கதம்பம் – 22-11-08

இந்தித்திரைப்பட உலகை தன் இசையால் மயங்கச் செயதவர் நௌஷத். 1919ல் பிறந்த நௌஷத், 1930ம் ஆண்டில் பம்பாய் நகருக்குப் பிழைப்பைத் தேடி வந்தார். யாரும் அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்கவில்லை. பம்பாய் பராமுகமாய் இருந்தது.

எந்த ஸ்டூடியோவிலும் வேலை கிடைக்காமல், ஆரம்ப காலத்தில் கொடிய வறுமையில் உழன்ற போதிலும், மன உறுதியை இழக்கவில்லை. பம்பாய் நகரின் அசுத்தமான சாலைகளின் பிளாட்பாரங்களில் செய்தித்தாள்களை விரித்துக் களைப்புடன் படுத்து உறங்கியுள்ளார்.

அவர் இசையமைத்த படத்தின் முதல் நாள் காட்சி. அந்தத் திரையரங்கின் எதிர்புறமுள்ள பிளாட்பாரத்தில்தான் அவரது பெரும்பாலானா நாட்களைக் கழித்திருக்கிறார்.

படத்தயாரிப்பாளர் கேட்டார்” இப்பொழுது எவ்வாறு உணர்கிறீர்கள் நௌஷத்?”

நௌஷத் சொன்னார் “அந்தப் பிளாட்பாரத்திலிருந்து சாலையைக் கடந்து இந்தத் திரையரங்கத்திற்குள் வர எனக்குப் பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன”

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் வலி மிகுந்ததும், நம்பிக்கை நிறைந்ததுமான உழைப்பு இருந்தே தீரும்.

******************************************************************************
சட்டக் கல்லூரி வன்முறை பற்றி ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. ஆனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த என் போன்றோருக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதைவிடக் கொடூரமானவைகளை நேரில் பார்த்ததால் கூட இருக்கலாம்.

மேலும் இது மற்ற கல்லூரி மாணவர்கள் என்றால் கூட ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்ககூடும். ஆனால் சட்டக் கல்லூரி என்பதால் ஒரு எதிர் மறை விளைவை ஏற்படுத்தியது உண்மை. இதுக்காக அவங்க அடிச்சுகிட்டது சரின்னு சொல்லல. அவங்க வேறமாதிரி இருப்பாங்கன்னு எதிர்பார்த்தது;எதிர்பார்ப்பது நமது தவறுன்னு சொல்லுகிறேன்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கு, கோவை சட்டக் கல்லூரி மணவர்கள் நடத்திய கலாட்டா எந்த விதத்தில் ஞாயமானது என்று எவரும் பேசக் கானோம். கல்லூரிக் கண்ணாடிகளை, மேசை,நாற்காலிகளை உடைத்தது எந்த விததிலும் சரியல்ல.

சாதியை விட்டுத்தள்ளுங்கள். முதலாம் வருட இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையே அல்லது ஒரு பெண்ணைக் குறித்து இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல்களால் மருதமலைக்குச் செல்லும் பக்தர்கள் அவதியுற்ற கதைகள் ஏராளம். மற்ற இடங்களில் எப்படியோ வடவள்ளியில் பெரும்பாலானவர்கள் இவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் எனபதான மனநிலையில் இருப்பது கண்கூடு; இவ்வெண்ணம் தவறென்ற போதிலும்.

எத்தனை முறை, எதைத்தேய்த்துக் குளித்தாலும் அழியாத மச்சத்தைப் போல இவர்கள் மீது படிந்த இந்த அழுக்கு எளிதில் கரைந்துவிடாது; கரைக்கவும் முடியாதது.

********************************************************************

வண்ணதாசன் என்று அறியப்படுகிற கல்யாணசுந்தரம், கல்யாண்ஜி என்ற பெயரில் சிறந்த கவிதைகள் படைத்துள்ளார். அவரது கவிதைகளில் நமது தோளைத்தட்டிப் பாராட்டும் ஒரு தோழமை ஊடாடும்.

