ட்ராப்பா? ரிடர்னா? பார்ட் – 2

போன பதிவுக்கு வந்த பின்னூட்டம் எல்லாமே ஆரோக்கியமான விதமா இருந்தது மனதுக்கு நிறைவா இருக்கு.

ஆட்டோக்காரார், சக ஆட்டோக்காரார் ஒருவரை அழைத்து ஆட்டோவைச் செலுத்தச் சொல்லி, அமரராகிவிட்ட பெரியவரை அமர்ந்த நிலையில் வைத்துத் தன் தோளில் சாய்த்தவாறே வீடு நோக்கிச் சென்றார். பாஸ்புக்கில் இருந்த முகவரியை அடைந்து வெளியே சென்றிருந்த மகள் மற்றும் மனைவிக்குத் தகவலனுப்பி அவர்கள் வந்ததும் பொறுப்பாகப் பணத்தையும் (ரூ 1.5 லட்சம்) சேர்ப்பித்து விட்டார்.

10 வருடம் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியை சமீபத்தில் படித்த ஒரு செய்தி பதிவாக எழுதி உங்களுடன் பகிரச் செய்தது.

சிக்னலைப் பார்க்காமல் சடாரெனக் கிராஸ் செய்த பெரியவர் பைக் ஒன்றினால் மோதப் பட்டு கிழே விழுகிறார். தலையில் அடிபட்டு ரத்தம் வருகிறது. உடனே அருகிலிருந்தவர்கள் ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து அவரை மருத்துவமணைக்கு அனுப்புகிறார்கள்.

ஆட்டோ சற்று தூரம் சென்றதும் பெரியவர் மயக்கமாகி சீட்டில் சரிகிறார். ஆட்டோவை நிறுத்திப் பின்புறம் வந்து பார்க்கிறார் ஆட்டோக்காரர். கைப்பையில் இருக்கும் ரூ.40 ஆயிரம் அவரை உறுத்துகிறது. உடனே ஆட்டோவை ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சந்து ஒன்றுக்குள் திருப்புகிறார். பெரியவரைத் தன் ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி படுக்க வைத்து விட்டு பணத்துடன் தப்பிக்கிறார்.

அந்த வழியாக வரும் இருவர் பெரியவர் நிலை கண்டு அவரை ஒரு ஆட்டோ(மீண்டும்?) அமர்த்தி அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். நினைவு திரும்பியது பெரியவர் கேட்ட முதல் கேள்வி, “என் பணம் 40 ஆயிரத்த எங்கே?”

அடிபட்டுக் கிடந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த பாவத்துக்கு பணத்தக் காணோம்னு நம் மீதே புகார் சொல்றாரே என்ற வருத்தத்துடன், “ அய்யா நீங்க சந்துக்குள்ள நினைவில்லாமக் கிடந்தீங்க நாங்கதான் இங்க கொண்டுவந்து சேர்ததோம். பணம் எதுவும் நாங்க பார்க்கலையே” என்றனர்.

“ஆக்ஸிடெண்ட் ஆகி என்னை ஆட்டோவில் ஏற்றி விட்டது ஞாபகம் இருக்கு. சந்துக்குள்ள எப்ப, எப்படி வந்து விழுந்து கிடந்தேன்னு புரியலையே?”

“என்ன நடந்ததுன்னு ஆரம்பத்திலிருந்து சொல்லுங்க”ன்னாங்க ரெண்டு பேரும்.

நடந்ததைப் பெரியவர் சொன்னதும், “முதல்ல் உங்க வீட்டுக்குத் தகவல் தருவோம் அவங்க வந்து செய்யிறதை செய்யட்டும்”, என்று வீட்டு தொலைபேசி எண்ணை அழைத்து விபரத்தை சொல்கின்றனர்.

