கதம்பம் – 30/12/08

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு புத்தாண்டும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், சவால்களையும்அதை சாதிக்க புது உத்வேகத்தையும் அளிப்பதாகத்தான் இருக்கிறது.

******************************************************************

காந்தியடிகளால் இந்தியாவின் சொத்து என்று புகழப்பட்ட ஜீவா, வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்கிறார். எதிரே வரும் அவரது நண்பர் ஜீவாவைப் பார்த்து , “ தோழர் ஜீவா, ஏன் நடந்து செல்கிறீர்கள்?

அதற்கு ஜீவா, “ பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன் என்றார்.

அது சரி கையிலே என்ன வச்சிருக்கீங்க?”

தோழர்கள் கொடுத்த கட்சி நிதிஎன்றார் ஜீவா.

பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே?” என்றார் நண்பர்.

கட்சி நிதின்னு தோழர்கள் தந்த பணத்திலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால் கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பது தான் அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் செயலாக இருக்கும்என்றபடியே நடையைக் கட்டினார் ஜீவா.

பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது.

*********************************************************************

தமிழுக்கு சாகித்ய அகாடமி வழங்கும் விருது ெரும்பாலும் விமர்சனங்களுட்பட்டே இருந்திருக்கிறது. ஒரு விதி விலக்காக இந்த வருடம் யாரும் விரல் நீட்டிக் குறைபட முடியாத, முழுவதும் தகுதி உள்ள ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது.

பிரபல மிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்குமின்சாரப்பூஎன்ற அவரது சிறுகதை தொகுப்பிற்காக அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மேலாண்மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (59). ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயலாளரான இவர், 5ஆ‌ம் வகுப்புவரை படித்துள்ளார், பலசரக்கு கடை வைத்துள்ளார்.

இவரது சிபிகள் என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்துள்ளேன். ஒரு கிராமத்திலிருந்து டவுனுக்குக் கிளம்பும் டவுன் பஸ்ஸில் ஏறும் பயணிகளின் மன நிலையை பதிந்திருப்பார். யாரும் யாருக்கும் எதையும் விட்டுத்தரத் தயாராக இல்லாத உறுதியுடன் இருப்பர். ஆனால் சக பயணியான நிறைமாதக் கர்ப்பிணிக்கு பிரசவ வலி எடுத்ததும் எல்லோரும் அவரவர் வழியில் உதவுவதுடன், ஒத்துழைப்பும் நல்குவர்.

இந்த வித்தியாச மன நிலையை மிக அழகாகப் படம் பிடித்திருப்பார். அவரது கதை மாந்தர்கள், இத்தரத்தினரே.

விருது பற்றிய மாதவராஜின் பதிவு .

***************************************************************

எது கவிதை என்பதில் அவரவருக்கான அபிப்ராயம் அவரவருக்கு, எனினும்பொதுவான கருத்து அது எழுதியவர் உணர்ந்ததை படிப்பவருக்குக் கடத்தவேண்டும் என்பதே.

கவிதை என்பதற்கான இலக்கணம் வெவேறெனினும், மேற்ச்சொன்ன இலக்குஎட்டப்படுமாயின், அது எவ்வாறாக இருப்பினும் கவிதைதான்.

விகடனில் வெளியானஇந்த முத்திரைக் கவிதைகள் அவ்வகை.

மனசு

சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?

பா.கீதா வெங்கட்

உயிரின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

மகுடேசுவரன்

செவலையெனும் சித்தப்பு

அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.

மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.

சிவராஜ்

***************************************************

ரயிலில் இரு பெண்மணிகள், சுமார் 35 வயதிருக்கும், தங்களுக்குள் யார் வயதுகுறைவு என்பது குறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர், பிரண்ட்லியாகத்தான். இருவரும் தங்கள் வயது 25 லிருந்து ஒன்றோ இரண்டோதான் அதிகம் என்பதைநிறுவ மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

பொறுக்க முடியாமல் அருகில் அமர்ந்திருந்த 50 வயசுக்காரர் எழுந்து சொன்னார்,

என்னக் கொஞ்சம் அப்பர் பெர்த்துக்கு ஏத்தி விடுறீங்களா?”

