மாலா 9ஆம் வகுப்பு ‘பி’ பிரிவு

ங்களில் சிலருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கக் கூடும். உள்ளூரில் சொந்த செல்வாக்கோடு படித்து முடித்து மேற்படிப்புக்காக வெளியூர் பள்ளியில் சென்று சேரும் போது கண்ணக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும்.

எனக்கும் அப்படித்தான் இருந்தது 9 B பிரிவில் சேரும் போது. புது பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், கட்டுப்பாடுகள், கண்டிப்புகள் இன்ன பிற. உள்ளூர் வாத்தியார்களில் பெரும்பாலும் அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் எனவே ஒரு செல்லப்பிள்ளையாகத்தான் படித்தேன். அதிலும் கண்ணன் வாத்தியாரும், ராமசாமி வாத்தியாரும் சீட்டு விளையாட எங்கள் வீட்டுக்கே வருவார்கள்.

ஒரு வழியாக நடைமுறைகள் பழக்கமாவத்ற்கும் முதலாம் இடைத் தேர்வு(?! mid term test) வந்தது. 50 பேர் படிக்கும் வகுப்பில் நான் 48 ஆவது ரேன்க். இத்தனைக்கும் cement ன்னு ஒரு essay வும் my prayerனு ஒரு poem மும்தான் ஆங்கிலப் பரிட்சைக்கு. பேப்பரில் புளுக்கலரில் நான் எழுதியதை விட சிவப்பில் ஆசிரியர் சுழித்ததுதான் அதிகம். நான் உட்படச் சிலரை கட்டம் கட்டி ஏதோ சொன்னார் வகுப்பாசிரியர்.

அன்றிரவு அப்பாவிடம் சொன்னேன், “ அப்பா வாத்தியார் உங்களக் கொண்டுட்டு வரச் சொன்னார்”

“என்னது கொண்டுட்டு வரச்சொன்னாரா?”

“ஆமா அப்படித்தான் சொன்னார், you must bring your fatherனு”

“அடப் பாவி கூட்டீட்டு வான்னுதான்டா அர்த்தம்.”

”அப்ப ஏன் bring me a cup of waterனு சொல்லுராங்க?”

தலையில் அடித்துக் கொண்டு என் எதிர்காலம் குறித்து வடமேற்கு மூலையில் சிலந்தி கட்டியிருந்த கூட்டை நோக்கித் தியானத்தில் அமர்ந்தார்.

அடுத்த நாள் வந்து ஆசிரியரைச் சந்தித்து அவரிடமே ட்யூசன் ஏறபாடு செய்துவிட்டார். பள்ளிக்கு 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அக்கிரகாரத்தில் அவரும் மேலும் இரு ஆசிரியர்களும் சேர்ந்து எடுக்கு ட்யூசன் அந்த வட்டாரத்தில் பிரபலம். அவரகளிடம் படித்தவர்கள் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்துக் கொண்ட்டிருந்தனர்.

ட்யூசன் பலன் தர ஆரம்பித்தது கால் பரிட்சையில் 14, இரண்டாம் இடைத் தேர்வில் 4, அரைப்பரிட்சையில் 2 என ரேன்க்கில் நல்ல முன்னேற்றம். அரைப் பரிட்சை ரேன்க் கார்டு தரும்பொழுது வகுப்பாசிரியர் பாராட்டிச் சொன்னார் உன் முயற்சிக்குக் கிட்டிய வெற்றி என்று. அவர் பேசி முடிக்கும் வரைக்கும் நின்று கொண்டிருந்த என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த இரு விழிகளுக்குச் சொந்தக்காரிதான் மாலா. அது வரை இரண்டாம் ரேன்க்கில் இருந்தவள்.

