அன்றும் இன்றும்

1989 அக்டோபர் மாதக்காலை 8:00 மணி.

(கொஞ்சல் பாவத்துடன் படிக்கவும்)

ஏங்க, எந்திரிங்க மணி எட்டு ஆச்சு. பல் விளக்கிட்டு வாங்க. ஹார்லிக்ஸ் கலந்து வச்சிருக்கேன்.

இந்தாங்க குடிங்க. சூடு அளவா இருக்கா? சக்கரை சரியா இருக்கா?

சுடுதண்ணி விளாவி வச்சிருக்கேன் குளிச்சிட்டு வாங்க. சோப்பு, துண்டு எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் வேற என்ன வேனும்னாலும் கூப்பிடுங்க.

இப்படியா ஈரத்தலையோட இருப்பீங்க. இருங்க பேன் போடுறேன்.

ஏங்க தலை காஞ்சுருச்சா? வாங்க இட்லி சூடா இருக்கு. உங்களுக்குப் பிடிச்ச
வேர்க்கடலை சட்னி இருக்கு, தக்களிச் சட்னி இருக்கு, பொடி இருக்கு.

இன்னும் ரெண்டு வச்சுக்குங்க. என்ன கம்மியா சாப்புடுறீங்க?

2008 அக்டோபர் மாதக் காலை 6:00 மணி.

(கட்டளை பாவத்துடன் படிக்கவும்)

ஏங்க, எந்திரிங்க. இன்னும் என்ன தூக்கம்.?

நேரங்காலத்துல பல்ல வெளக்கீட்டு வாங்க.

பால் சூடு பண்ணி வச்சிருக்கேன். வேனுங்கிற அளவு ஹார்லிக்ஸ் கலந்து குடிங்க.

சரி சரி சட்டு புட்டுன்னு குளிச்சுட்டுவாங்க. சோப்பு, துண்டு எல்லாம் ஞாபகமா எடுத்துட்டுப் போங்க. பாத்ரூமிலிருந்து நை நைன்னு கூப்டுட்டு இருக்காதீங்க.

தலைய ஒழுங்காத் துவட்டத் தெரியுதா? உங்களையெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ?

இட்லி ஹாட் பேக்ல இருக்கு. ஒரு சட்னிதான் அரைக்க முடிஞ்சுது. சாப்பிடுங்க.

பழச நினச்சா ஏக்கமா இருக்குங்க. ஹ்ம் அதெல்லா மீண்டும் வருமாங்க. ஏன் இந்த ஏக்கம்னு கேகுறீங்களா?

இப்படித்தானே ஒவ்வொரு கல்யாண நாளையும் (அக்-18) ஏக்கத்தோட நினக்க வேண்டியிருக்கு.

டிஸ்கி : ஹி ஹி சும்மா தமாசுக்குத்தான். என் தங்க மணி நல்லவங்கதான். முன்னாடி ரெம்ப நல்லவங்களா இருந்தாங்க அவ்வளவுதான்.

68 comments

  1. //(கொஞ்சல் பாவத்துடன் படிக்கவும்)//

    படிக்கிற எங்களை பாவத்துடன் பார்க்கவும்

  2. //இந்தாங்க குடிங்க. சூடு அளவா இருக்கா? சக்கரை சரியா இருக்கா?//

    இது புனைவு
    (எங்கப்பா நடக்குது இப்படியெல்லாம் )

  3. //சுடுதண்ணி விளாவி வச்சிருக்கேன் குளிச்சிட்டு வாங்க. சோப்பு, துண்டு எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் வேற என்ன வேனும்னாலும் கூப்பிடுங்க.//

    பெருசா எதோ காத்திருக்குதுன்னு நினைக்கிறேன்

  4. //இட்லி சூடா இருக்கு. உங்களுக்குப் பிடிச்ச வேர்க்கடலை சட்னி இருக்கு, தக்களிச் சட்னி இருக்கு, பொடி இருக்கு.//

    என்னால நம்பவே முடியல!
    இது எதோ சதிக்கான ஆரம்பம் தான்

  5. //2008 அக்டோபர் மாதக் காலை 6:00 மணி.//

    ஒ அது ப்ளாஸ்பேக்கா

  6. வால், 20 வருடம் முன்னால கொஞ்சம் அப்படித்தான் இருந்திச்சு.

