கதம்பம் – 17/3/09

.

ஆசையின் விளைவுகள்

கண்ணாடி அலமாரிகளில்
அடுக்கி வைத்த புதுப்புடவைகள்
ஆவலுடன் காத்திருந்தன
பெண்களின் இடுப்பை சுற்றிக்கொள்ள;
பின்னால் துவைக்கப்படப்போவது
பற்றி துளியும் அறியாமல்

இந்தக் கவிதையை எழுதியவர் மிகவும் பிரபலமானவர். (“யூத்” என்று தன்னைதானே சொல்லி கொல்பவர்).

**************************************************************************

மாதவராஜுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி கேட்டார், “உங்க குழந்தை என் குழந்தைகளுக்கு கிடைத்த பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, தாய்மாமா, அத்தை போன்ற உறவுகள் இனிவரும் தலைமுறைக்குக் கிடைக்குமா?”

பதில் ”தெரியவில்லை.”

**************************************************************************

ஒரு அறையில் நீங்கள் நான் இருவர் மட்டும் இருந்தால், உண்மையில் இருப்பது அறுவர்.

நான் என்னைப் பற்றி உண்டாக்கிக் கொண்ட பிம்பம்
நீங்கள் என்னைப் பற்றி வைத்திருக்கும் பிம்பம்
உண்மையான நான்.

இதே போல உங்களுக்கும்.

இம்மதிரியான கற்பிதங்கள்தான் மணமுறிவுக்கு அல்லது ஒவ்வாமைக்குக் காரணமாக இருக்கக்கூடும்; வலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் கூட.

**************************************************************************

சமீபத்தில் ஒரு பேக்கரியில் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம். இரு காவலரும் ஒரு பெண் காவலரும் ஒரு கைதியை கையில் விலங்கிட்டு அழைத்து வந்து அடுத்த மேஜையில் அமர்ந்தனர்.

பெண் காவலருக்கு 23 வயதிருக்கும். மற்ற இரு காவலரும் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள். கைதியின் வயது 30க்குள்தான் இருக்கும்.

ஒரு காவலர் சொன்னார், “ நாம்தான் வெயிலில் கறுத்து விட்டோம் மேடம் பாருங்க எவ்வளாவு ஃப்ரெஷா இருக்காங்க?”

பெண்காவலர் நெளிய ஆரம்பித்தார். இப்படி ஆரம்பித்த பேச்சில் கைதியும் சேர்ந்து கொண்டு பெண் காவலரைக் கிண்டல் செய்யத் தொடங்கினார்.

உச்சகட்டமாகக் கைதி கேட்டார், “நீங்க பரவாயில்ல சார் ஸ்டேசனுக்கு போனதும் சட்டையைக் கழட்டிக் காத்து வாங்குவீங்க, மேடம் பாவம் என்ன செய்வாங்க?”

என்னதான் சக ஊழியர் என்றாலும் கிண்டல் செய்வதற்கு ஒரு எல்லை இருக்கு இல்லையா. அதிலும் கைதி ஒருவர் பெண் ஊழியரைக் கிண்டல் செய்வதை இருவரும் ரசித்தைப் பார்க்க வெறுப்பாக இருந்தது.

அந்தப் பெண் காவலர் வெறுமனே அமர்ந்திருந்தார். சுயமரியாதை என்று ஒன்று உண்டா இல்லையா?

**************************************************************************

உங்க கிரிடிட் கார்டு கம்பெனியவோ அல்லது மொபைல கம்பனியவோ அழைக்கும்போது உங்களுக்கு காது கேக்காதுன்னா எண் ஒன்றை அழுத்தவும், கண் தெரியாதுன்னா எண் இரண்டை அழுத்தவும், வாய் பேச வராதுன்னா எண் மூன்றை அழுத்தவும், அப்படின்னு டார்ச்சர் பண்ணுவாங்க. அழுத்த வேண்டியத அழுத்தி ஒரு உயிருள்ள ஜீவன் கிட்ட பேசுறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்.

இந்தக் கஷ்டத்தப் போக்க ஒருத்தர் வழி பண்ணியிருக்காரு பாருங்க. எந்த நிறுவனத்தை அழைக்கிறீர்களோ அங்க ஆப்பரேட்டர்கூட பேச அழுத்த வேண்டிய எண்ணைத் தொகுத்துத் தந்திருக்கார்.