அவளுடைய குறுகுறு பார்வை என்னை மேலும் பார்க்கத் தூண்டியது. மெதுவாக விசாரித்ததில் அவளும் அக்கிரகாரத்து பெண், அக்கா வீட்டில் தங்கிப் படிக்கிறாள், நன்றாகப் பாடக் கூடியவள், பள்ளி ஆண்டு விழாவிலும் பாட்டுப் போட்டியிலும் அவள் பாட்டு நிச்சயம் இருக்கும் என்றும் தெரியவந்தது.

பரஸ்பரப் பார்வை பரிமாறல்களுக்குப் பின் ஒரு நாள், “ ஏ பாய்ஸ், 2 ஆவது ரேன்க் எடுத்தது பெரிசில்லை. ஆனா 48 லிருந்து இவ்வளவு தூரம் வந்ததுதான் பெரிசு. வாழ்த்துக்கள்” என்றாள்.

இதைப் பேசுவதற்குள் அவளுக்குக் கைகால் எல்லாம் நடுக்கம். எனக்கும்தான், “தேங்க்ஸ், கேர்ல்ஸ்” என்று சொல்லி முடிப்பதற்குள்.

எங்க காலத்தில் பொண்ணுங்க பேரச் சொல்லிக் கூப்பிடுவதெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. ஏ கேர்ள்ஸ் ஏ பாய்ஸ்தான். சிங்குலராவது?, புலூரலாவது?.

இப்படியாக நாங்கள் ஒருவருக்கொருவர் பார்வையப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தோம். அடுத்த கட்டமா பாலோ பன்ண ஆரம்பிச்சேன். 3.40 க்கு பள்ளி முடிந்தால் 5.00 மணிக்குத்தான் ட்யூசன். முதலில் சைக்கிளில் சென்று பஸ்டாண்டுல காத்திருப்பேன். அவள் கிராசானதும், சண்முகாத்தியேட்டர், அங்க கிராசானதும் ரத்னா மில்லு, வண்ணாங்குளம், குமரன் மில்லு, அழகாபுரி பஸ்ஸ்டாண்டுன்னு இப்படியே தொடரும்.

4.30 லிருந்து 5.00 மணி வரை வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருப்போம். தெருவில குறுக்க மறுக்க நடப்பாள். அதன்பின் பாடம் படிப்பதில் நேரம் போய்விடும். இதே போல அடுத்த நாள் அதற்கடுத்த நாள் இப்படியே.

என்னுடைய புத்தகப் பையில் திடீர் திடீரென்று பலகாரங்கள் இருக்கும். பின்புதான் தெரிந்தது இடைவேளையில் யாருமில்லாத சமயம் மாலாதான் வைக்கிறாள் என. நானும் அவளுக்குப் பிடித்த நெல்லிக்காய், புளியம்பிஞ்சு என எதிர்மரியாதை செய்தேன்.

டென்த் அரைப்பரிட்சை விடுமுறை. விடுமுறை நாட்களில் காலை 10..0 மணி முதல் 12.மணி வரை ட்யூசன். அது போல ஒரு நாளில் மாலா வீட்டில் ஒரே கூட்டமா இருந்தது. கணேசனைக் கேட்டதில் மாலாவின் அக்கா இறந்து விட்டதாகச் சொன்னான்.

“எப்படிடா?”

“அதை ஏன் கேக்குற அவ புருஷன் ஒரு கிராதகண்டா. அதுக்குமேல என்னை எதுவும் கேக்காதே”ன்னு சொல்லிவிட்டான்.

விடுமுறை முடிந்து பள்ளி மீ்ண்டும் திறந்ததில் மாலாவைத் தவிர அனைவரும் வந்திருந்தினர். கணேசனிடம் கேட்டதில், “ அவங்க அக்கா குழந்தையைப் பார்க்க அவ படிப்ப நிறுத்தீட்டாங்க. இன்னும் ஒரு வருடத்துல அவங்க அத்திம்பேரையே அவ கட்டிக்கப் போறா”ன்னு சொன்னான்.

