சீனி முட்டாயும், சாத்தூர் சேவும்

தொழில் தொழில்நிமித்தம் முன்கூட்டியே தீர்மானிக்கமுடியாத வாழ்க்கையில், திட்டமிடாத பயணங்களைத் தவிர்க்கவியலாதென்பது சலிப்பூட்டக்கூடியது. புதன் இரவு 8.00 மனிக்கு முடிவு செய்து 9.00 மனிக்கு பேருந்தில் ஏறும்படி ஆயிற்று. அடுத்த நாளே திரும்பவேண்டும் என்பது அசதி தரக்கூடியதென்றாலும் மாதவராஜைக் கண்டுவரலாம் என்றொரு ஆறுதலுமிருந்தது.

சென்ற வேலை நினைத்ததைவிட சீக்கிரமே முடிந்துவிட்டதால், மாதவராஜ் பணிபுரியும் வங்கிக்குச் சென்று,

“மாதவராஜ் இருக்காருங்களா”, என்றேன் புருவத்திலேயே கேள்வி கேட்ட அவரது சக ஊழியரை நோக்கி.

“அவரு இன்னைக்கு லீவு ஆச்சுங்களே”, ஏமாற்றம் என் முகத்தில் படருவதைக் கண்ட அவர் மீண்டும் கேட்டார், “ அவரு மொபைல் நம்பர் தரட்டுங்களா?”

மொபைலில் அழைத்துப் பேசியதில் அடுத்த முனையிலிருந்து வந்த மாதவராஜின் உற்சாகம் கொப்பளிக்கும் குரல், மகிழ்ச்சி தருவதாகவிருந்தது. அவர் விடுப்பு எடுத்த காரணம் அவர்மீதான மரியாதையைக் கூட்டிச் சென்றது.

ஜனவரி 30 மகாத்மா நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் ரயிலடியிலிருந்து ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்து மதநல்லிணக்கத்திற்கான ஒரு முயற்சியை முன்வைத்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவே விடுப்பு.

வீட்டுக்கு அழைத்த அவரது அன்பைத் தட்டமுடியாமல், விடுதியைக் காலி செய்து விட்டு அவர் வீடு நோக்கி நகர்ந்தேன். “சாத்தூர் பஸ்டாண்டில் இறங்கி என்னை அழையுங்கள் 5 நிமிடத்தில் வந்து விடுவேன்” என்று சொல்லியதுபோலவே வந்தார்.

வலைப்பதிவர்களைச் சந்திக்கும்போது பரஸ்பர அறிமுகம் ஏதுமின்றி உடனடியாகப் பேசலாம்; நெருங்கிய நண்பர்கள் இருவர் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அடுத்த நாளுக்கான பேச்சை ஆரம்பிப்பது போல. அவரது வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் காமராஜும் எங்களுடன் இணைந்து கொண்டார். எங்கள் சந்திப்பை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.

5.00 மணி – பஸ்டாண்டில் பேசினோம்
6.00 மணி – மாதவராஜ் வீட்டில் பேசினோம்
7.00 மணி – காமராஜ் வீட்டில் பேசினோம்
8.00 மணி – மீண்டும் மாதவராஜ் வீட்டில் பேசினோம்
9.00 மணி – போட்டோ ஸ்டுடியோவில் பேசினோம்
10.00 மணி – உணவகத்தில் பேசினோம்
10.35 மணி – பஸ்ஸில் ஏறும்வரைப் பேசினோம்.

பேசியவற்றுள் சமகால இலக்கியம், சமகால அரசியல், பதிவர்கள் பின்புலம் மற்றும் திறமைகள் போன்றவை அடங்கும்.

சந்திப்பில் கலந்துகொண்ட இன்னுமொரு சுவராஸ்யமான நண்பர் ப்ரியா கார்திக். போட்டொ ஸ்டுடியோ ஒன்று வைத்து வீடியோ எடிட்டிங்கும் செய்யும் நணபர் இவர். இவருக்கு PIT வலைப்பூ அறிமுகம் செய்து இந்தமாதம் வெற்றிபெற்ற நிலாவின் புகைப்படத்தைக் காட்டினேன். சரியான தேர்வு முதல் பரிசுக்கு என்று அவரது கருத்தைச் சொன்னார். மாலை 5 மணிக்குப் பார்த்தபோது இருந்த அதே உற்சாகத்துடன் இரவு என்னைப் பேருந்தில் ஏற்றி விடும்வரை இருந்தார்.

காமராஜும், மாதவராஜும் மௌஸும் கீ போர்டும் போல ஒத்த சிந்தனையு்ம் தனிப்பட்ட ரசனைகளயும் உடைய இணை. வெகுகாலம் நண்பர்களாக அதுவும் எழுத்தாளர்களாக இருப்பது இன்னும் விசேசம். இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரையும் அவரது தொகுப்பிற்கு இவர் முன்னுரையும் எழுதியிருக்கிறார்கள். இருவரும் அருகருகே அடுத்தடுத்த வீடுகளில் வாசம்.