நேர்த்தியாக வெட்டப்பட்டு
ஒரு பீங்கான்தட்டின் பள்ளத்தில்
குவிந்திருக்கும் மாம்பழத் துண்டுகளின்
வடிவமும் நிறமும் வாசனையும்
மாறிக்கொண்டேயிருக்கிறது
விருந்தினர் வருகையின் தாமதம் சார்ந்து.
நறுக்கிய கத்தியின்
கைப்பிடியில் பதிந்திருக்கும்
ரேகைகளில் ஊஞ்சலாடுகிறது
கண்காணாத ஒரு மாமரம்.
என் கைகளை நுகர்கையில்
அசைகிறது ஒரு தூரத்து மாந்தோப்பு.
கரிய துகளை உதிர்த்தபடி
மாங்கொட்டை உள்ளிருந்து
வெளியேறும் வண்டின்
நகர்தலைப் பார்த்த பரவசத்தில்
வீடெங்கும் உதிர்கிறது
உயிர் உயிராக
ஓராயிரம் பூ என்னிடமிருந்து.
உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
என் கிளைகளை நோக்கி
சிறகடித்து வந்து கொண்டிருக்கும்
ஒரு பறவையின் கூவலுக்காக.

‘கடிதம்’ குறித்த இவரது கவிதையும் எனக்குப் பிடித்த ஒன்று. வண்ணதாசன் கதைகள் அனைத்தும் ஒரே தொகுதியாக வந்திருக்கிறது. ஒரு நாள் ஒரு கதை என்று படித்தால் ஒரு தனி வாசிபபனுபவம் கிட்டும்.

வலைப் பதிவாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் இவருடன் வங்கியில் வேலை செய்தவர் என்பதொரு கூடுதல் தகவலிங்கு.

***********************************************************************

வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலைக் கிழக்குப் பதிப்பகத்தார் இலவசமாக அனுப்பியுள்ளனர். படித்து முடித்ததும் எனது வலைத்தளத்தில் ஒரு விமர்சனப் பதிவு எழுதவேண்டும் என்ற ஏற்பாட்டின்படி. இந்தாளும் ஏதோ எழுதுறான்னு நெனைச்சிட்டாங்களோ?

**********************************************************************

மனைவி : ஏங்க இவ்வளவு சோகமா இருக்கீங்க?

கணவர் : எங்க மேனேஜர் என்னை அரை லூசுன்னு திட்டீட்டார்.

மனைவி : சரி விடுங்க உங்களைப் பத்தி அவருக்கு முழுசாத் தெரியல.

Advertisements

62 comments

 1. நல்ல கதம்பம்.. எனது பேவரைட் முகமது ரபியை அறிமுகம் செய்தது கூட நெளஷாத் தான்..:)
  கிழக்கு பதிப்பதுக்கு மிக்க நன்றிகள்!

 2. //முதலாம் வருட இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையே அல்லது ஒரு பெண்ணைக் குறித்து இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல்களால் ///

  இந்த மாதிரி விசயமெல்லாம் செம காமெடியா இருக்கும்! ஆனா ஒண்ணு இதை பண்ற காமெடியன்களை புடிச்சு வைச்சு சும்மா அடிச்சு தூள் கிளப்புணும்ங்கற அளவுக்கு நமக்குள்ள வில்லதனம் வந்துடும் :))

 3. //எத்தனை முறை, எதைத்தேய்த்துக் குளித்தாலும் அழியாத மச்சத்தைப் போல இவர்கள் மீது படிந்த இந்த அழுக்கு எளிதில் கரைந்துவிடாது; கரைக்கவும் முடியாதது.//

  !!!

  (இன்னைக்குத்தான் ஃபோன் போடணும்னு நெனைச்சேன். எங்க ஆளையே காணொம்னு.. எப்போ வர்றீங்க?)

 4. கவிதை நல்லாருக்கு!
  ஜோக் ஏற்கனவே கேட்டிருந்தாலும் , புன்னகைக்க வைக்கிறது.
  //எத்தனை முறை, எதைத்தேய்த்துக் குளித்தாலும் அழியாத மச்சத்தைப் போல இவர்கள் மீது படிந்த இந்த அழுக்கு எளிதில் கரைந்துவிடாது; கரைக்கவும் முடியாதது//
  நல்லாருக்கு, ஓரளவு உண்மையும் கூட

 5. நௌஷாத் பற்றிய செய்தி எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.. அவர் மலையாள திரை உலக இசையுலகத்திலும் ராஜாவாக இருந்தவர்.

  கதம்பம் சூப்பர்… தாமதம் ஏனோ?

 6. //சட்டக் கல்லூரி வன்முறை பற்றி ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. ஆனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த என் போன்றோருக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதைவிடக் கொடூரமானவைகளை நேரில் பார்த்ததால் கூட இருக்கலாம்.//

  சரியாச் சொன்னீங்க அண்ணாச்சி. 97- 98 ல கடையநல்லூரில் வேலை பாக்கும் போது 20 பேருந்துகளை தீ வைத்து எரித்து கலாட்டா செய்த காட்சிகள் இன்னும் என் கண்ணில் நிற்கிறது.

