கதம்பம் – 5-01-09

காமராஜர் அமைச்சரவையில், கக்கன் போலீஸ் அமைச்சராக இருந்தார். அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் தமிழகத்திற்கு வருகிறார். அவ்விழாவில் கலந்து கொள்ள கக்கனும் அங்கு வருகிறார். ரயில் நிலையத்தில் நேருவை வரவேற்பதற்காக வந்த கக்கனின் காரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விடுகிறார். ஏனென்றால் அந்தக் காரில் வழக்கமான சிவப்பு விளக்கு இல்லை. வருபவர் அமைச்சர், அதுவும் போலீஸ் அமைச்சர் என்பதந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது.

“பிரதமர் வருகிறார், அதனால் காரை இதற்கு மேல் உள்ளே விட முடியாது’ என்கிறார் போலீஸ்காரர்.

உடனே,கக்கன் காரிலிருந்து இறங்கி, “அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?’ என்றவாறே, இரண்டு பர்லாங் தூரமுள்ள ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார்.

தற்காலமாக இருந்தால்?

************************************************************

விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துப் பனிமனைத் தொழிலாளியான கண்மணி குனசேகரன், 1993 லிருந்து எழுதி வருகிறார்.

தலைமுறைக் கோபம் – கவிதைத் தொகுப்பு
உயிர்த்தண்ணீர் – சிறுகதைகள்
அஞ்சலை – நாவல்
ஆதண்டார் கோயில் குதிரை – சிறுகதைகள்
காற்றின் பாடல் – கவிதைகள்
வெள்ளெருக்கு – சிறுகதைகள்
கோரை – நாவல்

இவற்றில் அஞ்சலை நாவலும், கோரை நாவலும் படித்திருக்கிறேன். தற்பொழுது வெள்ளெருக்கு படித்துக் கொண்டிருக்கிறேன்.

புதிய புத்தகங்கள் வாங்கினால் அதைப் பிரித்து முகர்ந்து பார்ப்பது ஒரு பழக்கம். அந்தத் தாளின் மணம் வீசுமே அதற்காகத்தான். ஆனால் குணசேகரனின் புத்தகங்களில் அவர் வசிக்கும் பகுதியில் நடமாடும் மனிதர்களின் வியர்வை வாடையும் அந்த மண்ணிலிருந்தெழும் கார நெடியும்தான் வீசுகிறது. இவ்வளவு இயல்பான எழுத்தில் மனிதர்களை நம்முன் உலவ விட முடியுமா என வியக்கவைக்குமெழுத்து அவருடையது.

காற்று கொஞ்சம் வேகமாக அடித்தது. ஊரில் அவனைப் பார்க்கிறேன், இவனைப் பார்க்கிறேன் என மார் தட்டிக் கொண்டவர்கள், வெட்டியவர்கள், குத்தியவர்கள், மண்ணைக் கவ்வியவர்கள், மண்ணை வாரி வீசியவர்கள், வேடப்பர் கோவிலில் சீட்டு எழுதிக் கட்டியவர்கள், அடுத்தவன் மனைவிக்கு ஆப்பு வைத்தவர்கள், கிண்டல் கீநூட்டு பேசியவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என ஓயாமல் ஓடித் திரிந்தவர்கள் எரிந்தும் புதைந்தும் எதுவுமற்றுப் போன இடம் இருட்டில் ஊமையாய்க் கிடந்தது.

என்ன ஒரு வீச்சு பாருங்கள். இவரது அஞ்சலை நாவலைப் படித்தவர்கள் சொல்லுங்கள் கருவாச்சி காவியத்திற்கு எந்த விதத்தில் குறைந்தது என்று. பிரபல வெளிச்சம் பாயத வெகு சில நல்ல எழுத்தாளர்களுள் இவருமொருவர்.

*************************************************************

பத்திரமாக இருக்கிறர் எனது கடவுள்
பக்தர்களின் தொந்தரவு ஏதுமின்றி
எந்தக் கருவறைக்குள்ளும்
அவரைச் சிறைவைக்கவில்லை நான்
இங்கே என்னோடுதான் வசிக்கிறார்
தற்சமயம் திண்ணையில்உட்கார்ந்துகொண்டு
காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்
மாடு மயில் வாகனங்கள் ஏதுமின்றி
நிராயுதபாணியாக
என்னைப்போல சட்டை போட்டுக் கொண்டு
என்னோடு இருக்கிறார்
தூப தீபங்களால்
மூச்சுத் திணறவைப்பதில்லை நான்
அவர் பாட்டுக்கு வருகிறார் , போகிறார்
குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்
கொடுத்ததைச் சாப்பிடுகிறார்
அதிசயமோ அற்புதமோ நிகழ்த்தாமல்
சமர்த்தாக இருக்கிறார்
என் கடவுள்

– தஞ்சாவூர்க் கவிராயர் – எழுத்துக்காரத் தெரு கவிதைத் தொகுப்பிலிருந்து.

