கதம்பம் 15/12/08

ஒரு முறை ராஜாஜியின் மாளிகையில் தங்கினார் காந்தி. அவர் தங்கியிருந்த அறையில் சத்தியமூர்த்தி, ராஜாஜி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று உள்ளே நுழைந்தார் பாரதியார். காந்தியை வணங்கி விட்டு அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

“மிஸ்டர் காந்தி! இன்று மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் நான் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?’ என்று காந்தியைக் கேட்டார் பாரதியார். அந்த நேரத்தில் மற்றோர் இடத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையால், “கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்தி வைக்க முடியுமா?’ என்று திருப்பிக் கேட்டார் காந்தி.

“ஒத்தி வைக்க முடியாது; நான் போய் வருகிறேன்! தாங்கள் துவங்கப் போகும் இயக்கத்தை நான் வாழ்த்துகிறேன்!’ என்று போய்விட்டார் பாரதியார்.

பாரதி வெளியேறியதும், “யார் இவர்?’ என்று கேட்டார் காந்தி. அவர், “எங்கள் தமிழ் நாட்டுக் கவி!’ என்று சொன்னார் ராஜாஜி. “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இதற்குத் தமிழகத்தில் ஒருவரும் இல்லையா?’ என்றார் காந்தி.
(நன்றி : தினமலர்)

பாதுகாக்க ஆளில்லாவிட்டாலும் நினைத்துப்பார்க்கக்கூட ஆளில்லதவராக ஆகிவிட்டார். டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர். இலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கி வளரும் சமுதாயமே முன்னேறும்.

***************************************************

பூமணியின் வெக்கை நாவல், அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும் சாதாரணக் கதைதான். ஆனால் எழுதப்பட்ட விதத்தில் சிறந்த படைப்பாக ஆகியிருக்கிறது.

15 வயதே ஆன செலம்பரம்(சிதம்பரம்) அண்ணனைக் கொன்றவனின் கையெடுக்கும் முயற்சியில் தோற்று ஆளையே கொன்று விடுகிறான். அவனறியாமல் அவனுக்கு உதவி செய்ய வரும் அப்பாவும் அவனும் அதன்பின் காட்டுக்குள் மறைந்து வாழ்வதும், அந்தச் சம்பவத்தை செய்யத் தூண்டிய காரணமும் அதனிடையே அவர்களது வாழ்க்கையுமென நாவல் பரந்து விரிகிறது.

ஒரு குடும்பமும் அதன் உறவின்முறைகளும் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அவர்களுக்கு உதவுவதும் அரசாங்க நிறுவனம் பணம்படைத்தவர்களின் கைக்கூலியாகச் செயல்படுவதும் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஏதோ பழிக்குபழி வாங்கினான் என்று மலினமாகியிருக்கக்கூடிய ஒரு சம்பவதைப் பிரியத்துகுரியதாக நாவல் ஆக்க முனைந்துள்ளது. வன்முறையை உள்ளடக்கிய வாழ்க்கையில் வர்க்க நலன்கள் மோதுகிற சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப உறவுகள் மிக இனிமையான மனிதச் சூழல்கள் ஆகிய ஒரு உலகிற்குள் சஞ்சரிக்கிறார் பூமணி” ராஜ் கெளதமன் (சிலுவை ராஜ் சரித்திரம் – நாவலாசிரியர்)

இது போன்ற யதார்த்த நாவல்கள் அதிகக் கவனம் பெறாமல்போவதும், பிற நாவல்கள் விளம்பரப்படுத்தல் மூலமும் , சந்தைப்படுத்தல் மூலமும் உலக உயரத்தில் என புகழப்படுவது தமிழிலக்கிய உலகின் ஒரு நகைமுரண்.

****************************************************************

”இரட்டைக் குழந்தைகளோட அச்சன் “ என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். 90 களின் ஆரம்பத்தில் வந்த படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஸ்ரீனிவாசன் கதை திரைக்கதை எழுதியது.

நான்காவது பிரசவத்திலும் இறந்து பிறந்த குழந்தையுடன் போராடும் தந்தைக்கு ஆறுதலளிக்க தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளிலொன்றைக் கொடுக்கிறார் ஜெயராம்; மனைவிக்குத் தெரியாமல்,அரைமனதுடன்.