ஒரு பை நிறைய சாத்தூர் சேவும், ஒரு பெட்டி நிறைய இனிப்பு மிட்டாயும் (முட்டாசு) குடும்பத்திற்கும், எனக்கு மாதவராஜ் எழுதிய போதி நிலா – சிறுகதைத் தொகுப்பும், காமராஜ் எழுதிய ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் – சிறுகதைத் தொகுப்பும் தணுஷ்கோடி ராமசாமி எழுதிய தோழர் நாவலும் மற்றும் மாதவராஜும், காமராஜும், ப்ரியா கார்த்திக்கும் இணைந்த உருவாக்கதில் தயாரான சிறகுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய இரு குறும்படத் தகடுகளையும் அடைத்து என்னை வழியனுப்பி வைத்தார்கள்.

என் மீது காட்டிய இந்த அன்பிற்கு கைமாறாக கொடுக்க என்னிடம் வேறெதுவுமில்லை அன்பைத்தவிர; உங்களளவுக்கு இல்லையெனினும் ஓரளவுக்கேனும்.

Advertisements

19 comments

 1. //
  என் மீது காட்டிய இந்த அன்பிற்கு கைமாறாக கொடுக்க என்னிடம் வேறெதுவுமில்லை அன்பைத்தவிர; உங்களளவுக்கு இல்லையெனினும் ஓரளவுக்கேனும்.//

  அழகான சொல்லாடலெனினும்..
  வேறென்ன வேண்டும்… அன்பைத்தவிர!

 2. //புருவத்திலேயே கேள்வி கேட்ட அவரது சக ஊழியரை நோக்கி.
  //

  அண்”நச்”சி

 3. “சீனி முட்டாயும், சாத்தூர் சேவும்” பெங்களூரில் கிடைக்குமா தெரியவில்லை!

  நட்பு இனம், அந்தஸ்து அறியாதது.

 4. //தொழில் தொழில்நிமித்தம் முன்கூட்டியே தீர்மானிக்கமுடியாத வாழ்க்கையில், திட்டமிடாத பயணங்களைத் தவிர்க்கவியலாதென்பது சலிப்பூட்டக்கூடியது.//

  தொழில் அதிபராக இருந்தால் இதெல்லாம் சகஜம் அண்ணாச்சி !

  ‘இந்த தொழில் அதிபருங்க தொல்லை தாங்கமுடியலைன்னு’ யாருப்பா… இந்த நேரம் கவுண்டமணி பிட்டை டிவியில் போடுவது ?
  🙂

 5. இன்றைக்கு செல்வேந்திரன், அப்துல்லா, பதிவுகளிலும் பதிவர்களைப் பற்றியதாகவே இருந்தது.

  உங்கள் பதிவும் நெகிழ்வாக இருந்தது. ஊருக்கு போம்போது நானும் ஒரு எட்டு பாத்துட்டு வர்றேன். நம்மளப்பத்தியெல்லாம் சொல்லியிருக்கீங்களா?

 6. அப்போ, நேத்து மாதவும், காமராஜும் என்னுடன் போனில் பேசும்போது உடன் இருந்தது நீங்கள்தானா :))

  //வலைப்பதிவர்களைச் சந்திக்கும்போது பரஸ்பர அறிமுகம் ஏதுமின்றி உடனடியாகப் பேசலாம்;//
  முற்றிலும் உண்மை. இதுவரை சந்தித்தது ஜ்யோவ், மின்னல் மற்றும் நீங்கள் மட்டுமே என்றாலும். தொலைபேசியில் இதுவரை பரிசல், வெயிலான், நர்சிம், வளர், முரளி கண்ணன், கோவியார், மாதவராஜ், காமராஜ் என்று பேசியிருக்கிறேன். தயக்கமே வரவில்லை.

  கலக்குறீங்க அண்ணாச்சி! ஆமா, கதம்பம்?

  அனுஜன்யா

 7. \\என் மீது காட்டிய இந்த அன்பிற்கு கைமாறாக கொடுக்க என்னிடம் வேறெதுவுமில்லை அன்பைத்தவிர\\

  வேறென்ன வேண்டும்… அன்பைத்தவிர!

 8. Hi,

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. Please check your blog post link here

  Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Thanks

  Valaipookkal Team

 9. // பரிசல்காரன் said…
  //
  என் மீது காட்டிய இந்த அன்பிற்கு கைமாறாக கொடுக்க என்னிடம் வேறெதுவுமில்லை அன்பைத்தவிர; உங்களளவுக்கு இல்லையெனினும் ஓரளவுக்கேனும்.//

  அழகான சொல்லாடலெனினும்..
  வேறென்ன வேண்டும்… அன்பைத்தவிர!

  //

  repeattu…………….

