கதம்பம் – 2/2/09

ஒருநாள் இரவு ஓய்வு இல்லத்தில் காமராஜர் தங்கியிருக்கிறார். இரவு உணவுக்குப் பின் காமராஜர் உறங்க ஆரம்பிக்கிறார். அவருக்குப் பாதுகாவலாக இருந்தவரும் உறங்கி விடுகிறார்,

காலையில் எழுந்த காவலர், காமராஜரை அறையில் காணாமல் பதறிப் போகிறார்.

ஓய்வு விடுதியின் வெளியே போட்டிருந்த மணலில் காமராஜர் நிம்மதியாத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்ததும்தான் காவலருக்கு உயிர் வருகிறது.

அவரை எழுப்பி “ அய்யா நான் பயந்தே போயிட்டேங்க, என்ன இங்கே வந்து படுத்திருக்கிறீங்க?” என்றார்.

அதற்கு காமராசர் , “ ஆமா நீ பாட்டுக்கு குளிர் மெசின போட்டுட்டு போய்ட்டே எப்படி நிறுத்தனும்னு எனக்குத் தெரியல. குளிர் தாங்கமுடியல அதான் இப்படி வெளியில வந்து படுத்துட்டேன்”

*************************************************************************************

முத்துக் குமார் பத்தி எல்லாரும் பதிவு எழுதீட்டாங்க. உணர்ச்சி வசப்பட்டிருக்காங்கன்னு அவங்கவங்க எழுத்துல தெரியுது. ஆனா இது மாதிரி ஒரு நிகழ்வுலயும் தரமான எழுத்தை வெளிப்படுத்தனும். ஷார்ட்டாச் சொல்லி டக்குனு மனசுல பதிய வைக்கனும்

அந்த வகையில என்னக் கவர்ந்த பதிவு லக்கி எழுதியதுதான். சம்பவத்தைச் சரியாச் சொல்லி அவருடைய கருத்தை நிதானமா, தேர்ந்தெடுத்த சொற்களில், கடைசியில் பதிந்திருக்கார் பாருங்க. அதனாலதான் அவர் வெற்ரிகரமான பத்திரிக்கையாளரா இருக்கார். பரிசல் போன்று அடுத்த தளத்திற்குச் செல்ல முனையும் பத்திரிக்கையாளர்களுக்கு இது மிக முக்கியம்.

*************************************************************************************

இம்முறை ஆதவன் தீட்சனண்யாவின் கவிதை ஒன்று.

ஆள்வோருக்கு…


மளிகை பாக்கி தொட்டு
மற்றோரன்ன செலவினங்களில்
கரைந்து போனது மாலையே
நேற்று பெற்ற சம்பளம்

கன்னக்கோலிட்டு
களவாட வந்தவர்கள்
மற்றவர்கள் முந்திக்கொண்ட
ஆத்திரத்தில்
விளாசிவிட்டனர் இரவில்
வெற்றாளாய் நின்ற என்னை

புகாரிட
“கவனிப்புக்கும்”
காசில்லை

இவர்களெல்லோரும்
தங்களுக்கு
தெரிந்தவர்களும்
வேண்டியவர்களும்தானே

சொல்லிவையுங்கள்
மாதாமாதம் கொடுப்பதை
அன்று மாலையே நீங்கள்
பறித்துக் கொள்வதை
அடிபடுவதாவது மிஞ்சும்.

ஆதவன் தீட்சண்யா

இவரது மற்றப் படைப்புகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்.

*************************************************************************************

சுற்றுலா சென்று வந்தபின் ஒரு நாள் செல்வேந்திரன் அறைக்குச் சென்றிருந்தேன். மற்ற விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று கேட்டார், “ சார் மொத்தம் எத்தன பாட்டில் வாங்கீட்டுப் போனோம்”

”ஏம்பா” ன்னு கேட்டேன்.

“இல்ல எத்தனைப் பாட்டிலோ அதே அளவுக்கு குளிர்பானம் வாங்கியிருபோம். மேலும் பயணம் முழுவதும் குடிக்க நீரும் வாங்கினோம். ஒரு ஆளுக்கு 2 குடிநீர் பாட்டில்னு வச்சாலே நம்ம போட்ட குப்பை ஒரு கோணிப்பை நிறையத் தேறும் போல இருக்கே” ன்னாரு.

“சரி என்ன செய்ய தவிர்க்க முடியாதே”

“அடுத்த முறை போகும்போது இங்கிருந்தே ஒரு கோணிப்பை எடுத்துட்டுப் போயிறலாம்.”

பிரச்சினையை மட்டுமல்லாது அதற்கான தீர்வையும் சேர்த்தே யோசிக்கும் இவரைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கும்போது எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறக்கிறது.

*************************************************************************************

போலீஸ்கார அப்பாவப் பார்த்து மகன் , “ அப்பா லஞ்சத்துக்கும், மழைக்கும் என்ன சம்பந்தம்”

“ ஒன்னுமில்லையே ஏண்டா?”

