தாமிராவும் தொடர் விளையாட்டும்

தாமிரா ஒரு தர்க்க ரீதியான விளையாட்டுக்கு என்னைக் கோர்த்து விட்டிருக்கார். குதர்க்கமாப் பேசுவதுன்னா சுலபம்; தர்க்கமான்னா கொஞ்சம் சிரமம்தான்.

என்னப் பத்தி இரு உண்மைகளும் ஒரு் பொய்யும் ஆக மொத்தம் 3 வாக்கியம் சொல்லனுமாம். ஹூ்ம் என்னத்தச் சொல்ல.எதையாவது சொல்லப் போய் எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு.

ஒரு கப்பல்ல இருக்க பணியாளர்களப் பத்தின அன்றாட குறிப்புகளத் துணை மாலுமி எழுதுவாராம். துணை மாலுமியப் பத்தின குறிப்ப மட்டும் தலைமை மாலுமி எழுதுவாராம். ஒரு முறை துணை மாலுமி சரக்கடிச்சுட்டு ரகளை பண்ணுனத மாலுமி குறிப்பேட்டுல எழுதிட்டாரு. து மாலுமி எவ்வளவோ கெஞ்சியும் முடியாதுன்னு சொல்லீட்டாரு. சரி உன்னப் பாத்துக்கிறேன்னு சபதம் போட்ட துணை மாலுமி, அடுத்த நாள் குறிப்பு எழுதும் போது, “இன்று மாலுமி சரக்கு எதுவும் சாப்பிடவில்லை”ன்னு எழுதுனாராம்.

துணை மாலுமி உண்மையத்தாம் எழுதுனாரு. ஆனாலும் மாலுமி மத்த நாட்கள்ல குடிச்சாருன்னும் அன்னைக்கு மட்டும் குடிக்கலன்னும் அர்த்தம் வருது பாருங்க.

இதுகூடப் பரவாயில்லைங்க. இன்னொருத்தம் பட்ட பாட்டைப் பாருங்க. அவங்கப்பா சாகும்போது அவனக் கூப்பிட்டு, எலே ஏ ராசா, எங்காலம் எப்படியோ கழிஞ்சிருச்சு, இன்னமே நீதாம் நம்ம குடும்பத்தைக் கரையேதனும். நாஞ்சொல்லுததக் கேளுன்னு சொல்லி 3 அட்வைஸ் சொன்னாரு.

1. ஆத்தாளுக்குச் சாப்பாடு போடாத.
2. குடுத்த கடனத் திருப்பிக் கேக்காத
3. வயல்ல ஆடு மாடு மேய்ஞ்சா விரட்டாத.

இதச் சொல்லீட்டு தலை சாய்ச்சுட்டாரு. 10ஆம் நாள் காரியமெல்லாம் முடிஞ்சதும் அவங்கம்மாகிட்ட அப்பா இப்படிச் சொன்னாரு எனக்கு ஒன்னும் புரியல நீ கொஞ்ச நாளு அக்கா வீட்டுல இருன்னு அனுப்பி வைக்காம்.

அப்பா கொடுத்த கடனத் திருப்பி கேகாதேன்னுட்டுச் செத்துட்டாரே நான் என்ன செய்யன்னு மருவுதான். அதே போல வயல்லயும் பயிர் பச்சை ஒன்னும் வளர்க்கல. ஆடு மாடு மேய்ஞ்சாத்தாம் வெரட்ட முடியாதே.

இப்படியே கொஞ்ச நாள் செல்லுச்சு. ஒரு தடவ வெளியூர்ல இருந்து வந்த வயசாளி ஒருத்தரு இவம் இருந்தக் கோலத்தப் பாத்து ஏல என்னல சமாச்சாரம்னு கேக்காரு. அதுக்கு இதுஇது இப்படி இப்படி ஆகிப்போச்சுன்னு எல்லாத்தையும் வெலாவாரியாச் சொன்னாம்.

அவரு சொன்னாரு ஏம்ல உனக்கு ஏதும் கோட்டி பிடிச்சிருக்கா. உங்கப்பனுக்குத்தான் வெவரமாச் சொல்ல அவகாசமில்லாம அவசரமாச் சொல்லியிருக்காம்னா, உங்க ஆத்தாளுக்கு எங்கல புத்தி போச்சுன்னு திட்டினாரு.

அவரு சொன்னதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு ஒன்னும் விளங்கல நீரு ஏதோ சொல்லுதீரேன்னாம்.

ஆத்தாளுக்குச் சோறு போடாதேன்னா, நீ சம்பாரிச்சி அவ கையில கொடுத்து அவதாம் உங்களுகெல்லாம் சொறு போடனும்னு அர்த்தம்.
கொடுத்த கடனத் திருப்பிக் கேக்காதேன்னா, கடன வாங்குறவம் நீ கேக்காமலே சொன்ன தேதில திருப்பித் தாராம்பாரு அந்த மாதிரி ஆளாப் பார்த்துக் கொடுன்னு அர்த்தம்.
வயல்ல ஆடு மாடு மேய்ஞ்சா விரட்டாதேன்னா, அது மேயுற அளவுக்கு விடாம சரியா வேலி போட்டு வெள்ளாமை பண்ணுன்னு அர்த்தம்.

இப்பத்தாம் இவனுக்கு வெளங்குச்சு. சே போ மோசம்லா போயிட்டோம்னு எல்லாத்தையும் சரி் செஞ்சாம். இது மாதிரித்தான் நானும் ஏதாவது சொன்னா அதுக்கு வேற அர்த்தம் வந்துருமோன்னுதான் யோசிக்கேன்.

