கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா.


நோக்கம் :
கடிப்பதன் மூலம் மலேரியா மற்றும் டெங்கு காச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழித்தல்.

தேவையான உபகரணங்கள் :

1. இரு அங்குல நீளம் இரு அங்குல அகலம், ஒரு அங்குல உயரமுள்ள தட்டையான பரப்புள்ள கற்கள் இரண்டு. பக்கத்தில் எங்காவது கட்டிட வேலை நடந்தால் அங்கிருந்து மார்பிள் அல்லது கடப்பா கற்கள் கிடைத்தால் நலம்.

2. 100 மி லி அளவுள்ள சீசா நிறைய மயக்கமருந்து. சீசா மீது குளோரோபார்ம் என்று லேபில் இருந்தால் அகற்றிவிடவும் (காரணம் கடைசியில்). மயக்க மருந்து கிடைக்கவில்லையெனில் மாற்று ஏற்பாடு கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

3. பஞ்சு ரோல் – 1

4. 6 அடி நீளமும் 3 அடி அகலமும் உள்ள கெட்டியான போர்வை. காதி பவணில் வாங்குவது உசிதம்.

5. ஒரு டப்பா குளுக்கோஸ் பவுடர்.

செய்முறை:

முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். படுக்கை விரித்துத் தயார் செய்யவும். அரைமணி நேரம் கழித்து கதவு மற்றும் ஜன்னல்களை மூடவும். படுக்கையில் படுக்குமுன் தயார் செய்த கற்கள், பஞ்சு, மயக்க மருந்து ஆகியவற்றை தலைமாட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும். போர்வையால் முழு உடலையும் மூடிக் கொண்டு ஒரு கையை மட்டும் வெளியே நீட்டியவாறு படுக்கவும். உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை அசைபோடவும்.

முதலில் ஒரு கொசு வந்து வெளியே நீட்டியிருக்கும் கையில் இடம் பார்த்து அமரும். நன்றாக அமர்ந்து விட்டது என்று உறுதியானபின், போர்வைக்குள் இருக்கும் இன்னொருகையை நீட்டித் தலை மாட்டில் இருக்கும் மயக்கமருந்தை பஞ்சில் நனைத்து கொசுவின் மூக்கில் காட்டவும். கொசு மயங்கி விடும். ஒரு கல்லை எடுத்து மயங்கிய கொசுவை அதன் மீது சரியாக நட்ட நடுச் செண்டரில் வைக்கவும். இரண்டாம் கல்லை வைத்து ஓங்கி அடிக்கவும். அதிகச் சத்தம் வராமல் பார்த்துக் கொள்ளவும், மற்ற கொசுக்கள் பயந்து பின்வாங்கும் அபாயமுள்ளது.

இது போல பிற கொசுக்களுக்கும் தொடரவும்.

மயக்க மருந்து கிடைக்காதவர்கள் பலநாட்கள் துவைக்காத தங்கள் ஷாக்ஸை கொசு முகத்தில் காட்டினால் போதும அல்லது கொசுவின் கஷ்கத்தில் கிச்சு கிச்சு மூட்டலாம். பிற செய்முறைகள் அதே.

சீசாவின் லேபிலை அகற்றச் சொன்ன காரனம், கொசுக்கள் பொதுவாக எழுத்தறிவு இல்லாதவை என்றாலும் இளைய தலைமுறைக் கொசுக்களுக்குப் படிக்கத் தெரிந்திருக்கும், அவை மற்ற கொசுக்களை உஷார் படுத்திவிட வாய்ப்புண்டு.

முடிவு :
வீட்டுக்கு ஒரு இளைஞர் தங்கள் சுகதுக்கங்களைத் தியாகம் செய்து இந்நடவடிக்கையில் இறங்கினால், மனிதகுல அழிவுக்குக் காரணமான கொசு இனத்தை பூண்டோடு ஒழித்துவிடலாம்.


டிஸ்கி : குளுக்கோஸ் டப்பா எதுக்குன்னு உங்களுக்கு இன்னும் தெரியல்லன்னா இப்பத் தெரிஞ்சுக்குங்க. கொசு அடிச்சு டயர்டா ஆச்சுன்னா தண்ணியில குளுக்கோஸ் கலந்து குடிச்சா தேவையான சக்தியும் உறசாகமும் உடனடியாகக் கிடைக்கும் அதுக்குத்தான்
.

