தக்கைகள் அறியா நீரின் ஆழம்.


9.00 மணி அலுவலகத்திற்கு
9.10 9.15 ஏன் 10.30க்குக்கூட
வருகிறீர்கள்.

நான் 8.00 மணிக்கே வருகிறேன்
அறைத்தனிமையின் அவலம் நீங்க.

வெண்டைக்காய் புளிக்குழம்பு
கத்திரிக்காய் காரக்குழம்பு
முள்ளங்கிச் சாம்பார்
முட்டைப் பொறியல்
முள்ளில்லா மீனும்
தென்படும் சில பொழுது
உங்கள் மதிய உணவில்.

எனக்கு மாதவன் நாயரின்,
உப்பு, சப்பு, உரைப்புமற்ற
மற்ற நாளை போலவே
சவ சவ சாப்பாடு.

மாலையில் திரும்பியடைய
அவரவருகென்றொரு கூடு
தார்சு வேய்ந்தோ அல்லது
ஓடு வேய்ந்தோ
குறந்தபட்சம்
கூரை வேய்ந்தேவானும்.

எனக்கிருப்பது ஒரு பொந்து
ஏன் போகவேண்டும் அங்கு
எனவெழும் கேள்வியோடு.

உங்கள் இணைகளோடு
கூடி முயங்கிப் பெற்ற
வேர்வைத்துளிகள் வடிய
விரியத் திறக்கிறீர்கள்
உங்கள் சாளரங்களை.

என்றேனும் நினைத்ததுண்டா
விளக்கணைததும் கவிழும்
இருட்டைப் போல
என் போல்வர் விரகத்தாபமும்
ஏக்கப் பெருமூச்சுகளும்
செரிந்தது அக்காற்றென.

தக்கைகள் அறிவதில்லை
நீரின் அடியாழம்;
ஒரு போதும்.

.

Advertisements

38 comments

 1. \\என் போல்வர் விரகத்தாபமும்
  ஏக்கப் பெருமூச்சுகளும்
  செரிந்தது அக்காற்றென\\

  அருமை அருமை

 2. அருமை

  ஆனால்..கடைசி வரி ‘ஒரு போதும்” தேவையா

 3. //தக்கைகள் அறிவதில்லை
  நீரின் அடியாழம்;
  ஒரு போதும்.//

  நல்லா இருக்கு இந்த வரிகள்…
  அன்புடன் அருணா

 4. வேலன்!

  நேற்று மாலை சிவகாசியில் நாம் சந்தித்து பேசியபோது இந்தக் கவிதை உங்களோடு இருந்ததா?

  கவிதை, நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

 5. நல்லா இருக்கு அண்ணாச்சி

  பொதுவா இக்கரைக்கு அக்கரை
  பச்சை தானே எப்பொழுதும்

 6. ///தமிழன்-கறுப்பி… said…

  இங்கேயும் தனிமையா…?///
  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டிக்கிறேன்

 7. என்னைப் பொறுத்தவரை புது அண்ணாச்சியை இக்கவிதையில் நான் பார்க்கிறேன். மிக அருமை அண்ணாச்சி.
  இன்னொரு கவிதை, நான் ரசித்தது,பார்வைக்கு.
  (ஊர்ந்து செல்லும் இரவு)

  சுயத்துடன் தொடங்கும் இப்புலர்காலையை

  சுயபுணர்ச்சியுடன் தொடங்குகிறேன்

  அலுவலகம் சென்று

  என் சக அலுவலக மயிரான்களை

  மாலை வரை சகித்திருந்துவிட்டு

  வீதிகளில் வோட்காவும் விஸ்கியும் தேடி அலைகிறேன்

  சாலைகளில் திட்டமிட்டே

  பின்புறம் அசைத்துப் போகும்

  பெண்களின் பிம்பங்களை

  கழிப்பறைக்கு இட்டுச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை

  ஊர்ந்து செல்லும் இரவை

  புகை பிடித்தே நகர்த்திக்கொண்டிருக்கும் போதே

  இந்தத் தாயோளி காலை வந்தேவிடுகிறது.
  -பயணி(வனம் சிற்றிதழ்)

 8. ரொம்…… ப அருமைங்க…. பின்னூட்டங்களில் ச.முத்துவேல் கவிதையும் கலக்கல்…. வழக்கமான பார்வையிலிருந்து வித்தியாசமாய்!!!

