தள்ளாடிய தன்மானம்

அலங்கார் ஓட்டல் எதிர்புரமுள்ள அந்த டாஸ்மாக் முன்பு வந்து நிற்கிறது பஜாஜ் பைக் ஒன்று அதிலிருந்து இறங்கிய கணவர், தன் மனைவியையும் இரு குழந்தைகளயும் ( 1 வயது மற்றும் 3 வயதிருக்கும்) ஓட்டல் காம்பவுண்டை ஒட்டிய நடைபாதை மீது காத்திருக்கச் சொல்லிவிட்டு எதிரே உள்ள டாஸ்மாக் நோக்கி நகர்கிறார்.

சரி சரக்கு வாங்கிச் சென்று வீட்டில் குடிப்பார் போல. நல்ல புரிதலுள்ள மனைவி என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவர் சரக்கை வாங்கிக் கொண்டு பாருக்குள் சென்று விட்டார்.

கிட்டதட்ட 30 நிமிடம் ஆகியும் வெளியே வந்த பாடில்லை. அதற்குள் டாஸ்மாக்கிலிருந்து வெளியே வருபவர்களின் காமப் பார்வையிலிருந்து
அப்பெண்மணி தப்ப மிகச் சிரமப்படுகிறார்.

இதற்கிடையில் அந்தக் காம்பவுண்டை ஒட்டிய நடைபாதையில் இரு சொறிநாய்களுக்கிடையே ஏற்படும் சண்டையில் இரு குழந்தைகளையும் சேதாரமில்லாமல் காப்பாற்றச் சிரமப் படுகிறார்.

அந்த நபரைப் பார்க்கும் போது தனியார் வங்கி மேலாளர் அல்லது மொபைல் கம்பெனி சீனியர் எக்சிக்யூட்டிவ் போன்ற தோற்றம். அப்பெண்மனியும் நல்ல படித்த பெரிய இடத்தை சேர்ந்த்தவராகத்தான் இருக்க வேண்டும்.

குடிப்பது தவறா சரியா என்பது தனியாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. எனினும் நமக்கு ஏற்படும் சில சந்தேகங்கள்.

குடிப்பது அவரது உரிமை எனினும் சொந்த மனைவியையும் மக்கட் செல்வங்களையும் தவிக்க விடுவது சரியா?

மற்றவர் தவறான எண்ணத்தில் தன் மனைவியை நோக்கும் நிலைக்கு அவரைத் தள்ளி, அவரைக் காட்சிப் பொருள் ஆக்கியது சரியா?

இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு மனைவி வெளியே சிரமப் படும்பொழுது உள்ளே அமர்ந்து எப்படி குடிக்க முடிகிறது?

குடிப்பதற்காக தன் குடும்பத்தாரின் தன்மானத்தை இழக்க வைக்கலாமா?

இதற்குபதில் அவர் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வந்து குடித்திருக்கலாமே, அல்லது வீட்டிற்கு வாங்கிச் சென்று குடித்திருக்கலாமே.

Advertisements

33 comments

 1. மகேஷின் எண்ணம் தான் எனக்கும். நம்பவே முடியவில்லை. அந்தப் பெண்மணி எப்படி இதைச் சகித்துக் கொண்டார்?

 2. அந்த அம்மாவை கண்டிக்கனும், வீட்டுல குடிச்சுட்டு சாவுடான்னு பளார்ன்னு ஒரு அறை விடாம காத்துகிட்டு ரோட்டிலே நின்னதுக்கு. பேசாம அந்த பெண் ஒரு ஆட்டோ எடுத்துகிட்டு வீட்டுக்கு போயிருக்கலாம்.

  அந்த புருஷன் மானம் கெட்டவன்!

 3. குடிப்பது அவரது உரிமை எனினும் சொந்த மனைவியையும் மக்கட் செல்வங்களையும் தவிக்க விடுவது சரியா?

  குடிப்பதற்காக தன் குடும்பத்தாரின் தன்மானத்தை இழக்க வைக்கலாமா?

  நல்ல கேள்விகளை அடுக்கியிருக்கிறீர்கள்.

  ம்ஹூம் ஒரு பெரிய பெருமூச்செறிவதை தவிர இப்பதிவிற்கு வேறெதையும் சொல்ல முடியவில்லை.

 4. :-((((

  அபி அப்பாக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன்…

 5. அண்ணா….

  என்ன இப்படி பண்ணீட்டீங்க.. செல்வேந்திரன் மூலம் இந்தச் சம்பவத்தைக் கேட்டபோது கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளானேன்… இன்னும் கடுமையாக எழுதியிருக்கலாமே..