வாழ்க்கை தன் வலிய கரங்களால் சதுரங்கக்கட்டதிலிருக்கும் காய்களைப் போலத் தன் இஷ்டத்திற்கு இடமாற்றிப் போடுகிறது நம்மை. துயரத்தை மறக்க அவள் சில காலம் அக்கா குழந்தையுடன் சொந்த ஊரான மாயூரத்திற்கும், நான் மேலும் படிக்க கோவைக்கும், உத்தியோக நிமித்தம் சென்னைக்குமென பிரிந்தோம்.

மீபத்தில் மாலாவைப் பார்க்க நேர்ந்த்தது. நிறைமாதமாக இருக்கும் அக்கா மகள் பிரசவத்துக்கு நகரில் இருக்கும் பெரிய டாக்டரிடம் செக்கப்புக்காக அழைத்து வந்திருந்தாள். தோற்றம் எல்லாம் மாறி, கடந்துபோன வருடங்களின் ஆயாசம் முகத்திலும் உடம்பிலும் தெரிந்தது. மாறாதது அதே பார்வை.

இப்பவும் பேசத் தைரியமில்லை. எது தடுத்தது?

********************************************************************************

Advertisements

59 comments

 1. //அரைப்பரிட்சையில் 2 என ரேன்க்கில் நல்ல முன்னேற்றம்.//

  அவரா நீங்க? அண்ணாச்சி 5 ரேங்குக்குள்ளார வரவங்க கிட்டலாம் நாங்க பழகவே யோசிப்போம்.
  ( மொத்தமே வகுப்பில் 5 பேர்னா
  ஓகே:P )

  //நானும் அவளுக்குப் பிடித்த நெல்லிக்காய், புளியம்பிஞ்சு என எதிர்மரியாதை செய்தேன்.//

  ஹூம் நீங்களும் பிகர் மடிக்க யூஸ் பண்ணது நெல்லிக்காய், புளியம் பிஞ்சுதானா?

  சேம் பிஞ்சு ஹியர்..

 2. //ஹூம் நீங்களும் பிகர் மடிக்க யூஸ் பண்ணது நெல்லிக்காய், புளியம் பிஞ்சுதானா?

  சேம் பிஞ்சு ஹியர்..
  //

  ஹி…ஹி..ஹி…இங்கயும் கேம் பிஞ்சுதான் 🙂

  ஆனா இப்பல்லாம் பயக டெய்ரிமில்க்,பீட்சான்னு எங்கயோ போய்ட்டாய்ங்க…

 3. அண்ணாச்சி..அங்கங்க காதல் பதிவுல நீங்க விட்ட பெருமூச்சு பார்த்து நெனச்சேன்.. கலக்கலான ஒரு பதிவு இருக்குனு..

  எடுத்துட்டு வரச் சொன்ன வாத்தியார் மேட்டர் சூப்பர்..

 4. அண்ணாச்சி நல்ல வீச்சு எழுத்துல.

  முடிவுல உள்ள கேள்வி, முடிவிலாக் கேள்வி.

  ரவிசுப்ரமணியனின் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருது.!!

 5. நினைவுகள் சுமையானவை என்றாலும் கூட சுகமானவைகள்தான்!

 6. //நானும் அவளுக்குப் பிடித்த நெல்லிக்காய், புளியம்பிஞ்சு என எதிர்மரியாதை செய்தேன்.//

  நாங்க இதை நாலாம்பு படிக்கும்போதே செஞ்சிருக்கோம்! அவங்களுக்கு தெரியாம அவங்க பைல சாக்லேட், மிட்டாய் எல்லாம் வைப்போம்!

  (ம்ஹூம்! பதில் மரியாதை வந்ததில்லை என்பது வேறு விஷயம்)

 7. // கால் பரிட்சையில் 14, இரண்டாம் இடைத் தேர்வில் 4, அரைப் பரிட்சையில் 2 என ரேன்க்கில் நல்ல முன்னேற்றம் //

  நான் மதிப்’பெண்’ணில் தான் முன்னேற்றமோ?னு நினைச்சிட்டேன்.