பிறிதொரு நாளில் தாங்க முடியாத மன அழுத்தத்தில் அதைச் சொல்லிவிட நேர்கிறது மனைவியிடம். அதன் பின்னெழும் உக்கிரகரமான சம்பவங்களும் மனநிலைகளில் ஏற்படும் மாற்றமுமாக நகர்கிறது படம். கொஞ்சம் அதிகமாகி இருந்தாலும் தற்கால மெகாத்தொடர் போல ஆகியிருக்கும் அபாயமுள்ள கதையை தேர்ந்த திரைக்கதை முலம் சுவராஸ்யமாக்கியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

தமிழில் இதுபோல ஒரு பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை.

மலையாளக் திரையுலகிற்கும் தமிழ்த் திரையுலகிற்கும் இருக்கும் ஒரு வித்தியாசமே அதற்குத் தடைக்கல். அங்கே கதை நடிகர்களைத் தீர்மானிக்கிறது. ஆனால் இங்கே நடிகர்கள்தான் கதையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வரையறைக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது கண்கூடு.

*************************************************************

தெயவம் மனிதனாய் ஜனித்தால்
ஜீவிதம் அனுபவிச்சறிஞ்சால்
திருச்சி போகுமுன்னே
தெய்வம் பறயும்
மனிதா நீதான்
எண்ட தெய்வம்.

(திருச்சி – திரும்பி)

இது சமீபத்தில் இரு மலையாளிகள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்ட கவிதை வரிகள். மூலத்தில் எழுதியவர் யார்? தமிழ்ப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனில் என்ன அப்புத்தகத்தின் பெயர்? யாராவது உதவமுடியுமா?

இனி இந்தவாரக் கவிதை.

பயனிகள் கவனிக்கவும்

ஒரு ரயில் நிறுத்தம்
கண்டிப்பாக ஐந்து நிமிடம்
நின்று கிளம்பி விடும்
நூறு ரூபாய் கொடுத்து
நான்கு சமோசாவும் இரண்டு டீயும்
ஒரு கை கேட்கிறது

கேட்டதை கொடுத்து மீதி சில்லறையும்
கொடுக்கிறார் மறக்காமல்

இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்
கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட
கேட்ட இன்னொருக் கைக்கு கொடுக்கிறார்

அடுத்த ஸ்டேஷனில் நிற்காது
தீர விசாரித்து ஒரு கை
பத்து ரூபாயும் அறுபது காசுகளும்
எண்ணிப்பார்த்து கொடுத்து
வாங்கி கொள்கிறது

சில கைகள் ஏதோ வாங்கிக்
கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்
உடைந்த நாணயங்கள்

தயிர் சாதத்திற்கு பதிலாக லெமன் ரைஸ்
மாற்றிக்கொள்கிறது ஒரு கை
அந்த கைக்கு கூட்டி கழித்து
கூட குறைய இல்லாமல்
கொடுக்கிறார் துல்லியமான சில்லறை

இதை அந்த குப்பை தொட்டியில் போடு
என்று சொன்ன – ஒரு
சிறுமி கைக்கு பணிகிறார்

ஊசிப்போச்சு என்று பாதி
சாப்பிட்டுவிட்டு மீதியை நீட்டுகிறது
முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை

வண்டியின் கூடவே ஒடி
உள்ளே போய் அந்த கையைப் பார்த்து
கொடுத்து விட்டு பிளாட்பாரத்தின்
கடைசி சிமெண்ட் சதுர நுனியில்
உயிர்பிடித்து இறங்கும் அவர்
சட்டக் கல்லூரி வாசலில்
ஆயுதம் தாங்கிய கைகள்
ஏதோவொன்றின் அப்பாவாக
இருக்கலாம்

ரவிஷங்கர் உயிரோசையில் வெளியான கவிதை

***********************************************************

ஓரு மலையாளியிடம் கடன் வாங்கியவர் பட்ட அனுபவம் இது.

