கதம்பம் 22/02/2009

.

தொலைந்தவன்

கண்டிப்பாய் இருக்கிறது
ஆனால்காணவில்லை.
மகனுக்கு அப்பன்.
மனைவிக்கு புருஷன்
அதிகாரிக்கு அடிமை
நண்பனுக்கு நடமாடும் வங்கி.
இப்படியாகத்தான் அது.
கண்ணில் படுவதேயில்லை
நீங்கள் கண்டதுண்டா
நிஜமான என்னை?

1994-ல் வெளியான இந்தக்கவிதையை எழுதியவர் அனந்த்பாலா.

இவர் யாரென்று சொல்ல முடியுமா. தற்பொழுது இவர் பிரபல வலைப்பதிவர். விடை பதிவின் இறுதியில்.

**************************************************************************

சமீபத்தில் நண்பர் ஒருவர் இக்கால இளைஞர்களைத் திட்டித் தீர்த்தார். இத்தனைக்கும் அவருக்கு வயதும் 50க்குள்தான். நாட்டுப்பற்று இல்லை, தாய்ப்பாசம் இல்லை, பெரியவர்களை மதிப்பதில்லை என சரமாரியாகப் புகார். எனக்குத் தாங்க வில்லை.

“சார் பாரதி இறந்த போது அவரது இறுதி அஞ்சலிக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

“தெரியவில்லை”

“மொத்தம் 14 பேர்தான், பரவாயில்லை. வ உ சி விடுதலை ஆகி வரும்பொழுது அவரை வரவேற்கச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

“ஒரு பத்துப் பேர் இருப்பார்களா?”

“இல்லைங்க மொத்தம் மூனே பேர் அதிலும் இருவர் உறவினர் ஒருவர் நண்பர்”

இது போல நாமே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களையும் தலைவர்களையும், சுதந்திரத்திற்காக உடல் பொருள் ஆவி அணைத்தையும் தியாகம் செய்தவர்களையும் சுலபமாக மறந்து விட்டோம். அது இந்தத் தலைமுறையினருக்கு எப்படித் தெரியும்? அவர்களைப் பொருளாதார ஆதாயம் ஒன்றே குறிக்கோள் என வளர்த்த நம் மீதுதான் தவறு” என்றேன்.

சரிதானே?

**************************************************************************

கேரக்டர் சரியில்லை

இந்தக் குற்றச் சாட்டை ஆணின்மீது பிரயோகிக்கும் போது வரும் அர்த்தத்தையும் பெண்ணின் மீது பிரயோகிக்கும்போது வரும் அர்த்தத்தையும் யோசித்திருக்கிறீர்களா?

ஆணுக்குக் கற்பு தவிர்த்த எல்லா ஒழுக்கக் கேடுகளையும் அதன் மூலம் அர்த்தப் படுத்தும்போது, பெண்ணிற்கு அதைக் கற்பு சம்பந்தப் படுத்தி மட்டும் சொல்லுவது சரியா?

இதுக்கு யாராவது மேல் ஷாவனிஸ்டுன்னு எம் மேல சண்டைக்கு வரதீங்க.

**************************************************************************

“மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!”

இந்தக் குறளுக்குப் பொதுவா கவரிமான் ஒரு மயிர் இழந்தாலும் உயிர் வாழாது அவ்வளவு மானமுள்ள மிருகம் எனப் ப்டித்திருக்கிறோம்.

ஆனால் இது உண்மையல்ல எனவும் ஒரு கருத்து இருக்கு பாருங்க.

‘கவரி’ ன்னா மயிர் ‘மா’ன்னா மிருகம். குளிர் பிரதேசங்களில் வாழும் மிருகம், குளிரைத் தாங்க அடர்த்தியான ரோமங்களைக் கொண்டது. அந்த மயிரை இழந்து விட்டால் குளிரில் விரைத்துச் செத்து விடும் என்பதுதான் உண்மையான அர்த்தமாக இருக்கக் கூடுமோ.