 8. நல்ல பதிவு வேலன்.

  //வாழ்க்கை தன் வலிய கரங்களால் சதுரங்கக்கட்டதிலிருக்கும் காய்களைப் போலத் தன் இஷ்டத்திற்கு இடமாற்றிப் போடுகிறது நம்மை// நிதர்சன வரிகள்.

  ஆங்காங்கே நகைச்சுவை.

  புது வடிவம் வந்ததும், உங்க வலைப்பூ தோற்றப் பொலிவுடன், பதிவுகளும் இன்னும் கலக்கலாக இருக்கு. தொடருங்கள்.

  அனுஜன்யா

 9. //புது வடிவம் வந்ததும், உங்க வலைப்பூ தோற்றப் பொலிவுடன், பதிவுகளும் இன்னும் கலக்கலாக இருக்கு. தொடருங்கள். //

  ஆமாம்!

 10. //நான் மதிப்’பெண்’ணில் தான் முன்னேற்றமோ?னு நினைச்சிட்டேன்.//

  நானும்தான்!

 11. //அண்ணாச்சி நல்ல வீச்சு எழுத்துல. //

  முட்டை வீச்சா, சாதா வீச்சா?

 12. //முடிவுல உள்ள கேள்வி, முடிவிலாக் கேள்வி.//

  ஆமாம்!

 13. அருமையான பதிவு வேலன்!

  நல்ல நினைவுகளை ஆட்டோகிராஃப் சேரன் மாதிரி தொடுத்திருக்கீங்க!

 14. அடேங்கப்பா, இத்தனை மாமாங்கத்துக்கு முன்னால் நடந்ததையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறீர்களே… உங்களுக்கு அபார நினைவாற்றல்தான்!
  (யூத் பரிசலின் பதிவில் உங்கள் பின்னூட்டம் படித்தேன் என்பதை யூகிக்கவில்லைதானே..?)

 15. நெகிழ‌ வைக்கும் ப‌திவு.ஆனால் இப்போ ஏங்க‌ பேச‌த் த‌ய‌ங்கினீங்க‌? பேசி இருக்க‌லாமே! மேலும் உங்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு இருந்த அழ‌கான‌ இடத்தை அவ‌ர்க‌ளுக்கு நினைவூட்டி இருந்தால் த‌வ‌றா என்ன‌?

 16. மிகைப்படுத்தாமல் அழகானபதிவு.

  பாராட்டுக்கள்.

  (காதல் தினம் வரும்பொழ்து எல்லோரும் ஃப்லீங்க்ஸ் ஆஃப் இந்தியாவா மாறீடறீங்களே?!!)

 17. சில நாள் கழிச்சி பதிவு பக்கம் வந்தா ஒரே பீலிங்ஸா இருக்கு……….

  அண்ணாச்சி காதலர் தின வாழ்த்துக்கள்

 18. காதலர் தினத்துக்கு அழகான மலரும் நினைவுகள்.. சிறுகதைன்னு யாரை டபாய்க்கிறீங்க.. அப்புறம் இப்பதான் நினைவுக்கு வருது, பாய்ஸ் கேர்ள்ஸ் மேட்டர். +1,+2 வில் இப்படித்தான் பெண்கள் எங்களை அழைப்பார்கள், அருகிலிருக்கும் சுந்தர் பாய்ஸை கூப்பிட்டு, கையைக் காண்பித்து முத்து பாய்ஸைக்கூப்பிடுங்க.. என்பார்கள். எல்லோரும் இப்படித்தான். நான் இப்படித்தவறாக கூப்பிடமாட்டேன், பேசினால் சரியான ஆங்கிலம்தான் பேசவேண்டும் என வம்படியாய் முடிவுசெய்து இன்னிக்கு வரைக்கும் ஆங்கிலத்தில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறேன்.

