தள்ளாடிய தன்மானம்

அலங்கார் ஓட்டல் எதிர்புரமுள்ள அந்த டாஸ்மாக் முன்பு வந்து நிற்கிறது பஜாஜ் பைக் ஒன்று அதிலிருந்து இறங்கிய கணவர், தன் மனைவியையும் இரு குழந்தைகளயும் ( 1 வயது மற்றும் 3 வயதிருக்கும்) ஓட்டல் காம்பவுண்டை ஒட்டிய நடைபாதை மீது காத்திருக்கச் சொல்லிவிட்டு எதிரே உள்ள டாஸ்மாக் நோக்கி நகர்கிறார்.

சரி சரக்கு வாங்கிச் சென்று வீட்டில் குடிப்பார் போல. நல்ல புரிதலுள்ள மனைவி என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவர் சரக்கை வாங்கிக் கொண்டு பாருக்குள் சென்று விட்டார்.

கிட்டதட்ட 30 நிமிடம் ஆகியும் வெளியே வந்த பாடில்லை. அதற்குள் டாஸ்மாக்கிலிருந்து வெளியே வருபவர்களின் காமப் பார்வையிலிருந்து
அப்பெண்மணி தப்ப மிகச் சிரமப்படுகிறார்.

இதற்கிடையில் அந்தக் காம்பவுண்டை ஒட்டிய நடைபாதையில் இரு சொறிநாய்களுக்கிடையே ஏற்படும் சண்டையில் இரு குழந்தைகளையும் சேதாரமில்லாமல் காப்பாற்றச் சிரமப் படுகிறார்.

அந்த நபரைப் பார்க்கும் போது தனியார் வங்கி மேலாளர் அல்லது மொபைல் கம்பெனி சீனியர் எக்சிக்யூட்டிவ் போன்ற தோற்றம். அப்பெண்மனியும் நல்ல படித்த பெரிய இடத்தை சேர்ந்த்தவராகத்தான் இருக்க வேண்டும்.

குடிப்பது தவறா சரியா என்பது தனியாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. எனினும் நமக்கு ஏற்படும் சில சந்தேகங்கள்.

குடிப்பது அவரது உரிமை எனினும் சொந்த மனைவியையும் மக்கட் செல்வங்களையும் தவிக்க விடுவது சரியா?

மற்றவர் தவறான எண்ணத்தில் தன் மனைவியை நோக்கும் நிலைக்கு அவரைத் தள்ளி, அவரைக் காட்சிப் பொருள் ஆக்கியது சரியா?

இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு மனைவி வெளியே சிரமப் படும்பொழுது உள்ளே அமர்ந்து எப்படி குடிக்க முடிகிறது?

குடிப்பதற்காக தன் குடும்பத்தாரின் தன்மானத்தை இழக்க வைக்கலாமா?

இதற்குபதில் அவர் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வந்து குடித்திருக்கலாமே, அல்லது வீட்டிற்கு வாங்கிச் சென்று குடித்திருக்கலாமே.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s