இதைப்போலத்தானோ பாலையும் நீரையும் பிரிக்கும் பறவை?

**************************************************************************

”திரைக்கதா”ன்னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். மிகவும் நல்ல படம்

பிரித்விராஜ் ஒரு வெற்றிப் பட இயக்குனர். அடுத்தப் படத்துக்கான கருவை யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்குப் பரிசு வழங்கும் ஒரு பிரபல நடிகரைப் பற்றிய விபரங்களைத் தேடிப் படிக்கும்போது, முதல் படத்தில் அவருடன் அறிமுகமான நடிகையுடன் அவருக்குக் காதலும் அது கல்யாணத்தில் முடிந்ததும் தெரிய வருகிறது.

அந்த நடிகையை மையமாக வைத்து அடுத்த படத்தைச் செய்யலாம் என நடிகையைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்கத் தொடங்குகிறார். படத்தின் முதல்பாதி நடிகை பிரபலமாவதும், அவரது காதலும், கலயாணமும் எனச் செல்கிறது. .

நடிகையின் கல்யாண முறிவுக்கான உண்மையான காரணத்தையும் அவரது தற்போதைய நிலையையும் அறி்யும் பிருத்வி, அவரது கதையை படமாக எடுக்கும் வியாபார எண்ணத்தைக் கை விட்டுவிட்டு அவரது நலத்தில் அக்கறை் கொண்ட மனிதாபிமானமுள்ளவராக மாறுகிறார்.

ப்ளாஷ்பேக் உத்தி மிக அதிகளவில் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் உறுத்தாமல் இருக்கிறது. எடிட்டரின் திறமை பளிச்சிடுகிறது. பிருத்வி மிக முதிர்ந்த நடிப்பை அலட்டல் ஏதுமின்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ப்ரியாமணி கதாநாயகி வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அது என்னவோ நல்ல நடிப்பை வெளிப்படுத்த மலையாளப் படவுலகத்திற்குச் செல்லும் நடிகைகள், தமிழ் படத்துக்கு உடம்பை வெளிப்படுத்தினால் போதும் என நினைக்கின்றனர் போலும்.

ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையைச் சில இடங்களில் தொட்டுச் சென்றாலும் அவர்தான் என அறுதியிட்டுச் சொல்ல முடியாவண்ணம் திரைக்கதையில் சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது.

சென்ற அக்டோபரில் (10/08) எடுக்கப்பட்ட இந்தப் படம் அதற்குள் சிடியில் கிடைக்கிறது, 70 ரூபயில். நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்திற்கு உத்திரவாதம்.

**************************************************************************

சக வலைப்பதிவர், நண்பர் ச.முத்துவேலின் கவிதைகள் இந்த மாத உயிர் எழுத்து பத்திரிக்கையில் வந்திருக்கிறது.

கொஞ்சமாக எழுதினாலும் நல்ல கவிதைகள் எழுதும் இந்த இளைஞர் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்.

கரைகளைத் தாண்டி

எறிந்ததென்னவோ
ஒரு கல்தான்.
அதுவும் ஒரே முறைதான்.
தரை தொட்டுவிட்டதா
தெரியவில்லை.

அது கிளப்பிய
வட்ட வட்ட அலைகள்
விரிந்துகொண்டேயிருக்கிறது

நன்றி-உயிரெழுத்து
பிப்-2009

**************************************************************************

டாக்டர் நீங்க சொன்ன மாதிரி சிகரட்டுக்குபதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன். ஒரே ஒரு பிரச்சினைதான்

அதுலஎன்னப்பா பிரச்சினை?

சூயிங்கத்தைப் பத்த வைக்க ரெம்ப நேரம் ஆகுது.

**************************************************************************

அந்தப் பதிவர் நம்ம பரிசல்.