 6. // Mahesh said…

  என்னாங்க இது? இப்பிடியுமா செய்யுறாங்க? :(//

  ஆமாங்க மகேஷ், ரெம்பக் கஷ்டமாயிடுச்சு

  // Deepa J said…

  மகேஷின் எண்ணம் தான் எனக்கும். நம்பவே முடியவில்லை. அந்தப் பெண்மணி எப்படி இதைச் சகித்துக் கொண்டார்?//

  வாங்க தீபா, அந்தப் பெண்ணுக்கு என்ன நிர்பந்தமோ? இதையும் சகிச்சுகிட்டு இரு குழந்தைகளையும் பெற்றிருகே அதோட நிலையக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

  //அபி அப்பா said…

  அந்த அம்மாவை கண்டிக்கனும், வீட்டுல குடிச்சுட்டு சாவுடான்னு பளார்ன்னு ஒரு அறை விடாம காத்துகிட்டு ரோட்டிலே நின்னதுக்கு. பேசாம அந்த பெண் ஒரு ஆட்டோ எடுத்துகிட்டு வீட்டுக்கு போயிருக்கலாம்.

  அந்த புருஷன் மானம் கெட்டவன்!//

  அபி அப்பா, உங்க கோபம் புரியுது. ஆனாலும் இது போன்ற சில நிகழ்வுகள்ல நாம துரதிருஷ்டவசமா ஒன்றும் செய்ய இயலாத வெறும் பார்வையாளனாகவே இருக்க வேண்டி இருக்கு.

 7. //அமிர்தவர்ஷினி அம்மா said…

  குடிப்பது அவரது உரிமை எனினும் சொந்த மனைவியையும் மக்கட் செல்வங்களையும் தவிக்க விடுவது சரியா?

  குடிப்பதற்காக தன் குடும்பத்தாரின் தன்மானத்தை இழக்க வைக்கலாமா?

  நல்ல கேள்விகளை அடுக்கியிருக்கிறீர்கள்.

  ம்ஹூம் ஒரு பெரிய பெருமூச்செறிவதை தவிர இப்பதிவிற்கு வேறெதையும் சொல்ல முடியவில்லை.//

  ஆமாங்க கையறு நிலைதான்.

  நன்றி சின்னப்பையன்

  பரிசல் இன்னும் கடுமையா எழுதியிருக்கலாம். அவரைப் பார்த்துக் கேட்டால் அப்படிக் காரசாரமாக் கேட்கலாம். ஆதங்கத்தைப் பதிவு செய்வதுதானே இந்தப் பதிவின் நோக்கம்.

 8. இது அப்பட்டமான ஆணாதிக்கத்தின் கூறுதான் 😦

 9. //அத்திரி said…

  நானெல்லாம் ரொம்ப நல்ல பையன் அண்ணாச்சி//

  நல்ல பையன் ஓக்கே அதென்ன ரெம்ப நல்ல பையன். வீட்டுக்கு வாங்கி வந்து?

  // ஜ்யோவ்ராம் சுந்தர் said…

  இது அப்பட்டமான ஆணாதிக்கத்தின் கூறுதான் :(//

  சுந்தர் இத நான் ஆண் பெண்னுன்னு கூறுபடுத்திப் பார்க்கல. ஆனா நாம நேசிக்கிற ஒரு சக ஜீவன இப்படிக் கஷ்டப்படுத்த எப்படி மனசு வருதுன்ன்னுதான் தெரியல.

 10. இதே போல ஒரு சம்பவத்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையின் முன்பு பார்த்தேன். ஸ்கூட்டரில் எனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்தவர் மேட்டுப்ப்பாளையம் ரோட்டிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு மனைவியும் குழந்தையும் ரோட்டில் தனியாக நிற்கவைத்துவிட்டு டாஸ்மாக் கடைக்குள் போய்விட்டார். அப்போது இரவு 10 மணி இருக்கும். அந்த இரவு நேரத்தில் எப்படித்தான் இது போன்ற மிருகங்களுக்கு குடிக்க மனம் வருகிறதோ தெரியவில்லை.

 11. குழந்தைகளை நினைத்தால் மனம் பதறுகிறது,இது போன்ற அப்பன் வளர்க்கும் அந்த குழந்தைகளின் எதிர்காலம்?

 12. இதற்க்கு பெயர்தான் குடி குடியை கெடுக்கும் …

 13. வேலன்!

  நான் அபி அப்பா சொன்னதையே வழிமொழிகிறேன்.

