கதம்பம் – 9/11/08

ஒரு முறை கலைவாணர் அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். வந்தவரை எதிரில் இருக்கும் இருக்கையில் அமரும்படிச் சொன்னார் கலைவாணர்.

அதற்கு வந்தவர், “ நான் யார் தெரியுமா?” என்றார்.

கலைவாணர், “தெரியாதுங்களே“ என்றார்.

“நாந்தான் சிங்கம்பட்டி ஜமீந்தார்” என்றபடியே மீசையை முறுக்கினார் வந்தவர்.

அதற்கு கலைவாணர்,”அப்படியா! நல்லது, அப்ப இந்த ரெண்டு சேர்லயும் உக்காருங்க” அப்படின்னு எதிரே இருந்த இரண்டு நாற்காலிகளையும் காட்டினார்.

****************************************************************


இவ்வாண்டு, புக்கர் பரிசு ஓர் இந்தியர் எழுதிய முதல் நாவலுக்கே கிடைத்திருக்கிறது என்பது பற்றி இந்தியர்களாகிய நாம் மகிழ்ச்சிக்கு அடையலாம்.
ஆனால், பெருமை கொள்ளமுடியுமா என்பது சந்தேகந்தான். – இந்திரா பார்த்தசாரதி.

புக்கர் பரிசு பெற்ற இந்நாவலை என் வட்டத்தில் எல்லோரும் படித்து முடித்து இறுதியாகத்தான் நான் படித்தேன்.

கிராமத்துல ஏழை ரிக்‌ஷாக்காரருக்கு மகனாகப் பிறந்த பல்ராம் கார் டிரைவராகி, ஒரு குற்றம் செய்தபின் தலை மறைவாகி, தொழிலதிபராகும் கதைதான். நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால் சாதாரணக் கதையாகியிருக்கும். சீன அதிபருக்குக் கடிதம், கொஞ்சம் பிளாஷ் பேக் என ஜிகினாத்தனம் செய்து ஒப்பேத்தியிருக்கார்.

கிரைம் நாவலாகவும் இல்லாம சமுதாய நாவலாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறது. இதற்கு புக்கர் பரிசு என்பது, பரிசுக்கான தகுதிகளின் மீதான கேள்வியையும் தேர்வுக் குழுவின் மீதான நேர்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆனால் சுகேது மேத்தா எழுதிய ’மேக்சிமம் சிட்டி’ இதை விட எல்லா வகையிலும் ஆகச்சிறந்த ஒரு படைப்பு. மும்பையின் பல்வேறு முகங்களை அதன் தோலுரித்துக் காட்டுகிறார். ரசிக்கத் தகுந்த நடையும், எழுதுமுன் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியும் பாராட்டத்தகுந்த ஒன்று.

தமிழில் நாஞ்சில் நாடன் எழுதிய “எட்டுத் திக்கும் மதயானை’ என்ற படைப்பை வாசித்தவர்களுக்கு ’வெள்ளைப் புலி’ மிகுந்த ஏமாற்றமே.

”ஒரு தேர்ந்த திரைக்கதை போன்ற எழுத்து நாஞ்சில் நாடனுடையது.மனக்கண் முன் காட்சிகளாக விரியும் வார்த்தையாடல்கள்.மிகத் தெளிவான,ஆர்வமான எழுத்து என வாசிப்பின்பத்திற்கு நாஞ்சில் நாடன் முழு உத்திரவாதம்.” அய்யனார்.

*************************************************************

மரணம் பழகியவள்

கிழக்குப்பார்த்துக் கிடக்கிறது பிணம்.
நீள்சம்பங்கி வாசத்தில்
மணமேடை ஆரவாரம் தேடும் குழந்தைக்கு
சொல்லாமல் திரும்பிச் செல்ல
கற்றுக்கொடுக்கப்படும் மரபு

ஒற்றைகுரல் ஒப்பாரி ஆகாதென‌
சேர்ந்தழும் புடவைக்கூட்டம் அடுபேற்றாமல்
அடுத்தவீட்டு தேனீர் சுவைக்கிறது

விறைப்பிளகி குளிப்பாட்ட அணைக்கப்பட்ட‌
குளிர்ப்பெட்டி கணக்கிலேறும் மற்றுமொரு சவம்

நெஞ்சு பிடித்து விழி பிதுங்கி
எச்சில் வ‌ழிய க‌ண் கசிந்த‌
கடைசி உயிர்வலி ஸ்பரிசித்து
துப்பட்டாவில் துடைத்தெடுத்த‌
சின்ன மகள்

எல்லா பிணங்களையும் இழுத்துச் செல்வாள்
கண்ணீரின்றி வலியுமின்றி.

அனிதா, மென்பொருள் பொறியாளர், பெங்களூரு, கர்நாடகா,இந்தியா.

இவரது கவிதைகள் பலவும் பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. வாழ்க்கை பற்றிய வேறொரு பரிமாணத்தை முன் வைக்கும் இவர் கவிதைகள் , வாழ்வின் ஆதாரமான நம்பிக்கைகள் மீதான கேள்விகளை முன் வைத்துச் செல்கின்றன. வெளிச்சம் பாயும் போது நீழும் நிழல் பி்ற சமயங்களில் காலுக்குக் கீழே பதுங்கிக் கிடப்பதைப் போல பெண்கள் தங்களுக்குள் எழும் கேள்விகளை மறைத்தவாறும், தோன்றும் சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவதுமாவே கழிகிறது வாழ்க்கை. கற்பு மற்றும் ஆண் பெண் உறவுகளின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மேல் வீசபபடும் இவரது கேள்விகள் அவ்வகையானவை; விவாதத்துகுரியவை.

***********************************************************

ரயில் பயணம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான அனுபவத்தை அளித்தபடியேதானிருக்கிறது. ஆனால் காலம்தோறும் மாறத ஒன்று,
ஆரம்பத்தில் விரோதிகள் போல இறுக்கமாக இருப்பவர்கள், பயண இறுதியில் பரஸ்பரம் முகவரி வாங்கும் அளவுக்கான நெருக்கத்தை அடைந்து விடு்வதுதான்.

தண்ணீரோ, சில்லறைக் காசுகளோ, உணவுப் பதார்த்தங்களோ, புத்தகங்களோ, சீட்டுக் கட்டொ ஏதோ ஒன்று காரணியாக அமைகிறது. மாறத சிலரும் உண்டு அவர்களுக்கான மெல்ட்டிங் பாயிண்ட் வேறொன்றாக இருக்கக் கூடும்.

*****************************************************

”என்னடா உங்கப்பா தலையெல்லாம் இப்படி வீங்கியிருக்கு?”

“ஆமாடா அவரு நேத்து கொட்டுற பனியில வாக்கிங் போனாரு”

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s