இடம் பெயர்(த்)தல்

நாலு எட்டு வைத்து பின்
இடுப்பொடித்து கைதட்டிச்
சிரித்த குரங்கு பொம்மையை
இடம்பெயர்த்து இடம் பிடித்தது
நம்மை நோக்கியும்
நம்மிலிருந்து விலகியும் பறந்த
ஹெலிஹாப்டர் பொம்மை.

ஐந்தாம் வகுப்பு
ஊளமூக்கன் பாண்டுரங்கனையும்
ஒத்தைக்கை ராகவனையும்
இடம் பெயர்த்தனர்
எட்டாம் வகுப்பு
எம்பாலனும், ஜெயராமனும்

உயர்நி்லையில் அவர்களை
ஜெயசீலனும், வன்னியப்பனும்
இடம்பெயர்த்த
மேல்நிலையில் அவர்களை
இடம் பெயர்த்தனர்
ராமசாமியும் பாலாஜியும்

ஆட்டுக்கல் கிரைண்டராகவும்
அம்மிக்கல் மிக்சியாகவும்
இடம்பெயர
அவ்வண்ணமே பிறவும்
ஆயின;ஆகும்.

ஒன்றினை ஒன்று
இடம் பெயர்த்தும்
இட்டு நிரப்புவதும்
வாழ்க்கையின் வசீகரம்

என்றாலும்
இன்னமும்
நிரப்பமுடியவில்லை
என் பாட்டி
விட்டுச் சென்ற

வெற்றிடத்தை.

.

Advertisements

29 comments

 1. ஆமாம் அண்ணாச்சி. நுட்பமான ஒரு விசயத்தைப் பற்றி எழுதுயுள்ளீர்கள்.
  அதற்குத் தகுந்த நுட்பமான, எடுத்துரைப்புகள் அருமை.
  நாந்தான் முதலா?

 2. வேலைக்கு ,விடுப்பு முடிச்சுட்டு சிலர் வரும்போதுதான், கவனிப்போம். அவர், நேத்து, முந்தா நாளெலாம் வரலைங்கிறது.இதுகூட, வந்திருக்கறவங்களால, நினைவு வராமப் போறதுதானே.அதாவது, இடம் பெயர்த்தல். மீண்டும் கவிதை. கலக்குங்க அண்ணாச்சி.

 3. /ஒன்றினை ஒன்று
  இடம் பெயர்த்தும்
  இட்டு நிரப்புவதும்
  வாழ்க்கையின் வசீகரம்/

  இங்கதான் அண்ணாச்சி திறமை காட்டறார். நல்லா முடிச்சிருக்கிறிங்க.

 4. அருமை அண்ணாச்சி….

  //ஒன்றினை ஒன்று
  இடம் பெயர்த்தும்
  இட்டு நிரப்புவதும்
  வாழ்க்கையின் வசீகரம்//

  பின்ன?

 5. //ஒன்றினை ஒன்று
  இடம் பெயர்த்தும்
  இட்டு நிரப்புவதும்
  வாழ்க்கையின் வசீகரம்//

  அருமைங்க. யதார்த்தத்தை அழகாச் சொல்லியிருக்கீங்க.

  //என்றாலும்
  இன்னமும்
  நிரப்பமுடியவில்லை
  என் பாட்டி
  விட்டுச் சென்ற
  வெற்றிடத்தை//

  இந்த வரிகள் கவிதைக்கு வசீகரம்.

 6. //அவ்வண்ணமே பிறவும்
  ஆயின;ஆகும்.//

  இவ்விடத்தில் இயல்பு தன்மை நிறைந்த ஒரு யதார்த்தமும் கூடவே உறுதியின் வெளிப்பாடும் இருக்கிறது.

  எழுத்தாளனின் ஆளுமையை கண்டு வியக்கிறேன்.

 7. அழகா தொகுத்து இருக்கீங்க அண்ணாச்சி!

 8. நன்றி முத்துவேல்.
  நன்றி மகேஷ்
  நன்றி ரமலஷ்மி மேடம்.
  நன்றி வால்.
  நன்றி முத்துலட்சுமி.

  உண்மையில் என் தாய்வழிப் பாட்டியும் தந்தைவழிப் பாட்டியும் நான் பிறக்குமுன்னே மரித்துவிட்டனர். அந்த மடிசுகம் நான் அறிந்திராத ஒன்று.

  ஆயினும் பதிலியாய் வேறு சில பாட்டிகள் (ஒன்றுவிட்ட) மற்றும் நண்பர்கள், அயல்வீட்டில் இருக்கும் பாட்டிகளின் ஆளுமைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது.

  எல்லாவற்றையும் தங்கும் ஒரு இடிதாங்கி பாட்டிதான். குடும்பத்தில் எவருக்குமான ஆதரவும், ஆறுதலும் அவரிடம் நிரம்பியிருக்கும்;எப்பொழுதும்.