*****************************************************************

ஏங்க.. என்னுடைய சமையல் நல்லா இருக்கா? தினம் இதேமாதிரி சமைச்சா எனக்கு என்ன கிடைக்கும்?

என்னோட இன்சூரன்ஸ் பணம்.

******************************************************************

இந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கேன். முடிஞ்சா அங்கேயும் வந்து உங்க கருத்துக்களச் சொல்லுங்க மக்கா.

24 comments

  1. //உடனே,கக்கன் காரிலிருந்து இறங்கி, “அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?’ என்றவாறே, இரண்டு பர்லாங் தூரமுள்ள ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார்.

    தற்காலமாக இருந்தால்?//

    போலிஸ்காரரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பார்கள்

  2. //தற்காலமாக இருந்தால்?//

    போலிஸ்காரரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பார்கள்
    //

    ரிப்பீட்டுடுடு…

    //புத்தகங்களில் அவர் வசிக்கும் பகுதியில் நடமாடும் மனிதர்களின் வியர்வை வாடையும் அந்த மண்ணிலிருந்தெழும் கார நெடியும்தான் வீசுகிறது//

    மிக நல்ல வரிகள் அண்ணாச்சி..

    அந்த கடைசி ஜோக்.. கலக்கல்!!

  3. //தற்காலமாக இருந்தால்?//

    இப்ப தான் வார்டு கவுன்சிலர் கூட இதை மாட்டிட்டு சுத்த ஆர்வமா இருக்காங்களே! நல்ல வேளை இதற்கு கொஞ்சம் கட்டுப்பாடு போட்டாங்க..இல்லைன்னு வைங்க எங்க பார்த்தாலும் சிவப்பு விளக்காக இருக்கும் (அட! சைரன் சத்தத்த சொன்னேங்க)

  4. அஞ்சலை 3 நாட்களுக்கு முன்தான் படித்துமுடித்தேன். கண்மணியிடமும் புதினம் பற்றி பேசினேன். நானும் எழுதலாம் எனத் திட்டம் வைத்துள்ளென்.

  5. அஞ்சலை 3 நாட்களுக்கு முன்தான் படித்துமுடித்தேன். கண்மணியிடமும் புதினம் பற்றி பேசினேன். நானும் எழுதலாம் எனத் திட்டம் வைத்துள்ளென்.

  6. நல்ல செய்திகளும் அறிமுகங்களும்.

    வலைச்சரம் ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.

  7. /*…தற்காலமாக இருந்தால்?//

    போலிஸ்காரரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பார்கள்*/

    சரிதானே…

    தான் வேலை பார்க்கும் துறையின் தலைவர தெரியாமல், பொது அறிவு கூட இல்லாமல் எப்படி வேலை பார்க்கலாம் என்ற ஆற்றாமை தான்.

  8. \\//தற்காலமாக இருந்தால்?//

    போலிஸ்காரரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பார்கள்
    //

    ரிப்பீட்டுடுடு…

    //புத்தகங்களில் அவர் வசிக்கும் பகுதியில் நடமாடும் மனிதர்களின் வியர்வை வாடையும் அந்த மண்ணிலிருந்தெழும் கார நெடியும்தான் வீசுகிறது//

    மிக நல்ல வரிகள் அண்ணாச்சி..

    அந்த கடைசி ஜோக்.. கலக்கல்!!

    \\

    நர்சிம் கமெண்டை அப்படியே ரிப்பீட்டுக்குறேன்

  9. எழுத்தாளர் ஆசிரியர் அறிமுகம் அமர்க்களமாயிருந்தது, இந்த முறை புத்தகக்ககாட்சியில் கிடைத்தால் வாங்கவேண்டும்

  10. இன்றைய பொலீஸ்காரர்களின் நிலைமை மிக பரிதாபம் அண்ணாச்சி.
    கக்கனை பற்றி கேள்விப்படும் ஒவ்வொரு விடயமும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு பால பாடம்..ஹூம் ஏக்க பெருமூச்சுக்கள்தான் வருகிறது.

    கவிதை ஜுப்பர்.

    மண்ணின் மணம் கமழும் எழுத்துக்கள் குணசேகரனுடையது…அவர் சிறந்த நாடகாசிரியரும்கூட.அருமையாக நாட்டுப்புற பாடல் பாடுவார்.

