கதம்பம் – 29/10/08

தோழர் ஜீவா குடியிருந்த வீட்டிற்கருகே உள்ள பள்ளியின் ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜார் வருகை தந்தார்; உடன் அன்றைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரவியம். இருவரும் பள்ளிக்கு வரும் வழியில் ஜீவாவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவரது குடிசை வீட்டிற்கு சென்றனர்.

”ஜீவா, பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர்.

”நான் வர வேண்டுமென்றால் ஒரு 15 நிமிடம் நீங்கள் காத்திருக்க வேண்டும் ” என்று குரல் கொடுத்தார் ஜீவா, உள்ளே ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டு.

மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்த கதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் திகைத்துப் போனார்.

”ஜீவா, எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது?” என்று கேட்டார்.

”மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கிற போது, நானும் மாடி வீட்டில் வாழ்வேன்” என்று பதில் கூறினார் ஜீவா.

கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் போதாதற்கு பினாமிகள் பெயர்களிலும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகளின் தீராப் பேராசையை எண்ணிப் பார்த்தேன்.

**********************************************************

சமீபத்துல படிச்ச செய்தி ஒன்னு.

இரு பெண்குழந்தைகளுடன் இருக்கும் ஒரு விதவையை ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார். அந்த இரு பெண்களையும் நல்ல முறையில் படிக்க வைக்கிறார். பெரிய பெண் MBA சின்னப் பெண் BBA. எல்லாப் பருவப் பெண்கள் போலவும் இவர்களும் காதல் வயப் படுகிறார்கள். காதலர்களில் ஒருவர் மாணவர்; மற்றவர் கல்லூரி ஆசிரியர்.

காதலர்களுடன் ஆலோசனை செய்து அப்பாவிடமிருந்து பணம் பறிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படி நால்வரும் சென்னை சென்று அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்குகிறார்கள். பெண்கள் இருவரையும் கை, கால்களைக் கட்டி வாயில் பிளாஸ்திரி ஒட்டி போட்டோ எடுத்து அப்பாவுக்கு அனுப்புகிறார்கள். போட்டோ அவர் கைக்குக் கிடைத்ததும் மொபைலில் அழைத்து மகள்கள் உயிருடன் வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.அப்பா அதைப் போலீ்சுக்குத் தெரிவிக்க போலீஸ் மொபைல் எண்ணை வைத்து காதலர்களப் பிடித்துப் பெண்களை விடுவிக்கிறார்கள்.

பெண்கள் இருவரும் தந்தைக்கெதிராக இம்மாதிரி நடவடிக்கையில் ஈடுபடக் காரணம் அவர் வளர்ப்புத் தந்தைதான் என்பது சமீபத்தில் தெரியவந்ததுதானாம்.

சினிமாவில் வருவது போல நடந்த இந்தச் சம்பவத்தில் அடிப்படையாகச் சில கேள்விகள்.

1. அந்தப் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது அவர் செய்த தவறா?
2. இரு மகள்களையும் படிக்க வைத்தது தவறா?
3. என்னதான் வளர்ப்புத்தந்தை என்றாலும் இத்தனை வருடங்கள் தங்களை ஆளாக்கிப் படிக்க வைத்தவர் என்ற நன்றிக் கடன் கூட இல்லையா?
4. இரு பெண்களைக் காதலித்தவர்களுக்கு கூடவா அடிப்படை மனிதாபிமானம் இல்லமல் போய் விட்டது.
5. இது காதலா? இல்லைக் காமமா?
6. திரும்பி வந்தபின் அந்தத் தாயின் மனநிலை எவ்வாறு இருக்கும்.
7. இனிமேல் அந்தத் தந்தையின் மனநிலை சீக்கிரமா வந்த வரனுக்குத் தள்ளிவிடுவதாகத்தானே இருக்கும்.
8. அதன்பிறகு இந்தத் தம்பதிகள் இருவரும் தனியே இருக்கும் வாழ்க்கையில் இந்தக் கரும்புள்ளி ஒரு மாறா வடுவாக இருந்து கொண்டேயிருக்குமல்லவா?

