கதம்பம் – 9/11/08

ஒரு முறை கலைவாணர் அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். வந்தவரை எதிரில் இருக்கும் இருக்கையில் அமரும்படிச் சொன்னார் கலைவாணர்.

அதற்கு வந்தவர், “ நான் யார் தெரியுமா?” என்றார்.

கலைவாணர், “தெரியாதுங்களே“ என்றார்.

“நாந்தான் சிங்கம்பட்டி ஜமீந்தார்” என்றபடியே மீசையை முறுக்கினார் வந்தவர்.

அதற்கு கலைவாணர்,”அப்படியா! நல்லது, அப்ப இந்த ரெண்டு சேர்லயும் உக்காருங்க” அப்படின்னு எதிரே இருந்த இரண்டு நாற்காலிகளையும் காட்டினார்.

****************************************************************


இவ்வாண்டு, புக்கர் பரிசு ஓர் இந்தியர் எழுதிய முதல் நாவலுக்கே கிடைத்திருக்கிறது என்பது பற்றி இந்தியர்களாகிய நாம் மகிழ்ச்சிக்கு அடையலாம்.
ஆனால், பெருமை கொள்ளமுடியுமா என்பது சந்தேகந்தான். – இந்திரா பார்த்தசாரதி.

புக்கர் பரிசு பெற்ற இந்நாவலை என் வட்டத்தில் எல்லோரும் படித்து முடித்து இறுதியாகத்தான் நான் படித்தேன்.

கிராமத்துல ஏழை ரிக்‌ஷாக்காரருக்கு மகனாகப் பிறந்த பல்ராம் கார் டிரைவராகி, ஒரு குற்றம் செய்தபின் தலை மறைவாகி, தொழிலதிபராகும் கதைதான். நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால் சாதாரணக் கதையாகியிருக்கும். சீன அதிபருக்குக் கடிதம், கொஞ்சம் பிளாஷ் பேக் என ஜிகினாத்தனம் செய்து ஒப்பேத்தியிருக்கார்.

கிரைம் நாவலாகவும் இல்லாம சமுதாய நாவலாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறது. இதற்கு புக்கர் பரிசு என்பது, பரிசுக்கான தகுதிகளின் மீதான கேள்வியையும் தேர்வுக் குழுவின் மீதான நேர்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆனால் சுகேது மேத்தா எழுதிய ’மேக்சிமம் சிட்டி’ இதை விட எல்லா வகையிலும் ஆகச்சிறந்த ஒரு படைப்பு. மும்பையின் பல்வேறு முகங்களை அதன் தோலுரித்துக் காட்டுகிறார். ரசிக்கத் தகுந்த நடையும், எழுதுமுன் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியும் பாராட்டத்தகுந்த ஒன்று.

தமிழில் நாஞ்சில் நாடன் எழுதிய “எட்டுத் திக்கும் மதயானை’ என்ற படைப்பை வாசித்தவர்களுக்கு ’வெள்ளைப் புலி’ மிகுந்த ஏமாற்றமே.

”ஒரு தேர்ந்த திரைக்கதை போன்ற எழுத்து நாஞ்சில் நாடனுடையது.மனக்கண் முன் காட்சிகளாக விரியும் வார்த்தையாடல்கள்.மிகத் தெளிவான,ஆர்வமான எழுத்து என வாசிப்பின்பத்திற்கு நாஞ்சில் நாடன் முழு உத்திரவாதம்.” அய்யனார்.

*************************************************************

மரணம் பழகியவள்

கிழக்குப்பார்த்துக் கிடக்கிறது பிணம்.
நீள்சம்பங்கி வாசத்தில்
மணமேடை ஆரவாரம் தேடும் குழந்தைக்கு
சொல்லாமல் திரும்பிச் செல்ல
கற்றுக்கொடுக்கப்படும் மரபு

ஒற்றைகுரல் ஒப்பாரி ஆகாதென‌
சேர்ந்தழும் புடவைக்கூட்டம் அடுபேற்றாமல்
அடுத்தவீட்டு தேனீர் சுவைக்கிறது

விறைப்பிளகி குளிப்பாட்ட அணைக்கப்பட்ட‌
குளிர்ப்பெட்டி கணக்கிலேறும் மற்றுமொரு சவம்

நெஞ்சு பிடித்து விழி பிதுங்கி
எச்சில் வ‌ழிய க‌ண் கசிந்த‌
கடைசி உயிர்வலி ஸ்பரிசித்து
துப்பட்டாவில் துடைத்தெடுத்த‌
சின்ன மகள்

எல்லா பிணங்களையும் இழுத்துச் செல்வாள்
கண்ணீரின்றி வலியுமின்றி.

