மானமுள்ள தமிழா, தை முதல் நாள்தான் புத்தாண்டு

சென்ற பதிவில் நெல்லைக் கண்ணன் கவிதை ஒன்றைப் பின்னூட்டமாக இட்டிருக்கிறார் பரிசல்.

தமிழ்க்கடவுள்
முருகன் கோவிலில்
நீண்ட வரிசை
ஜனவரி 1.

இதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. காலண்டர் வருடம் ஜனவரி 1 ல் தொடங்குவதைத்தானே காலகாலமாகக் கடைபிடித்து வருகிறோம்? அன்று வருடத்தின் முதல்நாள் எனவே செண்டிமெண்டாகக் கோவிலுக்குப் போவது சரிதானே?

கோடை விடுமுறை கழிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை, முதள் நாள் உடை, ஷீ, பேக், புத்தகம், பேனா என புதியனவாக, ஒரு உற்சாகத்துடன் செல்லுவது போலத்தான் இதுவும்.

மேலும் இந்தியர்கள் மொழியால் பிரிக்கப்பட்டிருக்கின்ற வேளையில், தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, மலையாளப் புத்தாண்டு போன்றவை வேறு வேறு தேதியில் வருகின்றன. இந்தியா முழுமைக்குமான ஒரு புத்தாண்டு என்பது இதுதானே, வேறென்ன செய்ய?

என்னுடைய வாடிக்கையாளர்கள், சென்னை, பெங்களூரு, கொச்சி மற்றும் மும்பையில் இருக்கின்றனர். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு ஒரே நாளில் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்ல.

புத்தாண்டு பற்றிய போஸ்டர் ஒன்று ஈரோடு முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது கீழ்க்கண்ட வாசகத்துடன்.

மானமுள்ள தமிழா, தை முதல் நாள்தான் புத்தாண்டு

தை முதல் நாள்தான் புத்தாண்டு தொடங்குகிறதா இல்லையா என்பதைத் தள்ளி வைத்து விட்டு, ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் என்ன தீமை என்று யாராவது சொல்லுங்கள். குடி கும்மாளம்தான் கொண்டாட்டம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது தவிர்த்து இதைக் கொண்டாட வேறு வழியிருக்கிறது. குறைந்த பட்சம், வாழ்த்துச் சொல்லி இனிப்புப் பரிமாறிக் கொள்ளத் தடை ஒன்றுமில்லையே?

சில தீர்மானங்களை எடுக்கவும் ( அதை கடைபிடிக்கிறோமா என்பது வேறு) அன்று நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து வாழ்த்துச் சொல்லவும் மற்றுமுமொரு சந்தர்ப்பம். ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது.

பெயருக்கு முன் இனிசியல் ஆங்கிலத்தில்தான் போடுகிறோம்.

கேக் வெட்டித்த் பிறந்த நாள் கொண்டாடுகின்றோம்.

பேண்ட் சர்ட் அணிந்துதான் தமிழை வளர்க்கின்றோம்.

ஆங்கிலத் தேதியில்தான் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றோம்.

தமிழ்
புத்தாண்டு அன்று தொடங்கும் காலண்டர் எதுவும் இல்லை.

தமிழக
அரசு ஊழியர்களுக்கான டயரி ஆங்கிலப் புத்தாண்டுக்குத்தான்.

அரசாங்கக் கலண்டர்கள் ஆங்கில புத்தாண்டுக்குத்தான்.

ஜனவரி
முதல் டிசம்பர் வரைதான் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள்கணக்கிடப்படுகின்றன.

ஜனவரி
1 அரசே புத்தாண்டு தினம் என விடுமுறை அளித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, தை முதல்நாளைப் பொங்கலாகக் கொண்டாடும் விதமாக உழவர்கள் வாழ்க்கை இருக்கிறதாவெனில் இல்லை என்பதே நிதர்சனம்.

உழவன்
அறுவடை செய்து
பொங்கல் வைத்தது
அந்தக் காலம்
அவனே
ரேசன் கடைக்
க்யூவில்
நின்று
பொங்கல் வைப்பது
கஷ்டகாலம்.

டிஸ்கி : தமிழ்ப் புத்தாண்டு அன்று HAPPY NEW YEAR ன்னு ஆங்கிலத்துல வாழ்த்துச் சொல்லுவது நகைமுரண் இல்லையா?

Advertisements

17 comments

 1. வேலன்!

  ஆச்சரியமா இருக்கு!