“ பின்ன எதுக்கு மழையால மாமுல் வாழ்க்கை பாதிப்புன்னு போட்டிருக்கு பேப்பர்ல?”

*************************************************************************************

Advertisements

23 comments

 1. வரலாற்று தகவல், ஜோக், பதிவுலகம், கவிதை என கலக்கலான கதம்பம்.

 2. சுவையோ சுவை. செல்வேந்திரனா “நற்செயல்வேந்திரனா”..

 3. இடைவேளைக்குப் பின் வரும் கதம்பம். செல்வேந்திரன் அசத்தல் இளைஞர் போலத்தான் இருக்கு – எல்லோரும் இப்படி சிலாகிப்பதைப் பார்த்தால்.

  ‘மாமூல்’ – ஹா ஹா.

  அனுஜன்யா

 4. அருமை,

  //சார் மொத்தம் எத்தன பாட்டில் வாங்கீட்டுப் போனோம்”

  இல்ல எத்தனைப் பாட்டிலோ அதே அளவுக்கு குளிர்பானம் வாங்கியிருபோம்.//

  பாட்டிலில்தானே குளிர்பானம் வருகிறது? அப்புறம் எதுக்கு தனியாக பாட்டில் வாங்கிட்டு போனீங்க:)

 5. கதம்பம் விலை அதிகம் போல இருக்கிறது…அதுதான் குறைவா இருக்கிறது

 6. வரலாற்று தகவல், ஜோக், பதிவுலகம், கவிதை என கலக்கலான கதம்பம்.

 7. T.V.Radhakrishnan said…
  //கதம்பம் விலை அதிகம் போல இருக்கிறது…அதுதான் குறைவா இருக்கிறது//

  அதே… அதே…

 8. அண்ணே கதம்பம மணம் கலகல..

  \\
  செல்வேந்திரன் அசத்தல் இளைஞர் போலத்தான் இருக்கு – எல்லோரும் இப்படி சிலாகிப்பதைப் பார்த்தால்.

  \\

  அனுஜன்யாவை அப்படியே வழிமொழிகிறேன்..

 9. கதம்பம் கலவை மணமாக இருந்தது….
  அன்புடன் அருணா

 10. கதம்பம் அருமை..

  நர்சிம்மின் பின்னூட்டம் கலக்கல்..

  குசும்பனின் பின்னூட்டம் கலக்கலோ கலக்கல்..

 11. கதம்பம் அளவு கம்மின்னாலும் வாசனை ஜாஸ்த்தி 🙂

 12. //செல்வேந்திரனா “நற்செயல்வேந்திரனா”..//

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

 13. எல்லாவற்றையும் ரசித்தேன்.ஆதவன் தீட்சண்யா கவிதை சாட்டை

 14. தல.. இப்ப தான் முதல் முறையா உங்க வலைப்பூவுக்கு வந்தேன்.. நல்லா எழுதறிங்க.. ஆதவன் கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..!

 15. அண்ணாச்சி,

  நூல்நயம் பதிவில கமெண்ட்ஸ் போட முடியல. கவனிக்கவும்.

 16. அண்ணே.. செல்வேந்திரன் ரூமுக்குப் போக காத்திருந்த நேரத்துல டாஸ்மாக் முன்னாடி நடந்ததை எழுதலியே…?

  கேட்டப்போ ரொம்பக் கோவமா வந்துச்சு!

  நான் எழுதிடவா?

 17. நன்றி கார்க்கி
  நன்றி நர்சிம் (சொல்லின் செல்வர்)
  நன்றி குசும்பன், ஒன்னுமே தெரியாத மாதிரிக் கேள்வி கேட்டா நல்ல பிள்ளைன்னு அர்த்தமா?
  நன்றி அனுஜன்யா
  நன்றி ராதாகிருஷ்ணன் சார்
  நன்றி சத்யா
  நன்றி மகேஷ்
  நன்றி அதிஷா
  நன்றி அருணா
  நன்றி சென்ஷி
  நன்றி அப்துல்லா
  நன்றி வால்
  நன்றி மாதவ்
  நன்றி மதன்
  நன்றி பரிசல், ஆமாங்க ரெம்பக் கடுப்பா இருந்துச்சு.
  நன்றி அத்திரி

  நன்றி அனானி. சரி பண்ணியாச்சு.

 18. //செல்வேந்திரனா “நற்செயல்வேந்திரனா”..//

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

 19. காமராசர் பற்றிய இந்த ஒரு பதிவு, அவரின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. செல்வேந்திரனின் வலையை அண்மை நாட்களாகப் படித்துவருகிறேன். அவரின் அறக்கோபம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. செயலிலும் கடைபிடிக்கும் தன்மை பாராட்டுக்குரியது.

 20. \\செல்வேந்திரனா “நற்செயல்வேந்திரனா”..
  \\

  \\செல்வேந்திரன் அசத்தல் இளைஞர் போலத்தான் இருக்கு – எல்லோரும் இப்படி சிலாகிப்பதைப் பார்த்தால்\\

  repeateeeeeeeeeeeeeeeeee

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s