அனிதா, மென்பொருள் பொறியாளர், பெங்களூரு, கர்நாடகா,இந்தியா.

இவரது கவிதைகள் பலவும் பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. வாழ்க்கை பற்றிய வேறொரு பரிமாணத்தை முன் வைக்கும் இவர் கவிதைகள் , வாழ்வின் ஆதாரமான நம்பிக்கைகள் மீதான கேள்விகளை முன் வைத்துச் செல்கின்றன. வெளிச்சம் பாயும் போது நீழும் நிழல் பி்ற சமயங்களில் காலுக்குக் கீழே பதுங்கிக் கிடப்பதைப் போல பெண்கள் தங்களுக்குள் எழும் கேள்விகளை மறைத்தவாறும், தோன்றும் சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவதுமாவே கழிகிறது வாழ்க்கை. கற்பு மற்றும் ஆண் பெண் உறவுகளின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மேல் வீசபபடும் இவரது கேள்விகள் அவ்வகையானவை; விவாதத்துகுரியவை.

***********************************************************

ரயில் பயணம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான அனுபவத்தை அளித்தபடியேதானிருக்கிறது. ஆனால் காலம்தோறும் மாறத ஒன்று,
ஆரம்பத்தில் விரோதிகள் போல இறுக்கமாக இருப்பவர்கள், பயண இறுதியில் பரஸ்பரம் முகவரி வாங்கும் அளவுக்கான நெருக்கத்தை அடைந்து விடு்வதுதான்.

தண்ணீரோ, சில்லறைக் காசுகளோ, உணவுப் பதார்த்தங்களோ, புத்தகங்களோ, சீட்டுக் கட்டொ ஏதோ ஒன்று காரணியாக அமைகிறது. மாறத சிலரும் உண்டு அவர்களுக்கான மெல்ட்டிங் பாயிண்ட் வேறொன்றாக இருக்கக் கூடும்.

*****************************************************

”என்னடா உங்கப்பா தலையெல்லாம் இப்படி வீங்கியிருக்கு?”

“ஆமாடா அவரு நேத்து கொட்டுற பனியில வாக்கிங் போனாரு”

Advertisements

57 comments

 1. கதம்பம் எப்போதும் போலவே சிறப்பாக இருக்கிறது… கவிதையை இரசித்தேன்… நெடுந்தூர இரயில் பயண அனுபவம் ஏற்பட்டதில்லை… நீங்கள் சொல்லியது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது…

 2. கதம்பம் எப்போதும் போலவே சிறப்பாக இருக்கிறது… உங்கள் கவிதை வாசிப்பு பிரமிக்க வைக்கின்றது..:)

 3. //மாறத சிலரும் உண்டு அவர்களுக்கான மெல்ட்டிங் பாயிண்ட் வேறொன்றாக இருக்கக் கூடும்.//

  நச்..

 4. //நேத்து கொட்டுற பனியில்//

  டைமிங் நகைச்சுவை !

  “கதம்பம் – 9/11 – அதிரடிதான் 9/11எண்ணைப் போலவே.

 5. கதம்பம் அருமை….
  (கதம்பம், கூட்டாஞ்சோறு,அவியல் இப்படின்னு வலையுலகில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கும் போல இருக்கே :))

  கலைவாணரின் நகைச்சுவையும் கடைசியில் இருக்கும் துனுக்கும் பிரமாதம்

 6. நன்றி விக்கி.

  நன்றி தமிழ்.

  நன்றி கபிஷ்.

 7. நன்றி விக்கி.

  நன்றி தமிழ்.

  நன்றி கபிஷ்.

 8. நன்றி கோவி.

  வாங்க பிரேம், இதுதான் முதல் வருகை போல. நன்றி.

 9. முன்னமே படிச்சிருக்கேன்… ஆனா இப்போ தான் பின்னூட்டம் போட முடிஞ்சது 🙂

 10. அண்ணா..