என்ன ஒரு சிரமம்னா இந்தியாவுல யாரும் இன்னும் இது போலத் தொகுக்கல.
யாராவது செய்யுங்கப்பு அவங்களுக்கு நன்றி சொல்லும் விதமா சிக்கிம் லாட்டரி டிக்கட் ஒன்னும் கூடவே பூட்டான் ராயல் டிக்கட் ஒன்னும் அனுப்பி வைக்கிறேன்.

**************************************************************************

இம்முறை தேவதச்சன் கவிதை ஒன்று.

எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேளையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.

முதல் வாசிப்பில் வெகு சாதாரணமாகத் தோன்றும் இக்கவிதை ஏற்படுத்தும் படிமமும் அதன் பின்னெழும் நினைவுகளையும் அசைபோடத் தெரிந்தால் கவிதை அருமை.

நீங்கள் பார்த்த பௌர்ணமிகள் என்ன விதமான் ஞாபகங்களைக் கிளர்த்துகிறது உங்களுக்கு?

**************************************************************************

மும்பை செல்லும்போது ரயிலில் படித்த Everyday ath the call Centre (BPO and Call Centre Stories) புத்தகம் சுவராசியமாக இருந்தது.

யாராவது படிச்சிருந்தீங்கன்னா ஒரு விமர்சனம் எழுதி மெயில் பண்ணுங்க. என்னோட நூல் நயம் வலையில போடலாம்.

இல்லன்னா நானே எழுதிடுவேன்.

**************************************************************************

“பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்னவன நம்பி ஹோட்டலுக்குப் போனது தப்பாப் போச்சு.”

“என்ன ஆச்சு?”

“பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ குடுன்னுட்டான்”

**************************************************************************

Advertisements

31 comments

 1. ///நான் என்னைப் பற்றி உண்டாக்கிக் கொண்ட பிம்பம்
  நீங்கள் என்னைப் பற்றி வைத்திருக்கும் பிம்பம்
  உண்மையான நான்.///வித்தியாசமான கணக்கு!

 2. கதம்பம் அருமை.

  நாம் பேசிக்கொண்டிருந்ததை மிக உன்னிப்பாக உள்வாங்கி இருக்கிறீர்களே…

  கவிதை, நீங்கள் சொன்ன மாதிரி பல நினைவுகளை கிளறிவிடுகிறது…

  இது போன்ற புத்தகம் ஒன்றிற்கு தீபாவின் சிதறல்களில் விமர்சனம் எழுதிய ஞாபகம்.

 3. வணக்கம் வேலன்

  அதெப்படி ஒரே பதிவில் பல வடயங்களை தொட்டுச்செல்கின்றீர்கள்

  அனுபவம், பெண்கள், கவிதை, புத்தகம்

  ம்ம்ம்ம நல்லாத்தான் இருக்கு

  நன்றி
  இராஜராஜன்

 4. அண்ணே..,
  ரொம்ப மெருகேரிட்டே போகுதுண்ணே பதிவு.
  மிக அருமை…
  ஒரு அறையில் நீங்கள் நான் இருவர் மட்டும் இருந்தால்
  இது எக்ஸலெண்ட்..

 5. முதலில் சொல்லாமல் விட்டு விட்டேன்.

  முதல் கவிதை,

  ஆண்களையும் குறிக்கிறதோ?

  இரண்டாம் கவிதை கிளறிய ஞாபகங்கள் பல.

  சிலவற்றை வாழ்க்கையில் நான்கைந்து முறை மட்டுமே
  பார்த்திருப்போம். இதை யாரும் தொடர் பதிவாக கூட எழுதலாம்.

 6. நல்ல கதம்பம். என்ன, அவ்வப்போது நீண்ட இடைவேளை விட்டு வருகிறது.

  முதல் கவிதையைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றன எனக்கு. வேண்டாம், அப்புறம் எனக்கும் அந்த பிரபலத்துக்கும் ஆகாது என்ற வதந்தி கிளம்பும்.

