முக(ம்)மூடி

.

மகளாய், அக்காவாய், தங்கையாய்
மனைவியாய், அம்மாவாய்,
வாங்குபவளாய், விற்பவளாய்
எடுப்பவளாய், கொடுப்பவளாய்
எண்ணற்ற அவதாரம்.

எல்லாவற்றுக்கும் கைவசமுண்டு
பொருத்தமான முகமூடிகள்
அநிச்சையாய் அணியவும்
ஆனவுடன் அகற்றவும்

எந்த முகத்தைத்
தரிசிக்க வந்தீர்களென்பதை
முன்கூட்டியே சொல்லுதல் உசிதம்
தோதான முகமூடி தேடியெடுக்க

அணியவும், அகற்றவும்
மீண்டும் மீண்டும்
அணியவும், அகற்றவும்
ஆனதில்
எனக்கே மறந்து போனது
என் சுய முகம்.

முகமூடியற்றிருபதை விட
முகமற்றிருப்பது மேலோ?

டிஸ்கி : அப்துல்லா அழைப்புக்காக எழுதுன கவிதை.

டிஸ்கி1 : இந்தக் கவிதை பிடித்திருந்தால், என்னுடைய இந்தக் கவிதைகளும் பிடிக்கக் கூடும். தக்கைகள் அறியா நீரின் ஆழம். இடம் பெயர்(த்)தல்.

.

Advertisements

26 comments

 1. தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

 2. //எந்த முகத்தைத்
  தரிசிக்க வந்தீர்களென்பதை
  முன்கூட்டியே சொல்லுதல் உசிதம்
  தோதான முகமூடி தேடியெடுக்க//

  கலக்கல்ண்ணே…

 3. அண்ணாச்சி… வழக்கம் போல சூப்பர்… “முகமற்றிருப்பது” – வேதனை கூடிய சிந்தனை …

 4. //எனக்கே மறந்து போனது
  என் சுய முகம்.

  முகமூடியற்றிருபதை விட
  முகமற்றிருப்பது மேலோ?//

  அற்புதம்ங்க. அழைப்புகளுக்குக் காத்திராமல் இன்னும் நிறைய எழுத வேண்டும் நீங்கள். வாழ்த்துக்கள்.

 5. /எந்த முகத்தைத்
  தரிசிக்க வந்தீர்களென்பதை
  முன்கூட்டியே சொல்லுதல் உசிதம்
  தோதான முகமூடி தேடியெடுக்க//

  கடைசி வரி இல்லாமல் படித்துப் பாருங்கள்.மேலும் சில அர்த்தங்கள் கிடைக்கிறது.. சுந்தர்ஜியிடம் கற்ற பாடம்..

  நல்லாருக்குண்னே

 6. நல்லா வந்திருக்கு கவிதை வேலன். எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன.

  அவகாசம் கிடைத்தால் கிருத்திகாவின் முகமூடிக் கவிதைகள் படியுங்கள். நல்ல கவிதைகள்.

  அனுஜன்யா

 7. என்னைய மட்டும் திட்டுறீங்க ரொம்ப எழுத மாட்டேங்குறேன்னு… நீங்களும் திருந்துங்கண்ணே. இது மாதிரி நல்ல கவிதைகள் பல எங்களுக்கு கிடைக்கட்டும்.

  :))

 8. என்ன அண்ணாச்சி ஒரே கவிதை மயமா இருக்கு??

 9. கதைகளும், கட்டுரைகளும் சொல்ல முடியாததை , வார்த்தைகளாலும் , உணர்வுகளாலும் விவரிக்க முடியாததை
  எளிதில் புரிய வைத்துவிடும் கவிதை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபனமாக்குகிறன உங்கள் கவிதைகள்.

 10. உங்கள் சுயமுகம் வெளிப்படுகிறது.நல்ல கவிஞராக!

 11. நல்ல நல்ல வார்த்தைகளில் கவிதை சப்ஜெக்டிவாக வந்திருக்கிறது. ஆனால் கவிதையின் இதே கருத்தை ஸ்டைலை பலமுற்றை படித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

 12. நன்றி நர்சிம்
  நன்றி மகேஷ்
  நன்றி ராமலக்ஷ்மி
  நன்றி கார்க்கி
  நன்றி வால் பையன்
  நன்றி அனுஜன்யா
  நன்றி திகழ்மிளிர்
  நன்றி குசும்பா
  நன்றி அப்துல்லா
  நன்றி அத்திரி
  நன்றி TVRK சார்
  நன்றி கும்க்கி
  நன்றி மாதவ்

 13. தனக்கென்று ஒரு முகம் இருப்பதால்தானே, முகமூடிகள் குறித்து கவலை எழுகிறது. முகமே அற்றிருப்பது மேலா?
  என்ற எண்ணம், உறுத்தலான, நேர்மையை விரும்பும் நல்ல மனசு. அதாவது, சுய முகம்.

  அசத்தறீங்க அண்ணாச்சி.இவ்வளவு சீக்கிரத்தில, இப்படியொரு நல்ல கவிதை!இன்னும்..இன்னும்..ம்..ம்ம்

 14. //முகமூடியற்றிருபதை விட
  முகமற்றிருப்பது மேலோ?//

  அருமை

  கண்ணாடியில்
  என் முகம் தெரியவில்லை
  ஒருவேளை இறந்து விட்டேனோ

 15. //முகமூடியற்றிருபதை விட
  முகமற்றிருப்பது மேலோ?//

  குழப்பமான, சிந்திக்க தூண்டிய வரிகள். பெண்கள் பிறர்காகவே வாழ்ந்து தம் வாழ்வை தொலைக்கின்றனர். தனக்கென்ன வேண்டுமென்று முடிவெடுக்கத்தெரியாத அப்பாவி முகமுடியை அணிந்து தந்தை/சகோதரன்/கணவன்/பிள்ளைகள் என கொழுக்க்கொம்பைச் சுற்றிய கொடிகளாகவே இருக்கின்றனர். அவர்களாலும் வேர்விட்டு விருட்ச்சமாக முடியும் என்பதை உணர்ந்தவர் சிலரே.

 16. எந்த முகத்தைத்
  தரிசிக்க வந்தீர்களென்பதை
  முன்கூட்டியே சொல்லுதல் உசிதம்
  தோதான முகமூடி தேடியெடுக்க

  அணியவும், அகற்றவும்
  மீண்டும் மீண்டும்
  அணியவும், அகற்றவும்
  ஆனதில்
  எனக்கே மறந்து போனது
  என் சுய முகம்.

  அருமை ந்னு ஒரு வார்த்தை சொன்னா மட்டும் பத்தாது சார்.

  சரியான வெளிப்படுத்தல்.

  மகளிர் தின ஸ்பெசல் கவிதையா சார் இது.

 17. அண்ணே,
  ஒரு கவுஜயா போடறீங்களே… அடுத்த கதம்பம் எப்ப?

 18. இது நிச்சயமாக வலையில் வரவேண்டிய கவிதை அல்ல’ என்றொரு கமெண்ட் இதற்குப் போட்டதாய் ஞாபகம்…

  அல்லது அழைத்துச் சொன்னேனா…?

 19. // முகமூடியற்றிருபதை விட
  முகமற்றிருப்பது மேலோ? //

  ஆமாங்கோ தம்பி…….!!! நீங்க சொல்றது நெம்ப கரக்ட் …!!!!

  முகமில்லாம இருந்திருந்தா ……. நெம்ப சவுரியமா இருந்திருக்கும்….!!!! வாழ்க்க பூராவும் முகமூடிய மாத்திகிட்டு இருக்க தேவையில்லையே……!!!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s