மெய் வருத்தக் கூலி

மும்பைப் பயணம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு படிப்பினையைத் தந்தவாறே அமைகிறது. இம்முறை நேரம் காலம் பாரமால் உழைப்பது பற்றிய படிப்பினை கிட்டப் பெற்றேன்.

பொதுவாக நாம் எல்லோரும் நம்மை அதிகமாக உழைப்பவர்களாகக் கருதிக் கொண்டு படம் காட்டுகிறோம் வீட்டிலும், வெளியிலும்; உண்மை அதுவல்லவென்பது ந்மக்கே நன்றாகத் தெரிந்தாலும்.

நான் ரயிலில் சந்தித்த ஒருவர் திருச்செங்கோட்டுக்காரர். கடலை வியாபாரி. மொத்தமாகக் கொள்முதல் செய்து சில்லறையில் வியாபாரம். வயது 63, இரு முறை பைபாஸ் ஆபரேசன் நடந்திருக்கிறது. இருப்பினும் சோர்ந்து போகாமல், சிறிது ஓய்வுக்குப் பின் மீண்டும் லைனுக்குக் கிளம்பி விட்டார்.

“ஏனுங்கையா இந்த வயசில இவ்வளவு கஷ்டப் படனுமா? அதான் இப்ப காரு பங்களாவுன்னு நல்லா செட்டில் ஆகீட்டிங்க. பசங்க புள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் நல்ல முறையில செஞ்சு வச்சுட்டீங்க. அப்புறமெதுக்கு இந்தப் பாடு?”

“அதுதான் தம்பி உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு. உங்களுக்கு வேலை ஒரு சுமை. எனக்கு சும்மா இருக்கதுதான் சுமை. நீங்க சொன்னமாதிரி எல்லாக் கடமையும் முடிஞ்சுருச்சுன்னாலும் வெட்டியா வீட்டுல இருந்தாத் துருப் புடிச்சுப் போயிருவோம். இப்படி நாலு எடத்துக்குப் போய் நாலு மக்க மனுசங்களப் பார்த்தாலே நம்ம கஷ்டம் சின்னதாப் போயிரும்.”

“இப்பல்லாம் என்ன தம்பி பெரிய கஷ்டம்? செல் போன் இருக்கு அப்பப்ப வீட்டுக்கு பேசிக்கிடலாம், எனிவேர் பேங்கிங்க் இருக்கு போன் பண்ணிச் சொன்னதும் பணத்தப் போடறாங்க. நான் எடுத்து பொருள வாங்குறேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜெல்லாம் இருக்கு. ஆனா 80கள்ல இந்த வசதி ஏதுமில்லாம நாங்க பட்ட கஷ்டம் அதிகம் தம்பி. அப்ப எனக்கு கன்னடமும் தெரியாது, தெலுங்கும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது. உள்ள போட்டிருக்க கதர் பணியனுக்குள்ள பை வச்சுத் தச்சிருப்போம். குறைஞ்சது ரெண்டு அல்லது 3 லட்ச ரூபாய் எடுத்துட்டுப் போவோம். உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. போற இடத்துல தங்கவும் நல்ல ஏற்பாடு இருக்கது அங்க இருக்க தரகர் குடோன்ல தங்கிக்கிடுவோம். சரக்க ஏத்திக்கிட்டு லாரியிலேயே கூடவே வருவோம். இல்லன்னா நம்ம முதல் நம்மளுது இல்ல. இப்ப அப்படியா? லாரில புக் பண்ணிட்டு L R காப்பிய ஊருக்கு அனுப்பிச்சுட்டு அடுத்த ஊருக்குப் போய்ட்டே இருக்கலாம்.”

”ஆனா இப்ப எனக்கு என்ன கஷ்டம்னா. அந்தக் காலத்துல இருந்த நேர்மை இப்ப கொஞ்சம்கூட இல்லங்கிறதுதான். 3 லட்ச ரூபாய தரகர்கிட்டவோ அல்லது அவரோட அப்பா, அம்மா கிட்டவோ கொடுத்து வச்சுட்டு ஒரு வாரம் கழிச்சுக் கூட வாங்கிக்கிடலாம். அந்தத் தரகர்கிட்ட சரக்கு வாங்கலன்னாலும் பரவாயில்லை ஒன்னும் சொல்லாம நாம கொடுத்த பணத்த பைசா சுத்தமாத் திருப்பித் தருவாங்க. இப்ப முடியுங்களா?”