  எங்க போயிருந்தீர்?

  உங்ககிட்ட நான் பொறாமைப்படற விஷயம்.. உங்க வாசிப்பு.

  அந்தப் பொறாமை அதிகமாய்ட்டே போகுது.

 11. பரிசல்காரன் said…

  // அண்ணா..

  எங்க போயிருந்தீர்?

  உங்ககிட்ட நான் பொறாமைப்படற விஷயம்.. உங்க வாசிப்பு.

  அந்தப் பொறாமை அதிகமாய்ட்டே போகுது.//

  15 நாட்களிலேயே இரு முறை மும்பை போகும்பட் ஆகிவிட்டது கிருஷ்ணா.

  பயணத்திற்கு புத்தகம்தான் நல்ல துணை.

  இம்முறை one night at call cetnre & 3 mistakes of my life by chetan baghat படித்தேன் இரண்டும் சுமார்தான்.

 12. அண்ணாச்சி,
  வழக்கம் போல கதம்பம் மிக அருமை.
  விருது பெற்ற பல புத்தகங்களைப் படித்துவிட்டு நானும் இப்படி எண்ணியது உண்டு. எல்லாம் அரசியல் மயம், வேறென்ன சொல்ல?

  எனக்கு ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும், அதுலயும் பகல் நேரத்து ரயில் பயணம் தான் ரொம்ப விருப்பம். அலுக்கவே அலுக்காது.

  நகைச்சுவை மிக அருமை.

 13. நன்றி முரளிக்கண்ணன்.

  ஆமாங்க ஜோசப். எங்க லைப்ரரில அந்தப் புத்தகம் 5 காபி வாங்கீட்டாரு பாவம். 2 புத்தகம் இன்னும் உரையிலிருந்து பிரிக்கப் படாம்லயே இருக்கிறது.

  எஸ்.ராமகிருஷ்ணன் மாதிரி இலக்கில்லாமல் அலைய மனசு ஏங்குது. ஆனா முடியலையே.

 14. வேலன் வீட்டு தங்கமணி-உங்க தலயில் என்ன வீக்கம்?
  வேலன்- கதம்பம் நல்லாயிருக்குன்னு ராதாகிருஷ்ணன் தலையில் குட்டினார்..அதுதான்

 15. அண்ணாச்சி வழக்கம் போல கதம்பம் சூப்பர். கவிதையும், கடைசி நகைச்சுவையும் அருமை

 16. இரயில் பயணம் பற்றி சொன்னது நல்லா எனக்கு புரியும் ஏன்னா.. 2 நாள் பயணமாச்சே எங்களோடது..

  முதல் நாள் பெட்டி வைப்பதில் கொஞ்சம் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிட்டு.. ஒருமாதிரி எதிரியாட்டமே இருப்போம்.. போகும் போது அட்ரஸ் வாங்கியதும் உண்டு.. 🙂
  ஆனா சிலர் கடைசி வரை போர்வைக்குள்ளே இருத்திக்கொண்டோ பிள்ளைங்க சேஷ்டைக்குக்கூட சிரிக்காமல் விண்டோ வழியா இருட்டையே பார்ப்பவர்களும் உண்டு..

  கதம்பம் எப்போதும் போலவே மணக்கிறது.

 17. //அப்படியா! நல்லது, அப்ப இந்த ரெண்டு சேர்லயும் உக்காருங்க” அப்படின்னு எதிரே இருந்த இரண்டு நாற்காலிகளையும் காட்டினார்.//

  ஹா ஹா ஹா வேலன் இதை எல்லாம் எங்கே இருந்து பிடிக்கறீங்க :-)))

 18. //T.V.Radhakrishnan said…

  வேலன் வீட்டு தங்கமணி-உங்க தலயில் என்ன வீக்கம்?
  வேலன்- கதம்பம் நல்லாயிருக்குன்னு ராதாகிருஷ்ணன் தலையில் குட்டினார்..அதுதான்//

  அய்யா குட்டினது வலிக்கவே இல்லை. பின் எப்படி வீங்கும். கோழி மிதித்து குஞ்சுக்கு வலிக்குமா?