  கடைசி நகைச்சுவை…………………………

 7. சரின்னு சொல்லல. அவங்க வேறமாதிரி இருப்பாங்கன்னு எதிர்பார்த்தது;எதிர்பார்ப்பது நமது தவறுன்னு சொல்லுகிறேன்.//

  மிக்க சரி!

 8. //மனைவி : ஏங்க இவ்வளவு சோகமா இருக்கீங்க?

  கணவர் : எங்க மேனேஜர் என்னை அரை லூசுன்னு திட்டீட்டார்.

  மனைவி : சரி விடுங்க உங்களைப் பத்தி அவருக்கு முழுசாத் தெரியல.//

  என்ன வேலன் நீங்க வீட்டில் பேசுவதை எல்லாம் பதிவா போட்டுக்கிட்டு இருக்கீங்க:)))

 9. நல்ல விசயங்கள் வேலன் (அந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் குறித்த மக்களின் பார்வையும் சேர்த்துத்தான்)..

  பதிப்பகத்தார் புத்தகம் அனுப்புகிற அளவுக்கு வளர்ந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.. விரைவில் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறோம்..

 10. ஆயில்யன் said…

  //முதலாம் வருட இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையே அல்லது ஒரு பெண்ணைக் குறித்து இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல்களால் ///

  இந்த மாதிரி விசயமெல்லாம் செம காமெடியா இருக்கும்! ஆனா ஒண்ணு இதை பண்ற காமெடியன்களை புடிச்சு வைச்சு சும்மா அடிச்சு தூள் கிளப்புணும்ங்கற அளவுக்கு நமக்குள்ள வில்லதனம் வந்துடும் :))//

  பாதிக்கப்படற பொதுமக்கள், குறிப்பா வேலைக்குச் செல்லும் பெண்கள் படும்பாடு மிக அதிகம்.

 11. //T.V.Radhakrishnan said…

  நல்ல கதம்பம்

  idhaiyum paarkkavum
  http://tvrk.blogspot.com/2008/11/blog-post_22.html//

  சார் நீங்க அவருடன் ஒன்றாகப் பணியாற்றியவர் என்பது குறித்து உங்கள் மீது எனக்குச் சிறிது பொறாமையாக இருக்கிறது.

 12. பரிசல்காரன் said…

  (இன்னைக்குத்தான் ஃபோன் போடணும்னு நெனைச்சேன். எங்க ஆளையே காணொம்னு.. எப்போ வர்றீங்க?)

  நாளைக்கு மும்பை செல்கிறேன். திரும்பி வந்ததும் கண்டிப்பாக வருகிறேன்.

 13. // Mahesh said…

  கதம்பம் சூப்பர்… தாமதம் ஏனோ?//

  பணிச்சுமைதான் காரனம் மகேஷ்.

 14. // அத்திரி said…

  சரியாச் சொன்னீங்க அண்ணாச்சி. 97- 98 ல கடையநல்லூரில் வேலை பாக்கும் போது 20 பேருந்துகளை தீ வைத்து எரித்து கலாட்டா செய்த காட்சிகள் இன்னும் என் கண்ணில் நிற்கிறது. //

  அந்தக் கலவரத்தில் நானும் பாதிக்கப் பட்டிருக்கேன் அத்திரி.

  // கடைசி நகைச்சுவை…………………………//

  நல்லா இருக்கா? இல்லையா?

 15. //குசும்பன் said…

  சரின்னு சொல்லல. அவங்க வேறமாதிரி இருப்பாங்கன்னு எதிர்பார்த்தது;எதிர்பார்ப்பது நமது தவறுன்னு சொல்லுகிறேன்.//

  மிக்க சரி!//

  நன்றி குசும்பா.

  //மனைவி : ஏங்க இவ்வளவு சோகமா இருக்கீங்க?

  // கணவர் : எங்க மேனேஜர் என்னை அரை லூசுன்னு திட்டீட்டார்.

  மனைவி : சரி விடுங்க உங்களைப் பத்தி அவருக்கு முழுசாத் தெரியல.//

  என்ன வேலன் நீங்க வீட்டில் பேசுவதை எல்லாம் பதிவா போட்டுக்கிட்டு இருக்கீங்க:)))//

  அதுதான் அனுபவம்னு வகைப் படுத்தியிருக்கேனே.