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார் மலையாள அன்பர். நாளை காலையில் தருகிறேன் என்பார். காலையில் வந்தால் மாலையில் தருகிறேன் என்பார். இப்படியாகக் காலை மாலை என மாற்றி மாற்றி அவரை அலைகழித்திருக்கிறார் இவர்.

வெறுத்துப் போன மலையாள அன்பர் சொன்னார், “ சாரே இது சரியில்ல கேட்டோ? ராவிலே ஒரு சம்சாரம், ராத்திரிக்கு ஒரு சம்சாரம்.”

திட்டிவிடு அவர் போன பின் இவர் அவர் தங்கமணியிடம் நாய் பட்டபாடு பட்டார்.

மலையாளத்தில் சம்சாரம் என்றால் பேச்சு என்றும் ராவிலே என்றால் காலையில் என்றும் அர்த்தம் சொல்லி அவர் தங்கமணிக்கு விளங்க வைத்தார்கள்.

சம்சாரம்னாலே பேசீட்டே இருப்பாங்கன்னுதான் மலையாளத்துல அப்படி வச்சுட்டாங்களோ?

Advertisements

39 comments

 1. மீ த பர்ஸ்ட் !

  //”இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இதற்குத் தமிழகத்தில் ஒருவரும் இல்லையா?’ என்றார் காந்தி.
  (நன்றி : தினமலர்)
  //

  அவ்வளவு அக்கரையான ஒருவரை பாதுகாக்க ஆளில்லாமல் போனதும் கூட :((((

  நான் சுடப்பட்ட காந்தியச் சொன்னேன்

 2. இந்த வாரக்கவிதை அதிரடிச்சிடுச்சு…

  :-(((…

  கதம்பம் –

  அளவிலா வாசத்தோடு!!

  :-)))…

 3. வேலன், இப்போதெல்லாம் பாரதியைத் தூற்றாமல் இருந்தாலே போதும் என்ற நிலைதான். அந்த விதத்தில் டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாமல் விட்டவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  ‘வெக்கை’ அறிமுகத்திற்கு நன்றி.

  15-20 ஆண்டுகள் முன்புவரை மலையாளப் படவுலகம் உச்சத்தில் இருந்தது. தற்போதும் அப்படித்தானா? ஜெமோவின் ‘சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா’ என்ற பதிவு படித்தது ஞாபகம் வருகிறது. http://jeyamohan.in/?p=521

  இந்த வாரம் ‘மலையாள வாடை’ (சினிமா, கவிதை, நகைச்சுவை) சற்று அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அந்தப் பக்கம் போகும் உத்தேசம் உண்டு போலும்! :)))

  மற்றுமொரு சிறப்பான கதம்பம். வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 4. Vadakarai velan sir,
  Nan Kalyanam mudithu 39 varushathukku munpu idukki project il velayai iruyntha kanavarudan oru nanbar veetukku ponnen.Enakku malayalam appothu theriyathu.Nambiyar chettan samayam kittumbol varanam enrar.Nan mudinthal varukiren enru pathil chonnen.[thamizhil if possible.But malayalam [illamal povathu]Avar chirithu mudinthal engane varum enrar.
  tsseethalakshmi

 5. இதென்ன அண்ணாச்சி… கேரளா ஸ்பெஷலா?

  ஆமா, ட்வெண்டி 20 விமர்சனம் என்னாச்சு?

 6. நன்றி கோவி.

  நீங்க சொன்னதும் முக்கியமான கருத்துத்தான்.

 7. //அனுஜன்யா said…

  வேலன், இப்போதெல்லாம் பாரதியைத் தூற்றாமல் இருந்தாலே போதும் என்ற நிலைதான். அந்த விதத்தில் டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாமல் விட்டவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.//

  அதுவும் ஒருவகையில் சரிதான். அவரைப் பற்றித் தவறான தகவல் தந்து அவரைக் கேவலப் படுத்தாமல் இருந்தார்களே.

  // ‘வெக்கை’ அறிமுகத்திற்கு நன்றி.//

  உங்களுக்குப் பிடிக்கும்.

