தாமிராவும் பட்டாம் பூச்சியும்

‘தாமிரா’ அவ‌ருக்குக்கிடைத்த‌ ப‌ட்டாம்பூச்சி விருதை பெரிய மனசு பண்ணி ப‌ல‌ருக்கும் ப‌கிர்ந்து கொடுத்துருக்காரு. விதிமுறைக‌ள் ரெம்ப சுலபமாத்தான் இருக்கு. நாம ர‌சிக்கிற ப‌திவ‌ர்க‌ளுக்கு பாஸ் பண்ணனும், விருதை வ‌லைப்பூவில போடனும், கொடுத்த‌வ‌ர், கொடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர் ரெண்டுபேருக்கும் இணைப்புக‌ள் த‌ர‌னும், பின்னூட்ட‌த்துல அறிவிக்கனும்.

அவரு கொடுத்ததெல்லாம் சரி. ஆனா என்னைக் கரடு முரடான ஆளுன்னு சொல்லீட்டாரேன்னுதாங் கொஞ்சம் வருத்தமா இருக்கு(நாங்கூடத் தாங்கிக்குவேன், நர்சிம், அப்துல்லாவெல்லாம் கரடுமுரடான ஆளுகளா?) அப்படின்னு சொல்லித் தப்பிக்கவும் முடியாது. ஏற்கனவே அவரு கோர்த்துவிட்டதுல இருந்து ஒரு மொக்கப் பதிவு போட்டுத் தப்பிச்சிட்டேன். இப்ப முடியாது.

அதுனால பட்டாம்பூச்சி பத்தின நினைவுகள ஒரு பதிவாப் போட்டுறலாமான்னு ஒரு யோசனை.

சின்ன வயசுல (10-12) லைன் வீட்டுல குடியிருந்தப்ப பின்னால இருக்க தோட்டத்துல (சோளக்காடு) தும்பைப் பூச்செடியில (தும்பை தாமிரா பதிவுல படம் போட்டுருக்கார் – படம் – 5) வந்து உக்காரும் பட்டாம்பூச்சி கருப்புக் கலர்ல சிவப்பு டிசைன் போட்டு சூப்பரா இருக்கும்.

அதை புடிச்சி கொஞ்ச நேரம் கையில வச்சிருந்துட்டு விட்டுடுவோம். அப்புறம் பார்த்தா கையெல்லாம் மினுமினுங்கும். அதத்தாம் நம்ம நா முத்துக்குமார் பாட்டுல எழுதுனாரு.

ஒரு வண்ணத்துப் பூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது.

அடுத்து கொஞ்சம் வளர்ந்து 20 வயசிருக்கும்போது பட்டாம்பூச்சின்னு ஒரு நாவல் படிச்சேன்.

கென்றி ஷாரியர் எழுதிய Papillon னு ஒரு பிரெஞ்சு நாவலோட ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு, பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன்.

நாவலாசிரியர் தன்னோட 25 வயசுல செய்யாத குற்றத்துத்துக்காக ஆயுள் தண்டனை குடுத்து அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைல அடச்சுர்ராங்க. அடுத்த 13 வருசம் ஒவ்வொரு சிறையாகத் தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமா போராடுறதுதான் நாவல்.

ஒரு தடவ ஒரு தீவுல மாட்டிக்குவாரு. மாலை மயங்கும் நேரமா இருக்கும். அங்க இருக்க ஒருத்தரு அவருக்கு டீ தருவாரு. இவரு டீயக் குடிச்சுட்டுருக்கும்போது இவருக்கு டீ குடுத்தவரு குடிக்காம எதையோ தேடுவாரு.

“என்னங்க தேடுறிங்க”ன்னு கேட்டா, “என் சுண்டு விரலக் காணவில்லை”ம்பாரு அவரு.

இவரு டீயக் கலக்கிப் பார்த்த அதுல அந்த விரல் கிடக்கும், எடுத்து வெளில போட்டுட்டுக் குடிப்பாரு. அதையும் விட்டா வேற எதுவும் சாப்பிடக் கிடைக்காது. அந்தத் தீவில இருக்கவங்க எல்லாம் தொழுநோயாளிகள்.

தமிழ்லயோ இல்லன்னா ஆங்கிலத்துலயோ இந்த நாவல ஒரு முறை கண்டிப்பாப் படிங்க.

அடுத்து கவிதைகளில் ஆர்வம் வந்தப்ப சுஜாதாவின் அறிமுகத்தால படிச்ச கவிதைத் தொகுப்பு நா முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விறபவன். ஏற்கனவே பல கவிதைகளை என் வலைபூவுல எழுதியிருக்கேன். இந்த இட்லிக்கவிதை என்ன சொல்லுதுன்னு பாருங்க.

இட்லிப்புத்திரர்கள்

இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.
சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.
திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.
மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி
கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு
மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.
– நா. முத்துக்குமார் (தொகுப்பு – பட்டாம்பூச்சி விற்பவன்)

வலையில் கிறுக்க ஆரம்பித்த பிறகு சில பதிவர்கள் என்னைப் பாதிக்கிறார்கள் அவர்களுள் பட்டாம்பூச்சி விற்பவன் (நா முத்துக்குமார் பாதிப்போ?) என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் ரெஜோவாசன் நல்ல கவிதைகள் எழுதுகிறார்.

அதிர்வுகள் என்ற தலைப்பில் இரயில் பற்றிய அவரது கவிதை முக்கியமானது.

தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்
நாடு நகரங்கள் தாண்டி
காடுகள் புகுந்து மீண்டு
சில மலைகளைத் துளையிட்டு
வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன
நம்மை

நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன
வழியனுப்பிகளின் முகங்களையும்
கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்
நாம் ஏறிய
ரயில் நிலையங்களின்
நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….
தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்

தண்டவாளங்களின் மேலும்
நாம் இறங்கிய பின்னர்
நம்முள்ளும் ….