 16. //K.Ravishankar said…

  வடகரை வேலன்,

  கதம்பம் நல்லாருக்கு.//

  நன்றி ரவி.

 17. // வெண்பூ said…

  பதிப்பகத்தார் புத்தகம் அனுப்புகிற அளவுக்கு வளர்ந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.. விரைவில் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறோம்..//

  அவங்களா அனுப்பல வெண்பூ. அது ஒரு திட்டம். இனையத்துல விளம்பரம் கொடுத்திருந்தாங்க. அதன் மூலம்தான் அனுப்பியிருக்காங்க. இன்னும் அந்த அளவுக்கு வளரல.
  ஏற்கனவே படிச்சிருந்தாலும் மீண்டும் ஒரு முறை படித்தபின்தான் எழுத வேண்டும்.

 18. //King… said…

  இப்படி எழுதுகிறவை நன்றாகத்தான் இருக்கிறது…//

  நன்றி கிங்.

 19. //எத்தனை முறை, எதைத்தேய்த்துக் குளித்தாலும் அழியாத மச்சத்தைப் போல இவர்கள் மீது படிந்த இந்த அழுக்கு எளிதில் கரைந்துவிடாது; கரைக்கவும் முடியாதது.//

  ரொம்ப சூப்பரா சொன்னீங்க, நல்ல கதம்பம்.

 20. //
  வடகரை வேலன் said…

  அதுதான் அனுபவம்னு வகைப் படுத்தியிருக்கேனே.
  //

  :))))

 21. நன்றி சிவா.

  ‘No man is a hero to his wife’ இது காலம் தோறும் மாறா உண்மை.

 22. //ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் வலி மிகுந்ததும், நம்பிக்கை நிறைந்ததுமான உழைப்பு இருந்தே தீரும்//

  சந்தேகமில்லாமல்.

  கஷ்டப்படாமல் கிடைக்கும் வெற்றி நிரந்தரம் இல்லை மற்றும் அதன் முக்கியத்துவம் உணரப்படுவதில்லை.

  //வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலைக் கிழக்குப் பதிப்பகத்தார் இலவசமாக அனுப்பியுள்ளனர். படித்து முடித்ததும் எனது வலைத்தளத்தில் ஒரு விமர்சனப் பதிவு எழுதவேண்டும் என்ற ஏற்பாட்டின்படி//

  அப்படியா!!! வாழ்த்துக்கள் வேலன் 🙂

  //மனைவி : சரி விடுங்க உங்களைப் பத்தி அவருக்கு முழுசாத் தெரியல//

  ஹி ஹி ஹி

 23. // கிரி said…

  //ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் வலி மிகுந்ததும், நம்பிக்கை நிறைந்ததுமான உழைப்பு இருந்தே தீரும்//

  சந்தேகமில்லாமல்.

  கஷ்டப்படாமல் கிடைக்கும் வெற்றி நிரந்தரம் இல்லை மற்றும் அதன் முக்கியத்துவம் உணரப்படுவதில்லை. //

  சரியாச் சொன்னீங்க கிரி.

  //வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலைக் கிழக்குப் பதிப்பகத்தார் இலவசமாக அனுப்பியுள்ளனர். படித்து முடித்ததும் எனது வலைத்தளத்தில் ஒரு விமர்சனப் பதிவு எழுதவேண்டும் என்ற ஏற்பாட்டின்படி//

  அப்படியா!!! வாழ்த்துக்கள் வேலன் :-)//

  நன்றி கிரி.

  //மனைவி : சரி விடுங்க உங்களைப் பத்தி அவருக்கு முழுசாத் தெரியல//

  ஹி ஹி ஹி//

  உங்களுக்கு இந்த நிலமை வர அதிக நாட்கள் ஆகாது :-(.

 24. வடகரை வேலன்,

  சின்ன யோசனை.எதிர்மரியாதை செய்யும்போது,தனியா தனியா செய்யாமல் ஒரே மறுமொழியா செய்யலாமே.நாங்க கோவிக்கமாட்டோம்.

 25. /*
  தென் மாவட்டங்களைச் சேர்ந்த என் போன்றோருக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதைவிடக் கொடூரமானவைகளை நேரில் பார்த்ததால் கூட இருக்கலாம்.
  */
  நீங்க சொல்லுறது உண்மைதான் நம்ம ஊரு பக்கம் எல்லாம் இது ரெம்ப சாதாரணம்

 26. நம்ம ஊர் பக்கம் சாதாரணம் என்பதால் இது கண்டிக்கப்படாமல் போய்விடக்கூடாது.

