சிபி, வெண்ணிலா மற்றும் ஓம்கார் ஸ்வாமி

.

”ஹலோ வேலன் சாரா?”

”ஆமாங்க”

”நாங்க ICICI வங்கியிலிருந்து பேசுறோம்”

”பேசுங்க”

”உங்களுக்கு 10 கிரிடிட் கார்டு அலாட் ஆகியிருக்கு”

”எங்கிட்ட ஏற்கனவே கார்டு இருக்குங்க.”

”இந்தக் கார்டுல என்ன விசேசம்னா, நீங்க எவ்வளவு வேனும்னாலும் பர்ச்சேஸ் பண்ணலாம். பணம் எதுவும் கட்டத் தேவையில்ல.”

”அப்படின்னா எனக்கு இன்னும் 10 கார்டு கொடுங்க நம்ம பசங்களுக்கும் கொடுப்பம்.”

”காந்திபுரம் வந்து வாங்கிக்கிறீங்களா.”

”இவ்வளவு சலுகை பண்ணுறீங்க, டோர் டெலிவரியும் கொடுத்துடுங்க.”

”ஹலோ நான் சிபி பேசுறேன்.”

”சொல்லுங்க சிபி, பிளாக்கத் தவிர வெளிய யாரும் என்ன வேலன்னு சொல்ல மாட்டாங்க. எங்க இருக்கீங்க.”

”உங்க ஊர்லதான் காந்திபுரத்துல இருக்கேன்.”

”எங்க தங்கியிருகீங்க?”

”சிவாகூட இருக்கேன்.”

”சரி அப்ப மாலை சந்திப்போம்.”

*******************************************************************************

மாலை நானும் சிவாவும் சிபியும் செல்வாவுக்காக் காபி ஷாப்பில் காத்திருந்தோம். செல்வா வந்ததும் பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். செல்வா சொன்னார்,”சிபி வலையிலதான் கலாய்க்கிறார். நேர்ல ரெம்ப சாப்டா இருக்காரே”

”அடப் பாவி அவரை உசுப்பி விடாதே அப்புறம் சிரம்ம்”னு சொல்லி வாய் மூடல செல்வா மாட்டிகிட்டாரு.

“நீங்க என்னவா இருக்கீங்க”ன்னு சிபியப் பாத்துக் கேட்டாரு செல்வா

“நான் சிபியா இருக்கேன்”

இது தாங்காதுன்னு எல்லோரும் கிளம்பி பாட்டியம்மா கடையில சாப்பிட்டோம். சேவை, தோசை, ஆப்பம் என வீட்டுச் சாப்பாடு போல இருக்கும். ஒரு பிடி பிடித்தோம். பின் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் பார்த்தோம்.

*******************************************************************************

நல்ல படம். கபடியின் நுட்பம் அறிந்தவர்களால் பாராட்டப் படக் கூடும். தெளிவான திரைக்கதை. நேர்த்தியான ஒளிப்பதிவு. ஒலிப்பதிவு செய்தவரைத் தனியாகப் பாராட்டியே தீரவேண்டும். கிராமத்துத் திருவிழாவில் சாத்தியமான அனைத்து ஒலிகளையும் நல்ல கற்பனையுடன் இணைத்திருக்கிறார். கண்களை மூடிக் கொண்டு ஒலிக்கோவைகளைக் கேட்டாலே ஒரு கிராமத்து திருவிழாவின் நடுவில் இருப்பது போல் உணரலாம்.

ஓரிருவரைத் தவிர அணைவரும் புதுமுகங்கள். அந்தச் சுவடே தெரியாமல் தங்களது பங்களிப்பைத் திறம்படச் செய்திருந்தனர். சரண்யா மோகனுக்கு அதிக வாய்ப்பிலையெனினும் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். கதாநாயகன் என யாரும் இல்லை எனச் சொல்லலாம். கதைதான் நாயகன். கோச்சாக நடித்திருந்தவர், கிஷோர் என நினைக்கிறேன், நன்றாகச் செய்திருக்கிறார்.