இந்தப் பதிவப் படிச்ச பதிப்புல எழுதுனது

Advertisements

25 comments

 1. ம்ம்ம்… நீங்களும் எதிர்பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா?

  இப்பிடி நேத்து எத்தனை கொசுவ கடிச்சீங்க சாரி அடிச்சீங்க?

 2. வீட்டுக்கு ஒரு இளைஞர் தங்கள் சுகதுக்கங்களைத் தியாகம் செய்து இந்நடவடிக்கையில் இறங்கினால், மனிதகுல அழிவுக்குக் காரணமான கொசு இனத்தை பூண்டோடு ஒழித்துவிடலாம்.

  ஆமாங்கண்ணா……”

  கும்கி கூட தேவையில்லீங்க

 3. வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
  http://www.thamizhstudio.com/
  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
  Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

 4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அண்ணாச்சி நீங்களுமா?

 5. இதே போல் கொசு ஒழிப்புக்கான உரல் ஒன்றை வடிவேல் ஒரு படத்தில் விற்பாரே……. ;))))

 6. இந்த சமாச்சாரத்தை வைத்து ஒரு திரைக்கதை அமைத்திருக்கிறேன். விரைவில் குறும்படமாக எடுக்க ஆசை

 7. அண்ணே,

  மூட்டை பூச்சி ஒழிக்க ஒரு பதிவிடுங்கண்ணே !

 8. நன்றி மகேஷ்
  நன்றி அத்திரி
  நன்றி சுரெஷ்
  நன்றி கிரி
  நன்றி வால்
  நன்றி தமிழ்
  நன்றி கோவி
  நன்றி சென்ஷி
  நன்றி பாலாஜி
  நன்றி ஆட்காட்டி

 9. SUREஷ் said…
  வீட்டுக்கு ஒரு இளைஞர் தங்கள் சுகதுக்கங்களைத் தியாகம் செய்து இந்நடவடிக்கையில் இறங்கினால், மனிதகுல அழிவுக்குக் காரணமான கொசு இனத்தை பூண்டோடு ஒழித்துவிடலாம்.

  ஆமாங்கண்ணா……”

  கும்கி கூட தேவையில்லீங்க

  இந்த களேபரத்துல நா என்னங்க பண்ணேன்..?

 10. இந்த மாதிரி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்காங்கன்னு பெயர் வாரியா தகவல் தெரிவிச்சா நொம்பல் பிரைசுக்கு ரெகமண்ட் பண்ண வசதியா இருக்கும்….

 11. பரிசல்காரன் said…
  Neenga Eppo ippadi aaneenga?

  அண்ணாச்சிக்கு கோவம் வந்தா இப்பிடித்தாம் போல……….

 12. தூங்குவதற்கு முன் அந்த கற்களை பத்திரப் படுத்திவிடவும்…இல்லையென்றால் உயிருடன் இருக்கும் கொசுக்கள் எல்லாம் ஒன்று செர்ந்து அந்த கற்களால் உங்களை அடிக்க வாய்ப்புண்டு.

 13. நன்றி பரிசல். கோபத்துல அங்கிரேசில திட்டியிருக்கீங்க.

  நன்றி கும்கி. உங்க பேர இதுல எதுக்கு இழுத்தாங்கன்னு எனக்கும் புரியல. என்ன உள்குத்து?

  நன்றி ராதாகிருஷ்ணன் சார். உங்க யோசனையும் முக்கியம்தான். மைண்ட்ல வச்சுக்கிறேன்.

 14. வடகரை வேலன் said…
  நன்றி பரிசல். கோபத்துல அங்கிரேசில திட்டியிருக்கீங்க

  அது எங்கண்ணே வியன்னாவுக்கு பக்கமாவா இருக்கு…?

 15. லேபில்ல இத்தனை பேர் பாராட்டியிருக்காங்க அப்படின்னு போட்டிருக்கீங்களே

  அது

  வந்து

  இதுக்கும்

  பொருந்துமா….?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

 16. நல்லாருக்கு எதிர் பதிவு!!
  அந்த பதிவு ஏற்கனவே படிச்சிட்டேன்(வேற என்ன வேலை)
  இதே மாதிரி அப்பப்போ எழுதுங்க!!!:-)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s