**************************************************************************

33 comments

  1. //ஆனால் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ப்ரியாமணி கதாநாயகி வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அது என்னவோ நல்ல நடிப்பை வெளிப்படுத்த மலையாளப் படவுலகத்திற்குச் செல்லும் நடிகைகள், தமிழ் படத்துக்கு உடம்பை வெளிப்படுத்தினால் போதும் என நினைக்கின்றனர் போலும்//

    என்னண்ணா? தனுஷுடன் ஒரு படம், பருத்திவீரனில் தேசிய விருதுன்னு தமிழிலும் கலக்குபவர் எங்க அம்மணி பிரியாமணி.. இருந்தாலும் கவர்ச்சியாய நடிக்க ஆசைப்பட அவருக்கு உரிமையில்லையா?

  2. /கேரக்டர் சரியில்லை

    இந்தக் குற்றச் சாட்டை ஆணின்மீது பிரயோகிக்கும் போது வரும் அர்த்தத்தையும் பெண்ணின் மீது பிரயோகிக்கும்போது வரும் அர்த்தத்தையும் யோசித்திருக்கிறீர்களா?

    ஆணுக்குக் கற்பு தவிர்த்த எல்லா ஒழுக்கக் கேடுகளையும் அதன் மூலம் அர்த்தப் படுத்தும்போது, பெண்ணிற்கு அதைக் கற்பு சம்பந்தப் படுத்தி மட்டும் சொல்லுவது சரியா?//

    இதௌ உற்று நோக்கினால, ஆண்கள் அந்த விஷயத்தில் தண்ணி தெளிச்சு விடப்பட்டவர்கள். பெண்கள் அப்படியல்ல. அது அவர்களின் மேன்மையைத்தானே காட்டுகிறது? (டேய் கார்க்கி, அடங்க மாட்டியா நீ)

  3. அருமையான கதம்பம்
    ———————
    சரியா? என கேட்டதற்கு எனது பதில் சரிதான்…:)

    ——————-
    ஆதிபகவன் முதல் இதே பிரச்சனை தான் :).
    ————–
    அந்த பிரபல பதிவுலக கவிஞனுக்கு வாழ்த்துக்கள்.
    ————–

  4. அருமை…

    இளைஞர் பற்றிய பார்வையும் அருமை…

    character – நல்ல கேள்வி? நீங்க female chauvinist மாதிரியில்ல தெரியுது? :))))

  5. // ஸ்வாமி ஓம்கார் said…
    அருமையான கதம்பம்//

    கதம்பம் அருமைன்னு சாமியே சொல்லிருச்சு….அப்புறம் நா என்ன தனியா வேற சொல்லிக்கிட்டு.

  6. //திரைக்கதா”ன்னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். மிகவும் நல்ல படம்
    ///

    நான் பார்த்த மலையாளப் படத்தப்பத்தி நம்ப தனியா பேசிக்குவோம் :)))

  7. கதம்பம் பிரமாதம்.. அதிலும் இரட்டை கவி விருந்தும் (பரிசல், முத்துவேல்) அழகான திரைப்பட விமர்சனமும் தாண்டி அமர்க்களப்படுத்துகிறது நகைச்சுவை

  8. /கேரக்டர் சரியில்லை/
    சூப்பர் அண்ணாச்சி.இப்படி யோசிக்கவில்லையே நான்(ம்)?
    /தமிழ் படத்துக்கு உடம்பை வெளிப்படுத்தினால் போதும் என நினைக்கின்றனர் போலும்./
    அப்பத்தான் இங்க கல்லா கட்டமுடியும். நம்மக்கிட்டயும் நல்ல ஆளுங்க இருக்காங்களேன்னு ஆறுதல்பட்டுக்கலாம்.
    இன்ப அதிர்ச்சி. பின்னுட்டங்களையும் தயார்பண்ணிக்கிட்டே வந்துக்கிட்டிருக்கும்போது கீழ நம்ம்ப் பேர்.மீண்டும்
    உங்க வலையில்.(ம். நீங்களுந்தான் எவ்வளவோ சொல்லிப்பாக்கறிங்க.ம்ஹூம். பதிவர்கள் மசியமாட்டேங்கறாங்க.ரொம்பத் தெளிவா இருக்காங்க.ச்சும்மா..)
    மீண்டும் நன்றி, அண்ணாச்சி.
    சூயிங்கம் … நல்லாயிருந்தது.