 19. //அத்திரி said…

  அண்ணாச்சி வழக்கம் போல கதம்பம் சூப்பர். கவிதையும், கடைசி நகைச்சுவையும் அருமை//

  நன்றி அத்திரி.

 20. //முத்துலெட்சுமி-கயல்விழி said…

  இரயில் பயணம் பற்றி சொன்னது நல்லா எனக்கு புரியும் ஏன்னா.. 2 நாள் பயணமாச்சே எங்களோடது..

  முதல் நாள் பெட்டி வைப்பதில் கொஞ்சம் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிட்டு.. ஒருமாதிரி எதிரியாட்டமே இருப்போம்.. போகும் போது அட்ரஸ் வாங்கியதும் உண்டு.. 🙂
  ஆனா சிலர் கடைசி வரை போர்வைக்குள்ளே இருத்திக்கொண்டோ பிள்ளைங்க சேஷ்டைக்குக்கூட சிரிக்காமல் விண்டோ வழியா இருட்டையே பார்ப்பவர்களும் உண்டு.. //

  இதை வைத்து நீங்கள் ஒரு பதிவு எழுதலாமே.

  //கதம்பம் எப்போதும் போலவே மணக்கிறது.//

  நன்றிங்க.

 21. //கிரி said…

  //அப்படியா! நல்லது, அப்ப இந்த ரெண்டு சேர்லயும் உக்காருங்க” அப்படின்னு எதிரே இருந்த இரண்டு நாற்காலிகளையும் காட்டினார்.//

  ஹா ஹா ஹா வேலன் இதை எல்லாம் எங்கே இருந்து பிடிக்கறீங்க :-)))//

  வாங்க கிரி. கிடைக்கிறப்ப படிச்சு, அப்பப எடுத்து விடுறதுதான்.

 22. அப்படியா! நல்லது, அப்ப இந்த ரெண்டு சேர்லயும் உக்காருங்க” அப்படின்னு எதிரே இருந்த இரண்டு நாற்காலிகளையும் காட்டினார்.

  கதம்பம் வண்ணமும்,
  மணமும் அருமை!

 23. //”என்னடா உங்கப்பா தலையெல்லாம் இப்படி வீங்கியிருக்கு?”

  “ஆமாடா அவரு நேத்து கொட்டுற பனியில வாக்கிங் போனாரு”//

  ஊட்டம்மா கிட்ட அடிவாங்கறதை எப்டி எல்லாம் சமாளிக்கிறங்கய்யா..

  ரயில் அனுபவம் எல்லோருக்கும் பொறுந்தும் என்று நினைக்கிறேன். குறிப்பாக நம்மள மாதிரி அடிக்கடி பயணிக்கிறவங்களுக்கு.. 🙂

  புக்கர் பரிசு, கவிதை சமாச்சாரங்கள் எல்லாம் அறிவாளிகள் மேட்டரா இருப்பதால் நோ கமெண்ட்ஸ்.. :))

 24. //பிரேம்குமார் said…

  கதம்பம் அருமை….
  (கதம்பம், கூட்டாஞ்சோறு,அவியல் இப்படின்னு வலையுலகில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கும் போல இருக்கே :))//
  அவ்வ்வ்வ்வ்வ்வ்.. என் டரியல் யாருக்குமே தெரியாதா? :((

 25. // ஜீவன் said…

  கதம்பம் வண்ணமும்,
  மணமும் அருமை!//

  நன்றி ஜீவன்

 26. பொடியன்-|-SanJai said…

  //”என்னடா உங்கப்பா தலையெல்லாம் இப்படி வீங்கியிருக்கு?”

  “ஆமாடா அவரு நேத்து கொட்டுற பனியில வாக்கிங் போனாரு”//

  ஊட்டம்மா கிட்ட அடிவாங்கறதை எப்டி எல்லாம் சமாளிக்கிறங்கய்யா..//

  வீட்டம்மாகிட்டல்லாம் ஏவுகனைத்தாக்குதல்தான்.

  // ரயில் அனுபவம் எல்லோருக்கும் பொறுந்தும் என்று நினைக்கிறேன். குறிப்பாக நம்மள மாதிரி அடிக்கடி பயணிக்கிறவங்களுக்கு.. 🙂 //

  ஆமாங்க சஞ்சய்.