  // ஆனாலும் இது போன்ற சில நிகழ்வுகள்ல நாம துரதிருஷ்டவசமா ஒன்றும் செய்ய இயலாத வெறும் பார்வையாளனாகவே இருக்க வேண்டி இருக்கு.//

  இதில் நீங்கள் வெறும் பார்வையாளராக இல்லாமல் எல்லோருக்கும் சொல்லியிருக்கீங்களே…

 14. ரொம்ப வேதனையான விஷயம். Addiction ஒருவரை எந்த அளவுக்குக் கொண்டு செல்கிறது! நீங்கள் சொல்வது போல் அவர் தனது வீட்டிலேயோ, அல்லது தனியாக வந்தோ மது அருந்தலாம். பெண்களுக்கும் இன்னும் கொஞ்சம் தைரியம் தேவை. பதிவில் எனக்கு எழுதுவது சுலபம். நடைமுறை வாழ்க்கை … அந்தப் பெண்ணை நினைத்தால் மனம் சஞ்சலப்படுகிறது.

  அனுஜன்யா

 15. ஓ இது மிகக்கொடுமை.. பாவம் குடும்பத்தினர்.. 😦

 16. ஆமாங்க ராசா, அது மாதிரி நிகழ்வுகளப் பார்க்கும்போது மனம் வேதனைப் படுகிறது.

  பாபு அந்தக் குழந்தைகளுக்கு அவர் தவறான முன்னுதாரனம் ஆகிவிடக் கூடாது.

  ஆமாங்க தமிழ் அளவில்லாக் குடி குடி கெடுக்கும்.

 17. வாங்க மாதவ், அதுனாலதான் பதிவாப் போட்டு மனச ஆத்திக்கிட்டேன்.

  அனுஜன்யா, நீங்க சொன்னது உண்மை. அடிக்ட் ஆகாதவரைக்கும்தான் கண்ட்ரோல் உங்க கையில. ஆயிட்டா அப்புறம் அவ்வளவுதான். வெகு சிலரே இதிலிருந்து வெற்றிகரமா மீண்டு வந்திருக்காங்க.

  ரெம்பக் கொடு்மைதான் கயல்.

 18. இதுல இருக்குறதுல ஒரே பெரிய தப்பு ‘குடிச்சுட்டு வண்டி ஓட்டுறது’ அதனால் அந்த அப்பாவி குழந்தைகளுக்கோ மனைவிக்கோ இல்லை வண்டியை ஒட்டுபவருக்கோ மரணம் கூட ஏற்படலாம். அதை பற்றி ஒருவரும் பேசாமால், தன்மானம், கலாச்சாரம் என்று கலாச்சார காவலாளி போல் பின்னூட்டமிட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

  மது அருந்துவதை ஒரு இழிவான செயலாக பார்ப்பதும், அவர் மனைவியுடன் உள்ளே சென்று மது அருந்தும் நிலையில் இல்லாமலிருப்பதர்க்கும் வெளியில் இருக்கும் பொழுதே காம பார்வை பார்க்கும் நாமும் தான் காரணம்.

 19. அந்தக் குழந்தைகள் வளர்ந்த பின்பு எப்படி நல்ல பழக்கங்கள் வரும்.. ”நான் யாரையும் வெளியே காத்திருக்கச் சொல்லவில்லை.. நான் மட்டும் போய் குடித்துக் கொள்கிறேன்” என்று அவன் அப்பாவைக் காட்டிலும் ‘நல்லவ’னாகிவிடுவான்!

 20. அண்ணாச்சி.. ஒரு வார்த்த அவன கேட்டிருக்கலாமே.. தப்பா பதில் சொன்னான்னா ஒரே பளார்..

  எப்பொழுதோ எங்கோ படித்த கவிதை தான் ஞாபகம் வருகிறது

  குடித்தது அவன்
  தள்ளாடியது குடும்பம்

 21. நன்றி களப்பிரர்,

  குடித்தபின் வண்டி ஒட்டுவது என்ற கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. அது சடியான கருத்து.

  ஆனா அவரு குடிக்கிறது சரிங்கிற மாதிரியான் உங்க வாதம் தவறு.

  அவரு என்ன வேனாச் செய்யட்டும் அதே சமயம் அவரைச் சார்ந்தவர்களுக்கு ஏதும் பாதிப்பு உடல் மற்றும் மனதளவில் ஏற்படாமல் பார்க்கும் பொறுப்பு அவருக்கிருக்கிறதில்லையா?

 22. நன்றி மதன்.

  நர்சிம், நீங்க நரசிம்ம அவதாரம் எடுத்துடுவீங்க சரிதான். குடித்திருப்பவரிடம் எந்த லாஜிக்கும் செல்லுபடி ஆகாதல்லவா?