ஏங்க

இல்ல எனக்கு வயசு 12 தான் ஆச்சு , மேல ஏற முடியாது, அதுதான்


Advertisements

26 comments

 1. //பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது.//

  உண்மைதான்…………என்னத்த சொல்ல

 2. //எங்களை விட்டுப் பிரிந்த
  செவலை இறந்துபோனாலும்
  எந்தத் தப்பிலாவதும்
  தவுலிலாவதும்
  அழுதுகொண்டுதானிருக்கும்
  எங்களைப்போல.
  //

  இந்த கவிதையை அப்பொழுது படித்த பொழுதே கனமானது மனது.. மீண்டும் இன்று..

  நல்ல கதம்பம்..

  அந்த 12 வயசு.. இடுப்புக்கு கீழேயா அண்ணாச்சி??

 3. உயிரின் ஒலி & செவலையெனும் சித்தப்பு படித்திருக்கிறேன்..

  //கொல்லையில்
  சன்னமாக எழும்
  பெண்களின் விசும்பலை//

  மனதில் தங்கிவிட்ட வரிகள் இவை..
  உங்களால் எழுதியவரின் பெயர்களை அறிந்துக் கொண்டேன்..நன்றி!

  நல்ல பதிவு!

 4. ஜீவா பொன்ற தலைவர்கள் அடுத்த தலைமுறைக்கு வேறும் பாடபுத்தகத்தில் மட்டுமே படிக்க கூடிவர்களாக ஆக கூடுமோ என் எனக்கு சந்தேகம் இருக்கிறது,

  தனக்கு கூட வேண்டாம் என நினைத்த வர் எங்கே, தனது அடுத்த 10 தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வியாதிகள் எங்கே!

 5. தமிழ்க்கடவுள்
  முருகன் கோவிலில்
  நீண்ட வரிசை
  ஜனவரி 1.

  – நெல்லை கண்ணன்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவரே!

 6. வேலன் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளை காணோம்!

 7. ::)))))))))

  அண்ணாச்சி வந்தாச்சா……!

  புத்தாண்டு வாழ்த்துகள் !

 8. புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ஏற்கனவே படித்த கவிதைகள் என்றாலும் இங்கு படிக்கும் போது ஒரு கூடுதல் சுவாரசியம் இருக்கிறது..

  ஜீவா – அறியாத செய்தி.

  விருது – மேலாண்மை பொன்னுச்சாமிக்கா – நன்றி தகவலுக்கு..

 9. //பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது.//

  ம்… வேதனையான உண்மை.

 10. வேலன்!

  ஏற்கனவே தெரிந்திருந்தாளும், ஜீவா பற்றி நீங்கள் எழுதியதைப் படித்த போது நீண்ட பெருமூச்சு வரவே செய்கிறது.

  வால் பையன் அவர்களின் பின்னூட்டம், அந்தப் பெருமூச்சையே கோபமாக்குகிறது.

  கவிதைகள் மிக மெலிதான் , அழுத்தமான பதிவுகள்.

  //கொல்லையில்
  சன்னமாக எழும்
  பெண்களின் விசும்பலை//

  கேட்க முடிகிறது…..

 11. //வால் பையன் அவர்களின் பின்னூட்டம், அந்தப் பெருமூச்சையே கோபமாக்குகிறது. //

  கோபம் என்மேலயா
  இல்லை அரசியல்வியாதிகள் மேலையா

  தெளிவா சொல்லுங்க சார்

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 12. சிறிது தாமதமான கதம்பம் என்றாலும் தரம் வழமைபோல் சிறப்பு. கவிதைகள் அருமை. ‘செவலை’ – மனம் கனம். இந்தக் காலத்தில் ஜீவா/கக்கன்/காமராஜர் போல? தெரியவில்லை – ஒருவேளை நல்லக்கண்ணு இருக்கலாம். மிக எளிமையானவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் போதே, நகரில் வாடகை அதிகம் என்பதால் புறநகர் கூட அல்லாத கிராமத்தில் மகள் வீட்டுக்குச் சென்று வசிக்க ஆரம்பித்தார் என்று படித்த ஞாபகம். அது போலவே இரண்டே இரண்டு வேட்டிகள். தானே துவைத்துக் கொள்வார் என்று ஞாபகம். ஹ்ம்ம்.