  —-

  50% of those in this room are fools அப்படின்னு ஒருத்தர் சட்டசபை மாதிரி ஒரு இடத்தில் சொன்னாராம். பெரும் களேபரம். அவரை சொன்னதை வாபஸ் வாங்கச் சொல்லிப் போராட்டம். அவரும் OK. 50% of those here are not fools. அப்படின்னு சொல்லிட்டாராம்.

  உங்க ஜோக் படிச்ச உடனே அதான் ஞாபகத்துக்கு வந்தது.

 27. //இலவசக்கொத்தனார் said…

  நம்ம ஊர் பக்கம் சாதாரணம் என்பதால் இது கண்டிக்கப்படாமல் போய்விடக்கூடாது.//

  கொத்ஸ் கண்டிக்கனும். ஆனா இரு தரப்பிலும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுட்டு செய்யனுமில்லையா?. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதுனதுதான் தவறு.

  —-
  // 50% of those in this room are fools அப்படின்னு ஒருத்தர் சட்டசபை மாதிரி ஒரு இடத்தில் சொன்னாராம். பெரும் களேபரம். அவரை சொன்னதை வாபஸ் வாங்கச் சொல்லிப் போராட்டம். அவரும் OK. 50% of those here are not fools. அப்படின்னு சொல்லிட்டாராம்.

  உங்க ஜோக் படிச்ச உடனே அதான் ஞாபகத்துக்கு வந்தது.//

  சரிதான். இதுபோல கப்பல் கேப்டன் எழுதின குறிப்பு ஜோக் இருக்கு. பின்பொருமுறை எழுதுகிறேன்.

 28. நசரேயன் said…

  /*
  தென் மாவட்டங்களைச் சேர்ந்த என் போன்றோருக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதைவிடக் கொடூரமானவைகளை நேரில் பார்த்ததால் கூட இருக்கலாம்.
  */
  நீங்க சொல்லுறது உண்மைதான் நம்ம ஊரு பக்கம் எல்லாம் இது ரெம்ப சாதாரணம்//

  ஆனா, அது மீடியாவுல இவ்வளவு பரபரப்பா வராது.

 29. சட்டக்கல்லூரி குறித்த சமூக அலசல் வரவேற்கத்தக்கது.அருமை.கல்யாண்ஜியின் அந்நியமற்ற நதி அண்மையில்தான் படித்தேன்.என் வலையில் எழுதும் திட்டம் வைத்துள்ளேன்.வாய்ப்புக் கிடைக்கவில்லை.கிழக்குப் பதிப்பகத்தார் நூல் அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இதனை இவன்கண்விடல்…என்று பொருத்தமாகத்தான் செய்திருக்கிறார்கள்.

 30. சட்டக்கல்லூரி விவகாரம் பல கோணங்களிலும் அலசப்பட்டு, எஞ்சி நிற்பது ஆயாசம். மிகுந்த ஆயாசம் சில பதிவுகளைப் படித்துத் தொலைத்ததால் என்று தனியே சொல்லவும் வேண்டுமா!

  கல்யாண்ஜி கவிதைகள் பற்றி எவ்வளவோ பேசலாம். ஒவ்வொரு கதம்பமும் கவிதை பற்றி சொல்வது சிறப்பு. தொடருங்கள் வேலன். அவ்வப்போது என் ஆதர்ச கவிஞன் தேவதச்சன் பற்றியும் எழுதுங்கள். அடர் கானகத்துள் கமழும் யுகலிப்டஸ் காற்றை சுவாசித்த அனுபவம் கிட்டும்.

  சில விடயங்கள் திடீரென்று நம்மைத் துரத்தும். ‘கடல் புரத்தில்’ அவ்வாறான ஒன்று.
  போன மாதம் சுந்தர் பரிந்துரையில் வாங்கிப் படித்தேன். முன்பே லேகாவும், சமீபத்தில் ஹரன் பிரசன்னாவும் சிறப்பாக விமர்சனம் எழுதியுள்ளனர். உங்கள் விமர்சனத்தையும் பதிவிடுங்கள்.

  அனுஜன்யா

 31. கல்யாண்ஜியின் பல கவிதைகள் மனப்பாடமாகவே தெரியுமளவிற்குப் பிடிக்கும்!

  வண்ணநிலவனின் கடல்புரத்தில் ஒரு மாஸ்டர் பீஸ்!