பெரியவரது மூத்த மகன் வந்து அணைத்து விபரத்தையும் அறிந்து போலீஸாரிடம் புகார் கொடுக்கிறார். போலீஸார் விபத்து நடந்து இடத்திற்கு சென்று விசாரித்து ஒரு துப்பும் கிடைக்காமல் தவிக்கின்றனர். மீண்டும் பெரியவரிடமே அவர் சென்ற ஆட்டோவின் உட்புறம் ஏதாவது வித்தியாசமாக இருந்ததா? ஆட்டோவை ஞாபகப் படுத்தி முடிந்த்வரைச் சொல்லுங்கள் என விசாரித்துத் தகவலின் அடிப்படையில் குற்றவாளி ஆட்டோக்க்காரரைப் பிடித்துப் பணத்தை மீட்கின்றனர். ஆட்டோக்காரர் மீது கொலைக் குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது.

ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரு சம்பங்களின் மூலம் சில்வற்றைப் படிக்க முடிக்கிறது.

வக்கிரங்களும், வசீகரங்களும் பொதிந்ததாகவே இருக்கிறது வழ்க்கை. எதைத் கண்டெடுக்கிறோம் என்பதில்தான் வேறுபாடு.

மனிதமும் மிருகமும் கலந்த கலவைதான் மனிதன் எனினும் விகிதாச்சாரம்தான் வித்தியாசப்படுத்துகிறது ஒருவரை மற்றொருவரிடமிருந்து.

தனியாக இருப்பவனிடமும் இடுட்டில் இருப்பவனிடமும் ஜாக்கிரதையாக இரு அவனது உண்மை குணம் அப்பொழுதுதான் பல்லிளிக்கும் என்பதொரு மூதுரை.

ஒரு சிறுகதைதான் ஞாபகம் வருகிறது. ஞானி ஒருவர் தன் சீடர்களை அழைத்து ஆளுக்கொரு மாம்பழம் கொடுத்து இதை பிறர் அறியாமல் உண்ணவேண்டும் எனச் சொல்கிறார். ஒருவனைத்தவிர அணைவரும் திரும்ப வந்து அவ்வாறே செய்துவிட்டதாகச் சொல்கின்றனர். அவன் மட்டும் சிறிது நேரம் கழித்து வந்து ”என்னல் முடியவில்லை குருவே. எங்கு சென்றாலும் கடவுள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்கிறான்.

குரு, “அதைக் கடவுள் எனவும் சொல்லலாம்”

Advertisements

18 comments

 1. //மனிதமும் மிருகமும் கலந்த கலவைதான் மனிதன் எனினும் விகிதாச்சாரம்தான் வித்தியாசப்படுத்துகிறது ஒருவரை மற்றொருவரிடமிருந்//

  நான் எப்படிண்ணா?

 2. பாஸ்புக்குல அட்ரஸ் இருக்கும்னு கரெக்ட்டா சொன்னதுக்கு ஒரு சபாஷ்(எனக்கு தான்)

  மிகவும் யோசிக்க வைக்கிறது.. நிகழ்வுகள் அப்படி

 3. Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

 4. அந்தக் கடைசி வரிகள் மட்டும் புரிஞ்சுட்டா தப்பே நடக்காது… ஆனா புரியாது 🙂

 5. //
  வக்கிரங்களும், வசீகரங்களும் பொதிந்ததாகவே இருக்கிறது வழ்க்கை. எதைத் கண்டெடுக்கிறோம் என்பதில்தான் வேறுபாடு.//

  மிகச் சரி! life is a box full of chocolates..என்று எங்கோ படித்ததுதான் நினைவுக்கு வருகிறது!

  //
  மனிதமும் மிருகமும் கலந்த கலவைதான் மனிதன் எனினும் விகிதாச்சாரம்தான் வித்தியாசப்படுத்துகிறது ஒருவரை மற்றொருவரிடமிருந்து//

  🙂

 6. நர்சிம் சரியாக ஊகித்து இருக்கிறார். பாராட்டுகள்.

  ட்ரிப்பா ? நான்ரிட்டனா ? என்று தலைப்பு படித்த பிறகு.
  🙂

 7. வக்கிரங்களும், வசீகரங்களும் பொதிந்ததாகவே இருக்கிறது வழ்க்கை. எதைத் கண்டெடுக்கிறோம் என்பதில்தான் வேறுபாடு.