  7. //ஏங்க, எந்திரிங்க. இன்னும் என்ன தூக்கம்.?//

    அதுமட்டுமில்லை!
    பால் வாங்கனும்.
    காய்கறி வாங்கனும்

  8. //நேரங்காலத்துல பல்ல வெளக்கீட்டு வாங்க.//

    இதை கூட சொல்றாங்களா

  9. //சோப்பு, துண்டு எல்லாம் ஞாபகமா எடுத்துட்டுப் போங்க. //

    இது கூட ஓவர் தான்!
    இப்படியெல்லாம் யாரும் சொல்றதில்லை

  10. //பாத்ரூமிலிருந்து நை நைன்னு கூப்டுட்டு இருக்காதீங்க.//

    அப்படியும் கூப்பிட்டா
    எருமைமாடு மாதிரி வளந்திருக்கிங்க
    அறிவில்லையான்னு பதில் வரும்

  11. //உங்களையெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ?//

    எல்லாத்துக்கும் இதை சேர்த்துக்கொள்ள வேண்டும்

  12. //என் தங்க மணி நல்லவங்கதான். முன்னாடி ரெம்ப நல்லவங்களா இருந்தாங்க அவ்வளவுதான்.//

    முன்னாடி ரெம்ப நல்லவங்களா இருந்தாங்க
    இப்போ இப்படி ஆயிட்டாங்க
    கரைட்டா

  13. வாழ்த்துகள் வேலன்!! இந்த 20 வருஷத்தில் உங்களை எப்படி எல்லாம் எதிலெல்லாம் ட்ரெயின் செய்து இருக்காங்க பாருங்க!! :))

  14. // வால் 20 வருடம் முன்னால கொஞ்சம் அப்படித்தான் இருந்திச்சு //

    இப்ப ஒட்ட வெட்டியிருப்பாங்களே? 🙂

  15. அண்ணா அப்படீனா அன்னைக்கு கெடச்ச ஹோர்லிக்ஸ் இன்னும் உங்களுக்கு கெடைக்குது போல.. ஜாமாய்ங்க… அந்த மாதிரி அனுபவத்துக்கு நாங்க இன்னும் வரல…

    இருந்தாலும் ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆமா அப்போ எந்த ஊரு.. இப்போ எந்த ஊரு..

  16. கொத்ஸ், பின்ன சும்மாவா சொன்னாங்க. தங்கமணிதான் பெரிய ரிங் மாஸ்டர்னு.

  17. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!!!!

    அத்தாச்சிட்ட கேட்டாத்தானே அண்ணாச்சியோட வண்டவாளம் தெரியும். நேர்ல வரும் போது கேக்கேன்.

  18. வெயிலான்,

    வால மட்டுமா, பல்லையும் புடுங்கீட்டாங்க.

  19. வெயிலான்,

    வாங்க வாங்க. கொஞ்சம் அடக்கி வாசிங்க.

  20. வேலன் சார், அண்ணிக்கு தெரியாம பதிவு போட்டது மட்டும் தெரியுது… வத்தி வச்சா அந்த இட்லியும் கிடைக்காது. ஆமா.. 🙂

  21. பிளாஷ்பேக் நல்லா இருக்கு. அவங்க என்ன செய்வாங்க? எல்லாருக்குமே இது போல் அவசர சூழலா மாறிப் போச்சு.. 🙂

  22. தமிழ்,

    அந்த 3 இட்லிக்கும் வேட்டு வச்சுருவீங்க போல இருக்கு. அவ்வ்வ்வ்வ்

  23. வாழ்த்துக்கள்! 25 வது திருமண நாளுக்கு!
    (அப்ப உங்க வயசு??? ஹிஹிஹி ஏதோ நம்மால முடிஞ்சத கொளுத்தி போடுவோமே… ;)) )

  24. புது ஆளுங்களோடுதான் போட்டி போடுறதா இருக்குதுன்னு பாத்தா, பெருசுங்களும் நம்ப சப்ஜெக்ட்ல கலக்கிக்கொண்டு போட்டிக்கு வர்றாங்களே.. அவ்வ்வ்..