  நல்லா இருந்துச்சு இந்தக் கதம்பம்.

 32. கோவை சட்ட கல்லுரி சம்பவம் கண்டிப்பாக கண்டிக்கபட வெண்டிய ஒன்று.

  மாணவர்கள் கையில் நாளைய சமுதாயம் இருக்குன்னு நாம நினச்சிகிட்டு இருக்கோம்,
  ஆனா அவுங்க கையில்

 33. //ச.முத்துவேல் said…
  சட்டக்கல்லூரி குறித்த சமூக அலசல் வரவேற்கத்தக்கது.அருமை.//
  நிகழ்வின் இரு கூறுகளையும் தெரிந்து கொண்டு எழுதவேண்டும் என்பதால்தான் தாமதமாக எழுதினேன். நன்றி முத்துவேல்.

  //கல்யாண்ஜியின் அந்நியமற்ற நதி அண்மையில்தான் படித்தேன்.என் வலையில் எழுதும் திட்டம் வைத்துள்ளேன்.வாய்ப்புக் கிடைக்கவில்லை.//

  எழுதுங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

  //கிழக்குப் பதிப்பகத்தார் நூல் அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இதனை இவன்கண்விடல்…என்று பொருத்தமாகத்தான் செய்திருக்கிறார்கள்.//

  இது அதிகப்படியான பாராட்டு. இது போல பலருக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

 34. //அனுஜன்யா said…
  சட்டக்கல்லூரி விவகாரம் பல கோணங்களிலும் அலசப்பட்டு, எஞ்சி நிற்பது ஆயாசம். மிகுந்த ஆயாசம் சில பதிவுகளைப் படித்துத் தொலைத்ததால் என்று தனியே சொல்லவும் வேண்டுமா! //

  நடந்த வன்முறையால் ஏற்பட்ட அதிர்ச்சியை விட சில பதிவர்கள் இதை அனுகிய விதமும் எழுதிய விதமும் ஏற்புடையதன்று.

  //கல்யாண்ஜி கவிதைகள் பற்றி எவ்வளவோ பேசலாம். ஒவ்வொரு கதம்பமும் கவிதை பற்றி சொல்வது சிறப்பு. தொடருங்கள் வேலன். அவ்வப்போது என் ஆதர்ச கவிஞன் தேவதச்சன் பற்றியும் எழுதுங்கள். அடர் கானகத்துள் கமழும் யுகலிப்டஸ் காற்றை சுவாசித்த அனுபவம் கிட்டும். //

  கான்கிரீட் காடுகளின் புழுக்கம் மிகுந்த நாட்களைக் கவிதைச்சாளரம் திறந்துதான் புதுக்காற்றைச் சுவாசிக்க வேண்டியிருக்கிறது.

  //சில விடயங்கள் திடீரென்று நம்மைத் துரத்தும். ‘கடல் புரத்தில்’ அவ்வாறான ஒன்று.
  போன மாதம் சுந்தர் பரிந்துரையில் வாங்கிப் படித்தேன். முன்பே லேகாவும், சமீபத்தில் ஹரன் பிரசன்னாவும் சிறப்பாக விமர்சனம் எழுதியுள்ளனர். உங்கள் விமர்சனத்தையும் பதிவிடுங்கள். //

  கடல்புரத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி. விரைவில் எழுதுகிறேன்.

 35. அனுஜன்யா,

  உங்கள் இல்லத்திலிருந்து கொண்டு உங்கள் கனினியிலிருந்தே உங்கள் பின்னூட்டத்திற்குப் பதிலளித்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.

  நன்றி.

 36. //ஜ்யோவ்ராம் சுந்தர் said…
  கல்யாண்ஜியின் பல கவிதைகள் மனப்பாடமாகவே தெரியுமளவிற்குப் பிடிக்கும்!

  வண்ணநிலவனின் கடல்புரத்தில் ஒரு மாஸ்டர் பீஸ்!

  நல்லா இருந்துச்சு இந்தக் கதம்பம்.//

  நம்றி சுந்தர்.

  நீங்கள் படித்தவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் எங்களைப் போன்றவர்கள் படிக்கத் தூண்டுகோலாக இருக்கும். எதைப் படிக்கவேண்டும் என்ற தெளிவில்லாமல் நிறையப் பதிவர்கள் கிடைத்தவற்றைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 37. //வால்பையன் said…
  கோவை சட்ட கல்லுரி சம்பவம் கண்டிப்பாக கண்டிக்கபட வெண்டிய ஒன்று.