  // 15-20 ஆண்டுகள் முன்புவரை மலையாளப் படவுலகம் உச்சத்தில் இருந்தது. தற்போதும் அப்படித்தானா? ஜெமோவின் ‘சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா’ என்ற பதிவு படித்தது ஞாபகம் வருகிறது. http://jeyamohan.in/?p=521 //

  மலையாளத் திரைய்லகில் வித்தியாசமென்று நான் நினைப்பது அவர்கள் எடுத்துக் கொள்ளும் கதைதான். கமல்கூட சானக்யன் என்று ஒரு படம் செய்தார் மலையாளத்தில். அதில்தான் ஜெயராம் அறிமுகம். அதையெல்லாம் தமிழில் நினைத்தே பார்க்க முடியாது.

  // இந்த வாரம் ‘மலையாள வாடை’ (சினிமா, கவிதை, நகைச்சுவை) சற்று அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அந்தப் பக்கம் போகும் உத்தேசம் உண்டு போலும்! :))) //

  நான் பிறந்ததும் மளையாள எல்லை ஊர். அங்கு செக்போஸ்ட் கூட உண்டு.
  வாழ்வதும் கோவை. இங்கிருந்து 27 கி மீ தூரத்தில் கேரளா ஆரம்பித்து விடுகிறது. தங்களிடம் நேரில் சொன்னது போல், இன்னும் 10 வருடம் கழித்து கேரளாவிலதான் ஏதாவது மலையோர கிராமத்தில் செட்டிலாக வேண்டும்.

 8. ஆமாங்க சீதா, சரியான அர்த்தம் தெரியாமப் பேசினா, அனர்த்தம்தான்.

  நன்றி ஆட்காட்டி
  நன்றி ரவி

 9. very nice Kadhambam!!!

  About Bharathi, its 100% true.

  Felt happy to read about mallu movies. Nowadays its not the case, they are influenced by our masala movies(I didn’t say all our movies are masala 🙂 )

 10. சிலரை மீட்டுக் கொண்டு வர முடியவில்லை.. அதில் பாரதியும், சுஜாதாவும் முக்கியமானவர்கள். மற்றபடி மலையாளக் கரையோரக் கதம்பம்… வாசமா இருக்கு!

 11. ///டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர்///

  என்ன சொல்ல?

 12. பூமணியின் “வெக்கை” நாவல்

  தலைவரே! இந்த நாவல் எங்க கேடைக்கும்னு சொல்ல முடியுமா?

  நன்றி!!

 13. இளைய தலைமுறையினருக்கு இந்தியாவின் வரலாறு தெரியாமலேயே போய்விடும் காலம் அருகிலேயே இருக்கிறது

 14. வேலன்.. கதம்பம் மணம்..

  பாரதி பற்றிய வருத்தம் சரிதான்… ஆனால் பாரதி போன்றோர் விழாக்கள் இல்லாமலே நம் நினைவுகளில் வாழ்கிறார்கள்…

 15. நன்றி ஜீவன், வால்பையன், மகேஷ்

  சிவா அந்தப் புத்தகம்

  பூஞ்சோலைப் பதிப்பகம்
  11, சிவப்பிரகாசம் தெரு
  பாண்டி பஜார்,
  தி நகர் சென்னை – 17

  மூலப் பதிப்பிக்கப்பட்டது மூன்றாம் பதிப்பு – 1995. அதிக எழுத்துப் பிழை உள்ளது. நீங்கள் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவரெனில் எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்துவிடலாம் இல்லையெனில் சிரமம்தான்

 16. ///இது போன்ற யதார்த்த நாவல்கள் அதிகக் கவனம் பெறாமல்போவதும், பிற நாவல்கள் விளம்பரப்படுத்தல் மூலமும் , சந்தைப்படுத்தல் மூலமும் உலக உயரத்தில் என புகழப்படுவது தமிழிலக்கிய உலகின் ஒரு நகைமுரண்.///

  :-)))))

 17. //பாதுகாக்க ஆளில்லாவிட்டாலும் நினைத்துப்பார்க்கக்கூட ஆளில்லதவராக ஆகிவிட்டார். டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர். இலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கி வளரும் சமுதாயமே முன்னேறும்.//

  வியாபார உலகம் .. வேற என்னத்த சொல்ல.