  25. தமிழ்,

    20 வருடம்தானே ஆச்சு. எப்படி 25? இல்ல 25க்கு இப்பவே வாழ்த்தா?

    25 + 20 = 45 வயசாச்சு.

  26. அப்புறம் கல்யாண நாள் வாழ்த்துகள் அண்ணே.!

  27. //தாமிரா said…

    புது ஆளுங்களோடுதான் போட்டி போடுறதா இருக்குதுன்னு பாத்தா, பெருசுங்களும் நம்ப சப்ஜெக்ட்ல கலக்கிக்கொண்டு போட்டிக்கு வர்றாங்களே.. அவ்வ்வ்..//

    ஏம்பா பின்னூட்டம் போடுறதுல கூட கலக்கலா? தங்கமணி இல்லாம ஒரே கலக்கு கலக்கிற போல.

  28. //தாமிரா said…

    அப்புறம் கல்யாண நாள் வாழ்த்துகள் அண்ணே.!//

    நன்றி தாமிரா.

  29. நான் எதுக்கு சிலரை பெருசுன்னு சொல்றேன்னு எல்லோருக்கும் இப்போ தெரிஞ்சிருக்கும். நமக்கு ஆறு மாத கால கேப்பில் நடந்தது, இவருக்கு இருவது வருஷ கேப்பில் நடந்ததாம். கேட்டுக்கோங்கப்பா… இப்பவாவது தெரியுதா? இதெல்லாம் சும்மா, உடான்ஸுன்னு.!

  30. தங்கமணி இல்லாம ஒரே கலக்கு கலக்கிற போல.// இதிலிருந்து இன்னொன்றையும் தெரிந்து கொள்ளலாம் அண்ணன் என் பதிவுக்கே வருவதில்லை, கொஞ்சம் விட்டால் சன் டிவி நியூஸிலேயே வந்து விடுமளவு நான் கலங்கிக்கொண்டிருக்க, இவர் சொல்கிறார் கலக்கிக்கொண்டிருக்கிறேனாம்!

  31. // கொஞ்சம் அடக்கி வாசிங்க //

    ஆகட்டும் அண்ணாச்சி!

    கொஞ்சம் ஆர்வக்கோளாறு.
    உத்தரவு வாங்கிக்கறேன்.

  32. ஒருத்தருக்கு ஒரு பின்னூட்டமே போட துப்பில்லாம இருக்கும் போது உங்களுக்கு இத்தனை போட்டாச்சு, பிரவுசிங் சென்டரில் என்னை வெளியே தள்ளப்போறாங்க, நேரமாச்சு. புத்தம் புது பதிவுகளோடு சண்டேவிலிருந்து மீண்டும் வருகிறேன். பை.!

  33. வாழ்த்துக்கள் மிஸ்டர் & மிஸஸ் வேலன்.. இன்று போல் என்றும் வாழ்கன்னு சொன்னா தப்பா எடுத்துகுவீங்களோ (இல்ல இன்னிக்கு காலையில நடந்தத படிச்சா அப்படித்தான் தோணுது)…:)))

  34. வாழ்த்துக்கள் வடகரை அண்ணாச்சி!

  35. /ஸாரிங்க, நான் பேன் பார்க்கிறேன்னு படிச்சுட்டேன்
    //

    :))

  36. //மாதக்காலை 8:00 மணி//
    //மாதக்காலை 6:00 மணி//

    என்னா நக்கலு உங்களுக்கு:):):)

  37. வடை,
    25 வயசிலயே தண்டனைய ஏத்துக்கிட்டீங்களா?… ரொம்ப பெரிய மனசுங்க ஒங்களுக்கு.. நாமலா ரொம்ப வெய்ட் பண்ணி ரூம் போட்டு நின்னு, ஒக்காந்து, மல்லாக்க படுத்து ரொம்ப நிதானமா யோசிச்சி தான் இந்த “டெத் சேம்பர்”குல்ல நொளஞ்சோம்…

    வால்பையன்:
    //ஸாரிங்க, நான் பேன் பார்க்கிறேன்னு படிச்சுட்டேன்//

    ஆமா, நானும் பேன் பார்ப்பதாகவே படிச்சிட்டேன் 🙂

    கல்யாணம் கட்டி,
    -வீணாபோனவன்.