தர்மாவரம் ஸ்டேசனில் இறங்கியவர் இன்னும் என் மனதை விட்டு இறங்கவில்லை.

**************************************************************************

அந்தேரி எக்ஸ்பிரஸ் ஹைவேகிட்ட நில்லுங்க நான் 7:30க்கு வந்துவிடுவேன் என்று சொன்ன அனுஜன்யா, ஒரு வெளி நாட்டு வங்கியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மிக எளிய மனிதர். சொன்னது போலவே வந்தார்.

“டெய்லி இவ்வளவு நேரம் ஆகிடுமா?”

”இன்னைக்கு நீங்க வர்றிங்கன்னு நேரத்துல கிளம்பினேன். இல்லன்ன 8 மணிக்குக் கிளம்புவேன்”

“எவ்வளவு நேரமாகும் வீடு செல்ல?”

“காலேலன்னா ஒன்னே முக்கால் மணி நேரம் ஆகும். மாலைன்னா இரண்டரை மணி நேரம் ஆகும்”

“அப்ப பத்தரைக்குத்தான் வீட்டுக்குப் போவீங்க. காலை எத்தனை மணிக்குக் கிளம்புவீர்கள்?”

“ஏழரைக்கெல்லாம் கிளம்பிடுவேன்”

“ஒரு நாளைக்கு 15 அல்லது 16 மணி நேரம் உழைக்கிறீங்களே? பொறாமையா இருக்குங்க அனு”

“அட இதென்னங்க என் டிரைவரப் பாருங்க, 60 வயசாச்சு அவருக்கு. என்னைக் கண்டிவளியில் இறக்கி விட்டுட்டு அவரு மட்டுங்கா போகனும். இங்க இருந்து ஒரு மணி நேரப் பயணம். காலையும் அதே போல. பார்த்தா அவரு என்ன விட அதிகமா உழைக்கிறாருங்க. கிட்டத்தட்ட 18 மணி நேரம். ”

உழைப்புக்கு நேரம் காலம் கிடையாதுன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க.

**************************************************************************

எப்படி உழைப்பில்லாமப் பொருள் கிடைக்காதோ அதுபோல திறைமையில்லாம புகழ் கிடைக்காதுங்க. திறமையில்லாமல் வரும் புகழ் தங்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இருந்தாலும் சில பெரிசுகளுக்கு எப்படியாவது புகழ் பெறனுங்கிற ஆவல்ல என்னத்தையாவது செய்யுறாங்க. தன்னெஞ்சறிவது பொய்னு அவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் புகழ்மீதான காதல் அவங்கள வழி மாறத் தூண்டுது.

பாவமாவும் இருக்கு; சில சமயம் பரிதாபமாகவும்.

.

29 comments

  1. நல்ல அனுபவங்கள்…. துபாயில் இருக்கும் போது அந்த கடும் உழைப்பு இருந்தது. காலை 6:30 கிளம்பி இரவு 8:30 வரை தொடர்ச்சியாக வெயிலில் வேலை இருக்கும்.. இப்பப் பாருங்க.. உழைப்பு குறைஞ்சு தொப்பை தான் அதிகமாகிடுச்சு.. 🙂

  2. //அதுதான் தம்பி உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு. உங்களுக்கு வேலை ஒரு சுமை. எனக்கு சும்மா இருக்கதுதான் சுமை.//

    நெத்தியடி.

  3. //தமிழ் பிரியன் said…
    நல்ல அனுபவங்கள்…. துபாயில் இருக்கும் போது அந்த கடும் உழைப்பு இருந்தது. காலை 6:30 கிளம்பி இரவு 8:30 வரை தொடர்ச்சியாக வெயிலில் வேலை இருக்கும்.. இப்பப் பாருங்க.. உழைப்பு குறைஞ்சு தொப்பை தான் அதிகமாகிடுச்சு.. 🙂
    //
    எனக்கு சென்னைல பிழிஞ்சி எடுத்தாங்க.
    துபாய் வந்தப்புறம்தான் தொப்பை அதிகமாகிடுச்சி.!
    கி.கி.கி..!