இனி நான் அழைக்கிறது
1. மகேஷ்
2. மாதவராஜ்
3. ச முத்துவேல்

வெயிலானுக்கும், அனுஜன்யாவுக்கும் கொடுக்கலாமுன்னு நெனைச்சா நமக்கு முன்னாலயே அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. வாழ்த்துக்கள்.

நன்றி தாமிரா.

22 comments

  1. கணினி தேசம் said

    பட்டாம்பூச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    மேலும்..தங்களிடம் இருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  2. நன்றி கணினி தேசம்
    உங்கள் பின்னூட்டம் தவறுதலாக நீக்கப்பட்டது. மன்னிக்கவும்.

  3. கவிதைகள் நல்லாருக்கு!!! பட்டாம்பூச்சி நினைவும்……..

  4. நன்றி தமிழன். அவரோட தூர் கவிதையும், முனியாண்டி விலாசும்தான் போட்டிருக்கேன். இது போடலை.
    நன்றி கபீஷ்

  5. நன்றி வேலன் அண்ணாச்சி…

    தாமிரா தளுக்காக் குடுத்தாரு
    பழமைபேசியும் பாங்காக் குடுத்தாரு
    அண்ணாச்சியும் அன்பாக் குடுத்தீரே
    பட்டாம்பூச்சி விருது !!

    http://thuklak.blogspot.com/2009/01/blog-post_13.html

    எல்லாருக்கும் நன்றி…

  6. வடகரைவேலன்!

    விருதை தங்களிடமிருந்து பெற்றதில் மகிழ்ச்சி.
    ப்ட்டாம்பூச்சியை பறக்கவிட்டிருக்கிறேன்.

  7. கலக்குறீங்க வேலன்.. குடுத்த விருதை அடுத்தவங்களுக்கு ஃபார்வேர்ட் மட்டும் பண்ணாம பட்டாம்பூச்சி பத்தின உங்கள் நினைவுகள பகிர்ந்துட்டது நல்லா இருந்தது..

  8. வாழ்த்துகள் மாதவ். இரண்டு வ.பூச்சி கவிதைகளும் முதல் முறையாகப் படிக்கிறேன். நன்று.

    நான் வண்ணத்துப்பூச்சி பக்கம்தான். பசியில் புசிக்காவிடில் சிலந்தி சாகாது; புசித்து விட்டால், என்னருமை வண்ணத்துப்பூச்சி சாகும். ஆதலால்…..

    அனுஜன்யா

  9. விருதெல்லாம் குடுத்துட்டீங்க. நன்றி அண்ணாச்சி. ஆனா, என்ன செய்யணும்,எழுதறதுதானுதான் தெரியல.கொஞ்சம் டைம் குடுங்க.
    (லிங்க் கெல்லாம் குடுக்கத் தெரியாது.இணயத்துல ரொம்ப நேரம் உலாத்தற வாய்ப்பும் குறைவு.பேசாம ஜகா வாங்கிக்கட்டுமா? நீங்க அனுமதிச்சாதான்.. )

  10. பட்டாம்பூச்சி விருது கொடுக்கலாம்னு நினைச்சதுக்கு நன்றி அண்ணாச்சி!

    ஏற்கனவே சிங்கப்பூர்லருந்து பட்டாம்பூச்சி வந்திருச்சு.

    பேரு – துக்ளக்

    ‘எச்சரிக்கை’யாத் தான் பிடிச்சு வச்சிருக்கேன்.

  11. நன்றி அண்ணா.. (யோவ் அண்ணா, உங்களுக்கு குடுக்கும்போது சேத்து நான்தான் குடுத்திருக்கேன்ல, அப்புறம் நீங்களும் மகேஷுக்கு குடுத்தா எப்பிடி?) .. எவ்ளோ அழகா எழுதுறிங்க.. அப்புறம் ஏன் டாபிக் கிடைக்கலைன்னு டபாய்க்குறிங்க.?

  12. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!

    தேவா..

  13. நன்றி வெண்பூ
    நன்றி அனுஜன்யா.
    முத்துவேல் தப்பிக்க முடியாது. எழுதனும்.
    நன்றி சஞ்சய்
    நன்றி வெயிலான்
    நன்றி தாமிரா
    நன்றி தேவா

  14. கண்டிப்பாக அண்ணா 😉 என்னை மிகவும் பாதித்த கவிதைகள் நா.முத்துக் குமாருடையவை . கவிதைகள் தாண்டி அவருடைய பால்ய காண்டம் மிகவும் பிடித்த ஒன்று எனக்கு .

    தொடர்ந்து என் கவிதைகளைப் பற்றி தாங்கள் தந்து வரும் விமர்சனத்திற்கும் , தங்கள் அன்பிற்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் . கோடி அன்புகள் 🙂

  15. நல்ல பதிவு அண்ணாச்சி.. பட்டாம்பூச்சில இவ்வளவா..??

  16. கதம்பத்தின் நறுமணம் நான் சொல்லவேண்டியதில்லை!
    பட்டாம்பூச்சி சொல்கிறது
    அருமை!

  17. அண்ணே நா.முத்துக்குமாரோட வெண்டைக்காய்க்குள் ஒளிந்தவர்கள் படிச்சு இருக்கீங்களா??

  18. பாப்பிலான் நெஞ்சை விட்டு அகலாத புத்தகம்!!!
    எப்போதோ படித்தது!!

  19. அண்ணாச்சி இப்ப நம்ம கடைப் பக்கமெல்லாம் வாரதில்ல…. 😦

Leave a reply to Mahesh Cancel reply