  38. ஸாரி வடகரை வேலன் :-)கவலையுடன் 🙂 எனது திருமணநாள் நல்(?) வாழ்த்துக்கள்..

    -வீணாபோனவன்.

  39. //தாமிரா செய்ட்:
    நான் எதுக்கு சிலரை பெருசுன்னு சொல்றேன்னு எல்லோருக்கும் இப்போ தெரிஞ்சிருக்கும். நமக்கு ஆறு மாத கால கேப்பில் நடந்தது, இவருக்கு இருவது வருஷ கேப்பில் நடந்ததாம். கேட்டுக்கோங்கப்பா… இப்பவாவது தெரியுதா? இதெல்லாம் சும்மா, உடான்ஸுன்னு.!//

    யோவ்… இருபது வருஷம் இல்லையா ஜெஸ்ட் 19 தான் 😉 (2008 – 1989)
    -வீணாபோனவன்.

  40. அண்ணாச்சி வாழ்த்துக்கள் ! இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துக்கள் !

  41. இனிய மணநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!

  42. இனிய மணநாள் வாழ்த்துக்கள்!! ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க, இதுவாச்சும் கெடைக்குதேன்னு சந்தோஷப்படுங்க அண்ணா

  43. அண்ணா,

    உங்களுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ப்ரஸ்ஸுக்கு லீவு விட்டுட்டு (எல்லாருக்கும் ஸ்வீட் குடுங்க!) குழந்தைகள் கூட ஜாலியா எங்கயாவது போய்ட்டு வாங்கண்ணா.

  44. முதலில் திருமண நாள் வாழ்த்துக்கள்.

    ரொம்ப நாளா ஆளையே காணோமே.

    1989 ல் இருந்து 2008 ல் இவ்வளவு மாற்றம்னா எங்கள மாதிரி ஜுனியர்களின் நிலைமை.
    ஆஹா இப்பவே கண்ணைக் கட்டுதே.

  45. //வெண்பூ said…

    வாழ்த்துக்கள் மிஸ்டர் & மிஸஸ் வேலன்.. இன்று போல் என்றும் வாழ்கன்னு சொன்னா தப்பா எடுத்துகுவீங்களோ (இல்ல இன்னிக்கு காலையில நடந்தத படிச்சா அப்படித்தான் தோணுது)…:)))//

    நன்றி வெண்பூ. இன்னிக்கு காலேல மட்டுமில்லீங்க. எப்பவுமே அப்படித்தான்.

  46. //rapp said…

    திருமணநாள் வாழ்த்துக்கள் வேலன் அவர்களே/

    நன்றிங்க.

    என்ன அரசியல்வாதி மாதிரி?

    // இதே மாதிரி அவங்களும் போட்டா உங்க நெலமை கிகிகி தானே//

    போடமாட்டாங்கன்னுதான். ஹி ஹி.

    // நீங்க இட்லி தின்னியா? நான் தோச தின்னி//

    நல்ல வேளை எறும்பு தின்னி இல்லை.

    //மாதக்காலை 8:00 மணி//
    //மாதக்காலை 6:00 மணி//

    என்னா நக்கலு உங்களுக்கு//

    நீங்கதான் பாயிண்டக் கரக்டாப் பிடிச்சீங்க.

    // me the 50th:):):)//

    என்னப் பொறுத்தவரை நீங்க me the first தான்.

  47. // வீணாபோனவன் said…
    25 வயசிலயே தண்டனைய ஏத்துக்கிட்டீங்களா?… ரொம்ப பெரிய மனசுங்க ஒங்களுக்கு..//

    ஆரம்பத்துல கஷ்டமா இருந்திச்சு. அப்புறம் பழகிருச்சு.

    // நாமலா ரொம்ப வெய்ட் பண்ணி ரூம் போட்டு நின்னு, ஒக்காந்து, மல்லாக்க படுத்து ரொம்ப நிதானமா யோசிச்சி தான் இந்த “டெத் சேம்பர்”குல்ல நொளஞ்சோம்//

    ஆத்துல இறங்க யோசனை பண்ணக்க்கூடாது. ஒரே டைவ் பயமெல்லாம் விலகிரும்.

  48. //கோவி.கண்ணன் said…

    அண்ணாச்சி வாழ்த்துக்கள் ! இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துக்கள் !//

    நன்றி கோவி.