  அப்புறம் என் காதலை உங்களை மாதிரி சிறுகதையாகவெல்லாம் எழுதறதா இல்லை.. எழுதினா நாவல்தான்.. டமால்..டமால்.. (என்ன எல்லாரும் பொத்து பொத்துன்னு விழுறாய்ங்க..)

 19. கார்க்கி, வடை உனக்குத்தான். ஏம்பதிவுல வடையும் தாமிரா பதிவுல வோட்காவும் கேட்டிருக்கிற உன் அரசியலை ரசிச்சேன்.

  நன்றி நந்து. அடக் கதை சொன்னா உண்மையின்னு நம்பிடறதா?

  ஆமா அப்துல்லா. இப்பக் காதல்னா சும்மாவா?

  நன்றி முரு
  நன்றி கறுப்பி
  நன்றி முரளிக்கண்ணன்
  நன்றி நர்சிம்
  நன்றி TVRK சார்
  பரிசல் வீச்ச கலாய்ச்சிருக்கார் சிபி பார்த்தீங்களா?

  நன்றி சிபி.
  வெயிலான் கதையிலகூட முன்னேற விட மாட்டியளோ?

  நன்றி அனுஜன்யா. உங்கள் தொடர்ந்த ஆதரவுதான் காரணம்.

  நன்றி அதிஷா.

  நன்றி ரமேஷ், சில நினைவுகள் கல்வெட்டுப் போல மறக்காதல்லவா?

  நன்றி தீபா, இது ஒரு புனைவு.

  நன்றி புதுகைத்தென்றல்.
  நன்றி கும்கி
  நன்றி அத்திரி
  நன்றி தாமிரா. நீ எழுதினால் சமீபத்திய காதல் கதையாக இருக்குமே. ஆவலுடன் இருக்கிறேன்.

 20. கூளையன் டூ கட்டையன் பருவம்னு சொல்லுங்க.இன்னும் எவ்வளவு வச்சிருக்கிறீங்க இதுமாதிரி. ஒவ்வொன்னா எடுத்து வீட்டுக்கிட்டேயிருங்க.

  /வாழ்க்கை தன் வலிய கரங்களால் சதுரங்கக்கட்டதிலிருக்கும் காய்களைப் போலத் தன் இஷ்டத்திற்கு இடமாற்றிப் போடுகிறது நம்மை. /

  இங்கதான் அண்ணாச்சி, நிங்க நிக்கறீங்க. அண்ணாச்சில்ல!

 21. அன்பின் வேலன்,

  இது புனைவா அல்லது நிகழ்ந்த நிகழ்வா – எப்படி இருப்பினும் அருமை – சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு சென்றது பாராட்டுக்குரியது. ஒன்பதாம் வகுப்பு – பதின்ம வயது – இப்படித்தான் மகிழ்வாக இருக்கும். சில கொசுவத்திகள் சுற்ற உதவிய பதிவு. காதலர் தினமும் அதுவுமாக அருமையான பதிவு. நல்வாழ்த்துகள்

 22. //புது வடிவம் வந்ததும், உங்க வலைப்பூ தோற்றப் பொலிவுடன், பதிவுகளும் இன்னும் கலக்கலாக இருக்கு. தொடருங்கள்.

  அனுஜன்யா
  //

  ரிப்பீட்டேய்ய்…..

 23. நன்றி முத்துவேல்
  நன்றி சீனா சார்
  நன்றி சத்யா
  நன்றி பாபு

 24. வேலன்!

  இவ்வளவு அருமையான பதிவை எழுதி இரண்டு நாட்களாகி விட்டதா?
  எப்படி தவற விட்டேன்.
  ??தலையில் அடித்துக் கொண்டு என் எதிர்காலம் குறித்து வடமேற்கு மூலையில் சிலந்தி கட்டியிருந்த கூட்டை நோக்கித் தியானத்தில் அமர்ந்தார்.//

  ரொம்ப ரசித்தேன்.