இவ்வாறு வாழ்வின் மீதான நம்பிக்கைகள் அற்றுப்போய் வெறுப்பு வழியும் தருணங்களில், மங்கை அவர்களின் பதிவில் வரும் இந்தச் சிறுமி போன்றவர்கள்தான் ஒரு பிடிப்பையும் முன்னெடுத்துச் செல்லும் தைரியத்தையும் வழங்கிக்கொண்டேயிருக்கிறார்கள்.

*************************************************************

என் சின்ன மகள்(7 ஆம் வகுப்பு) சைக்கிளில்தான் பள்ளிசெல்கிறாள். மழை பெய்யும் சமயங்களில் காரில் அழைத்துச் செல்லும்படி வாய்க்கும். அவ்வாறான ஒரு மழைநாளில் இவ்வாறு தோன்றியது.

கையசைத்துச் செல்பவளின்
பின்முதுகுப் பள்ளிப் பை
கிளர்ந்தெடுக்கிறது
மஞ்சள் பையில் பொதிந்த
என் பால்யத்தையும்
துருவேறிய சைக்கிளின்
மீதமர்ந்து ஒற்றைக் காலூன்றிக்
கை அசைத்துச் சென்ற
அப்பாவின் ஞாபகத்தையும்.

****************************************************************

ஒரு முறை தர்மர் எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவன் யாசகம் கேட்டு வந்தான். சட்டென இடது கையில் இருந்த தங்கக் கிண்ணத்தை அந்தக் கையாலே வழங்கினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுணன் இது தவறில்லையா என்று கேட்டான். அதற்குத் தர்மர் சொன்னார்,” இடது கையிலிருப்பதை வலது கைக்கு மாற்றுவதறகுள் மனசு மாறிவிடக் கூடாதில்லையா அதற்காகத்தான்” என்றார்.

இதைக் கருவாக வைத்து ஜோதிர்லதா கிரிஜா ஒருகதை எழுதிருக்கிறர்கள்.

காலை தினசரியில் இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த விளம்பரம் ஒன்றைப் பார்க்கும் தம்பதிகள் தங்களுக்குஎதிர்பாரமல் கிடைத்த 1000 ரூபாயைக் கொடுத்து விடலாம் என முடிவு செய்வார்கள். பின்னர் தினவாழ்வின் தேவைகளின் பாதிப்பில் படிப்படியாகக் குறைந்து அது எப்படி 50 ரூபாயாக ஆகிறது என்பதாக இருக்கும்.

நீங்களும் இது போல உணர்ந்திருகிறீர்களா?

*****************************************************************

”தமிழகத்தை ஆளத் தேவையான திறமையும் தகுதியும் என்னிடம் உள்ளது. மக்களின் விருப்பம் அதுவானா அதை நான் ஏத்துக்கத் தயாரா இருக்கேன்”

சொன்னது யார்?

1. விஜயகாந்த்
2. சரத் குமார்
3. ராஜேந்தர்
4. கார்த்திக்

.

Advertisements

43 comments

 1. /*ஒரு முறை தர்மர் எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவன் யாசகம் கேட்டு வந்தான். சட்டென இடது கையில் இருந்த தங்கக் கிண்ணத்தை அந்தக் கையாலே வழங்கினார்.

  இதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுணன் இது தவறில்லையா என்று கேட்டான். அதற்குத் தர்மர் சொன்னார்,” இடது கையிலிருப்பதை வலது கைக்கு மாற்றுவதறகுள் மனசு மாறிவிடக் கூடாதில்லையா அதற்காகத்தான்” என்றார்.

  இதைக் கருவாக வைத்து ஜோதிர்லதா கிரிஜா ஒருகதை எழுதிருக்கிறர்கள்.

  காலை தினசரியில் இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த விளம்பரம் ஒன்றைப் பார்க்கும் தம்பதிகள் தங்களுக்குஎதிர்பாரமல் கிடைத்த 1000 ரூபாயைக் கொடுத்து விடலாம் என முடிவு செய்வார்கள். பின்னர் தினவாழ்வின் தேவைகளின் பாதிப்பில் படிப்படியாகக் குறைந்து அது எப்படி 50 ரூபாயாக ஆகிறது என்பதாக இருக்கும்.