  49. //விஜய் ஆனந்த் said…

    இனிய மணநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!//

    நன்றி விஜய் ஆனந்த்.

  50. //சென்ஷி said…

    இனிய மணநாள் வாழ்த்துக்கள் அண்ணா :)//

    நன்றி சென்ஷி.

  51. //Kabheesh said…

    இனிய மணநாள் வாழ்த்துக்கள்!! ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க, இதுவாச்சும் கெடைக்குதேன்னு சந்தோஷப்படுங்க அண்ணா//

    நன்றிங்க. அந்த ஆறுதல்லதான் வாழ்க்கையே ஓடுது.

  52. //பரிசல்காரன் said…

    அண்ணா,

    உங்களுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ப்ரஸ்ஸுக்கு லீவு விட்டுட்டு (எல்லாருக்கும் ஸ்வீட் குடுங்க!) குழந்தைகள் கூட ஜாலியா எங்கயாவது போய்ட்டு வாங்கண்ணா.//

    நன்றி கிருஷ்ணா.

    மின் தடை பிரச்சினையால லீவு எடுக்கல. நாளை விடுமுறைதானே. வெளியே எங்காவது போலாம்னு யோசனை.

  53. //அத்திரி said…

    முதலில் திருமண நாள் வாழ்த்துக்கள். //

    நன்றிங்க.

    // ரொம்ப நாளா ஆளையே காணோமே.//

    சென்னை, மும்பை, பெங்களூர்னு ஆ கு வைத்தியர் மாதிரி ஒரு டூர்.

    // 1989 ல் இருந்து 2008 ல் இவ்வளவு மாற்றம்னா எங்கள மாதிரி ஜுனியர்களின் நிலைமை.
    ஆஹா இப்பவே கண்ணைக் கட்டுதே.//

    இதிலிருந்து நீங்க தப்பிக்க முடியாது. ஆனா தாமதப் படுத்தலாம்.

  54. அடப்பாவி மனுஷா! அரட்டை அடிக்கும் போதுகூட சொல்லவில்லையே! திருமண நாள் வாழ்த்துக்கள் திரு & திருமதி வேலனுக்கு.

    என்ன சார் புகார் இது? நாங்கெல்லாம், இட்லி, சட்னி ரெடி பண்ணி, காபியோடதான் தங்கமணியை துயிலெழுப்புகிறோம் இப்போவெல்லாம். உங்க நிலமே எவ்வளவோ பரவாயில்ல.

    அனுஜன்யா

  55. //அனுஜன்யா said…

    அடப்பாவி மனுஷா! அரட்டை அடிக்கும் போதுகூட சொல்லவில்லையே! திருமண நாள் வாழ்த்துக்கள் திரு & திருமதி வேலனுக்கு.//

    நன்றி அனுஜன்யா.

    // என்ன சார் புகார் இது? நாங்கெல்லாம், இட்லி, சட்னி ரெடி பண்ணி, காபியோடதான் தங்கமணியை துயிலெழுப்புகிறோம் இப்போவெல்லாம். உங்க நிலமே எவ்வளவோ பரவாயில்ல. //

    இன்னும் அந்த லெவலுக்குப் போகல. ஒரு வேளை வயசாயிருச்சுன்னு சலுகையோ?

  56. அண்ணா திருமணநாள் வாழ்த்துக்கள்

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

  57. அப்பனே வேலவா, தங்கமும் Money ‍ ம் சேர்ந்து இருக்குப்பா. பார்த்து நடந்துக்க. எல்லாம் சரி. வீட்டுக்கு வீடு வாசப்படி. இராகவன்..

  58. நன்றி அதிஷா,

    உங்க மலரும் நினைவுகள் : சினிமா. பதிவு எழுதிகிட்டிருக்கேன். விரைவில் பதிவேத்துகிறேன்.

  59. //Raghavan said…

    அப்பனே வேலவா, தங்கமும் Money ‍ ம் சேர்ந்து இருக்குப்பா. பார்த்து நடந்துக்க. எல்லாம் சரி. வீட்டுக்கு வீடு வாசப்படி. இராகவன்..//

    நன்றி ராகவன்.

Leave a comment