    கடேசியா வச்சிருக்கற பண்ச் மிக அருமை.

  11. நன்றிங்க TVRK சார். சபரி மலைக்குப் பொக முடியலைன்னா போய்ட்டு வந்தவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்குவாங்க. அதுபோல கக்கனப் பாக்குற பாக்கியம் கிட்டாத எனக்கு உங்களப் பார்க்கனும்னு தோனுது.

    நன்றி கோவி
    நன்றி நர்சிம்
    நன்றி கிரி
    நன்றி முத்துவேல். நீங்க நாவல் எழுதப் போறீங்கன்னு கேட்க ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு. எதிர்பார்க்கிறேன் ஆவலுடன்.
    நன்றி மகேஷ்
    நன்றி நையாண்டி
    நன்றி அ.அம்மா
    நன்றி முரளிக்கண்ணன், உங்க கட்டுரை பிரமதம்(1985 திரைப் பார்வை)
    நன்றி கும்க்கி

  12. இன்றைய அரசு ஊழியர்கள் வேலையே அரசியல்வாதிகளுக்கு சலாம் போடுவது தான், இல்லையென்றால் வேலை போய்விடும்

  13. /
    ஏங்க.. என்னுடைய சமையல் நல்லா இருக்கா? தினம் இதேமாதிரி சமைச்சா எனக்கு என்ன கிடைக்கும்?

    என்னோட இன்சூரன்ஸ் பணம்.
    /

    ஆஹா நான் வீட்டுல பேசறதெல்லாம் எப்பிடியோ ப்ளாக்ல லீக் அவுட் ஆகீடுதே

    :)))))

  14. கதம்பம் சூப்பர்.

    வலைச்சரத்துக்கு வாழ்த்துகள்..

  15. குணசேகரன் எழுத்து உண்மையிலேயே வீச்சுள்ளதாகத் தோன்றுகிறது. படிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்க் கவிராயர் கவிதையும் நல்லா இருக்கு. எப்படித் தேடித் தேடிப் படித்து, பதிவும் செய்கிறீர்கள்!

    ஜோக் – ஹா ஹா ஹா ஹா ஹா

    வலைச்சரம் – வாழ்த்துகள். வர்றோம் அங்கேயும். விடாது கருப்பு :))

    அனுஜன்யா

  16. வேலன்,
    அஞ்சலையை கருவாச்சி காவியத்தோடெல்லாம் ஒப்பிட மனதில்லை.பிரச்சார நெடியில்லாத, மிகைந்து பெரிதுபடுத்தப்படாத, பூதாகரமில்லாத, இயல்பான கதசொல்லலை கண்மணி நிகழ்த்தியிருப்பார்…

    வெள்ளெருக்கு குறித்து கதிரும் நானும் எழுதியிருக்கிறோம்.அஞ்சலையை பிறகெப்போதாவது பதிந்து விடுகிறேன்….

  17. தஞ்சாவூராரின் கவிதை அருமை, மிக ரசித்தேன்.!

  18. ஐயையோ.நானா நாவலா.அப்படில்லீங்க அண்ணாச்சி. நானும் என்னோட வலைப்பூவில் இதுபற்றி எழுதப்போகிறேன்னு சொல்றதத்தான் அப்படி சொதப்பிட்டேன்.(இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்பிக்கிட்டிருக்கு).அன்புக்கு நன்றி அண்ணாச்சி.(இனிமேல் அப்படித்தான் கூப்பிடணும்னு ஆசை.சரியாவும்,நெருக்கமாவும் இருக்குதில்லை.)

  19. நன்றி வால்
    நன்றி கபீஷ் எங்க ரெம்ப நாளா ஆளைக் காங்கலியே
    நன்றி பழையபேட்டை சிவா
    நன்றி மங்களூர் சிவா, அது வீட்டுக்கு வீடு வாசப்படிதானுங்களே?
    நன்றி ச்சின்னப்பையன்
    நன்றி அனுஜன்யா
    நன்றி தாமிரா
    நன்றி முத்துவேல். அது ஒன்னுமில்லை, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் தான்.

  20. நன்றி அய்யனார்.

    எனக்கு இந்த ஆதங்கம் தீரவே தீராது போல இருக்குங்க.

    அதுமாதிரித்தான் கள்ளிக்காட்டு இதிகாசமும். விட்டல்ராவின் போக்கிடமும், பெருமாள் முருகனின் ஏறுவெயிலும் சொல்லாத வலிகளைச் இந்நாவல் சொல்லிவிட்டதாகக் கருதமுடியாது.

Leave a reply to T.V.Radhakrishnan Cancel reply