  நீங்களும் இது போல உணர்ந்திருகிறீர்களா?
  */

  பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து… இந்த மாதிரி பின்னூட்டமாக நின்று விடுவது தான் என் அனுபவம்

 2. அனைத்தும் அருமையாக இருந்தது. இப்பிடி பிரமாதமான விஷயங்களைக் கோர்த்து தந்துகொண்டிருக்கும்போது எப்படி மொக்கையாக ஒரு கேள்வி (கடைசி) கேட்க முடிகிறது உங்களால்.?

 3. //பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து… இந்த மாதிரி பின்னூட்டமாக நின்று விடுவது தான் என் அனுபவம்//

  எழுதுங்க. எழுத எழுதத்தான் வசமாகும்.

 4. //தாமிரா said…

  அனைத்தும் அருமையாக இருந்தது. இப்பிடி பிரமாதமான விஷயங்களைக் கோர்த்து தந்துகொண்டிருக்கும்போது எப்படி மொக்கையாக ஒரு கேள்வி (கடைசி) கேட்க முடிகிறது உங்களால்.?//

  அதுவும் வாழ்க்கைதானுங்களே. அது சரி சொன்னதுயாருன்னு சொல்லுங்க.

  இந்தமாதிரி காமெடியன்கள் மட்டும் இல்லன்னா வாழ்க்கை என்னைக்கோ வெறுத்துப் போயிருக்கும்.

 5. 1 -> ஏற்கனவே படித்த தகவல்…:-))
  2 -> புதிய செய்தி… :-(((
  3 -> சூப்பர் கொசுவத்தி, கவிதை
  4 -> கண்டிப்பா. எவ்வளவோ செய்யணும்னு ஆசைப்பட்டாலும், சோம்பேறித்தனமா எதுவுமே செய்யாமேதான் இருக்கேன்…. :-(((
  5 -> ஏன் என் பெயரை சேக்கவேயில்லே!!!

 6. //ச்சின்னப் பையன் said…
  ஏன் என் பெயரை சேக்கவேயில்லே!!!//

  உங்களுக்கு நான் இதயத்துல இடம் ஒதுக்கியிருக்கேன்.

 7. //நீங்களும் இது போல உணர்ந்திருகிறீர்களா?//

  பலமுறை உணர்ந்திருக்கிறேன் தேழரே (அதுவும் கல்யாணம் ஆனபிறகு எக்கச்சக்கமாக :((

  -வீணாபோனவன்.

 8. 1. இது போல் ஒருவர் கிடைப்பது கடினமே
  2. அந்த குழந்தைகளுக்கு கொடுத்த மிகையான சுதந்திரமா இருக்கலாம்.. 😦
  3. நினைவுகள் திரும்பச் செய்ய உதவுது.
  4. சில நேரங்களில் வரும் எண்ணங்கள் நேரமாக நேரமாக வேறு உருக்கொள்வதை உணர்ந்து இருக்கிறேன்.
  5. கடைசிக்கேள்விக்கு விடை கார்த்திக்கா?

 9. //வீணாபோனவன் said…

  //நீங்களும் இது போல உணர்ந்திருகிறீர்களா?//

  பலமுறை உணர்ந்திருக்கிறேன் தேழரே (அதுவும் கல்யாணம் ஆனபிறகு எக்கச்சக்கமாக :((//

  அது சரி.

 10. வாங்க தமிழ்.

  //அந்த குழந்தைகளுக்கு கொடுத்த மிகையான சுதந்திரமா இருக்கலாம்//

  ஒரு வகையில் சரி.

  //கடைசிக்கேள்விக்கு விடை கார்த்திக்கா?//

  சரி

 11. //கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் போதாதற்கு பினாமிகள் பெயர்களிலும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகளின் தீராப் பேராசையை எண்ணிப் பார்த்தேன். //

  சத்தமா சொல்லாதீங்க …ஒரு சிலர் அவங்க (காமராஜர் , ஜீவா போன்ற நல்லோர் ) கட்சிக்காக சொத்து சேதத்தா ..குத்தம் சொல்ல்வாங்க …

  http://tamilkudimagan.blogspot.com/

 12. // வடகரை வேலன் said…

  உங்களுக்கு நான் இதயத்துல இடம் ஒதுக்கியிருக்கேன்.//

  இந்த டயலாக்கைப் பார்த்தா அதைச் சொன்ன அரசியல்வாதியாகிற தகுதி கார்த்திக்கைவிட உங்களுக்கு அதிகம்னு தோணுது!