  4. வடகரை வேலன்,
    உங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  5. பயணங்கள் தர அனுபவத்தை வேற எதுவும் தர முடியாது.

    நல்ல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணாச்சி…

  6. //பயணங்கள் தர அனுபவத்தை வேற எதுவும் தர முடியாது.//

    repeattu

  7. வணக்கம் வடகரை வேலன்

    காலையில் கணிணியை திறந்ததுமே நல்ல விடயம் கண்ணில் பட்டது.

    ம்ம்ம்ம் நல்ல பதிவு, உபயொகமானதும் கூட

    நன்றி
    இராஜராஜன்

  8. வணக்கம் அண்ணாச்சி.. முதல் இரண்டும் ’எங்களுக்குப்’ பாடம்.

    கடைசி வரிகள்..

  9. அண்ணாச்சி.. அந்தப் புகைப்படம் நீங்க எடுத்ததா?

    அதாவது கேமராவில நீங்க எடுத்ததா?

    ஆமாம்னா… என்ன சொல்றதுன்னே தெரியல..

  10. அந்தப் படம் இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அந்த கஷ்டத்துலயும் அவர் மூஞ்சில தெரியற சந்தோஷத்தைப் பாருங்க…

  11. \\வணக்கம் அண்ணாச்சி.. முதல் இரண்டும் ’எங்களுக்குப்’ பாடம்.

    \\

    வழிமொழிகிறேன்

  12. நன்றி தமிழ.
    நன்றி கணினி தேசம்
    நன்றி மகேஷ்
    நன்றி வனம்
    நன்றி பாபு
    நன்றி TVRK சார்
    நன்றி நர்சிம்
    நன்றி முரளி.

    நன்றி பரிசல்.

    அந்தப் படம் ஒரிசா வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என நினைக்கிறேன். நெட்டிலிருந்துதான் நான் எடுத்தேன். அந்த வயதானவரின் முக பாவனை என்னை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது. கழுத்தளவு வெள்ளத்திலும் தன்னையும் தற்காத்து தன் தொழிலையும் காத்துக் கொண்ட பெருமிதம் முகத்தில் தெரிகிறது.

    இதெல்லாம் என்னடா பெரிய கஷ்டம் என்பதான ஒரு அலட்சியமென எஆன் கருதுகிறேன். என் டெஸ்க்டாப்பை அலங்கரிக்கும் படுமும் இதுவே.

    வாழ்க்கையின் நம்பிக்கைக் கீற்று நாம் எதிர்பாரா இடங்களிலிருந்து வெளிச்சம் பாய்ச்சிய படியேதான் இருக்கிறது. நாம்தான் பார்வைக் கோளாறுடன் இருக்கிறோம்.

  13. நல்ல பதிவு அண்ணாச்சி.

    மும்பைக்கு போய் வந்தாலே கவிதைகளும், கதைகளும் பதிவாக வந்து கொட்டுகிறது.

    // பாவமாவும் இருக்கு; சில சமயம் பரிதாபமாகவும் //

    இதுக்கு நம்ம ஊர்ப்பக்கம் ஒரு சொலவட சொல்வாங்க. நேர்ல சொல்றேன்.

  14. வேலன்!

    இரண்டு நிகழ்வுகளை சுவராஸ்யமாகச் சொல்லிவிட்டு, நீதி எதற்கு தனியே…?
    நல்ல பதிவு.

  15. போட்டோ மிக அருமை. போலவே அந்த தர்மாவரம் பெரியவர் வாழ்வும்.

    அடுத்ததும் ‘கதையல்ல; நிஜம்’ என்றிருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் 🙂

    பயணம் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    அனுஜன்யா

  16. //காலேலன்னா ஒன்னே முக்கால் மணி நேரம் ஆகும். மாலைன்னா இரண்டரை மணி நேரம் ஆகும்”//

    போவது வருவதுதான் வேலை மற்றபடி ஆபிஸில் ஜாலிதானே யூத்???

