நாமொன்று நினைக்க…

ருர் வையாபுரிப் பிள்ளை முதல் வீதி வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சங்கரிடம், ”என்னங்க, எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். மயிலாத்தாக்கா சொன்னாங்க. போய் பார்த்துட்டு வரலாமா?” கேட்டாள் மைதிலி.

“ஆமா உனக்கும் வேலையில்லை உங்க அம்மாவுக்கும் வேலையில்ல. வயசான காலத்துல இங்க நம்ம கூட வந்து இருக்கலாம். அட இல்லன்ன உங்க தாய்மாமன் இங்கதான இருக்காரு, அவரு கூடயாது வந்து இருக்கலாம். ஒத்தயில அங்க இருந்துக்கிட்டு எல்லோருக்கும் சிரமம்.” எரிச்சலுடன் சங்கர்.

”எங்க அம்மாவத் திட்டலையின்னா உஙகளுக்குச் சோறு இறங்காதே?”

“சரி சரி சாய்ங்காலம் ரெடியா இரு, SMBS பஸ்ல போய்ட்டு வந்தர்லாம்”

நாமக்கல் கரூர் ரோட்டில் ஊர்க் கடைசியில் இருந்து ஒதுக்குபுறம். வரிசையாக இருந்த 4 வீடுகளில் இரண்டாவது வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பத் தயாரான ரஷீத்திடம்,”நம்ம அப்துல்லாவுக்கு மட்டுமாவது இன்னைக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வாங்க” கேட்டள் சுபைதா.

“பார்க்கலாம் அட்வான்ஸ் பணம் கிடைச்சா நம்ம எல்லாருக்கும் எடுத்துட்டு வாரேன்”

”கெடைக்கலீன்னாலும், யார்கிட்டயாவது கைமாத்து வாங்கியாவது எடுத்துட்டு வாங்க. நாம முத நாள் எடுத்துக் கூட சமாளிச்சுகலாம். அவந்தான் ரெம்ப ஏங்குறாம். சொல்லிப் புரிய வைக்க முடியாத வயசு”

“சரி பாக்குறேன், சாப்பாடு எடுத்து வை, நேரமாச்சு”

நாமக்கல் சுந்தரமூர்த்தி வீதியில் இருக்கும் லாரி சர்வீஸ் அலுவலக மாடி, முதலாளி அறை. கையதுகட்டி, வாயது பொத்தி மெய்யது வளைந்துங்கிறாப்ல நின்னாரு ஜோசப் முதலாளி முன்னாடி.

“என்ன” ன்னு கேட்டா கிரீடம் இறங்கிடுமோ என்னவோ, புருவத்த மட்டும் உயர்த்தினாரு

“நம்ம 1030 தடுமாறுதுங்க”

“1030 தான் நான் முதல்ல வாங்கின வண்டி. அத வச்சுத்தான் இவ்வளவு வண்டியாக்கிருக்கேன். அதக் குத்தம் சொல்லாதே”

“இல்லைங்க கொஞ்சம் ஸ்பீடு போனாலே தடுமாறுது, பிரேக்கும் கண்ட்ரோல்ல இல்லை”

“இதுக்கு முன்னாடி ஓட்டுனவங்கல்லாம் இவ்வளவு கம்ப்ளைண்ட் சொன்னது இல்ல, நீதான் எப்பப் பாத்தாலும்”

“பிரேக் மட்டும் பாத்துத் தரச் சொல்லுங்க”

“இன்னைக்கு ஒரு நாள் ஒட்டு நாளைக்கு நிறுத்திச் சரி பண்ணலாம்”

நாமக்கல் கரூர் ரோட்டில் ஊர்க் கடைசியில் இருந்து ஒதுக்குபுறம். வரிசையாக இருந்த 4 வீடுகளில் முதல் வீட்டிலிருந்த சாந்தியம்மா,“வாங்க வாங்க” மகனையும் மருமகளையும் வரவேற்றார்.

“நங்க வாரது இருக்கட்டும், நீங்க எப்படி இருக்கீங்க?” பாசமாய்க் கேட்டாள் மகள்.

”நான் நல்லாத்தா இருக்கேன். லேசாக் காய்ச்சல் இப்பச் சரியாயிடுச்சு”

“இப்படி ஒத்தயில கிடந்து கஷ்டப்படுறது சரியா” உரிமையாய்க் கோபித்தான் சங்கர்.

“என்ன செய்யிறது அவரு கட்டுன வீடு, போற உசிரு இதுலதான் போகனும்னு நெனைக்கேன்”

எல்லோரும் பொதுவான விஷயங்களைப் பேசி இருந்துவிட்டுக் கிளம்பினார்கள். கிளம்பும் போது கரன்ட் கட்டானது.

“கரண்ட் இல்லாத நேரத்துல கிளம்ப வேண்டாம். இருந்துட்டு கரண்ட் வந்த்தும் போங்க”

ரிசையாக இருந்த 4 வீடுகளில் இரண்டாவது வீட்டில் அப்துல்லா, “இந்த ட்ரெஸ் எனக்குப் பிடிக்கலைம்மா.”

“இந்த ரம்ஜானுக்குப் போட்டுக்கலாம். அடுத்து உனக்க்குப் பிறந்த நாள் வருதுல்ல அப்ப உனக்குப் பிடிச்ச மாதிரி எடுத்துக்கலாம்.” சமாதானப் படுத்தினாள் சுபைதா.