 9. அவள் விட்டுச்சென்ற இடத்தையும்தான்…

 10. என்னதான் பெற்றோர் பாசத்துடன் நமை வளர்ப்பினும், தாத்தா பாட்டி அளிக்கும் பாசமும் அரவணைப்பும் தனிதான்.

  அவற்றை நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.

 11. நிச்சயமாக வலையில் வரவேண்டிய கவிதை அல்ல இது!

  மிக அருமை!

  (அனுஜன்யாவுடனான உங்கள் நட்பு பாராட்டல் சமீபமாய் கவிதை மீதிலான உங்கள் காதலிலிருந்து தெரிகிறது!)

 12. அருமை.

  மாணவர்களின் பெயர் அரசியலையும் ரசித்தேன்

 13. அண்ணாச்சி இந்தக் கவிதை மாதிரி அருமையா நான் கூப்பிடு இருக்க தொடர்பதிவு கவிதையைஉம் எழுதிருங்க.
  🙂

 14. //ஒன்றினை ஒன்று
  இடம் பெயர்த்தும்
  இட்டு நிரப்புவதும்
  வாழ்க்கையின் வசீகரம்//

  அருமை

  வாழ்க்கையை ஒரு வரியில் சொல்ல வெண்டுமெனில் இப்படித் தான் சொல்லனுமொ

  உறவும் பிரிவும் உறவும் பிரிவும்

 15. பாட்டிக்கான பதிவில் தெரிகிறது உங்களின் ஏக்கம்!

 16. நன்றி தமிழன் கறுப்பி
  நன்றி கணினி தேசம்
  நன்றி பரிசல். கவிதையே இல்லங்கிறீங்களா?
  நன்றி TVRK சார்
  நன்றி முரளி
  நன்றி அப்துல்லா
  நன்றி யாத்ரா
  நன்றி ஷீ-நிஷி

 17. ரொம்ப நல்ல வந்திருக்கு வேலன்.

  //ஒன்றினை ஒன்று
  இடம் பெயர்த்தும்
  இட்டு நிரப்புவதும்
  வாழ்க்கையின் வசீகரம்//

  இந்த முத்தாய்ப்பு வரிகளுடன், “நம்மை நோக்கியும்
  நம்மிலிருந்து விலகியும் பறந்த” வரிகளும் அழகு.

  அனுஜன்யா

 18. கவிதை அருமை. நடையில் புதிய லாவகம். வாழ்த்துக்கள்.

 19. நன்றி மாசற்ற கொடி
  நன்றி அனுஜன்யா
  நன்றி மாதவ்

 20. உணர்வுப்பூர்வமான கவிதை.!

  ஒன்றினை ஒன்று
  இடம் பெயர்த்தும்
  இட்டு நிரப்புவதும்
  வாழ்க்கையின் வசீகரம்// அழகான வரிகள்.!

 21. /ஆயின;ஆகும்.

  ஒன்றினை ஒன்று
  இடம் பெயர்த்தும்
  இட்டு நிரப்புவதும்
  வாழ்க்கையின் வசீகரம்

  என்றாலும்/

  இந்த வரிகள் இல்லாதிருந்தால் இன்னும் நன்றாகயிருந்திருக்கும்!

 22. ஒன்றினை ஒன்று
  இடம் பெயர்த்தும்
  இட்டு நிரப்புவதும்
  வாழ்க்கையின் வசீகரம்

  ம், யதார்த்தமான வரிகள்

  வசீகரிக்கிறது வாசிப்போரை.

  கவிதைக்குன்னே தனியா ஒரு ப்லாக் ஆரம்பிச்சுடுங்க சார்.

 23. ரொம்ப அற்புதமா இருக்கு அண்ணாச்சி.. உண்மைதான் சில வெற்றிடங்களை எதுவாலும் யாராலும் நிரப்ப முடிவதில்லை.. பாட்டியின் ஆசிகள் என்றும் உங்களுக்கு இருக்கும்.

 24. அன்பின் வேலன்

  இயல்பான கவிதை – எளிய சொற்கள் – கருத்தாழம் – உட்கருத்தினை வலியுறுத்தும் வண்ணமாக பல உவமைகள் – அருமை அருமை

  இருப்பினும் உலகில் நிரந்தரம் என்பது சில காலம் தான் – யாருக்கும் எவற்றுக்கும் – எதனையும் இயற்கை நிரப்பி விடும். தாய் வழிப் பாட்டியும் தந்தை வழிப் பாட்டியும் மறைந்த பின் – யாராவது ஒருவர் நம்மை அறியாமலேயே அவ்வெற்றிடத்தினை நிரப்பி இருப்பார்கள். நாம் ஏற்றுக் கொள்ள வில்லை – அவ்வளவு தான். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  தொடர்க கவிதை படைப்பதனை

  நல்வாழ்த்துகள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s