சுசீந்திரன் அறிமுக இயக்குனராம். நலல படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் எனபதற்கு இப்படம் ஒரு சாட்சி. தேவையில்லாமல் நுழைத்த காமெடி ஏதுமில்லாமல் படத்தில் இயல்பாகவே அங்கங்கே நகைச்சுவை கொப்பளிக்கிறது. வெள்ளந்தியான கிராமத்து மக்களப் படம் பிடித்து நம் கண்முன்னே நடமாட விட்டிருக்கிறார்கள்.

படத்துல நேராகச் சொன்னத விட சொல்லாமல் சொன்னதுதான் அதிகம் (sub text). அதை உணர்ந்து பார்த்தால் நல்ல படம். கிராமத்து மேடையில பெரிசுகள்ளாம் உக்காந்து ஆடு புலி ஆட்டம் ஆடுவார்கள், மேல் சட்டை இல்லாமல், அழுக்கு வேட்டியுடன். திருவிழாப் பற்றி அறிவிப்பு மைக்கில் கேட்கும்போதே (நோம்பி சாட்டுதல்) பெரிசுகள் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையுடன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சட்டென்று மாறும் இந்தக் காட்சி போல கவிதைகள் படத்தில் ஏராளம்.

சென்னை போன்ற நகரங்களில் இப்படம் வரவேற்பைப் பெறுமா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

படம் துவக்கத்தில் 35 MM படமாகத்தான் இருக்கும் பிளாஷ்பேக்கைச் சொல்ல. வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது படம் 70MM க்கு மாறும். இதைக்கூடப் புரிந்து கொள்ளமுடியாமல் திரையரங்கில் சலசலத்தது ரசனைக் குறைவைக் காட்டியது.

********************************************************************************

அடுத்த நாள் இரவு ஸ்வாமி ஓம்காரைப் பார்க்கலாம் என முடிவு செய்து அவரது பீடத்தைத் தேடிப் போனால் பூட்டி இருந்தது. போனில் அழைத்தால் 20 நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்ன்வாறே வந்தார்.

பார்க்க ஒரு சாமியார் போலிருந்தாலும் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த 1 மணி நேரம் சாதாரண ஆ(!)சாமியாகத்தான் பேசிக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் வளர்க்கப் படும் விதம் பற்றிய ஆதங்கத்தை ஆழமாகவும் தக்க உதாரணங்களுடனும் சொன்னார். பொதுவாக வளர்ப்புப் பிராணிகளைப் போலத்தான் குழந்தைகளை வளர்த்துகிறோம் என்பது அவரது கருத்து.

பிற விஷயங்களை உலக நடைமுறைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 9 மணி அளவில் அவரிடமிருந்து கிளம்பி நானும் சஞ்சயும் சிபியும் கணபதி மெஸ்ஸில் நல்ல உணவை உண்டபின் பிரிந்து சென்றோம்.

இரண்டு நாட்கள் நல்ல இனிமையான அனுபவங்களைத் பெற்றுத்தந்த சிபிக்கு நன்றி.

*******************************************************************************

Advertisements

24 comments

 1. பதிவின் துவக்கம் அருமை அண்ணாச்சி!

  வெண்ணிலா கபடிகுழு வசனகர்த்தா (செல்வேந்திரன் நண்பர்) பாஸ்கர் சக்தி போனவாரம் கோவை வந்திருந்தாரே.. பேசினீர்களா?

 2. அண்ணாச்சி,

  தகவலேதும் சொல்லாமல் பா.க.ச தலைவரோடு பல இடங்களுக்கு சென்று வந்திருக்கிறீர்கள். இது நல்லால்லை. அம்புட்டுத்தான்!

 3. ஆப்பிள் ஜூஸை தவறவிட்ட நால்வர் எனும் தலைப்பில் நான் இதை ஓர் பதிவாக போட எண்ணி இருந்தேன். 🙂

  இருந்தாலும் அதிகமாக சொல்ல அதில் ஒன்றும் இல்லை. உங்கள் பதிவில் கூட அது நாலடியார் அளவில் தானே இருக்கிறது.