  அறையில் இருவர். உண்மையில் அறுவர். நல்லா இருக்கு. (முன்பே படித்த ஞாபகம்)

  அந்த போலிஸ் விவகாரம். Disgusting. எல்லா அலுவலகங்களிலும் Women’s grievances cell (particularly to address sexual harassment complaints) என்று உள்ளதே. இதற்காகவே பெண்களிடம் வேறு திசை பார்த்துப் பேசும் ஆண்களும் உண்டு. ஒரு பெண் போலிஸ் ஊழியருக்கே தைரியம் இல்லை என்றால் ……

  தேவதச்சன் கவிதை. ……முதலில் ஒரே பதிவில் இரண்டு கவிதை போட்டு, அந்த யூத் பதிவரை எதற்கு தூக்கி நிறுத்துறீங்கன்னு நினச்சேன். இப்ப புரியுது. நீங்க சொல்லாமல் சொல்லுவது ‘கீழ இருப்பது தாண்டா கவிதை’.

  @ முரளிகண்ணன்

  ஆம்.

  அனுஜன்யா

 7. வழக்கம் போல அருமை…
  நான் என்னைப் பற்றி உண்டாக்கிக் கொண்ட பிம்பம்
  நீங்கள் என்னைப் பற்றி வைத்திருக்கும் பிம்பம்
  உண்மையான நான்.

  இதே போல உங்களுக்கும்.:)-
  ம்ம்ம்ம்ம்ம்

  முதல், கடைசி 2 கவிதைகளுமே அருமை.

 8. கதம்பம் கமகமகம்.

  ஒன் நைட் அட் கால் செண்ட்டர் மிக நல்ல கதை.. (இப்பத்தான் படிச்சீங்களா?)

  அனுஜன்யூத்யாவின் கவிதை? கலக்கல்..

 9. நன்றாக இருந்தது.
  /*ஒரு அறையில் நீங்கள் நான் இருவர் மட்டும் இருந்தால், உண்மையில் இருப்பது அறுவர்…*/
  அருமை

 10. மணம் இன்னும் ஒரு மாசத்துக்கு தாங்கும்.

  நர்சிம் சொல்ற புக்கும் நீங்க படிச்சதும் ஒண்ணா? ரெண்டும் வேறயோன்னு தோணுது 😦

 11. சுவாரசியமான ஆளுண்ணே நீங்க.. படுக்கத்தரித்ததைப்போன்ற தொகுப்புகள். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தாமலிருப்பது எப்படின்னு உங்களிடம்தான் படிக்கவேண்டும்..

  கச்சிதம்.

  தேவையான இடங்களில் கோபமில்லாமை எவ்வளவு வருந்தத்தக்கது என்பதைக் காட்டியது போலீஸ் ஸ்டோரி. அறையில் இருவர் அழகு.. அப்படின்னா அறுவர் இருந்தா 36 பேர் இருப்பதாக கணக்கா? ஹிஹி..‌

 12. கதம்பம் – சூப்பர்.
  காவலர்கள் மேட்டர் – எரிச்சல். மொதல்லே அவங்களை தூக்கி உள்ளே போடணும்.

  அந்த புத்தகத்தை எழுதியவர் யாரு அண்ணாச்சி? சேதன் பகத்தா?

 13. உறுதியா சொல்றேன்.(லிங்கைப் பாக்காமலே சொன்னது)முதல் கவிதை-அனுஜன்யா.

  ரெண்டு பெரிய தலைங்க பேசிக்கிட்டா(வயச சொல்லல அண்ணாச்சி)எவ்ளோ ஆழமா இருக்குது பாருங்க.

  /இதே போல உங்களுக்கும்./
  எனக்கும்.

  ”இதப்பத்தி நான் எழுதலாம்னு நினைச்சுட்டிருந்தேன், நீங்க எழுதிட்டீங்க”. இதேவேலையாப் போச்சு எனக்கு. ஆமா, தேவதச்சனோட இந்தக்கவிதயைப் பத்தி எழுதனும்ணு, நான், நினைத்தேன்,..ன்..ன்.ஆனா,அதோட சரி. கண்டிப்பா எழுதியிருக்கவும் மாட்டேன்.( நாம கொஞ்சம் ஒரே மாதிரி யோசிக்கறோமோ?)

  நல்ல, நல்ல விசயங்கள். நன்றி,இப்பதிவுக்கு.

