அப்பனே புள்ளையப் பாத்து வகுறு எரியுறானா?

.

சமீபத்தில் நண்பரின் மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

“அங்கிள், சின்ன வயசுல நீங்க பட்டாசு வெடிக்கும்போது உங்களுக்குச் சந்தோசமா இருந்திச்சா?”

“கண்டிப்பா அதுக்குத்தானே வெடிக்கிறது.”

“நீங்களே வெடிச்சீங்களா? இல்ல உங்கப்பா வெடிச்சாரா?”

”சிலத நான் வெடிச்சேன் கொஞ்சம் பெரிய வெடிகள அப்பா வெடிச்சாரு”

“இப்ப?”

“இப்ப எங் குழந்தைகள் வெடிக்கிறாங்க அதப் பார்த்து நான் சந்தோஷப் படுகிறேன். ஏம்ப்பா?”

“எங்கப்பாகிட்டக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க அங்கிள்”

“என்ன பிரச்சினை”

“என்னோட சட்டைகள எடுத்துப் போட்டுக்கிறார், இன்னும் மைனர் மாதிரி மோதிரம் தொப்புள் வரைக்கும் செயினுன்னு அவரு பண்ணுற ராவடி தாங்க முடியல”

“சட்டையப் போட்டா என்னப்ப்பா பிரச்சினை?”

“அங்கிள் சிலதப் பூடகமாத்தான் சொல்ல முடியும். இருந்தாலும் உடைச்சே சொல்லிடுறேன். என்னத் தேடி எந்தப் பொண்ணு வந்தாலும் அதுகூட உக்காந்து பிளேடு போடுறார். அவ அப்புறம் என்ன ஒரு நாய் அளவுக்குக் கூட மதிக்க மாட்டேங்கிறா இதுகூடப் பரவாயில்ல இந்தவாரம் உன்னத் தேடி
நாலு புள்ளீங்க வந்தாங்க என்னத் தேடி ஒருத்தியும் வரலன்னு பொலம்புறாரு.”

“அடக் கொடுமையே அப்பனே புள்ளையப் பாத்து வகுறு எரியுறானா?”

“இன்னும் கேளுங்க வீட்டுக்கு வந்தவிக எல்லாம் அவருகூடவே பேசனுமாம. இவரு வெளி எடத்துக்குப் போனா எல்லாரும் இவருக்கு மட்டுமே மரியாதை கொடுக்கனுமாம். இவரு மத்தவிகள மதிச்சாத்தானே மத்தவுக இவர மதிப்பாங்க?”

”அதுவும் சரிதான். இந்த வயசுல உனக்குத் தெரிஞ்சது கூடவா உங்கப்பாவுக்குத் தெரியல?”

“தெரியலயா? இல்ல வயசாயிருச்சுங்கிறத ஒத்துக்க முடியலயா? ஒன்னுமே புரியல அங்கிள் . இப்பல்லாம் 24 மணி நேரமும் கம்பூட்டர் முன்னாடிதான் இருக்காரு. சின்னப் பையன்மாதிரி ஐடி கிரியேட் பண்ணி வச்சுகிட்டு சின்னச் சின்னப் புள்ளைகளோட சாட் பண்ணுறேன்ன்னு தொல்லை தாங்க முடியல ”.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ராமயணக் காட்சிதான் ஞாபகம் வந்தது.

கும்பகர்ணன் ராவணனப் பார்த்துக் கேப்ப்பான், “அண்ணே, நம்ம மகன் ஒரு பொண்ணுமேல ஆசப்பட்டு அதத் தூக்கீட்டு வந்திட்டான், அந்த ராசா கூட நாம சண்டை போடனும்னா அது ஞாயம். தர்மமான போர். ஆனா நீ செஞ்சிருக்கிற காரியம் என்ன? உனக்கே கல்யாண வயசில மகன் இருக்கும்போது நீ ஒருத்திய அதுவும் இன்னொருததன் பொண்டாட்டியத் தூக்கீட்டு வந்திருக்கியே, அதுக்கு நானும் உன் மகனும் போர் செய்யப் போறமே இதவிட இழுக்கு வேற என்ன இருக்க முடியும்?”