  நான்,சிபி, சஞ்சாய் பேசினோம் என்பது தான் சரி. உங்கள் கவனிப்பும் மெளனமும் பேசாதவற்றையும் நிறைய பேசின.

  ஏதாவது ஓர் விடுமுறை நாட்களில் மேலும் பல பதிவர்களுடன் நீண்ட காலம் பேசலாம்.

 4. ‘நான் கடவுள்’ ளே இங்க வருமான்னு தெரியல. ‘வெண்ணிலா’ எல்லாம் டி.வி.டி. தான். பார்க்கலாம்.

  சிபியுடன் ஒரு முறை சாட் செய்த ஞாபகம்.

  அனுஜன்யா

 5. வேலன்!

  எதையும் சுவையாகச் சொல்கிறீர்கள்.
  //படம் துவக்கத்தில் 35 MM படமாகத்தான் இருக்கும் பிளாஷ்பேக்கைச் சொல்ல. வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது படம் 70MM க்கு மாறும். இதைக்கூடப் புரிந்து கொள்ளமுடியாமல் திரையரங்கில் சலசலத்தது ரசனைக் குறைவைக் காட்டியது.//

  தமிழில் சினிமா வேறாகவும், சினிமா ரசனை வேறாகவும் இருக்கிறது.

 6. கோவை மெஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.

  அதுவும் சாதா தோசை 🙂

 7. நான் கம்பு தோசை, பூண்டு சேவை, கலக்கி எல்லாம் சாப்பிட்டேன்!

  “கலக்கி” – சேலம், நாமக்கல், கோவை பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது(தெரிகிறது).

  சென்னையிலெல்லாம் கிடைப்பதில்லை!

 8. //சிபியுடன் ஒரு முறை சாட் செய்த ஞாபகம்.//

  ஆமாம்! ஆனாலும் ஊர் பேர் சொல்ல ரொம்பத்தான் பிகு பண்ணுனீங்க!

 9. //Anonymous வெயிலான் said…

  அண்ணாச்சி,

  தகவலேதும் சொல்லாமல் பா.க.ச தலைவரோடு பல இடங்களுக்கு சென்று வந்திருக்கிறீர்கள். இது நல்லால்லை. அம்புட்டுத்தான்!//

  நீங்க வடகரையாரோடு ஃபோன்ல பேசும்போது நானும்தான் கூட இருந்தேன்! அப்ப கூட உங்ககிட்டே சொன்னாரே!

 10. ஒரு பதிவர் சந்திப்பைக் கூட இவ்வளவு ரசமா எழுதறீங்களே அண்ணாச்சி !! கலக்கல் சந்திப்பு. ஊடால ஒரு திரை விமர்சனம் வேற.

  ஸ்வாமி ஓம்கார் சொன்னது கரெக்டு.

 11. கலாய்த்தல் திணை அண்ணனையே கலாய்த்த வேலன் அண்ணாச்சிக்கு எதிராக சென்னைப் பதிவர்கள் நான்கு மணிநேரம் மட்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்..

 12. படத்தை ஏற்கனவே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன். இன்னும் தூண்டியுள்ளீர்கள். அப்புறம் இது போல அடிக்கடி பிளாக்கர்களை சந்தித்துக்கொண்டிருப்பீர்கள் போல தெரிகிறதே.. அழகு.!

 13. ந‌ல்ல விமர்சனம். ப‌ட‌ம் பார்க்கும் ஆர்வ‌த்தைத் தூண்டிவிட்டீர்க‌ள்.

 14. நல்ல விமர்சனம் அண்ணாச்சி. மிக நுட்பமான் விஷயங்களை நோட் பண்ணியிருக்கீங்க… சூப்பர்..

 15. நன்றி பரிசல். பாஸ்கர் சக்தியைச் சந்திக்க முடியவில்லை.

  நன்றி வெயிலான். நான் சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை.

  நன்றி ஸ்வாமி. நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே தொழில் சம்பந்தமான அழைப்பு ஒன்று ஒரு பிரச்சினை குறித்து. அதன் பிறகு முழு ஈடுபாட்டுடன் என்னால் உங்களுடன் உரையாடமுடியவில்லை. பிறிதொருமுறை சந்திப்போம்.