  9. வேலன்!

    சுவராஸ்யம் கலந்த நடையில் கதம்பம் அருமை. குறிப்பாக கவிதைகள் இரண்டுமே.

  10. சுவாரஸ்யமான கதம்பம்!
    ஸ்ரீவித்யா விவகாரத்தைப் பற்றி ஒரு வார இதழ் இந்த படம் வந்ததும் விரிவாக எழுதியதாக நினைவு.

  11. As usual.. Kalakal 🙂

    //சமீபத்தில் நண்பர் ஒருவர் இக்கால இளைஞர்களைத் திட்டித் தீர்த்தார். இத்தனைக்கும் அவருக்கு வயதும் 50க்குள்தான். நாட்டுப்பற்று இல்லை, தாய்ப்பாசம் இல்லை, பெரியவர்களை மதிப்பதில்லை என சரமாரியாகப் புகார். எனக்குத் தாங்க வில்லை.

    “சார் பாரதி இறந்த போது அவரது இறுதி அஞ்சலிக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

    “தெரியவில்லை”

    “மொத்தம் 14 பேர்தான், பரவாயில்லை. வ உ சி விடுதலை ஆகி வரும்பொழுது அவரை வரவேற்கச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

    “ஒரு பத்துப் பேர் இருப்பார்களா?”

    “இல்லைங்க மொத்தம் மூனே பேர் அதிலும் இருவர் உறவினர் ஒருவர் நண்பர்”

    இது போல நாமே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களையும் தலைவர்களையும், சுதந்திரத்திற்காக உடல் பொருள் ஆவி அணைத்தையும் தியாகம் செய்தவர்களையும் சுலபமாக மறந்து விட்டோம். அது இந்தத் தலைமுறையினருக்கு எப்படித் தெரியும்? அவர்களைப் பொருளாதார ஆதாயம் ஒன்றே குறிக்கோள் என வளர்த்த நம் மீதுதான் தவறு” என்றேன்.

    சரிதானே?//

    This is too good 🙂

  12. தமிழ் சினிமாவுல நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கிறதில்லை அதுதான் காரணம்…

  13. இந்த படத்தை பற்றி உண்மைத்தமிழனும் எழுதியிருந்தார்.. அலட்டல் இல்லாத நடிப்புக்கு பிரிதிவியும் ஒருவர்..

  14. கதம்பம் 2 கவிதைகளோடிருப்பதில் கூடுதல் சுவாரஸ்யம்…

  15. அனந்த் பாலா…பரிசல்??? நல்ல விசயம்..

    கதம்பம்.. கலக்கல்.

  16. நன்றி TVRK சார்

    நன்றி கார்க்கி. கவர்ச்சியா நடிக்கிறது தப்பில்ல கார்க்கி. ஆனா அதே நடிகை மலையாளத்துல கேரக்டர் ஆர்டிஸ்டா இருப்பதைத்தான் சுட்டிக் காட்டினேன்.

    நன்றி ஸ்வாமி ஓம்கார்

    நன்றி மகேஷ்

    நன்றி அமுதா

    நன்றி அப்துல்லா

    நன்றி சென்ஷி

    நன்றி முத்துவேல்

    நன்றி மாதவராஜ்

    நன்றி தமிழ்ப் பிரியன்

    நன்றி பாலாஜி

    நன்றி தமிழன் கறுப்பி

    நன்றி பட்டாம்பூச்சி

    நன்றி நர்சிம்

  17. அண்ணாச்சி அசத்தல் நறுமண கதம்பம்.

    பரிசலுக்கு ஒரு ஓ

  18. உங்கள் வலைப்பூவின் ஐம்பதாவது ஃபாலோவர் என்ற பெருமையை அடைகிறேன்.