  வயதைக் குறைக்கும் விளையாட்டில் ஆண்கள் மட்டும் என்னவாம்? வேண்டுமானால் பரிசல்/நர்சிமிடம் கேளுங்கள். என்னை விட வயதில் குறைந்தவர்கள் என்று நிலைநாட்ட முயல்வார்கள் 🙂

  எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 13. நன்றி அத்திரி
  நன்றி ரவிசங்கர்
  நன்றி நர்சிம்
  நன்றி சந்தனமுல்லை
  நன்றி வால்பையன். ரெம்பக் கோபமா இருக்கிங்க. பாத்து குருதி கொப்பளிக்கப் போகுது.
  நன்றி பரிசல்.
  நன்றி நையாண்டி
  நன்றி கிரி
  நன்றி கோவி
  நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
  நன்றி ஜமல்
  நன்றி அமுதா
  நன்றி மாதவராஜ்
  நன்றி அனுஜன்யா

 14. புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாச்சி…

 15. பிரமாதமா பண்றீங்க வேலன்.! ஜீவா கதை புல்லரிக்க வைத்தது. கவிதைகள் அருமை, கிளைமாக்ஸ் ஜோக் கலக்கல்.!

 16. வால்பையன்!

  எனக்கு இருக்கும் அதே கோபம்தான் உங்களிடமும் வெளிப்பட்டிருக்கு.
  புரிஞ்சுட்டா..

 17. சூப்பர் அண்ணாச்சி… சுதந்திரம் வாங்கி 60 வருசத்துக்கு மேல ஆச்சு. இன்னும் கக்கன், காமராஜ், ஜீவான்னு ஒரு பத்து பேருக்கு மேல நல்ல அரசியல்வாதி பேர் நமக்கு கிடைக்க மாட்டேங்குது பாருங்க. 😦 இன்னும் 100 வருசத்துக்கு அப்பறமும் இதே 10 பேருதான் நாம சொல்லிக்கிட்டுருப்போம் போல. விதியை நொந்துக்க வேண்டியதுதானா?

 18. வேலன் ஸார்..

  அரசியலுக்கு வருவதே சொத்துக்களை குவிப்பதற்கும், குவித்த சொத்துக்களை பாதுகாக்கவும்தான்.. அது ஒரு காலம் என்று பெருமூச்சு மட்டுமே நம்மால் விட முடியும்..

  மகுடேசுவரனின் கவிதை விகடன் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.. அப்போதே என்னை மிகவும் யோசிக்க வைத்தது. மறக்க முடியாதது.. திரும்பவும் வாசிக்க வைத்துவிட்டீர்கள்.. நன்றிகள்..

 19. வேலண்ணே,

  புத்தாண்டு வாழ்த்துக்கள்… மகுடேசுவரனோட காமக் கடும்புனல் வாசிருக்கீங்களா?? நான் வாசித்து இட்ட பதிவு… அதன் பாதிப்பில் எழுதிய சிறுகதை

  விளம்பர சுவரொட்டி ஒட்ட அனுமதித்த‌துக்கு நன்னி… :))

 20. வழக்கம் போல அருமை..
  புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.. 🙂

 21. //எது கவிதை என்பதில் அவரவருக்கான அபிப்ராயம் அவரவருக்கு, எனினும்பொதுவான கருத்து அது எழுதியவர் உணர்ந்ததை படிப்பவருக்குக் கடத்தவேண்டும் என்பதே.

  கவிதை என்பதற்கான இலக்கணம் வெவேறெனினும், மேற்ச்சொன்ன இலக்குஎட்டப்படுமாயின், அது எவ்வாறாக இருப்பினும் கவிதைதான்.//
  கவிதை குறித்த உங்கள் கருத்து நன்று.
  அனைத்துக் கவிதைகளுமே அருமை.

  ஜீவா பற்றிய பதிவு அருமையானதும் அவசியமானதும் கூட.
  /பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது./

  மேலாண்மை பொன்னுசாமி பற்றி அறிந்தபோது வியக்காமல் இருக்க முடியவில்லை. இனிமேல்தான் அவரை படிக்கவேண்டும். அண்மையில் செம்மலரில் ஒரு கதை(திரும்புதல்) படித்தேன். மிக நன்றாகயிருந்தது.

 22. கதம்பம் அருமை வேலன் – ஜீவா, பொண்ணுசாமி பற்றிய தகவல்கள் மற்றும் கவிதைகள் அபாரம் – பாராட்டுக்குரியவை. நல்வாழ்த்துகள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s