 23. குடிப்பவர்கள் கெட்டவர்கள் என்ற தட்டையான எண்ணம் எனக்குக் கிடையாது. ஆனால், இந் நிகழ்வில் வருபவர் கெட்டவர் மட்டுமல்ல கண்டிக்கப்பட,திருத்தப்பட வேண்டியவர்.ஒரு நல்ல விவாதத்திற்கு இட்டுச் சென்ற அவசியமான பதிவு.

 24. நன்றி முத்துவேல்.

  எங்க போய்டீங்க இவ்வளவு நாளா?

  உங்களுக்கு அனுப்ச்ச மெயிலும் திரும்பி வந்திருச்சு எனக்கு.

 25. அப்படியே வெளியே வரும் வரை நின்னுக்கிட்டு இருந்து வந்ததும் பொடரியிலேயே பொளேர் என்று போடனும்!

 26. ஓ! அப்டிங்களா. உண்மைதான் அண்ணாச்சி. குஜராத் போயிருந்தேன். சரியான ஒரு காட்டுப் பகுதி. வலைப்பூ மட்டுமில்லாம இங்க நடந்த எதுவுமே தெரியாம , இப்போதான் தெரிஞ்சுக்கறேன்.(என்னவெல்லாம் நடந்துடிச்சு(:
  உங்க மின்னஞ்சலுக்காகக் காத்திருந்தேன். ஆனா, நிங்க வேலையா இருக்கறதாப் புரிஞ்சுக்கீட்டேன். எனக்குத் தெரிஞ்சவங்க, மற்றும் புடிச்சவங்க பேராப் போட்டுட்டேன்.(பட்டாம்பூச்சி)
  நன்றி, அண்ணாச்சி.

 27. அண்ணாச்சி அந்த பெண்மணி வீட்டிலிருந்து புறப்படும்பொழுதே சில கட்டளைகள் இட்டிருந்தால்.. இப்படியெல்லாம்..சிரமப்பட தேவையிருக்காதுன்னு என் பக்கத்து சீட்ல இருக்கிற நண்பர் சொல்றார்..

  அண்ணாச்சி.. நான் புதுசு..இன்றைக்கு தான் உங்க வலைக்கு வந்திருக்கேன்..என்னைய ஆசீர்வாதம் செய்து அனுப்பினால் அடிக்கடி வருவேன் அண்ணாச்சி..

  என்னை பற்றி அறிய வாருங்கள் அண்ணாச்சி..

  http://elangovan68.blogspot.com

  அன்புடன் இளங்கோவன், அமீரகம்.

 28. அண்ணாச்சி, குறிப்பிடும் அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒருவாரம் ஆனபின்னும் அந்தப் பெண்மணியின் மருண்ட விழிகளும், கூனிக்குறுகி நின்ற உடல் மொழியும் நினைவில் துருத்திக்கொண்டே இருக்கிறது. அலங்கார் ஹோட்டல் செக்யூரிட்டிகள்கூட அந்தப் பெண்ணிடம் கடுமை காட்டிக்கொண்டிருந்தனர். என்னுடைய கேள்வியெல்லாம் ஒன்றுதான் “நீ குடித்துவிட்டு வரும்வரை நள்ளிரவில் நடுரோட்டில் காத்திருக்கிற இந்த அபலைப்பெண், நீ வீட்டிலேயே குடிப்பதாக இருந்தால் ‘ஆம்லெட்’ போட்டுத் தரமாட்டாளா…?”

  குடித்தல் ஒருவனின் தனிப்பட்ட சுதந்திரம். அதை மதிக்கிறேன். அவனுடைய சுதந்திரம் மூன்றாவது மனிதனைப் பாதிக்கையில் அதை வன்மையாகவோ வன்முறையாகவோ கண்டித்துத்தான் தீரவேண்டி இருக்கிறது. நர்சிம் சொன்னபடி அவனை அடித்திருந்தாலும் குற்றமில்லை. ஏனெனில் தட்டிக்கேட்டால் திருந்தாதவர்களை ரெண்டு தட்டு தட்டி திருந்த வைக்கலாம்.

  பாபுவின் கவலைதான் எனக்கும்.

 29. நம்ப முடியவில்லை. ஆனால் நம்ப முடியாத பல விஷயங்களின் தொகுப்புதானே வாழ்க்கை. :(((

 30. நானும் ஒரு குடும்பத்தை பார்த்தேன். அது ஒரு பாரில்லாத மதுபானக்கடை. ஒரு கணவன், மனைவி, சிறுவன். உள்ளே மூவரும் சென்றார்கள். மனைவியின் ஆலோசனைப்படி கணவன் ஒரு சரக்கை வாங்கினான். ரொம்ப இயல்பா திரும்பி சென்றார்கள். அந்த சிறுவனை நினைத்து நாந்தான் வருந்தினேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s