  எப்பவும் போல கடைசி காமெடி ரணகளம்

 18. எந்துன திருச்சி போணம்?

  திருச்சுப் போயால் போறே?

  கதம்பம் நல்ல மணம்:-)

 19. நன்றி TVRK சார்
  நன்றி அத்திரி
  நன்னி துளசி சேச்சி

 20. இந்த கதம்பம் மிக மிகப் பிடித்திருந்தது. ஒவ்வொன்றும் அருமை

 21. நல்ல இலக்கிய நூல்களும், திரைப்படங்களும் குறித்த உங்கள் ஆதங்கம் ஏற்புடையது.
  ரவிசங்கரின் கவிதை எளிமை மற்றும் அருமை.

 22. நன்றி அமுதா
  நன்றி முத்துவேல், எங்க ரெம்ப நாளாக் காணவில்லை

 23. //ஒத்தி வைக்க முடியாது; நான் போய் வருகிறேன்! தாங்கள் துவங்கப் போகும் இயக்கத்தை நான் வாழ்த்துகிறேன்!’ என்று போய்விட்டார் பாரதியார்//

  பாரதி படத்தில் இக்காட்சி இருக்கும்

  //டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர்//

  சொல்ல தான் நினைக்கிறேன்.. நோ கமெண்ட்ஸ்

  //சம்சாரம்னாலே பேசீட்டே இருப்பாங்கன்னுதான் மலையாளத்துல அப்படி வச்சுட்டாங்களோ?//

  ஹி ஹி ஹி ஹி நல்ல வேளை நான் தப்பித்தேன் :-)))

 24. //மலையாளக் திரையுலகிற்கும் தமிழ்த் திரையுலகிற்கும் இருக்கும் ஒரு வித்தியாசமே அதற்குத் தடைக்கல். அங்கே கதை நடிகர்களைத் தீர்மானிக்கிறது. ஆனால் இங்கே நடிகர்கள்தான் கதையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வரையறைக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது கண்கூடு.
  //

  வழிமொழிகிறேன்.

  திரும்பவும், கவிதையில்தான் பிரச்சினை.
  திரும்ப திரும்ப படித்தேன்.

  இப்படி வாழ்வோடு மல்லுக்கட்டி வலி கொண்ட மனிதரின் புத்திரர்கள்கள்தான் ஆயுதங்களோடு சட்டக்கல்லூரியில் அட்டூழியம் செய்தவர்கள் என்கிற தொனி வருகிறதே….. அது சரியா? அப்படியில்லாமல், வாழ்க்கை முழுவதும் அடங்கிப் போனவர்களின் அடுத்த தலைமுறை அடங்க மறுக்கிறது என்ற அர்த்தம் வந்தால் சரியா?

 25. கிரி,

  நீங்க சொல்ல மாடீங்கன்னு எனக்குத் தெரியும். சம்சாரம் பத்தி உங்க வயசுல எனக்கும் இந்த எண்ணம்தான் அது போகப் போகத்தான் மாறும்.

 26. //திரும்பவும், கவிதையில்தான் பிரச்சினை.//

  பிரச்சினை இல்லை அதில மாற்றுக்கருத்துன்னு சொல்லுங்க.

  //திரும்ப திரும்ப படித்தேன்.

  இப்படி வாழ்வோடு மல்லுக்கட்டி வலி கொண்ட மனிதரின் புத்திரர்கள்கள்தான் ஆயுதங்களோடு சட்டக்கல்லூரியில் அட்டூழியம் செய்தவர்கள் என்கிற தொனி வருகிறதே….. அது சரியா? அப்படியில்லாமல், வாழ்க்கை முழுவதும் அடங்கிப் போனவர்களின் அடுத்த தலைமுறை அடங்க மறுக்கிறது என்ற அர்த்தம் வந்தால் சரியா? //

  இதுல உங்களோட மாறுபடுகிறேன். இன்னைக்கும் நம்ம எண்ணமே நாந்தான் கஷ்டப் படுகிறேன் எம்பிள்ளகளாவது நல்லா இருக்கனும்னு நம்ம வலி வேதனை எதுவும் தெரியாமல் வளார்க்கிறோம்.