  // புக்கர் பரிசு, கவிதை சமாச்சாரங்கள் எல்லாம் அறிவாளிகள் மேட்டரா இருப்பதால் நோ கமெண்ட்ஸ்.. :))//

  இதுதானே வேனாங்கிறது.

 27. //பொடியன்-|-SanJai said…

  //பிரேம்குமார் said…

  கதம்பம் அருமை….
  (கதம்பம், கூட்டாஞ்சோறு,அவியல் இப்படின்னு வலையுலகில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கும் போல இருக்கே :))//
  அவ்வ்வ்வ்வ்வ்வ்.. என் டரியல் யாருக்குமே தெரியாதா? :(( //

  தலைப்ப மாத்திப் பாருங்க.

 28. சுகேது மேத்தா எழுதிய ’மேக்சிமம் சிட்டி’ இதை விட எல்லா வகையிலும் ஆகச்சிறந்த ஒரு படைப்பு.// அண்ணே பிரமிக்க வைக்கிறீங்கண்ணே.. பயமாருக்குது. நமக்கு இங்கிலீஷு பேசுறதுக்கே மூச்சு வாங்குது. எப்பிடிதான் படிக்கிறீங்களோ.. தமிழைத்தவிர, காலரைக்கால் இங்கிலீஷ் தவிர வேற மொழி ஒண்ணுமே தெர்லயேண்ணே.. சரிதான் இன்னும் தமிழ்லயே படிக்க 1008 இருக்கும் போது இந்தக்கவலை எதுக்கு?ன்னு என்னையே தேத்திக்கிறேன். எட்டுதிக்கும் மதயானை இன்னும் படிக்கலை. அத முதலில் பண்ணலாம்.

 29. அதுவும் இந்த மொழிப்புலமையில் தமிழ்பிரியன் ரொம்பவே என்னை கடுப்பேத்துகிறார்.

 30. கலைவாணர் துணுக்கை மிக ரசித்தேன். என்ன தேர்ந்த டைமிங் சென்ஸ்.

 31. சூப்பர்:):):) இந்திய எழுத்தாளர்களை இங்கிருந்து எழுதுபவர்கள் அல்லது இங்கு பிறந்து வளர்ந்து பின்னர் வாலிபத்தில் வெளிநாடு சென்றவர்கள் என்றும் வெளிநாட்டில் பிறந்து எழுதுபவர்கள் என்றும் ஈசியா வகைப்படுத்திடலாம். ஆனா இவரை மாதிரி சில பேர் இருப்பாங்க

 32. //அவர்களுக்கான மெல்ட்டிங் பாயிண்ட் வேறொன்றாக இருக்கக் கூடும்//

  சூப்பர் பன்ச்:):):)

 33. வேலன்,

  இந்த முறை கதம்பம் முற்றிலும் வேறு தளத்தில் இருக்கிறது. உங்கள் பரந்த வாசிப்பின் பயன் எங்களுக்கும் கிடைக்கும் என்று மகிழ்ச்சி. ஒவ்வொன்றாக எழுத முடியவில்லை. தாமதமாக வந்ததால் பின்னூட்ட எண்ணிய விஷயங்களும் அனைவராலும் எழுதப்பட்டுவிட்டன. அதனாலென்ன! சிறப்பான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 34. //தாமிரா said…

  சுகேது மேத்தா எழுதிய ’மேக்சிமம் சிட்டி’ இதை விட எல்லா வகையிலும் ஆகச்சிறந்த ஒரு படைப்பு.// அண்ணே பிரமிக்க வைக்கிறீங்கண்ணே.. பயமாருக்குது. நமக்கு இங்கிலீஷு பேசுறதுக்கே மூச்சு வாங்குது. எப்பிடிதான் படிக்கிறீங்களோ.. தமிழைத்தவிர, காலரைக்கால் இங்கிலீஷ் தவிர வேற மொழி ஒண்ணுமே தெர்லயேண்ணே../

  தாமிரா மேக்ஸிமம் சிட்டி ஆங்கிலம்தான்.

  //சரிதான் இன்னும் தமிழ்லயே படிக்க 1008 இருக்கும் போது இந்தக்கவலை எதுக்கு?ன்னு என்னையே தேத்திக்கிறேன். எட்டுதிக்கும் மதயானை இன்னும் படிக்கலை. அத முதலில் பண்ணலாம்.//

  நாஞ்சில் நாடன முயலுவதாக இருந்தால் அவரது ச்துரங்கக் குதிரை முதலில் படியுங்கள்.

