தபால்காரர்

மூனாங்கிளாசுல ஊளமூக்கன்
அஞ்சாங்கிளாசுல தபால்பெட்டி
எட்டுல கூளையன்
பத்துல கட்டையன்
பன்னெண்டுல குண்டன்
டிப்ளொமால பழனியான்
வேலைக்குச் சேந்தப்ப வீயார்
படிப்படியா மேனேஜர்னு ஆகி
இப்ப ஓனரும் ஆயாச்சு.
வலயில நம்ம பேரு அண்ணாச்சி.
அப்பாவுக்குத் தம்பி
அம்மாவுக்கு ராசா
வீட்டுக்காரிக்கு ….. (வேனாம்)
பிள்ளைகளுக்கு லூசு அப்பா
இன்னார் வீட்டுக்காரன்
இன்னார் மருமகன்
இன்னார் அப்பா
என்றெல்லாம் அழைக்கப்படும்
எனக்கும் உள்ளதொரு
இயற்பெயர் என்று
அவ்வப்போதேனும்
நினைவூட்டிச் செல்லும்
தபால்காரர்.

Advertisements

34 comments

 1. அட்றா… அட்றா… அண்ணாச்சி.. சூப்பரா இருக்கு…

 2. அடடா… கவிதைய படிக்கறதுக்குள்ளே ஃபஷ்டு இடம் போச்சே!!!!!

 3. ஹை ச்சின்னப்பையன் அண்ணே ஒரு மைக்ரோ செகண்டுல உங்களையும் முந்திட்டேனே…

 4. //அடடா… கவிதைய படிக்கறதுக்குள்ளே ஃபஷ்டு இடம் போச்சே!!!!!

  //

  அப்ப நாங்க படிக்காம பர்ஷ்ட்டு போடுறோமா??? என்ன வில்லத்தனம் :((

 5. இன்னைக்கு மூடு கும்மில இருக்கதால நோ விமர்சனம்…அப்பாலிக்கா வர்றேன்
  :))

 6. பழகி போயிட்டதால அவரு கூட என்னை சார்ன்னு கூப்பிட்டு உயிர வாங்குறார்.

  எனக்கு என் பேரே மறந்துரும் போலுருக்கே!

 7. எப்படி அண்ணாச்சி இப்படியெல்லாம்? நானும் இப்படியொண்ணு எழுத(தி)ப் பாக்கணும்.

 8. ஜூப்பர்ண்ண…

  அளவில்லா ஆதங்கத்துடன்…
  கும்க்கி.

 9. அருமை அண்ணாச்சி..

  அன்றொரு நேற்று
  அருணாச்சலம் பேரன்
  லட்சுமி மவன்

  அடுத்தொரு நேற்று
  சுசி புருஷன்

  நேற்றொரு நேற்று
  சுடர் அப்பா
  கதிர் அப்பா
  கண்மணி அப்பா..

  இன்று
  காவியா தாத்தா
  ஓவியா தாத்தா..

  எனக்கொரு பெயர் இருப்பது
  எப்படித் தெரியாமல் போனது
  என் தெருக்காரர்களுக்கு..

  -என்ற கவிஞர் மீராவின் கவிதையை ஞாபகமூட்டியதற்காக அல்ல..

  உங்களுக்குள் இப்படி ஒரு சிறந்த கவிஞர் இருப்பதைக் காட்டியதற்காக அந்த தபால்காரருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் அண்ணாச்சி.. இல்லையில்லை.. ராஜேந்திரன் சார்!

 10. கவிதை அட்டகாசம்…
  திரு. இராசேந்திரன் அண்ணாச்சி !!!

 11. அருமையாக இருந்தது வேலன்..

  இல்லை இல்லை

  அருமை தம்பி

  இல்லை இல்லை

  அட்டகாசம் அண்ணாச்சி

  இல்லை இல்லை

  ரசித்தேன் ராஜேந்திரா!

 12. இது தவிர
  பரிசலுக்கும், அனுவுக்கும் பாசக்கார அண்ணன்.
  சூர்யாவுக்கு மாமன்
  எனக்கும் நர்சிமுக்கும் இரட்சகன்
  மாதவராஜ்/காமராஜுக்கு தோழர்
  என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

  நல்லா இருக்கு வேலன்/அண்ணாச்சி/இன்ன பிற

  ரசித்தது “வீட்டுக்காரிக்கு ….. (வேனாம்)”

  அனுஜன்யா

 13. பிரமாதமாக வந்திருக்கு.வாழ்த்துக்கள்
  அனுஜன்யாவை வழிமொழிகிறேன்.

 14. உங்க கவிதையும் பரிசல் குறிப்பிட்ட கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு ! உங்க நிஜ பேரும் கம்பீரமா இருக்கு.

  அன்புடன்
  மாசற்ற கொடி

 15. நன்றி அப்துல்லா
  நன்றி ச்சின்னப்பையன்
  நன்றி ஜோசப்
  நன்றி சரவணகுமரன்
  நன்றி ஜீவன்
  நன்றி வால். எனக்கும் அதே அவஸ்தைதான்.
  நன்றி வெயிலான். அதுவா வருது ஹி ஹி.
  நன்றி கும்க்கி. இதுக்கு எதுக்கு ஆதங்கம்?
  நன்றி பரிசல். மீராவின் கவிதைக்கு.
  நன்றி மகேஷ்.
  நன்றி TVRK சார்.
  நன்றி கார்க்கி.
  நன்றி அனுஜன்யா.
  நன்றி ஸ்மைல்.
  நன்றி மாதவ்.
  நன்றி ஸ்வாமி ஓம்கார்.
  நன்றி சந்தனமுல்லை
  நன்றி வெண்பூ

 16. Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

 17. அடடா…இவ்வ்ளோ பேர்களா உங்களுக்கு?????
  அன்புடன் அருணா

 18. நன்றி அசோசியேட்
  நன்றி அருணா
  நன்றி அ.அம்மா

 19. அண்ணாச்சி, நீங்க எத்தனைப்பேரைச் சொன்னாலும் எங்களுக்கு அண்ணாச்சிதான்.(அதைத்தானே நானும் சொன்னேன்னு சொல்றீங்களா).
  கவிதை நல்லாயிருக்குங்க அண்ணாச்சி.

 20. //வீட்டுக்காரிக்கு ….. (வேனாம்//
  வேணாம்..அளுதுருவேன்…அவ்வ்வ்

 21. பெரும்பாலோருக்கு இந்த அனுபவம் இருக்கும். நம்ம பேரை சொல்லி கூபிடரவங்க ரொம்ப கொஞ்சம் பேர்தான்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s