ட்ராப்பா? ரிடர்னா?

17 ஆம் எண் பேருந்திலிருந்து இறங்கியவரின் முகத்தில் ஒரு வாழ்நாளுக்கான ஆயாசம் தெரிந்தது. மெதுவாக நடந்து ஆட்டோ ஸ்டேண்ட் பக்கம் வந்தவர் வரிசையில் முதல் ஆட்டோக்காரரை நோக்கி, “ இந்தியன் பேங்க் வரைக்கும் போகலாமா? ”

“ட்ராப்பா? ரிடர்னா?”

“கூட்டம் அதிகம் நேரமாகும்னா ட்ராப், இல்லன்ன திரும்பி வரனும்”

“சரி ஏறுங்க”

ஆட்டோ நகர்ந்து வேகமெடுத்ததும், ட்ரைவர் தோளைத் தொட்டு், “ ஏம்ப்பா உனக்கு எத்தனை குழந்தைகள்?”

“ஒரு பொண்ணுங்க, 13 வயசாச்சு 7 ஆங்கிளாஸ், ஏங்கேக்குறீங்க?”

“நல்ல கதியா இருக்கும்போதே உம்பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுடுப்பா. வயசான காலத்துல என்ன மாதிரி சிரமப் படவேண்டாம்”

“என்ன ஆச்சுங்க? உங்க பையன் யாரும் உதவலயா?”

“எல்லாம் பணம் அனுப்ச்சா அப்பா பார்த்துக்கிடுவாருன்னு ரெண்டுபேரும் வெளியூர்ல இருக்காங்க. இங்க நாந்தான் எல்லாத்துக்கும். சிரமம். இப்பக்கூடப் பாரு பணம் எடுக்க கூட யாராவது வாங்கன்னா பொண்ணும் சரி பொண்டாட்டியும் சரி பத்திரிக்கை வைக்கிறேன்னு போய்ட்டாங்க.”

“சரி சரி விடுங்க. இதானே கடைசிக் கல்யாணம்?”

”ஆமாப்பா”

வங்கியின் முன்னே ஆட்டோவை நிறுத்திப் பெரியவர் இறங்கியதும் மரநிழல் பார்த்து பார்க் செய்தார் ஆட்டோவை.

உள்ளே சென்று பெரியவரிடம், ”கூட்டம் அதிகமில்லைங்க, காத்திருக்கட்டுமா?”

“வெயிட் பண்ணுப்பா. சீக்கிரம் வந்துடுறேன்”

சொன்னதுபோல் 15 நிமிடத்தில் வந்தார் பெரியவர். கைப்பயைப் பத்திரமாகப் பிடித்திருப்பதே சந்தேகத்தைத் தூண்டியது. ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும், “ பஸ் ஸ்டாண்டுக்குக்கா?” என்றவாரே ஸ்டார்ட் செய்தார் டிரைவர்.

“ஆமா தம்பி பணத்தை பத்திரமாக் கொண்டு சேர்க்கனும். அது வரைக்கும் உயிரைக் கையிலதான் பிடிச்சிருக்கேன்”

”சரிங்க” என்றவாரே ஆட்டோவை நிதானமாக ஓட்டினார். தோளில் படர்ந்த கையை உணர்ந்து திரும்புமுன் பெரியவர் குரல், “எனக்கு ஒரு சோடா வாங்கித் தர முடியுமா” என்றது.

ஆட்டோவை நிறுத்தி அருகிலுள்ள பொட்டிக் கடையில் சோடா வாங்கி வருமுன் பெரியவர் தலை சாய்த்துவிட்டார்.

இது ஒரு உண்மைச் சம்பவம். மீதியை எழுதுமுன் ஒரு சிறு இடைவேளை.

உங்களை அந்த ஆட்டோ ட்ரைவர் இடத்தில் கற்பனை செய்து இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும் எனச் சொல்லுங்கள்?

Advertisements

17 comments

 1. //உங்களை அந்த ஆட்டோ ட்ரைவர் இடத்தில் கற்பனை செய்து இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும் எனச் சொல்லுங்கள்? //

  உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கூட்டிச் சென்று இருப்பார்.