  மாணவர்கள் கையில் நாளைய சமுதாயம் இருக்குன்னு நாம நினச்சிகிட்டு இருக்கோம்,
  ஆனா அவுங்க கையில் //

  பதில் தெரிந்தும் சொல்ல முடியாத கேள்வி. சொன்னால் அவநம்பிக்கை விதைகளைத் தூவுவதாகவே அமையும்.

 38. //நல்ல கதம்பம்.. எனது பேவரைட் முகமது ரபியை அறிமுகம் செய்தது கூட நெளஷாத் தான்..:)//

  வழிமொழிகிறேன்:):):)

 39. அதேமாதிரி ஒருதரம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்கும் கூடத்திற்கு வந்து அசந்து விட்டாராம் நௌஷாத். ‘அட என்ன இவ்ளோ இளமையா இருக்கீங்க ரெண்டு பேரும், அதுவும் இவ்ளோ ஸ்பீடா அருமையா இனிமையா ம்யூசிக் போட்டு, கம்போசிங்கை முடிச்சு, செம சீக்கிரமா ரெக்கார்டிங்கயும் முடிக்கறீங்க. நான் உங்க பாடல்கள் கேட்டு அசந்துப்போய், நெறைய நாள் எடுப்பீங்க ஒரு பாட்டுக்குன்னே நெனச்சேன்னு’ சொல்லி அவ்ளோ பாராட்டினாராம்:):):)

 40. நம்ம ஊர் இசையமைப்பாளர்களின் திறமை அவங்களோட சரக்கில் மட்டுமில்லை, ஸ்பீடிலும் உண்டு(ரஹ்மான் சார் தவிர்த்து)

 41. எனக்கு நெனவு தெரிஞ்சதுல இருந்து சட்டக் கல்லூரி இப்டித்தான் இருக்கு, ஆனா என்ன, ஊடகங்கள்தான் இப்போ மேலும் ஊடுருவியிருக்கு. அதனால் வீரியம் ஜாஸ்தி.

 42. //“அந்தப் பிளாட்பாரத்திலிருந்து சாலையைக் கடந்து இந்தத் திரையரங்கத்திற்குள் வர எனக்குப் பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன”//

  நல்ல அருமையான வரிகள் …எல்லோருக்கும் தேவை இப்படிப் பட்டதோர் தருணம் என்ற ஆவலைத் தூண்டும் வரிகள்…யாருக்குமே தொடர்ந்த அலைச்சலின் பின் தொடர்ந்த இடையூறுகளின் பின் கிடைக்கும் வெற்றி இப்படிப்பட்ட நிம்மதி கலந்த வார்த்தைகளை உதிர்க்கச் செய்யுமோ?

 43. //rapp said…

  அதேமாதிரி ஒருதரம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்கும் கூடத்திற்கு வந்து அசந்து விட்டாராம் நௌஷாத். ‘அட என்ன இவ்ளோ இளமையா இருக்கீங்க ரெண்டு பேரும், அதுவும் இவ்ளோ ஸ்பீடா அருமையா இனிமையா ம்யூசிக் போட்டு, கம்போசிங்கை முடிச்சு, செம சீக்கிரமா ரெக்கார்டிங்கயும் முடிக்கறீங்க. நான் உங்க பாடல்கள் கேட்டு அசந்துப்போய், நெறைய நாள் எடுப்பீங்க ஒரு பாட்டுக்குன்னே நெனச்சேன்னு’ சொல்லி அவ்ளோ பாராட்டினாராம்:):):) //

  திறமையைக் கண்டு பாராட்டும் பழக்கம் பெரியவர்களிடம் இயல்பாகவே இருந்தத்து. இப்ப பொறாமைதான் முதலில் வருகிறது.

  // நம்ம ஊர் இசையமைப்பாளர்களின் திறமை அவங்களோட சரக்கில் மட்டுமில்லை, ஸ்பீடிலும் உண்டு(ரஹ்மான் சார் தவிர்த்து)//

  ஹாரிஸ்ஸும் அதிக நேரம் எடுத்துக்குவாரு. குறைவான நேரத்துல அதே சமயம தரமான இசை ரசிக்கும்படியானா அது இசைஞானிதான்.

  // எனக்கு நெனவு தெரிஞ்சதுல இருந்து சட்டக் கல்லூரி இப்டித்தான் இருக்கு, ஆனா என்ன, ஊடகங்கள்தான் இப்போ மேலும் ஊடுருவியிருக்கு. அதனால் வீரியம் ஜாஸ்தி. //

  இல்லிங்க. மோசமா இருந்து இப்ப ரெம்ப மோசமா ஆயிருச்சு.