  19. //வ உ சி விடுதலை ஆகி வரும்பொழுது அவரை வரவேற்கச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

    “ஒரு பத்துப் பேர் இருப்பார்களா?”

    “இல்லைங்க மொத்தம் மூனே பேர் அதிலும் இருவர் உறவினர் ஒருவர் நண்பர்”//

    வ.வு.சி யே தன்னை ஒரு கூட்டமே வந்து வரவேற்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்.

    அக்காலத்தில் சுதந்திர போராட்டம் ஒரு கடமையாக இருந்தது.

    இக்காலத்தில் சின்ன வார்டு செயலாளர் கூட புகழுக்காக கூட்டம் சேர்க்கிறான்.

    இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
    அப்போது இருந்தது மனிதர்கள்,
    இப்போது இருப்பது ஆட்டு மந்தைகள்!

    உங்கள் நண்பர் சரியாக தான் சொல்லியிருக்கிறார்.

  20. //கேரக்டர் சரியில்லை//

    அப்படினா என்னான்னு சரியாக விளக்கம் கொடுப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு பரிசு புத்தகம் உண்டு!

    அதாவது கேரக்டர்னா என்னா?

  21. //இந்தக் குறளுக்குப் பொதுவா கவரிமான் ஒரு மயிர் இழந்தாலும் உயிர் வாழாது அவ்வளவு மானமுள்ள மிருகம் எனப் ப்டித்திருக்கிறோம்.

    ஆனால் இது உண்மையல்ல எனவும் ஒரு கருத்து இருக்கு //

    அக்மார்க் உண்மை!
    நாம் நமக்கேற்றவாறு வரலாறுகளையும், அர்த்தங்களையும் மாற்றி கொண்டோமே தவிர. உண்மை என்ன பண்ணுச்சு பாவம்

  22. //அந்தப் பதிவர் நம்ம பரிசல்.//

    இந்த பெயர் காரணம் தெரியும்!

    அந்த பெயர் காரணம்

  23. வழக்கம் போல அருமை..

    இரண்டு கவிதைகளும்

    ஆச்சரியம் முதல் கவிதை.

  24. உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

    கேள்வி. நெட்

  25. நீண்ட இடைவெளிக்குப் பின் கதம்பம். அழகிய ஆரம். கேரக்டர் யோசிக்க வைக்கிறது.

    கவரி மான் பதிவைப் பாத்தேன். கண்ணக் கட்டுது. தமிழ் அறிஞர்கள் கூட்டம். யாருக்கும் தெரியாமல் படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

    பிரியாமணி விஷயத்தில் நான் கார்க்கி கட்சி. இங்கும் நல்ல ரோல் கொடுத்தால் அவர் நடிக்கத் தயார்தான். பருத்தி வீரன், கனாக்காலம் – இவை நல்ல படங்கள் தானே. நீங்கள் கேரளத்திற்கு குடிபெயர எல்லா ஆயத்தங்களும் செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் 🙂

    முத்துவேலின் இந்தக் கவிதை அபாரம். உங்கள் புண்ணியத்தில், இந்த ஞாயிறு அவர் என்னுடன் நீண்ட நேரம் பேசினார். நன்றி.

    அனுஜன்யா

  26. நன்றி முரளிக்கண்ணன்
    நன்றி அ மு செய்யது
    நன்றி வால். அந்தப் பெயர் அவரது அம்மா அப்பா பெயர்களின் முதற்பகுதியை இணைத்த முயற்சி.
    நன்றி அ.அம்மா
    நன்றி HS
    நன்றி அனுஜன்யா
    நன்றி குசும்பா

  27. பொருளாதார ஆதாயம் ஒன்றே குறிக்கோள் என வளர்த்த நம் மீதுதான் தவறு// அழகு.!

    இதுக்கு யாராவது மேல் ஷாவனிஸ்டுன்னு எம் மேல// அதுக்குக்காரணம் நீங்க இல்லையே.!

    வழக்கம் போல கதம்பம் மணக்குது..

  28. ரசித்துப் படித்தேன். நன்றி.