 9. மிக அவசரம்.
  ஆதவனுக்கு…
  என்னுடைய பின்னூட்டத்தில் இருக்கும் கவிதை, நான் படித்த,ரசித்த கவிதை என்று புரிந்துகொண்டீர்கள்தானே.அக்கவிதை, பயணி அவர்களுடையது.

 10. ஆழமான கவிதை வேலன். காமம் கடலினும் பெரிது..

 11. ஆமா.. கேட்கவேண்டும் என்று நினைத்தேன்… மேல் வலதுபுறம் ‘ஒளிக்கவிதை’ வரிசையைக்காண்கிறேன். அந்த அழகான புகைப்படங்களை எடுத்த அற்புதமான, சிறந்த, அரிய, உயர்ந்த, அழகான புகைப்படக்கலைஞர் யார்?

 12. மலரும் நினைவுகளா அண்ணே…நல்லாருக்கு.

 13. அருமையான கவிதை அண்ணாச்சி.. சொல்லப்போனால் இதே மனநிலையைத்தான் இவரும் பிரதிபலிக்கிறார்..

 14. முத்துவேல் சொன்னது தான். நீங்க புது பரிமாணம் எடுப்பதின் ஒத்திகை இது என்று வைத்துக் கொள்வோம். சிற்றிதழ்களுக்கு அனுப்புங்களேன். ரொம்ப நல்லா வந்திருக்கு.

  @ தாமிரா : //அந்த அழகான புகைப்படங்களை எடுத்த அற்புதமான, சிறந்த, அரிய, உயர்ந்த, அழகான புகைப்படக்கலைஞர் யார்?//

  போலவே அவர் பதிவிலும் சமீபத்தில் மிக மிக வசீகரமான புகைப்படம் ஒன்றை (ஒரு பெரிய கவிஞரின் இளமை கொப்பளிக்கும் போட்டோ) பார்த்தேன். வளரும் அந்த புகைப்படக் கலைஞரைப் பாராட்டியே தீர வேண்டும் :))

  அனுஜன்யா

 15. மிகவும் அருமை.

  உங்களின் பயணங்கள் இது போன்ற படைப்புகள் உருவாவதற்கு உகந்த தருணங்கள்.

  அடிக்கடி பயணியுங்கள். இது போல் நிறைய எழுதலாமே.

 16. மேன்ஷனில் வாழ தலைப்பட்ட ஆரம்ப காலங்களில் “பதுங்கு குழிகளுக்கு அலங்காரம் தேவையில்லை” என்றொரு நெடிய கவிதை எழுதினேன். பிரபஞ்சனின் நெடிய மேன்ஷன் வாழ்க்கை குறித்த குறிப்புகளைப் படிக்க நேர்ந்தது. பின்னர் பவுத்த அய்யனாரின் “மேன்ஷன் கவிதைகள்” படிக்கக் கிடைத்தது. அந்த அவலச்சுவையில் “ஹாரிலால்” என்றொரு கதை எழுதினேன். அது துபாய் தமிழ்ச் சங்க ஆண்டு விழா மலரில் வெளியானது. இதெல்லாம் சுயபுராணம்.

  தங்களது கவிதைக்கு வருகிறேன். என் அன்றாடத்துடன் 99% ஒத்துப்போகின்ற இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  மிக்க அன்புடன்,
  செல்வேந்திரன்.

 17. கொஞ்சம் வித்யாசமான ஆனால் ஆழமான யோசிப்பு

  தக்கைகள் அறிவதில்லை
  நீரின் அடியாழம்;
  ஒரு போதும்.//

  அருமையான உவமை.

 18. தக்கைகள் அறியா நீரின் ஆழம் எனும் வரிகள் ஏற்கனவே படித்த மாதிரி உள்ளது.

  மற்றபடி, இந்தக் கவிதை பிடித்திருக்கிறது.