பொய்தாம் சொல்லப் போறமுன்னாலும் ஒரு அளவு வேனும்ல?

நான் ரெம்ப அழகானவன்னு (அடப் பொய்தாங்க) சொன்னா கிருஷ்ணகுமார் திருப்பூர்ல சிரிக்கது இங்க கோயமுத்தூர்ல கேக்கும்.

நான் தொழிலதிபர்னு சொன்னா சஞ்சய், நந்து எல்லாம் கால் டாக்சி எடுத்துகிட்டு வந்திருவாங்க. அப்ப மாறன் பிரதர்ஸ என்னன்னு சொல்லுறதுன்னு நீங்களே கேப்பீங்க.

நான் டிப்ளமோ படிச்சிருக்கேன்னா. ஏன் பி ஈ படிச்சி டிஸ்கண்டினியூ பண்ணுனதச் சொல்லலன்னு வெயிலான் கோவிச்சுக்குவாரு. (10 பெயில் 8 பாஸ்)

நான் எழுத்தாளர் சுஜாதாவச் சந்தித்திருக்கேன்னு சொன்னா 500 பேரு இருந்த கும்பல்ல நீயும் ஒருத்தனா இருந்ததெல்லாம் ஒரு சந்திப்பான்னு, குருன்னு என் பிரண்ட் (என் பிளாகெல்லாம் படிக்கிறான்) டென்ஷன் ஆவான்.

எதுக்கு வம்பு வருஷப் பிறப்பும் அதுவுமா வம்ப விலைக்கு வாங்கி, தேர இழுத்துத் தெருவில விட வேண்டாமேன்னு பாக்குறேன். அதனால இதுக்கெல்லாம் சரியான ஆளு பாக்கி ரெண்டு பேரும்தாம்.

டிஸ்கி : புத்தாண்டு வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு பொலம்புறாரு தாமிரா. ஆனா தங்கமணி சமைக்கிறது சரியில்லன்னு புலம்பல் பதிவு மட்டும் போடுவாரு.

Advertisements

16 comments

 1. புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணன்…

 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா..

 3. அது எப்படி எந்த வலைப்பதிவுக்கு போனாலும் தொடுப்புகள்ல இந்த பதிவை காட்டுது ?

  என்ன மேஜிக் இது

 4. நம்ம ஊரு தமிழ் நடையில கலக்கிட்டீங்க அண்ணாச்சி. 2பொய் 1 உண்மைய எங்க.. சூப்பரா எஸ்கேப் ஆயிட்டீங்க.

 5. மண் மணத்துடன் சுவாரஸ்யமான பதிவு வேலன். தப்புவதற்கு நீங்கள் சொன்ன உண்மைகள் இன்னும் சுவாரஸ்யம்.

  அனுஜன்யா

 6. இதைவிட சூப்பரா யாராலயும் நழுவ முடியாது அண்ணாச்சி.. இவ்வாண்டின் மிகச்சிறந்த எஸ்கேப்..

  அந்த அம்மா கையில கொடுத்து .. மேட்டர் நல்ல பாடம்..

 7. அருமையான கருத்துகள்!

  பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணா.

  செந்தழல் ரவிக்கு இருக்கற சந்தேகம் எனக்கும் இருக்குண்ணா. இது மட்டுமில்ல.. நீங்க எந்தப் பதிவு போட்டாலும் மத்த ப்ளாக்கரோட லிங்க்ல காட்டுது. என்ன பண்ணி வெச்சிருக்கீங்க.. ?

 8. சூப்பர் வேலன்,சின்ன லீடை எவ்ளோ அழகா பதிவு பண்ணிருக்கீங்க, நீங்க எஸ்கேப்பானாலும் பரவால்லை வேறு யாரையாவது கோர்த்து விட்டிருக்கலாமே.. ஏற்கனவே மற்ற ரெண்டு பேரும் அமைதியா இருக்காங்க..

 9. ஹாஹாஹா!

  நல்லா எழுதியிருக்கீங்க.

 10. நல்லா எழுதியிருக்கீங்க.
  welcome to you for joinning in tamilbloggersunit

 11. இது போல் மறைமுக செய்திகள் தமிழில் நிறைய உண்டு,

  ஆரம்பித்து வைத்தவர் அவ்வையார்

 12. ஆகா நல்லா இருக்கு – பொய்னு ஈசியாக் கண்டு பிடிக்கற மாதிரி பொய் சொல்லலாமா – தர்க்கம் சூப்பர் – இன்னிக்கு வேலன் மொக்கப்பதிவு ஒண்ணுமே போடலே

 13. அனைவருகும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நன்றி தமிழன் கறுப்பி
  நன்றி சரவணக் குமார்
  நன்றி ரவி. எனக்கும் தெரியல.
  நன்றி மகேஷ்
  நன்றி அத்திரி
  நன்றி ராதா கிருஷ்ணன் சார்
  நன்றி அனுஜன்யா
  நன்றி நர்சிம். ஹா ஹா
  நன்றி பரிசல். தெரியலையேஏஏஏ (தேங்காய் சீ வாசன் மாதிரி)
  நன்றி தாமிரா. நான் எழுதியிருந்தா மத்தவங்களைக் கோர்த்திருக்கலாம். மீ தி எஸ்கேப்ன்னு நானே மத்தவங்கள மட்டி விடுறது தப்பு
  நன்றி வால் பையன்
  நன்றி சீனா சார்

 14. கோக்குமாக்கான விசயம். மாட்டாம கோளாறா தப்பிச்சிட்டீங்க.

  நம்மள வேற இடையில கோர்த்து விட்டிருக்கீங்க 🙂

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s