  :)-

 8. ஒரு நல்ல ஆட்டோக்காரராகும் தகுதி எங்களுக்கு இருக்குன்னு சொல்ல வரீங்க. ஒரு செய்தியை சுவாரஸ்யமாக, அதுவும் இரண்டு பதிவாக… இதப் பத்தியும் நம்ம அடுத்த ‘பல்பு’ல எழுத வேண்டியதுதான். 🙂

  @ கார்க்கி

  ‘நான் எப்படிண்ணா?”

  அண்ணாச்சி உண்மை சொல்ல மாட்டாருன்னு அவ்வளவு தெகிரயமா கார்க்கி?

  அனுஜன்யா

 9. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு ஒரு சல்யூட்.

  அடுத்த திருட்டு ஆட்டோ ஓட்டுனருக்கு – வேண்டாம்.. ஒரு நல்லவரை பற்றிய பதிவு இது.

 10. //வக்கிரங்களும், வசீகரங்களும் பொதிந்ததாகவே இருக்கிறது வழ்க்கை. எதைத் கண்டெடுக்கிறோம் என்பதில்தான் வேறுபாடு.//

  இது வடகரை வேலன் உரை….

 11. நல்ல பதிவு அண்ணாச்சி..

  //
  Mahesh said…
  அந்தக் கடைசி வரிகள் மட்டும் புரிஞ்சுட்டா தப்பே நடக்காது… ஆனா புரியாது 🙂
  //

  நெஜமாவே எனக்கு கடைசி கதை புரியல.. 😦

 12. “எங்கு சென்றாலும் கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்” -வேறு என்ன சொல்ல ????

 13. நல்ல பதிவு. ஆனால் ஒரு சந்தேகம். கடைசி வரியில் குரு, “அதைக் கடவுள் எனவும் சொல்லலாம்” என்பதில் கடவுளக்கு பதிலாக மனசாட்சி ன்னு வந்தா கதை
  எல்லோர்க்கும் புரியும்னு தோணுது. (if my understanding is right !)

  அன்புடன்
  மாசற்ற கொடி

 14. வக்கிரங்களும், வசீகரங்களும் பொதிந்ததாகவே இருக்கிறது வழ்க்கை. எதைத் கண்டெடுக்கிறோம் என்பதில்தான் வேறுபாடு.

  அருமையான வரிகள்..

 15. நீங்க ‘நூல் நயம்’ துவங்கியது இன்றுதான் தெரியவந்தது. ஆனால் பின்னூட்டம் போட முடியவில்லை. எதோ தொழில்நுட்பச் சிக்கல். சற்று பார்க்கிறீர்களா? இந்தப் பின்னூட்டம் தான் போட முயன்றேன்.

  “நல்ல முயற்சி வேலன். நல்ல புத்தகம் படிக்கும் ஒவ்வொருவரும் அவற்றைக் குறித்த விமர்சனம்/எண்ணங்கள் எழுதினால், மற்றவர்களுக்கு புத்தகத்தின் சுவை கூடும். புரிதலும் மிகும். “

  அனுஜன்யா

 16. நன்றி கார்க்கி.
  நன்றி, சபாஷ் நர்சிம்.
  நன்றி மகேஷ்.
  நன்றி சந்தனமுல்லை
  நன்றி கோவி
  நன்றி அமிர்தவர்ஷினி.
  நன்றி அனுஜன்ய.
  நன்றி சஞ்சய்
  நன்றி TVRK சார்.
  நன்றி வெண்பூ. நேரில் பார்க்கும்போது விரிவாகச் சொல்கிறேன்.
  நன்றி Associte
  நன்றி மாசற்றகொடி. சிலருக்குக் கடவுள் சிலருக்கு மனசாட்சி.
  நன்றி ஸ்ரீதர்கண்ணன்

 17. நன்றாக இருந்தது. வாழ்வின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் சத்விஷயங்களையே தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். ரசிக நன்றிகள்!

 18. //
  வக்கிரங்களும், வசீகரங்களும் பொதிந்ததாகவே இருக்கிறது வழ்க்கை. எதைத் கண்டெடுக்கிறோம் என்பதில்தான் வேறுபாடு.//

  ஆமாங்கண்ணே மிகச்சரி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s