 19. நன்றி மகேஷ். ஆமாம்.

  நன்றி முரளி

  நன்றி tvrk சார். ‘ஒரு போதும்’ அதிக அழுத்தம் தருவதாக உணர்கிறேன்.

  நன்றி ச்சின்னப் பையன்

  நன்றி அன்புடன் அருணா

  நன்றி கணினி தேசம்

  நன்றி மாதவராஜ். சிவகாசி வரும்பொழுது உதித்த எண்ணம் கவிதையாக.

  நன்றி புன்னகை.

  நன்றி தமிழன் கறுப்பி

  நன்றி தமிழ்

 20. நன்றி முத்துவேல், ஊர்ந்து செல்லும் இரவைப் பகிர்ந்ததற்கு.

  நன்றி ஆதவா.

  நன்றி தாமிரா. ‘மோகத்தைக் கொன்று விடு அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு’ன்னு பாரதிகூடச் சொல்லியிருக்காரே. ஆனால் நான் சொல்ல விழைந்தது நிராகரிப்பின் வலி, வேதனை. பகிரப் பக்கம் எவருமில்லா பரிதவிப்பு. அதன் ஒரு முனையில் காமும் தன் கோரப் பற்களைக் காட்டியவாறே.

  ஒளி ஓவியம் வரைந்தவன் நீதான் என்பதைக் குறிப்பிட மறந்து விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி.

  நன்றி கும்கி. அது நாமெல்லாம் கடந்துவந்த காலம்தானே?

 21. நன்றி வெண்பூ.

  நன்றி அனுஜன்யா. உங்களைப் போன்ற ஜாம்பவான்கள் இயங்கும் சிறுபத்திரிக்கை உலகில் என்போன்ற கொசுக்களுக்கு என்ன வேலை?

  நன்றி வெயிலான்.

  நன்றி செல்வா. அந்தப் பருவத்தைக் கடந்ததாகத்தான் இருக்கும் அனேகருடையவாழ்க்கை. பொதுவாக மேன்சன்களில் தங்கி இருந்த வாழ்க்கை திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை சரியான புரிந்து கொள்ளுதலுடன் அமைய ஒரு பலமான அஸ்திவாரமாக இருக்குமென்பது என் எண்ணம். சரிதானே?

  நன்றி மிதக்கும்வெளி.

  நன்றி அமி அம்மா
  நன்றி சுந்தர், அந்த வரிகள் சிறுபத்திரிக்கை
  உலகில் பரவலாக பிரயோகிக்கபடுவது. நான் இந்த அர்த்தத்தில் கையாண்டிருக்கிறேன். அவ்வளவே.

 22. //தக்கைகள் அறிவதில்லை
  நீரின் அடியாழம்;
  ஒரு போதும்.//

  எல்லோரும் தக்கைகள் தானன்ண்ணே!

 23. //பொதுவாக மேன்சன்களில் தங்கி இருந்த வாழ்க்கை திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை சரியான புரிந்து கொள்ளுதலுடன் அமைய ஒரு பலமான அஸ்திவாரமாக இருக்குமென்பது என் எண்ணம். சரிதானே?
  //

  மிகச்சரி

 24. //தக்கைகள் அறிவதில்லை
  நீரின் அடியாழம்;
  ஒரு போதும்.//

  நல்லா இருக்கு இந்த வரிகள்…

 25. //என் அன்றாடத்துடன் 99% ஒத்துப்போகின்ற இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.//,,செல்வேந்திரன்.//

 26. கவிதைகள் எங்கெங்கோ அழைத்து செல்கிறது அண்ணாச்சி.

  தொடருங்கள், தொடர்கிறோம்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 27. நன்றி வால்பையன்
  நன்றி அப்துல்லா
  நன்றி சிவா
  நன்றி பைத்தியக்காரன்.

  உற்சாகப் படுத்திய அனைவருக்கும் நன்றி

 28. பின்னி எடுத்துடீங்க. இதுதான் நம் ஸோ கால்ட் பாச்சுலர்ஸ் நிலைமை. அதுவும் ஃகல்ப்ல இது மேலும் உண்மை.

 29. தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s