 2. பாஸ்புக்கில் அட்ரஸ் இருக்குமே.. வீட்டிற்கு கொண்டுபோய் போடவேண்டியதுதான்..பாஸ்புக் இல்லாத பட்சத்தில் மீண்டும் பேங்கிற்கு போய் விசாரிக்க வேண்டும்.. இறந்து விட்டார் என்பதால் உடல் வீடடையச் செய்வதே முக்கியமாய் படுகிறது

 3. Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

 4. ‘தலை சாய்த்து விட்டார்’ – உயிர் பிரியாவிட்டால், நிச்சயம் மருத்துவமனைதான்.

  உயிர் பிரிந்திருந்தால், வங்கிக்கே சென்று அவர்களிடம் பணத்தைப் பத்திரமாக வைக்கச் சொல்லிவிட்டு, பெரியவர் வீட்டுக்குப் போன் செய்து விஷயம் சொல்லவேண்டும். ஆட்டோ ஓட்டுனர் தனியாக எல்லாவற்றையும் செய்யாமல் இன்னும் இரண்டு மூன்று பேரைச் சேர்த்துக்கொள்வது, நம்பகத்தன்மை தரும். இன்றைய சூழல் அப்படி.

  அனுஜன்யா

 5. உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கூட்டிச் சென்று இருப்பேன்.

 6. ஏம்ண்ணே.. இந்தக்கேள்வில்லாம்? என்ன நடந்துச்சுன்னு சொல்லிடுங்களேன்.! அவர் உயிர்பிழைத்தாரா? பணம் பத்திரமாக பெண் கல்யாணத்தேவைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டதா?

 7. //உங்களை அந்த ஆட்டோ ட்ரைவர் இடத்தில் கற்பனை செய்து இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும் எனச் சொல்லுங்கள்?//

  வீட்டில் கொண்டு போய் பணத்தையும் உடலையும் பத்திரமாக சேர்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்கும்!

 8. சீக்கிரம் சஸ்பென்ஸை உடையுங்க!!!!

 9. வேலன்!

  உதவிக்கும், நம்பகத்தன்மைக்கும் சிலரை சேர்த்துக் கொண்டு, வங்கிக்கே கொண்டு செல்லலாம். அங்கிருந்து உறவினர்களுக்குத் தகவல் சொல்லலாம்.

 10. அருமை அண்ணாச்சி… எத்தனை எத்தனையோ சிறுகதைகள் வருது. எழுத முடியுமான்னுதான் தெரியல..

  அட்டகாசமான நடைல எழுதியிருக்கீங்க.. அதுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!

 11. I am sure, this last twist (or) quirey for the readers….!!! should be in positive way only. Because, the author must have been known very well….people who are communicating thru this blogs are well educated, brought up in a cultured way, and presently living in the society, in respectable manner….I am also confident,almost every body,who read this article does have humanitarian tendencies….!!! and they will definetely do the needful as per the requirements of the situation…for eg:If th patient(or) old man suffering with MI, then he nedds to get immediate treatment…and the best way is to admit in the nearby hospital only…I have read various answers, form the people whom replied to Mr Velan’s twist…considering us auto driver…But I am telling thru this blog honestly…I have my own doubt, if an auto driver will do it…!!! Let us hope for the good things only…This is purely my views only…!!!

 12. வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

 13. தலைய நிமுத்திவிட்டுட்டு சோடா குடிங்கன்னு சொல்லி இருப்பாரு !

 14. இந்த காலத்துல செல் போன் இல்லாம யார் இருக்காங்க?. உடனே அவர் போனை எடுத்து அதில் உள்ள எதாவது எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெரியவர் விலாசத்தை தெரிந்துக் கொண்டு பணத்தையும் அவரையும் குடும்பத்தாருடன் சேர்க்க வேண்டியது தான். அது முடியாத பட்சத்தில் போலிஸ் உதவி நாடனும்.

  முதலிலேயே போலிஸ் உதவி நாடினால், அவர் வைத்திருக்கும் பணம் உடனடியாக அவர் குடும்பத்திற்கு போய் சேராது.

 15. என்ன செஞ்சிருப்பேன்னு தெரியலை. ரெண்டாவது பாகத்தையும் படிச்சிடறேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s