  இது போல ஒரு பதிவை நானும் இப்போதுதான் எழுதியிருக்கிறேன்.
  உங்களுடையது உக்கிரமாகவும், தீர்மானகரமானதாகவும் இருக்கு.
  சந்தோஷமா இருக்கு!
  வாழ்த்துக்கள்….
  கூடவே ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 2. வேலன் / மாதவராஜ்…. நம்ப சிரமமாக இருக்கலாம்… நானும் 1-ஆம் தேதிக்கான பதிவில் இதே பாணியில், இது போன்ற கருத்துகளை எழுதி வைத்தேன்…

  வேலன் அண்ணாச்சி பதிவில் குணம், மணம்,காரம் நிறையவே…

  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

 3. தினம் தினம் புத்தாண்டு கொண்டாட கூட நான் ரெடி

 4. எண்ணுவதைச் சொல்லும் துணிவு எல்லோருக்கும் வருவதில்லை வேலன். உங்களுக்கு அது நிறையவே உள்ளது. பரிசல் குறிப்பிட்ட கவிதை ஒரு விளையாட்டான எள்ளல் என்று விட்டு விடலாம். ஈரோட்டு போஸ்டர்கள் சிரிப்பைத்தான் வரவழைக்கும். Hypocrisy rules.

  வால், நீங்களே போஸ்டர்கள் அடித்து விட்டு, இப்படி சும்மா இருந்தால் எப்படி 🙂

  அனுஜன்யா

 5. ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

 6. ஆங்கிலப் புத்தாண்டு வேண்டாம் என யாராவது போராடுகிறார்களா என்ன.? அதே சமயம் தமிழ்ப்புத்தாண்டையும் கொஞ்சம் கொண்டாடி வைங்கன்னுதான் சொல்றோம்..னு நினைக்கிறேன்.

 7. ஐயா – கையொப்பம் கூட ஆங்கிலத்தில் தான் போடுறோம்,

  ஆங்கிலப்புத்தாண்டு எல்லாரும் கொண்டோடுவோம் – நட்புறவோடு
  தமிழ்ப்புத்தாண்டு – எல்லாரும் கொண்டோடுவோம் – தமிழுணர்வோடு

 8. நல்லா சொன்னீங்க . புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 9. மானமுள்ள தமிழன்…..
  ஆமா… அரசு இலவசம் வழங்கி, பிச்சைக்காரனாக்கிய தமிழன்
  தன்மானம் தமிழனுக்கு இருந்தால் இப்படி பிச்சைக்கு ஆளாய்ப்பறப்பானா?
  பொங்கல் வைக்ககூட பிச்சையா?
  அய்யோ தன்மானத்தமிழா?
  நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?
  எங்கும் பிச்சை எதிலும் பிச்சை
  ஏழைக்கும் பிச்சை
  வசதிக்கும் பிச்சை
  அரசு ஊழியர்க்கும் பிச்சை
  அன்றாடம் காய்ச்சிகளுக்கும் பிச்சை

 10. அண்ணண் கே.பழனிச்சாமி……
  பச்சை தமிழர் என்பதை தப்பாக அர்த்தம் பண்ணிவிட்டார் போலிருக்கிறது.

 11. அது தை 14 இல்லை. ஜனவரி 14. மானமுள்ள தமிழன் புத்தாண்டை என்றாவது கொண்டாட்டும்.

  கேள்வி இதுதான் , மானமுள்ள இந்து சித்திரையில் கொண்டாட விரும்புகின்றான்.

  சித்திரையில் கொண்டாடுவது தமிழர் புத்தான்டு என யார் உங்களுக்கு சொன்னது?
  அது இந்துக்களின் புத்தாண்டு.

  தமிழர்கள் அனைவரும் இந்துக்களா?
  இந்துக்கள் அனைவரும் தமிழர்களா?

  இந்து மத‌ ந‌ம்பிக்கையில் இருப்ப‌வ‌ர்க‌ளை ஏன் வ‌ம்புக்கு இழுக்க‌ வேண்டும்?

  த‌மிழ் இஸ்லாமிய‌ர்க‌ளையோ, கிறிஸ்த‌வ‌ர்க‌ளையோ ஜ‌ன‌வ‌ரி 14இல் புத்தாண்டு கொண்டாட‌ கேட்கும் தைரிய‌ம் உண்டா?

  புள்ளிராஜா

 12. ஜ்யோவ்ராம் சுந்தர் said…
  எதையாவது கொண்டாடினால் சரி 🙂
  ஆமாமுங்கோ…

 13. திருவேற்காட்டில் புத்தாண்டிற்கு 2-3 நாட்களுக்கு முன்பு , புத்தாண்டை முன்னிட்டு தீவிரமாக , வரிசையில் கூட்டத்தை நெறிபடுத்துவதற்காக சவுக்கு கட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது , இந்து முன்னனியினர் ஓரிருவர் வந்து ஆங்கில புத்தாண்டிற்கு ஏற்பாடு எதுவும் செய்ய வேண்டாம் என வேண்டினர்!.

  எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அன்று வரும் கூட்டத்தை வரவேண்டாம் என்று சொல்லிவிடலாமா?!..
  அது மக்களாக முடிவு செய்யவேண்டியது…இதற்கு எல்லாம் கட்டுபடுத்த ஆரம்பித்தால் எப்படிடிடிடிடிடிடிடிடி?
  திருப்பதியில் லட்சகணக்கான மக்கள் அன்று கூடுகிறார்களாமே! எல்லோரையும் வரவேண்டாம் என்று சொல்லிவிடலாமா?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s