  நன்றி அனுஜன்யா. வெண்ணிலா சீக்கிரம் மோசர் பேயரில் வந்துவிடும் என நினைக்கிறேன்.

  நன்றி மாதவ். //தமிழில் சினிமா வேறாகவும், சினிமா ரசனை வேறாகவும் இருக்கிறது.// சரியாகச் சொல்லியுள்ளீர்கள்

  நன்றி SK வரும் போது சொல்லுங்கள் இன்னும் சில இடங்கள் இருக்கின்றன. ஜமாய்க்கலாம்.

  நன்றி சிபி, நீங்க இங்க வந்து கலக்குனதச் சொன்னவன் கலக்கி சாப்பிட்டதச் சொல்லல பாருங்க.

  நன்றி வெண்பூ, ஏதாவது நடக்குற விஷயமாச் சொல்லுங்க. நீங்களாவது உண்ணாவிரதமாவது?

  நன்றி தாமிரா. கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இரண்டாம் ஆட்டம் உசிதம். ஒத்த அலைவரிசை உள்ள் யாரும் உடனிருந்தால் உத்தமம்.

  நன்றி தீபா. இது போன்ற முயற்சிகளை ஆதரிக்க வேண்டும். அது நல்ல சினிமா வளர வழி வகுக்கும்.

  நன்றி சத்யா. சொன்னாச் சுவராசியம் குறைஞ்சிரும்னுதான் சொல்லல. இன்னும் ஏராளமான் விஷயம் இருக்கு இந்தப் படத்துல.

 16. //9 மணி அளவில் அவரிடமிருந்து கிளம்பி நானும் சஞ்சயும் சிபியும் கணபதி மெஸ்ஸில் நல்ல உணவை உண்டபின் பிரிந்து சென்றோம்.//

  ஓ.. அது பேரு கணபதி மெஸ்ஸா? :))
  பல முறை சாப்பிட்டிருக்கிறேன்.. சிபியை கூட முன்பே அங்கு அழைத்து சென்றிருக்கிறேன்..வெட்ட வெளி மெஸ் என்பதால் பெயர் பார்த்ததில்லை..

  என்னை விட்டு வெககு பார்த்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

 17. // ஸ்வாமி ஓம்கார் said…

  ஆப்பிள் ஜூஸை தவறவிட்ட நால்வர் எனும் தலைப்பில் நான் இதை ஓர் பதிவாக போட எண்ணி இருந்தேன். ://

  நான் கூட ஆப்பிள் ஜூஸ் Vs கூட்டாஞ்சோறுன்னு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.. :))

 18. கிரிடிட் கார்டு விக்க போன் பண்ரது என்னோட ஸ்டைல், அதை சிபி தாத்தாவும் பண்றாரா?

 19. நண்பரே
  எல்லோரையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டுவிட்டீர்கள்.

 20. நன்றி சஞ்சய்
  நன்றி வால்
  நன்றி மஞ்சூர் ராசா
  நன்றி TVRK சார்
  நன்றி சொல்லரசன். உங்களுக்கான் பதிலை அதே பதிவில் இட்டுள்ளேன்.உங்கள் அன்புக்கு மீடும் நன்றி.

 21. அப்படின்னா எனக்கு இன்னும் 10 கார்டு கொடுங்க நம்ம பசங்களுக்கும் கொடுப்பம்.” //

  இதைத்தான் நான் தந்தையுள்ளம் என்கிறேன்.

  அப்புறம் தியேட்டர் சலசலப்பு. அதை ஒரு பதிவில் பின்னலாம் என்றிருக்கிறேன்.

 22. “பாட்டியம்மா கடையா” அது எங்க இருக்கு கோயமுத்தூர்லன்னு இந்த சஞ்சய் பயலுக்கு சொல்லுங்க சாரே எந்த எந்த கடைக்கோ கூட்டிகிட்டு போறார்!!

  நெக்ஸ்ட் டார்கெட் அதுதான்டா சிவா.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s