 35. //தாமிரா said…

  அதுவும் இந்த மொழிப்புலமையில் தமிழ்பிரியன் ரொம்பவே என்னை கடுப்பேத்துகிறார்.//

  பொறாமைதானே. எனக்கும் அவர்மேல் கொஞ்சம் அன்பு கலந்த பொறாமை உண்டு. மனிதர் தமிழில் விளையாடுகிறார்.

 36. //தாமிரா said…

  கலைவாணர் துணுக்கை மிக ரசித்தேன். என்ன தேர்ந்த டைமிங் சென்ஸ்.//

  அந்த பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் தானே கலைஞனுக்கு முக்கியம்.

 37. //rapp said…

  //அவர்களுக்கான மெல்ட்டிங் பாயிண்ட் வேறொன்றாக இருக்கக் கூடும்//

  சூப்பர் பன்ச்:):):)//

  நன்றி ராப்.

 38. //அனுஜன்யா said…

  வேலன்,

  இந்த முறை கதம்பம் முற்றிலும் வேறு தளத்தில் இருக்கிறது. உங்கள் பரந்த வாசிப்பின் பயன் எங்களுக்கும் கிடைக்கும் என்று மகிழ்ச்சி. ஒவ்வொன்றாக எழுத முடியவில்லை. தாமதமாக வந்ததால் பின்னூட்ட எண்ணிய விஷயங்களும் அனைவராலும் எழுதப்பட்டுவிட்டன. அதனாலென்ன! சிறப்பான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா//

  நன்றி அனு. மேக்ஸிமம் சிட்டி பற்றிய உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

 39. NSK மேட்டர் நச்….

  ரயில் பயணம் மேட்டரும் நல்லா இருக்கு… 11 வருஷம் முன்னால டெல்லி ரயில்ல ஒருத்தரு சண்டைக்கு அப்பறம் நண்பர் ஆனாரு… இன்னிக்கு வரைக்கும் மெயில், போனுன்னு நட்பு வளந்துக்கிட்டே இருக்கு..

 40. //கதம்பம் எப்போதும் போலவே சிறப்பாக இருக்கிறது… உங்கள் கவிதை வாசிப்பு பிரமிக்க வைக்கின்றது..:)

  //

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

 41. //Mahesh said…

  NSK மேட்டர் நச்….

  ரயில் பயணம் மேட்டரும் நல்லா இருக்கு… 11 வருஷம் முன்னால டெல்லி ரயில்ல ஒருத்தரு சண்டைக்கு அப்பறம் நண்பர் ஆனாரு… இன்னிக்கு வரைக்கும் மெயில், போனுன்னு நட்பு வளந்துக்கிட்டே இருக்கு..//

  நன்றி மகெஷ்.

 42. பதிவுகள் அருமை.

  //வெளிச்சம் பாயும் போது நீழும் நிழல் பி்ற சமயங்களில் காலுக்குக் கீழே பதுங்கிக் கிடப்பதைப் போல பெண்கள் தங்களுக்குள் எழும் கேள்விகளை மறைத்தவாறும், தோன்றும் சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவதுமாவே கழிகிறது வாழ்க்கை//
  கவனத்தை ஈர்க்கும் வரிகள்.

  ரயில் பயணம் பற்றிய பதிவை,உள்ளபடியே சொல்கிறேன்…
  அது ஒரு,எளிய,நேரடியான, அழகிய உரைநடைக் கவிதை.
  (English books லாம் கூடப் படிக்கிறீங்க. ம். பொறாமையா இருக்குது.சந்தோசமாவும் இருக்குது.)

 43. இந்த வார கதம்பம் அருமை.. கலைவாணரின் நக்கலும், கவிதையும், ரயில் பயணம் குறித்த உங்கள் பார்வையும் அருமை.. தொடருங்கள்…

 44. சமீப காலமாக வெறும் கதம்பம் மட்டுமே எழுதுகிறீர்கள், வேறதும் பதிவுகள் எழுதுவதில்லை ஏன்?