 13. // Dr. சாரதி said…

  நல்லா இருக்கு…..//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 14. //”மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கிற போது, நானும் மாடி வீட்டில் வாழ்வேன்” என்று பதில் கூறினார் ஜீவா.//

  நல்ல தலைவன் முன் மாதிரியாக வாழ்பவன். இப்பொதெல்லாம் தலைவனுக்கு அர்த்தமே வேற

 15. //1 -> ஏற்கனவே படித்த தகவல்…:-))
  2 -> புதிய செய்தி… :-(((
  3 -> சூப்பர் கொசுவத்தி, கவிதை
  4 -> கண்டிப்பா. எவ்வளவோ செய்யணும்னு ஆசைப்பட்டாலும், சோம்பேறித்தனமா எதுவுமே செய்யாமேதான் இருக்கேன்…. :-(((//

  ரிப்பீட்டு:):):)

  //5 -> ஏன் என் பெயரை சேக்கவேயில்லே!!!
  //

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,கன்னாபின்னாவென வழிமொழிகிறேன். அதேப்போல எங்க தல பேர் இந்த லிஸ்ட்ல இல்லாததுக்கும் எங்க மன்றத்தின் கண்டனங்களை பதிஞ்சுக்கறேன்:):):)

 16. //அந்தப் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது அவர் செய்த தவறா?//

  மனிதன், மனித குணத்தை விட்டு வெளியெறி ரொம்ப நாளாகிவிட்டது.
  ஒரு சிலரால் தான் வாழ்க்கை இன்றும் நடக்கிறது

 17. //நீங்களும் இது போல உணர்ந்திருகிறீர்களா?//

  ஆம். இதற்கு என்ன தண்டணை?
  நான் அனுபவிக்க தயார்

 18. //தமிழகத்தை ஆளத் தேவையான திறமையும் தகுதியும் என்னிடம் உள்ளது.//

  அத நாமல்ல சொல்லனும்

 19. நீங்கள் சொன்ன நாலு பேருக்குமே அந்த தகுதி இல்லை

 20. //என் சின்ன மகள்(7 ஆம் வகுப்பு) சைக்கிளில்தான் பள்ளிசெல்கிறாள்//
  சைக்கிளில்தான்?

 21. //என் சின்ன மகள்(7 ஆம் வகுப்பு) சைக்கிளில்தான் பள்ளிசெல்கிறாள்//
  சைக்கிளில்தான்?

 22. எல்லா மேட்டரும் அருமையாருந்துச்சு அண்ணா…

 23. ராப்,

  கோமாளிகள் லிஸ்டுல jkr சேத்த முடியல. அவரோட நடவடிக்கைகள் சிலதப் பார்த்தா அப்படித்தான் தோனுது.

 24. வாங்க வால்.

  சிலரப்பாத்தா அவங்க மாதிரி நாம் இருக்கனும்னு தோனும். இன்னும் சிலரப் பாத்தா அவங்க மாதிரி நாம இருக்கவே கூடதுன்னு தோனும்.

  முதல் வகைத் தலைவர்கள் இறந்தும், இரண்டாம் வகைத் தலைவர்கள் இரந்தும் வாழ்கிறார்கள்.

 25. //வால்பையன் said…

  //நீங்களும் இது போல உணர்ந்திருகிறீர்களா?//

  ஆம். இதற்கு என்ன தண்டணை?
  நான் அனுபவிக்க தயார்//

  சூழ்நிலைக் கைதிகளாகச் சிலசமயம் வாழ்கிறோம். வெறென்ன சொல்ல?

 26. //வால்பையன் said…

  நீங்கள் சொன்ன நாலு பேருக்குமே அந்த தகுதி இல்லை//

  அது அவங்களுக்கே தெரியும். இருந்தாலும் ஒரு நப்பாசைதேன்.