இப்படித்தாங்க வயசானா சிலருக்கு புத்தி பேதலிச்சுப் போயிடுது. வயசுக்குத் தகுந்த மரியாதை நாம நடந்துக்கிறதுலதான் கிடைக்குமே தவிர ஆர்டர் போட்டு வாங்க முடியாது. அது நாம வேலை பாக்குற அரசாங்க உத்தியோகத்துல கிடைக்கலாம் அது அந்தப் பதவிக்குத்தானே தவிர நமக்கு இல்ல. நாளைக்கு அந்தப் போஸ்டுல வேற கழுதை வந்து உக்காந்தா அதுக்கும் இந்த மரியாதை சல்யூட் எல்லாம் கிடைக்கும்.

நமக்கு?

.

Advertisements

25 comments

 1. நான் கூட யாரோ ப்ளாகரை பத்தி தான் எழுதிருக்கீங்களோனு நினைச்சேன்.

 2. // வயசுக்குத் தகுந்த மரியாதை நாம நடந்துக்கிறதுலதான் கிடைக்குமே தவிர ஆர்டர் போட்டு வாங்க முடியாது. அது நாம வேலை பாக்குற அரசாங்க உத்தியோகத்துல கிடைக்கலாம் அது அந்தப் பதவிக்குத்தானே தவிர நமக்கு இல்ல. //

  சரியான வார்த்தைகள். கவியரசு அவர்கள் கூறியது மாதிரி “நிலை உயரும் போது பணிவு வந்தால் உலகம் உன்னை வணங்கும்” கூறியுள்ளீர்கள்.

 3. யார் மேலயோ ரொம்ப கோவம் போலிருக்கு..ம்ம்ம்

 4. ///
  இப்படித்தாங்க வயசானா சிலருக்கு புத்தி பேதலிச்சுப் போயிடுது. வயசுக்குத் தகுந்த மரியாதை நாம நடந்துக்கிறதுலதான் கிடைக்குமே தவிர ஆர்டர் போட்டு வாங்க முடியாது.
  ////
  அதே அதே

  ////
  அது நாம வேலை பாக்குற அரசாங்க உத்தியோகத்துல கிடைக்கலாம் அது அந்தப் பதவிக்குத்தானே தவிர நமக்கு இல்ல. நாளைக்கு அந்தப் போஸ்டுல வேற கழுதை வந்து உக்காந்தா அதுக்கும் இந்த மரியாதை சல்யூட் எல்லாம் கிடைக்கும்.
  /////

  அப்படி சொல்லுங்க

 5. நல்ல பதிவு, இளமையாக சிந்திப்பது வேற, இளமையாக இருப்பதாக நினைத்து நடந்து கொள்வது வேற.

  பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி துள்ளி விளையாடுகிறான் என்பார்கள்.

  சில கிராக்குகளுக்கு வயசானாதான் இளமை திரும்பும்.
  🙂

 6. //வெட்டிப்பயல் said…
  நான் கூட யாரோ ப்ளாகரை பத்தி தான் எழுதிருக்கீங்களோனு நினைச்சேன்.//

  :-)))) நான் கூட

 7. நல்ல பதிவு. அப்பாவை மகன் குடிக்காதீர்கள் என்று சண்டை போட்டு திருந்த முயற்சி செய்யும் கால மாற்றத்தில் தானே இருக்கின்றோம்.

 8. //“என்னோட சட்டைகள எடுத்துப் போட்டுக்கிறார், இன்னும் மைனர் மாதிரி மோதிரம் தொப்புள் வரைக்கும் செயினுன்னு அவரு பண்ணுற ராவடி தாங்க முடியல”//

  அவ்வ்வ்வ்வ்வ்……,,,,,

 9. அருமையான பதிவு அண்ணாச்சி. உங்களுக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளீர்கள்.

  இதைப் படித்ததும் எனக்கு ஒரு மாமா இருக்கிறார்.. அவர்தான் ஞாபகத்துக்கு வந்தார். நல்ல மனிதர். ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுபோல கவனிப்புக்காக எல்லாவிதக் கோணங்கித்தனமும் பண்ணுவார். அவர்மீது எனக்கிருக்கும் மரியாதை காரணமாக எல்லாவற்றிற்கும் சிரித்துக் கொண்டே இருப்பேன்! ஒருவகையில் என்னை விமர்சனத்திற்கு எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக் கொடுத்து புடம் போட்டது அவர்தான்!

 10. வணக்கம் அண்ணாச்சி..ஆனந்த்தமா படிச்சேன் பதிவை.