  // எப்போ அந்த புத்தகத்தோட விமர்சனம் வரும்:):):) //

  விரைவில் எழுதுகிறேன்.

  நன்றி ராப்.

 44. // நான் கார்த்தி said…

  //“அந்தப் பிளாட்பாரத்திலிருந்து சாலையைக் கடந்து இந்தத் திரையரங்கத்திற்குள் வர எனக்குப் பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன”//

  நல்ல அருமையான வரிகள் …எல்லோருக்கும் தேவை இப்படிப் பட்டதோர் தருணம் என்ற ஆவலைத் தூண்டும் வரிகள்…யாருக்குமே தொடர்ந்த அலைச்சலின் பின் தொடர்ந்த இடையூறுகளின் பின் கிடைக்கும் வெற்றி இப்படிப்பட்ட நிம்மதி கலந்த வார்த்தைகளை உதிர்க்கச் செய்யுமோ?//

  பிரசவித்த தாய் தன் மகவைப் பார்க்க்கும் போதிருக்கும் மனநிலையிது.

 45. மிகத்தாமதமான வருகை… 😦

  அருமையான தகவல்கள்.. கடல்புரத்தில் விமர்சனத்தை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.

 46. கடைசியா சொன்னது முந்தையதெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது.

  சொன்ன எல்லா விஷயங்களும் எனக்கு புதுசு, ரொம்ப நல்லா இருந்தது.

 47. கல்யாண்ஜியின் நிலா பார்த்தல் மட்டும் படித்திருக்கிறேன்.

  நன்றாக இருந்தது, அவரின் மற்ற நூல்கள் பெயர் தரமுடியுமா.

 48. //வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலைக் கிழக்குப் பதிப்பகத்தார் இலவசமாக அனுப்பியுள்ளனர். படித்து முடித்ததும் எனது வலைத்தளத்தில் ஒரு விமர்சனப் பதிவு எழுதவேண்டும் என்ற ஏற்பாட்டின்படி. இந்தாளும் ஏதோ எழுதுறான்னு நெனைச்சிட்டாங்களோ?//

  நீங்க ‘விமர்சனம் எழுதறேன்’னு ஒத்துகிட்டதனாலத்தானே அவங்க அனுப்பிச்சாங்க. அப்ப ‘நம்மளும் ஏதோ எழுதறோம்’னு நீங்கதான் நினச்சிகிட்டிருக்கீங்க :-))

  வண்ணதாசனின் கவிதை சுஜாதா மூலம்தான் அறிமுகமானது. ‘கருப்பு ரப்பர் வளையள் அணிந்த பெண்…’ கவிதை படித்திருப்பீர்களே?

  எனது தந்தையாருடன் அவர் பணி புரிந்த்ததால் ஒரு முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். ஆனால் அதிகம் பேச முடியவில்லை.

 49. ஸ்ரீதர், அந்தக் கவிதை :

  கருப்பு வளையல்
  கையுடன் ஒருத்தி
  குனிந்து வளைந்து
  பெருக்கிப் போனாள்
  வாசல் சுத்தமாச்சு
  மனசு குப்பையாச்சு

 50. இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி வேலன் ஸார்..

  இதனை எப்படி கொடுப்பது என்று எனக்குத் தெரியாததால் பலருடைய நல்ல பதிவுகளுக்கு இணைப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது.

  நீங்களாவது சொல்லுங்கள்..

 51. அடேங்கப்பா நீங்களே தனியாக ஒரு திரட்டி அளவிற்கு வலைப்பூக்களைத் திரட்டி வருகிறீர்களே.

  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

 52. கருத்துச் சொன்னவங்களுக்கெல்லாம் நன்றி.

  இதற்குப் பிறகு 3 பதிவுகள் எழுதியபின்னும் தமிழ்மணத்தில் இதற்குத்தான் லின்க் கொடுக்கிறார்கள். என்ன தொழில் நுட்பக் கோளாறுன்னு தெரியல.

  என்னுடைய மத்த பதிவுகளையும் படிச்சிட்டு உங்க கருத்தச் சொல்லுங்க.

  மீண்டும் நன்றி

 53. அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்…

  எந்த பதிவுக்கு போனாலும் வடகரை வேலன் கதம்பம் என்று இந்த பதிவுக்கு பேக் லிங்க் இருக்கே இது எப்படி சாத்தியம் ???

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s