றி அமுதா

 20. நன்றி அனுஜன்யா. நான் வேலைக்கு ஆள் எடுக்கும்போது முதல் பெஞ்ச் ஆசாமிகள எடுப்பதில்லை. ஏன்னா அவங்க சொன்ன வேலைய மட்டும்தான் செய்வாங்க. ஆனா 65% – 70% எடுத்து ஒன்னு ரெண்டு அரியர் வச்சு அதப் பாஸ் பண்ணுன பையன்னா ஒரு சமாளிக்கிற திறமையோட இருப்பான். நல்ல உதாரணம் எங்கிட்ட ரவின்னு ஒரு அக்கவுண்டண்ட் இருந்தாரு ஆவரேஜ்தான் ஆனா பேங்க் மேனேஜரை சமாளிக்கிறதாகட்டும் சேல்ஸ் டேக்ஸ் வேலையாகட்டும்
  ஒரு நேக்க்கா காரியம் பார்ப்பாரு.

  அதுக்காக எல்லாரும் அப்படின்னு இல்லை. என்னோட பொதுவான அனுபவம்.

  பொதுவாக வீடு விட்டா காலேஜ் காலேஜ் விட்டா வீடுன்னு பெற்றோர்கள் அரவனைப்புல இருக்க பசங்க பொதுவாழ்விலும், வேலை நெருக்கடியிலும் தளர்ந்து விடுகிறார்கள் என்பது உண்மை.

 21. படிப்பை விட சில சமயங்களில் அனுபவமும் தனி திறமையும் வெற்றி பெற்று விடுகின்றன.

 22. //பொதுவாக வீடு விட்டா காலேஜ் காலேஜ் விட்டா வீடுன்னு பெற்றோர்கள் அரவனைப்புல இருக்க பசங்க பொதுவாழ்விலும், வேலை நெருக்கடியிலும் தளர்ந்து விடுகிறார்கள் என்பது உண்மை.//

  சரி தான்

 23. //சும்மா ஜாலியாப் போட்ட பதிவுதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.//

  கதையை ரசித்தேன். ஆசிரியர்கள் இவ்வளவு வன்மத்ட்ஜோடு கம்பேர் செய்யக் கூடாது என்ற கருத்து வரவேற்கத்தக்கது.
  ஆனால் இது உண்மையாக நடந்த நிகழ்வாகவே இருந்தாலும், சிலர் குறிப்பிட்டு இருப்பது போல் நன்றாகப் படிப்பவர்களைப் பற்றி நெகட்டிவ்வான கருத்து வரத்தான் செய்கிறது.

  அதற்குப் பதிலாக அந்தப் பஷீர் சிறந்து விளங்கிய (துரையரசன் கவனம் செலுத்தத் தவறிய) மற்ற extra curricular activities களைக் குறிப்பிட்டு இருக்கலாம்.

 24. /////எம்.எம்.அப்துல்லா said…
  அண்ணாச்சி நானும் கடைசி பெஞ்ச்தான். ஆனா முதலாளி இல்லை. முதலாளி அளவிற்கு வருமானம் பார்க்கும் வேலைக்காரன். (இதில் நர்சிம்மும் அடக்கம்)/////

  நானும்!!!!

 25. அண்ணாச்சி, நானு +2ல கொஞ்சம் குறைச்ச மதிப்பெண் வாங்குனதால வீட்ல எல்லாருமா அர்சனை செஞ்சாங்க. நம்ம மேல நெம்ப நம்பிக்கை வச்சுருந்தாய்ங்க. அதான் ஓவர் அர்சனை.

  அப்ப நான் சொன்ன தத்துவம் இது. முத மார்க் வாங்குனவன் எல்லாம் டாக்டராவோ , எஞ்ஜினியாரவோ அயி ஒரு அளவுக்குத் தான் சம்பாரிப்பான். ஓரளவு மார்க் வாங்குறவன் எல்லாம் அதிகபட்சம், ஒரு பேங்க் வேலை அது இதுன்னு போவான், அதுக்கு மேல போனாலும் ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் ஆவான். ஆனா சுத்தமா ஒன்னுக்கும் உதவாதவன் எல்லாம் தொழிலதிபர், அரசியல்வாதின்னு ஆயி கன்னாபின்னானு சம்பாதிப்பாய்ங்கன்னு சொன்னேன்.
  ஒகோ அப்டியான்னு பேமெண்ட் சீட்ல கிடைச்ச பி.ஈ யில சேர்த்துவிடாம நீ பெரிய தொழிலதிபராவோ, இல்ல அரசியல்வாதியாவோ ஆயிடுன்னு ஆசிர்வாதம் செஞ்சு சாதாரண காலேஜ்ல சேர்த்துவிட்டு மாட்டிவிட்டுட்டாங்க.

  ஹீம்ம்ம், நாடு ஒரு நல்ல பொறியாளர இழந்துருச்சு.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s