 45. கலைவாணர் மேட்டர் சூப்பர்.
  இன்னும் இது போல் நிறைய தலைகணம் கொண்டவர்கள் திரிகிறார்கள்.
  இதில் வெட்கமில்லாமல் பெருமை வேறு.
  (அவர்களுக்கு தான்)

 46. //வால்பையன் said…

  சமீப காலமாக வெறும் கதம்பம் மட்டுமே எழுதுகிறீர்கள், வேறதும் பதிவுகள் எழுதுவதில்லை ஏன்?/

  வேலை நெருக்கடிதான் காரணம் அருண்.

  அன்பான விசாரிப்புக்கு நன்றி.

  கலைவாணர் மேட்டர், நீங்கள் சொல்வதுதான் உண்மை.

  50ஆவதாக வந்தாலும் நீங்கள் என்றுமே முதல்வன்தான்.

 47. நீங்கள் படித்த புத்தகங்கள் பற்றியத் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்..

  உங்கள் பதிவுக்காக கத்திருக்கிறேன்..

 48. //தமிழில் நாஞ்சில் நாடன் எழுதிய “எட்டுத் திக்கும் மதயானை’ என்ற படைப்பை வாசித்தவர்களுக்கு ’வெள்ளைப் புலி’ மிகுந்த ஏமாற்றமே.//

  நாஞ்சில் நாடனின் நாவலுக்கும் மணிரத்னத்தின்(சசே!!…, இப்படி குவாலிபை பண்ண வச்சிட்டானே அகிலாண்ட நாயகன் J.K.R) நாயகன் படத்துக்கும் உள்ள ஒற்றுமையை கவனித்திருக்கிறீர்களா?

  //”ஒரு தேர்ந்த திரைக்கதை போன்ற எழுத்து நாஞ்சில் நாடனுடையது.மனக்கண் முன் காட்சிகளாக விரியும் வார்த்தையாடல்கள்.மிகத் தெளிவான,ஆர்வமான எழுத்து என வாசிப்பின்பத்திற்கு நாஞ்சில் நாடன் முழு உத்திரவாதம்.” அய்யனார். //

  இப்படித்தான் நானும் ‘தலைகீழ் விகிதங்கள்’ படித்துவிட்டு அருமையான திரைப்படமாக வரக்கூடிய கதை என எண்ணினேன், அதை ‘சொல்ல மறந்த கதை’ என தங்கர் பச்சான் கைமா பண்ணும் வரை.

  நாஞ்சில் நாடனை விட்டு விடுங்கள். தமிழ் இயக்குநர்கள் அவரை இதைவிட அவமானப்படுத்த முடியாது.

 49. //அக்னி பார்வை said…

  நீங்கள் படித்த புத்தகங்கள் பற்றியத் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்..

  உங்கள் பதிவுக்காக கத்திருக்கிறேன்..//

  அழைத்ததற்கு நன்றி. விரைவில் எழுதுகிறேன்.

 50. //இப்படித்தான் நானும் ‘தலைகீழ் விகிதங்கள்’ படித்துவிட்டு அருமையான திரைப்படமாக வரக்கூடிய கதை என எண்ணினேன், அதை ‘சொல்ல மறந்த கதை’ என தங்கர் பச்சான் கைமா பண்ணும் வரை.

  நாஞ்சில் நாடனை விட்டு விடுங்கள். தமிழ் இயக்குநர்கள் அவரை இதைவிட அவமானப்படுத்த முடியாது.//

  முதல் தவறு கதை நடக்கும் இடத்தைமாற்றியது. இரண்ட்டாவது தவறு நவரசங்களையும் ஒரே பாவனையில் காட்டும் சேரன். மூன்றாவது தவறு தங்கர் பச்சானின் பிடிவாதம்.

  நன்றாக வந்திருக்க வேண்டிய படம்தான். கதை படிக்கும்போது கிடைத்த அனுபவத்தில் கால்வாசி கூடக் கிடைக்கவில்லை.

 51. / வால்பையன் said…
  50 தாவதாக வருவதற்க்கு பெருமையடைகிறேன்

  //

  50 தே லேட்டுன்னா அப்ப என்னைய என்னன்ன்னு சொல்ல??

  :))

  வழக்கம் போல கதம்பத்தின் மணம் மெய்யாலுமே அருமை. கலைவானர் மேட்டர் எனக்குப் புது செய்தி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s