  எல்லோர் வாழ்விலும் ஆட்டோகிராம். ஆனால் அலுப்பதேயில்லை.

 25. இப்போலாம் பிகர் மடிக்க பர்சு கனமா இருக்கணும் தலைவா

 26. வணக்கம்.
  முதலில் காலதாமததுக்கு வருந்துகிறேன்.
  எல்லோரிலும் உறைந்துகிடக்கிற இந்த
  அணுபவம் அசத்தலான மொழியில் வலை
  விரிக்கப்பட்டிருக்கிறது. நெல்லிக்காயும்,
  புளியம்பிஞ்சும் மனசு கணக்க வைத்த
  நினைவுகள்.
  வேலன் சார்….
  அசத்திவிட்டீர்கள்.

 27. நன்றி மாதவ்.
  நன்றி அவன்யன்.
  நன்றி காமராஜ்.
  நன்றி வினிதா.

 28. ஆகா! உங்கள் ‘ஆட்டோகிராஃப்’ நாயகி பெயரும் மாலாதானா :))

  ‘வாழ்க்கை என்பது இரயில் பயணம் போன்றது; அவரவர் இடம் வந்ததும் இறங்கிக்கொள்ள வேண்டியது தான்’ அப்படின்னு என்னோட ‘ஆட்டோகிராஃப்’ல எழுதிட்டு பெட்டி.. இல்லல்ல, ரெயிலே மாறி வேற ஊர்போயிட்டா ‘என்’அவ.

  ம்.. அது ஒரு கனாக்காலம்.

  ஆனா, அசட்டுத்தனங்கள் புரிபட்டுவிட்டதால, இப்பப்பாத்தா பேசிக்குவோம்னு தா தோணுது.

  ஹூ…ம், எங்கே இருக்காளோ?, எப்டி இருக்காளோ?…

 29. //வெயிலான் said…
  // கால் பரிட்சையில் 14, இரண்டாம் இடைத் தேர்வில் 4, அரைப் பரிட்சையில் 2 என ரேன்க்கில் நல்ல முன்னேற்றம் //

  நான் மதிப்’பெண்’ணில் தான் முன்னேற்றமோ?னு நினைச்சிட்டேன்//

  :-))))

  எனக்கு போட்டியா பல பேர் இருந்து இருக்காங்க போல

  எனக்கு bring நாளே என்னனு தெரியாது..என் அப்பா கிட்ட கேட்டு டென்ஷன் ஆகிட்டாரு…நான் இதற்க்கு விளக்கம் கெட்ட போது 10 வது படிக்கிறேன் ..அவ்வளவு சூப்பர் ஆங்கிலம் ஹி ஹி ஹி

 30. நன்றி இப்னு. சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
  நன்றி கிரி. நம்ம ஆங்கிலம் அவ்வளவு சூப்பர்.ஹா ஹா

 31. பரஸ்பரப் பார்வை பரிமாறல்களுக்குப் பின் ஒரு நாள், “ ஏ பாய்ஸ், 2 ஆவது ரேன்க் எடுத்தது பெரிசில்லை. ஆனா 48 லிருந்து இவ்வளவு தூரம் வந்ததுதான் பெரிசு. வாழ்த்துக்கள்” என்றாள்.

  இதைப் பேசுவதற்குள் அவளுக்குக் கைகால் எல்லாம் நடுக்கம். எனக்கும்தான், “தேங்க்ஸ், கேர்ல்ஸ்” என்று சொல்லி முடிப்பதற்குள்.

  :)))))))))

 32. எங்க காலத்தில் பொண்ணுங்க பேரச் சொல்லிக் கூப்பிடுவதெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. ஏ கேர்ள்ஸ் ஏ பாய்ஸ்தான். சிங்குலராவது?, புலூரலாவது?.

