பிளாக்கர்கள், பிரபல பத்திரிக்கைகளில்

இந்த வாரக் குமுதம் இதழில் (21-01-2009) டாப் 10 பிளாக்ஸ் என்ற பெயரில் பிரபலமான பிளாக்கர்கள் பட்டியல் வந்திருக்கிறது. பக்-78

1. இட்லி வடை
2. திணை இசை சமிக்ஞை
3. பி கே பி
4. எண்ணங்கள்
5. லக்கிலுக்
6. பரிசல்காரன்
7. அதிஷாவின் எண்ண அலைகள்
8. மொழிவிளையாட்டு
9. சத்தியக்கடதாசி
10. ஸ்மைல் பக்கம்

அதே போல் இந்தவார விகடன் இதழிலும் 3 பதிவர்களைப் பற்றிய அறிமுகம் வந்திருக்கிறது. பக் 26

1. சரவணக்குமரன்
2. அபிஅப்பா
3. செந்தழல் ரவி

பத்திரிக்கையில் இடம் பெற்றவர்களுக்கும், இடம் பெற இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Advertisements

25 comments

 1. சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

 2. இது பதிவர்களின் எழுத்துத் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 3. வடகரை வேலன்,

  செய்திக்கு நன்றி.வாழ்த்துக்கள்!

  அவசரம்:
  எனக்கு தமிழ் மணத்தின் முகப்பு பக்கம்
  மதியத்தில்(2.00p.m.) என்ன பார்த்தேனோ அதேயேதான் இப்போதும் (8.00p.m.பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

  இந்த புதுப்பிக்கப்பட்ட நேரம் : January 14, 2009, 1:25 am தான் தெரிந்துக்கொண்டிருக்கிறது.

  ஏதாவது பிரச்சனையா? இதே பதிவில்
  சொல்லுங்களேன்.

 4. நையாண்டி நைனா நன்றி.
  ச்சின்னப்பையன் நன்றி.
  மகேஷ் நன்றி.
  கணினி தேசம் நன்றி

  ரவிஷங்கர் நன்றி. இதுவரைக்கும் ஏதும் முன்னேற்றமில்லை.

 5. வாவ்… நம் நண்பர்கள் இத்தனை பேர் இந்த வார குமுதம், விகடன் இதழ்களால் பாராட்டப்பட்டிருக்கிறார்களா? மிக மிக மிக சந்தோஷமாக உணர்கிறேன்.. செய்திக்கு நன்றி..

 6. தகவலுக்கு நன்றி வேலன். டாப் டென் பட்டியல் நம் கணிப்பில் உள்ளதைப் பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  போலவே சரவணக்குமரன், அபிஅப்பா, ரவி மூவருக்கும் வாழ்த்துகள்.

  அனுஜன்யா

 7. நமது நண்பர்கள் மென்மேலும்வளர்வதில் எனக்கு மகிழ்ச்சி,

  ஆனால் இதில் எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை, தோழி வித்யா சென்ற ஆண்டு முழுவதும் 7 பதிவு தான் எழுதியுள்ளார், இந்த ஆண்டு 2 எழுதியுள்ளார்.

  எதன் அடிப்படையில் இவர் முதல் பத்தில் வருகிறார் என தெரியவில்லை.

  எது எப்படியோ இது கண்டிப்பாக மகிழ்ச்சி தரும் செய்தி தான்.

 8. மிக நல்ல பொங்கல் வாழ்த்தாக இந்த லிஸ்ட்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 9. //ஆனால் இதில் எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை, தோழி வித்யா சென்ற ஆண்டு முழுவதும் 7 பதிவு தான் எழுதியுள்ளார், இந்த ஆண்டு 2 எழுதியுள்ளார்.//

  அவர் சூப்பர் ஸ்டார் மாதிரி.

  7 எழுதினாலே 7000 பதிவுகள் எழுதியதற்கு சமம்!

  பிரபல அடிப்படையில் இந்த சர்வே அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

 10. //அவர் சூப்பர் ஸ்டார் மாதிரி.

  7 எழுதினாலே 7000 பதிவுகள் எழுதியதற்கு சமம்!

  பிரபல அடிப்படையில் இந்த சர்வே அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். //

  இருக்கலாம்!
  வலைபூக்களுக்கு பெருமை என்றாலே அது நீங்கள் தானே!

  நல்ல எழுத்துக்கள் அச்சேறும் நாள் வெகு அருகில் இருக்கிறது!

  (சொக்கா! அது எனகில்ல)

 11. வால்,

  தலைப்பை மீண்டும் படிங்க. அதனாலதான் பிரபல போன்ற அடைமொழிகளைத் தவிர்த்திருக்கிறேன்.

  பதிவர்களை பத்திரிக்கைகள் கூர்ந்து கவனிக்கின்றன என்பதுதான் இதன் சாராம்சம்.

 12. மிக்க நன்றி வேலன் அண்ணாச்சி! மிக்க நன்றி!

 13. நன்றிங்க அண்ணாச்சி.

  இப்போதான் படிச்சேன்.

  என்மீது அக்கறையோடு விமர்சனம் செய்யும் உங்களைப் போன்றவர்களின் துணையால்தான் இது சாத்தியமாயிற்று!

 14. என்னையும் குமுதமும் விகடனும் வாங்க வைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.. 🙂

 15. SanJaiGan:-Dhi said…
  என்னையும் குமுதமும் விகடனும் வாங்க வைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.. 🙂

  ஹி..ஹி..யாணும் அவ்வன்னமே கோரும்..

 16. அண்ணா மிக்க நன்றி.

  வாழ்த்தியவர்களுக்கும் நன்றி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s