 11. இப்படியும் எழுதுவீங்களா?
  இப்படியெல்லாம் எழுதுவீங்களா?
  இப்படிக்கூட எழுதுவீங்களா? அண்ணாச்சி.

  மும்பையிலருந்து ஒரு வெடிகுண்டு போட்டிருக்கீங்க.

 12. நல்ல இருக்கு உங்க விவரிப்பும், எடுத்துக்காட்டும்.

  /*மும்பையிலருந்து ஒரு வெடிகுண்டு போட்டிருக்கீங்க.*/

  ஆமா…! இப்ப நீங்க மும்பையிலையா இருக்கீங்க!

 13. மும்பை போனதும் டெரர் ஆயிட்டீங்களே டெரர் !!

  உங்க நடைல அழகான பதிவு !!

 14. என்ன கொடுமை அண்ணாச்சி இது? படிக்கும் போது சிரிப்பா வருது.. ஆனா கடுப்பாவும் இருக்கு.. பாவம் அந்தப் பய்யன்..

  நேத்து ஜூவில ஒரு கிசு கிசு படிச்சேன். கருப்பு நடிகர் ஒருத்தர் மந்தமத லீலைல கில்லாடியாம். கொஞ்ச நாளா அடங்கி இருந்தாராம். இப்போ அவர் பையன் நடிக்க வந்துட்டானாம். ஆனா இந்த கருப்பு நடிகர் தன் மன்மத லீலைகளை திரும்ப ஆரம்பிச்சிட்டாராம். யாரந்த நடிகரோ?

  அவரும் இவரும் ஒன்னா? :))

 15. வேலன்,

  என் கணினி ஆப் செய்த பின்னும் சூடாகவே இருக்கு இன்னமும். முதன் முறையாக ‘சூடான இடுகைகள்’ என் கணினியில் இருந்து தட்டச்சு செய்ததால் என்கிறார் எனக்குத் தெரிந்த மென் பொறியாளர் 🙂

  அனுஜன்யா

 16. அற்புதம் வடகரை வேலன். அப்படியே என்னுடைய வாழ்க்கை போலவே உள்ளது.

  //வயசுக்குத் தகுந்த மரியாதை நாம நடந்துக்கிறதுலதான் கிடைக்குமே தவிர ஆர்டர் போட்டு வாங்க முடியாது. அது நாம வேலை பாக்குற அரசாங்க உத்தியோகத்துல கிடைக்கலாம் அது அந்தப் பதவிக்குத்தானே தவிர நமக்கு இல்ல// இது சூப்பர்.

  எனக்கு பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை வடகரை வேலன்.

 17. எப்படியோ பெருசுகளுக்கு புத்தி வந்து எங்கள மாதிரி சிறுசுகளுக்கு வழிவிட்டா சரி!

 18. தடங்கலில்லாத வாசிப்பனுபவத்தை (வாசிப்பனுபவம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் யாராவது கிண்டல் பண்ணீனா தொலைச்சு புடுவேன் தொலைச்சு..) தரும் எழுத்து நடைண்ணே உங்களோடது.. கலக்கல்.! (நம்மூரு பேச்சுவழக்கை லேசா தொட்டுப்பார்த்திருக்கேன் லேட்டஸ்ட் பதிவுல.. பின்னூட்டத்த இன்னும் காங்கலை..)

 19. பேச வேண்டிய ஒரு விசயத்தைப் பத்தி, ரொம்ப நல்லாப் பேசியிருக்கீங்க.

 20. நன்றி வெட்டிப்பயல்
  நன்றி ராகவன்
  நன்றி பாண்டியன் புதல்வி
  நன்றி பிரபு
  நன்றி கோவி
  நன்றி கிரி
  நன்றி சிபி
  நன்றி தமிழ்
  நன்றி அத்திரி
  நன்றி பரிசல்
  நன்றி நர்சிம்
  நன்றி வெயிலான்
  நன்றி நையாண்டி நைனா
  நன்றி மகேஷ்
  நன்றி சஞ்சய்
  நன்றி அனுஜன்யா
  நன்றி அமர பாரதி
  நன்றி வால்
  நன்றி முரளி
  நன்றி ஆதி
  நன்றி முத்துவேல்

 21. ஒரு ‘யூத்’த யூத்தா இருக்க விடமாட்டீங்களே!!

  :))))))))))))

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s