 27. // Kabheesh said…

  //என் சின்ன மகள்(7 ஆம் வகுப்பு) சைக்கிளில்தான் பள்ளிசெல்கிறாள்//
  சைக்கிளில்தான்?//

  ஆமாங்க

 28. //குடிமகன் said…

  சத்தமா சொல்லாதீங்க …ஒரு சிலர் அவங்க (காமராஜர் , ஜீவா போன்ற நல்லோர் ) கட்சிக்காக சொத்து சேதத்தா ..குத்தம் சொல்ல்வாங்க …//

  ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டர் நகரசபையிலேன்னு ஒரு பாடல் வரும் 30 வருடம் முன்னால் வந்தது. அந்த நிலை இன்னும் மோசமாத்தான் ஆகியிருக்கு.

 29. //அதிஷா said…

  எல்லா மேட்டரும் அருமையாருந்துச்சு அண்ணா…//

  நன்றி அதிஷா

 30. ரெண்டாவது செய்தி உலுக்குது… எங்க போகுது நாடு? இப்ப நான் ஒரு புத்தகம் படிச்சுக்கிடுருக்கேன்… அதுல இந்த மாதிரி பிறழ்ச்சிக்கெல்லாம் ஒரு காரணமும் விடையும் இருக்கு… அடுத்த வாரம் எழுதறேன்.

 31. / Mahesh said…

  ரெண்டாவது செய்தி உலுக்குது… எங்க போகுது நாடு? இப்ப நான் ஒரு புத்தகம் படிச்சுக்கிடுருக்கேன்… அதுல இந்த மாதிரி பிறழ்ச்சிக்கெல்லாம் ஒரு காரணமும் விடையும் இருக்கு… அடுத்த வாரம் எழுதறேன்.//

  ஆவலோட எதிர்பார்க்கிறேன் மகேஷ்.

 32. எனக்கு மட்டும் பின்னூட்டமாறு செய்ய மறந்துட்டீங்களே..

  ஒக்கே.. கபீஷோட கேள்வில இருக்கற நுண்ணரசியலைப் புரிஞ்சுகிட்டீங்களா?

 33. It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.

  It seems obvious that he is in the “pay roll” of SL govt for his anti-tamil “Preaching” using his newspaper! What a traitor!

  He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.

  Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a “hindhu” newspaper!

  He is a filthy RAT!

  akil
  akilpreacher.blogspot.com

 34. வடகரை வேலன் said…

  //பரிசல்காரன் said…

  எனக்கு மட்டும் பின்னூட்டமாறு செய்ய மறந்துட்டீங்களே..

  ஒக்கே.. கபீஷோட கேள்வில இருக்கற நுண்ணரசியலைப் புரிஞ்சுகிட்டீங்களா?//

  ஆமா பரிசல். எப்படியோ விட்டுப் போய் விட்டது. பெரிய மனசு பண்ணுங்க.

  கபீசோட நேத்துச் சாட் பண்ணுனதுல நெறைய விஷயம் புரிஞசதுங்க.

 35. தருமர்,மற்றும் ஜோதிர்லதா கதைகள் காட்டும் உண்மை உறுத்தலாக இருக்கிறது.பால்யத்தை நினைவு கூரும் கவிதையில் யதார்த்தம். கதம்பம் …நறுமணம்.(sun tv top 10 ஞாபகம் வருமே!)

 36. வழக்கம் போல் கதம்பம் அருமை..

  அண்ணாச்சி.. அந்தப் பொண்ணுங்க சமாச்சாரம் நம்மூர்ல தானுங்க நடந்தது.. 😦

 37. நன்றி அப்துல்லா.
  நன்றி முதுவேல்.
  நன்றி சஞ்சய். ஆமாங்க நம ஊர் ஆளுங்கதான்.

 38. துருவேறிய சைக்கிளின்
  மீதமர்ந்து ஒற்றைக் காலூன்றிக்
  கை அசைத்துச் சென்ற
  அப்பாவின் ஞாபகத்தையும்.

  //

  படித்ததும் என்னவோ பண்ணிருச்சுண்ணே.

 39. அண்ணே அந்த லெஃப்டிஸ்ட் கர்ணன் இல்லையோ..?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s