 10. //ஒரு பை நிறைய சாத்தூர் சேவும், ஒரு பெட்டி நிறைய இனிப்பு மிட்டாயும் //

  எங்க மாம்மை ஊராக்கும் சாத்தூர்….ம்ம்ம்ம் நிறைய நாளாகிவிட்டது சாத்தூர் சேவு சாப்பிட்டு…..
  அன்புடன் அருணா

 11. அந்த கடைசி வரிகள்… நெகிழ வெச்சுருச்சு….

  உண்மையைச் சொல்லுங்க அந்த வரியை எழுதும்போது கண் கலங்குச்சா?

 12. வணக்கம் வேலன்.நான் பாட்டுக்கு பதிவுகளை மேஞ்சுகிட்டு இருக்கிறேன்.இடையில பூந்து சீனி முட்டா,சேவுன்னு சொல்லி உசுப்பேத்துறீங்களே!

 13. வேலன்!

  இப்போதுதான் என்னால் கம்ப்யூட்டரைத் தொட முடிந்தது.

  காலையில் மகாத்மாவுக்கு அஞ்சலி மிகச்சிறப்பாக நடந்தது. முடித்துவிட்டு கோவில்பட்டி சென்று விட்டேன். உதயசங்கரின் சிறுகதைத் தொகுப்பும், கவிதைத்தொகுப்பும் இன்று வெளியீட்டு விழா. கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டேன். சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஷாஜஹான் வெளியிட்டார்.

  உங்கள் பதிவைப் பார்த்ததும் சந்தோஷம், உற்சாகம், சிறுதுயரம் எல்லாம் பற்றிக் கொண்டன. கடைசி வரி அவஸ்தைக்குள்ளாக்கியது. என்ன நண்பரே..! நாம் சந்தித்தது, பேசியது எல்லாம் அன்பினால்தானே!.
  எதை, யார் எதிர்பார்த்து…. இதெல்லாம்?

  வாழ்வின் அர்த்தமாகவே இதுபோன்ற சந்திப்புகளை புரிந்துகொள்கிறேன். வலைப்பக்கம் நான் வந்த இந்த நான்கு மாதங்களில், நாட்களெல்லாம் புதிது புதிதாக இருக்கின்றன. எத்தனை, எவ்வளவு பேசிக்கொள்ள, பகிர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது! எவ்வளவு புதிய அறிமுகங்கள் கிடைத்திருக்கின்றன. இதுதான் என்னையும், உங்களையும் எதோ எழுத வைத்திருக்கிறது.

  நம் சந்திப்பு பற்றி நானும் எழுதுவேன்….

  சரி…சிறுதுயரம்….
  எங்களுக்கிருந்த வேலைகளோடுதான் உங்களோடு பேசிக்கொண்டிருந்தோம். முழுமையாக உங்களோடு நாங்கள் இல்லையே என்பது வாட்டிக் கொண்டு இருக்கிறது………………………………………….

 14. நன்றி பரிசல்,
  நன்றி நர்சிம்,
  நன்றி ரமேஷ்,
  நன்றி கோவி,
  நன்ரி வெயிலான்,
  நன்றி அனுஜன்யா,
  நன்றி முரளி,
  நன்றி சத்யா,
  நன்றி அருணா,
  நன்றி மஹெஷ்,
  நன்றி நடராஜன்.

 15. நன்றி மாதவராஜ்.

  நான் நெகிழ்ச்சியாக உணர்ந்த தருணங்கள் அவை. உணர்ந்ததைப் பகிர்ந்திருக்கிறேன். அவ்வளவே.

  மற்றபடி எதையும் எதிர்பார்க்காமல் துளிர்ப்பதுதான் நல்ல நட்பு.

  அடுத்த நாள் உங்களுடனிருந்து விழாவைக்காண ஆசைப்பட்டேன். இலயவில்லை.

 16. வேலன், கொஞ்சம் பிஸி.. அதான் லேட்டு.!

  வழக்கம் போல சிறப்பான பகிர்தல், கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருந்தது..மாதவராஜ் மற்றும் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.!

 17. Ramesh said…
  “சீனி முட்டாயும், சாத்தூர் சேவும்” பெங்களூரில் கிடைக்குமா தெரியவில்லை!
  //// ஹாஹாஹா….. நல்ல காமெடி..!

 18. நல்ல பகிர்வு.

  பதிவர்களுக்கிடையே வளர்ந்து வரும் நட்பு மிக ஆரோக்யமானது. வாழ்க வளமுடன்!

 19. //வலைப்பதிவர்களைச் சந்திக்கும்போது பரஸ்பர அறிமுகம் ஏதுமின்றி உடனடியாகப் பேசலாம்; நெருங்கிய நண்பர்கள் இருவர் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அடுத்த நாளுக்கான பேச்சை ஆரம்பிப்பது போல//
  எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்!

  இந்த வரிகளிலிருந்த உண்மையும், அனுபவமும் என்னை ஈர்த்தது.பார்த்தால், அனுஜன்யாவும் இவ்வரிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s