  நீங்க வேற சார் நான் 1994 இல் 9th படிக்கும் போது வரை இதேதான் …. :))))))))

 33. வாழ்க்கை தன் வலிய கரங்களால் சதுரங்கக்கட்டதிலிருக்கும் காய்களைப் போலத் தன் இஷ்டத்திற்கு இடமாற்றிப் போடுகிறது நம்மை.

  முற்றிலும் உண்மை சார்.

 34. இப்பவும் பேசத் தைரியமில்லை. எது தடுத்தது?

  ?

 35. 50 பேர் படிக்கும் வகுப்பில் நான் 48 ஆவது ரேன்க்.//

  எங்க பார்த்தாலும் என்னை விட நல்லா படிக்கிறவங்களா இருக்காங்களே

 36. you must bring your fatherனு”

  “அடப் பாவி கூட்டீட்டு வான்னுதான்டா அர்த்தம்.”

  ”அப்ப ஏன் bring me a cup of waterனு சொல்லுராங்க?”//

  நியாயமான கேள்வி தான்!

  நான் தாஜ் கோரமெண்டல் ஹோட்டலில் வேலை செய்யும் போது ஒரு விருந்தினர் என்னை பார்த்து how long you working here? என்று கேட்டார்.

  நான் மார்னிங் 8.30 டூ ஈவினிங் 4.30 என்று சொன்னேன்.

  சிரிக்க ஆரம்பித்தவர் அரை மணி நேரம் தொடர்ந்து சிரித்தார்.

  அம்மாம் பெரிய ஜோக்கா நான் சொல்லிய வார்த்தை?

 37. ட்யூசன் பலன் தர ஆரம்பித்தது கால் பரிட்சையில் 14, இரண்டாம் இடைத் தேர்வில் 4, அரைப்பரிட்சையில் 2 என //

  படிக்கும் போது மார்க் என நினைத்து குழம்பி போனேன்

 38. வாழ்க்கை தன் வலிய கரங்களால் சதுரங்கக்கட்டதிலிருக்கும் காய்களைப் போலத் தன் இஷ்டத்திற்கு இடமாற்றிப் போடுகிறது நம்மை.

  ம்.

  முதலில் சிரிக்க சிரிக்க படிக்கும்போதே நினைத்தேன், முடிவு சோகமா இருக்குமென்று.

 39. //

  நந்து f/o நிலா said…

  //நானும் அவளுக்குப் பிடித்த நெல்லிக்காய், புளியம்பிஞ்சு என எதிர்மரியாதை செய்தேன்.//

  ஹூம் நீங்களும் பிகர் மடிக்க யூஸ் பண்ணது நெல்லிக்காய், புளியம் பிஞ்சுதானா?
  //

  :)))))))))))))))
  ROTFL

  சிறுகதை சூப்பர்!

 40. /
  நயன்தாரா said…

  நானும் வேலனை மிஸ் பண்னிட்டேன்!
  /

  :)))))))))))))

 41. /
  வால்பையன் said…

  ட்யூசன் பலன் தர ஆரம்பித்தது கால் பரிட்சையில் 14, இரண்டாம் இடைத் தேர்வில் 4, அரைப்பரிட்சையில் 2 என //

  படிக்கும் போது மார்க் என நினைத்து குழம்பி போனேன்
  /

  :))))))))))
  ROTFL

 42. அண்ணாச்சி பொறந்தது வடகரை….அய் நம்மூரு பக்கம்..நா பொறந்தது புங்கம்பட்டி அண்ணாச்சி. இப்போ செட்டில் ஆகி இருப்பது குற்றாலம் அருகே மின்நகரில். சுகமான ஆட்டோக்ராப் நினைவுகளில் கலக்கியிருக்கீங்க ! ! ! படிச்சது எல்லாம் பழனிதானோ ?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s