  பெரிய இடத்துப் பசங்களோட கனவு லட்சியம் எல்லாமே அந்த மட்டத்துல இருக்கும், அவங்கள நல்வழிப்படுத்தவும் கைகாட்டவும் எத்தனையோ பேர் தயாரா இருப்பாங்க.

  நம்ம மாதிரி நடுத்தரம்தான் எது நம் தரம்னு தெரியாமத் தடுமாறுறோம்.

  என்னுடன் டிப்ளமோ படித்தவர்களும் அப்படித்தான் இப்ப என் மகளுடன் படிக்கும் வகுப்புத் தோழிகளும் அப்படித்தான்.

  எப்படியாவது இந்தத் தீபாவளிக்கு 1500 ரூபாய்க்கு ஒரு நல்ல சுடிதார் எடுக்கனும்னு சொன்ன பொண்ணோட அப்ப ஒரு சாதாரண வாட்ச்மேன். அந்தப் பெண்ணுக்குத் தெரியாதா அப்பா என்ன சம்பாதிக்கிறார் மாசம் எவ்வளவு செல்வாகுதுன்னு? தெரியும் இருந்தாலும் மற்றவர்களோட போட்டி போட்டாக வேண்டிய நிலை.

  பசங்களுக்குள்ள ஏற்றதாழ்வு எப்படி வரும்? பணத்தால, படிப்பால மற்றும் பவரால. பணக்காரனுக்கும், படிப்பவனுக்கும் பிரச்சினை இல்லை. மற்றவனுக்குத்தான் தன்னை நிலை நிறுத்திக்கனும்னு இப்படி அடாவடி செயல்ல இறங்குறான். தனியா அவனக் கூப்பிட்டுக் கேட்டுப் பாருங்க ஆமா நான் செய்வது தவறுன்னுதான் சொல்லுவான். ஆனா அவனுக்கு வேற வழி இல்லை தன்னுடைய சுப்பீரியாரிட்டியக் காட்ட.

  இதுல வர்க்க பேதம் அடங்குனவன் அடக்கப்பட்டவன் எல்லாம் அப்புறம். இதே பிரச்சினை மற்ற அரசு கலைக் கல்லூரிகளிலும் இருக்கே அதுக்குக் காரணம் இதுதானா? இல்லைங்க. அவனுக்குத் தான் எங்க இருக்கோம் எங்க போகனும்க்கிற தெளிவு இல்லாததுதான் காரணம்.

  உங்களோட விவாதம் பண்ண ஆர்வமா இருக்கேன். அடுத்த முறை சிவகாசி வரும்போது சந்திக்கலாம்

 27. உண்மைதான்.கொஞ்சம் வேலை அதிகம். ரவிசங்கரை blogger ஆக அறிமகப்படுத்தியதற்கு நன்றி. நன்றாக எழுதியுள்ளார்.

 28. வடகரை வேலன்,

  ஒரிஜினலாக வைத்த கடைசிவரிகள்:

  (“சதுர நுனியில்” என்று முடியும் இடத்திலிருந்து தொடங்கவும்)

  “அவசரமாக இறங்கும் அவர்
  எதிர் திசையில் உள்ளே
  நுழைந்துகொண்டிருக்கும்
  ரயிலின் ஜன்னல் கைகளுக்கு
  கொடுக்க விரைகிறார்
  சமோசா,டீ,தயிர் சாதம்….”

  சட்டென்று வீடியோவில் பார்த்தக் காட்சி கவிதையின் சாதாரணப் போக்கை திசை மாற்றிவிட்டது.

  இது தவிர இந்தப் பிரச்சனையை வைத்து மேலும் இரண்டு கவிதைகள் அப்போதே போட்டேன்.
  என் வலையில் பார்த்து கருத்துச் சொல்லலாம்.

 29. இன்னும் 10 வருடம் கழித்து கேரளாவிலதான் ஏதாவது மலையோர கிராமத்தில் செட்டிலாக வேண்டும்.

  அண்ணாச்சி எதுக்கும் ஒரு ரெண்டு போர்ஷனா பாத்து வங்குங்க……
  இங்கன ஒருத்தன் தயார்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s