 14. /Everyday ath the call Centr//

  one night at call centreபத்தி சொல்றீங்களா அண்ணாச்சி? அது இந்தியாவின் best sellerகளில் ஒன்று. அவரின் முதல் புத்தகம் five point someone கலக்கலாக இருக்கும்.

 15. கடைசி காமெடி வாய் விட்டு சிரிக்க வைத்தது.. 🙂

 16. Kathambam as usual super…

  One night at the call center climax romba chinna pillai thanama irukum.. intha book padichitu thaan, naama ellam ithai vida superaa kathai ezhuthalamenu enaku thoanuchi 🙂 (appa ellam naan blog ezhutha aarambikkalai 🙂 )

 17. சுவாரஸ்யம்…

  எனக்கு பிடித்திருந்தது பௌர்ணமி…

 18. யூத்தோட வரிகளும் இளமையாய்!

  ஆமா அந்த புத்தகம் தமிழில் இல்லையா…?

 19. கதம்பத்தில் அனைத்துப் பாகங்களுமே அருமை! அந்தக் காவலர்கள் பற்றிய பதிவு ரொம்பக் கோபம் வரவழைத்தது. பெண்களை இழிவு படுத்தும் இந்த சமூகம் எப்படி உருப்படும்?

  அப்புறம், One night at the call center பற்றி நான் சில மாதங்களுக்கு முன் எழுதிய பதிவு இதோ: http://deepaneha.blogspot.com/2008/12/blog-post.html

  பிடித்திருந்தால் வெளியிடுங்கள்.

 20. //இல்லன்னா நானே எழுதிடுவேன்.//
  நல்ல புத்தகம்.நீங்களே விமர்சனத்தை எழுதி விடுங்களேன்.அப்படியே மற்றவர்களின் நல்ல விமர்சனகளுக்கும் சுட்டி கொடுத்து விடுங்கள்.

  //மாதவராஜுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி கேட்டார்//
  நியாயமான ஆதங்கம். குழந்தைகளை விடுங்கள். நம்மில் எத்தனை பேருக்கு உறவுகளை கொண்டாட நேரம் இருக்கிறது?

 21. TVRK சார், இரா.சிவக்குமரன், விக்கி, மாதவராஜ், முரளி, வனம், கும்க்கி,
  அனுஜன்யா, அமிர்தவர்ஷினி அம்மா, நர்சிம், அமுதா, மகேஷ், ஆதி, ச்சின்னப்பையன், ச.முத்துவேல், கார்க்கி, யாத்ரா, தமிழ்ப்பிரியன், பாஸ்டன் பாலா, பாலாஜி, கறுப்பி, தீபா அனைவருக்கும் நன்றிகள்.

  நர்சிம், மகேஷ், தீபா, சத்யா, பாலாஜி one night at the call centre ஏற்கனவே படித்துவிட்டேன். நல்லா ஆரம்பிச்சு சொதப்பலா முடிச்சிருப்பார்.

  இது வேற புத்தகம் நான் தலைப்ப சரியாச் சொல்லல. BPO Sutra: True Stories From Inside Indias BPOS And Call Centres by Sudhindra Mokhasi

  இது கதை அல்ல. நிஜமாக நடந்த சம்பவங்களின் தொகுப்பு.

 22. //மாதவராஜுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி கேட்டார், “உங்க குழந்தை என் குழந்தைகளுக்கு கிடைத்த பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, தாய்மாமா, அத்தை போன்ற உறவுகள் இனிவரும் தலைமுறைக்குக் கிடைக்குமா?”

  பதில் ”தெரியவில்லை.”//

  உண்மைதான்.
  இப்போதிருக்கும் பொருளாதார சூழ்நிலையை பார்த்து ஒரு குழந்தையே போதும் என்று முடிவெடுத்து விட்டேன்,
  என் மகளின் குழந்தைகள் யாரை உறவு என்று சொல்லுவார்கள்.

 23. ஐந்து பதிவில் போட வேண்டிய விசயங்களை ஒரே கதம்பமாக்கிட்டீங்களே!

 24. தாங்கள் என் பதிவிற்கு வந்து, எப்பவோ எழுதின கவிதையை வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி

 25. //ஒரு அறையில் நீங்கள் நான் இருவர் மட்டும் இருந்தால்
  இது எக்ஸலெண்ட்..//

  I think it is said by JK (if I m not wrong.)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s