  17. முதலில் அந்தப் படம் அருமை.

    பின் பதிவு நெடுகிலும் வார்த்தை முத்துக்கள்.

    இப்படி நாலு எடத்துக்குப் போய் நாலு மக்க மனுசங்களப் பார்த்தாலே நம்ம கஷ்டம் சின்னதாப் போயிரும்.” //

    ம், இப்படிதான் ட்ரெயினில் 2, 3 மூட்டைகளோடு வியாபாரத்துக்கு ஏறும் பெண்கள் படும் சிரமத்தைப் பார்க்கையில் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்றாகிவிடும்.

  18. @ குசும்பன்

    பொதுவாக அப்படித்தான் என்றாலும், தொடர்ந்து இரண்டு மணிநேரத்துக்கு மேல் தூங்கினால் இலேசாகக் கண்டிக்கிறார்கள்.

    அனுஜன்யா

  19. தலைப்பு ரொம்ப பிரமாதம்,கருத்துக்களுக்கு ஏற்ப.

  20. மிக நல்ல பதிவு…

    தலைப்பும், சொல்லியிருக்கும் கருத்துகளும் அருமை அண்ணாச்சி…

  21. அனுஜன்யா.. குசும்பன்

    அட்டாக்-கும், கவுண்டர் அட்டாக்கும் ஜூப்பரப்பூ!!!

  22. இரண்டு அழகான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுவிட்டு அதென்ன கிளைமாக்ஸில் ஒரு குத்து.. யாரை நினைத்து.? புரியலையே..

  23. இதையே மாதவராஜும் கேட்டுட்டாரா? ஒன்னு சிந்திக்க விடமாட்டாய்ங்களே.?

  24. எவ்வளவு வயதானாலும் உழைப்பை விரும்பும் இவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களே. ஆனால் நீங்களே சொல்லியது போல வயிற்றுப் பாட்டுக்காகக் கடைசி காலம் வரை உழைத்துப் பாடுபடும் முதியவர்களை நினைத்தால் கண்ணீர் வருகிறது.

  25. Kadaisiya irukara message yaarukunu puriyalai…

    post kalakal 🙂

    especially,

    ”ஆனா இப்ப எனக்கு என்ன கஷ்டம்னா. அந்தக் காலத்துல இருந்த நேர்மை இப்ப கொஞ்சம்கூட இல்லங்கிறதுதான். 3 லட்ச ரூபாய தரகர்கிட்டவோ அல்லது அவரோட அப்பா, அம்மா கிட்டவோ கொடுத்து வச்சுட்டு ஒரு வாரம் கழிச்சுக் கூட வாங்கிக்கிடலாம். அந்தத் தரகர்கிட்ட சரக்கு வாங்கலன்னாலும் பரவாயில்லை ஒன்னும் சொல்லாம நாம கொடுத்த பணத்த பைசா சுத்தமாத் திருப்பித் தருவாங்க. இப்ப முடியுங்களா?”

  26. உழைப்பே நிம்மதி என்றும் வாழும் மனிதர்கள் நம்முடன் எத்தனையோ பேர்.
    அடுத்த தெருவுக்கு போகக்கூட உடல் நோகாமல் காரில் போக நினைக்கும் மனிதர்களும் எத்தனை எத்தனையோ பேர்.
    அந்த புகைப்படம் மிகவும் அழகு அண்ணாச்சி. மௌனமாய் ஒரு வாழ்க்கை பாடம்.

  27. Not a yet another post.. its a lesson..

    particularly ,
    //அதுதான் தம்பி உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு. உங்களுக்கு வேலை ஒரு சுமை. எனக்கு சும்மா இருக்கதுதான் சுமை. நீங்க சொன்னமாதிரி எல்லாக் கடமையும் முடிஞ்சுருச்சுன்னாலும் வெட்டியா வீட்டுல இருந்தாத் துருப் புடிச்சுப் போயிருவோம். இப்படி நாலு எடத்துக்குப் போய் நாலு மக்க மனுசங்களப் பார்த்தாலே நம்ம கஷ்டம் சின்னதாப் போயிரும்.”//

    wata words? .. like a management quotes ..