“எனக்குப் பிடிக்கல”

“சரி சரி சத்தம் போடாத வாப்பா அடிப்பாக”

நாமக்கல் கரூர் ரோட்டில் ஊரைத்தாண்டியதும், லாரியை ஓட்டியவாறே ஸ்டீபன் கிளீனரிடம், “சடை வண்டிடா இது, இது ஓட்டுறதுக்குள்ள ஆத்தா கொடுத்த பாலெல்லாம் வெளீல வந்திரும் போல இருக்கு. சீக்கிரம் வேற இடம் பாக்க வேண்டியதுதான்”

“அண்ணே அட்வான்ஸ் நெறைய வாங்கியிருக்கேன்னு சொல்லுவீங்க, எப்படிண்ணே திருப்பிக் கொடுப்பீங்க?”

“ஆமடா அதுதான் பிரச்சினை. வேற வழியும் தெரியல. ஒரு சிகரெட் கொடுடா”

“இந்தாங்கண்ணே” கூடவே தீப்ப்ட்டியும் கொடுத்தான்.

சிகரெட்டை வாயில் வைத்து ஸ்டீரிங் வீலை கைமுட்டியில் பேலன்ஸ் செய்தவாறே குனிந்து பத்தவைத்தார்.

“அண்ணே” அலறின்னான் கிளீனர்.

எதிரே அசுரத்தனமாக வந்த லாரியை தவிர்க்க நினைத்து வேகமாகத் திருப்பி பிரேக்கை அழுத்தினார்.

செப்டம்பர் 14 தினமலர் நாளிதழில் செய்தி.

நாமக்கல் கரூர் ரோட்டில் நேற்று கட்டுப்பாடிழந்த லாரி சாலையோர வீடுகளில் மோதி விபத்துக்குள்ளானதில் சாந்தியம்மா(48), சங்கர்(27), மைதிலி(23), ரஷீட்(30). சுபைதா(25), அப்துல்லா(6) ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திலேயே பரிதாபம இறந்தனர். லாரி ஓட்டுனர் இறங்கித் தப்பி ஓடினார். போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

Advertisements

25 comments

 1. ரொம்ப நாளைக்கு அப்பறம் மீ த பர்ஸ்ட் வாய்ப்புக் கிடைச்சிருக்கு !

 2. வெறும் பெயர்களையும் செய்தியையும் வைத்து கற்பனைக் கதை(கள்) அருமையாக இருக்கிறது. முடிவு சோகமானது என்பதே செய்தியிலும் இருப்பதால்…. எழுத்தைப் பாராட்டுகிறேன்.

 3. நன்றி கோவி.

  செய்தியை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுதலாம்னு நெனைச்சேன். அதுதான்.

 4. அண்ணாச்சி, நல்ல கற்பனை + கதை…புது வழி…

 5. ஆரம்பித்த விதத்திலே கதையின் முடிவு தெரிஞ்சாலும், கொண்டு போன விதம் ரொம்ப ரொம்ப அருமை

 6. ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியவை.

  //“என்ன செய்யிறது அவரு கட்டுன வீடு, போற உசிரு இதுலதான் போகனும்னு நெனைக்கேன்”//

  சரியாக உபயோகப்படுத்தப்பட்டுள்ள திணிக்கப்படாத இயல்பான வசனம்.

  தேர்ந்த எழுத்து. வாழ்க.

  குறை சொல்வதாக எண்ண வேண்டாம். கதை கொஞ்சம் அவசர கதியில் ஓடுகிறது.

 7. ஒருவேளை இதுதான் நடந்திருக்குமோ என்று நம்பும் அளவுக்கு இருந்தது

 8. இந்த வார படத்திற்கு உண்மையிலேயே நன்றி சொல்ல ஆசைப்பட்டால், வால்பையன் என்றே பெயரிடுங்கள்.
  அருண்ராஜ் என்றால் நிறைய பேருக்கு தெரியாது

 9. விஜய் ஆனந்த், ராப், ரத்னேஷ், அமிர்தவர்ஷினி அம்மா, வால் பையன் நன்றிங்க.

 10. வேலன்,

  நல்லா இருக்கு. வசனங்கள் இயல்பு. முடிவு யூகிக்க முடிவதால், கதையில் மனம் ஒட்டவில்லை; சுஜாதா மற்றும் பல எழுத்தாளர்கள் இந்த மாதிரி எழுதி இருக்கிறார்கள். இப்போது சுஜாதாவை எழுதச் சொன்னால், இப்படி முடித்திருப்பார்:

  விபத்துக்குள்ளான பஸ்சில் இறந்த பயணிகள் : கமலாம்பா (48), சேகர் (27), நளினி (23), ரஹ்மான் (30). ஆயிஷா (25), ஹிதயதுல்லா (6) ஆகியோர். பஸ்ஸை சற்று நேரத்தில் தவறவிட்ட சாந்தியம்மா, சங்கர், மைதிலி, ரஷிட், சுபைதா, அப்துல்லா ஆகியோரின் சரியான வயது நமக்குத் தேவையில்லாத ஒன்று எனினும், அவர்கள் செய்தி ஆகாமல் இருந்தது நமக்கு ஆறுதல்.

  அனுஜன்யா

 11. உங்கள் கதை போலவே சுஜாதாவும் ஒரு கதை எழுதியிருக்கிறார்.

 12. //rapp said…

  ஆரம்பித்த விதத்திலே கதையின் முடிவு தெரிஞ்சாலும், கொண்டு போன விதம் ரொம்ப ரொம்ப அருமை
  //

  ரிப்பீட்டேய். ஒரு ஒட்டுதல் இல்லாமப் படிச்சதும் நிஜம்.

 13. நன்றி அனுஜன்யா.

  அந்தச் செய்தியை பத்திரிக்கையில் படித்தவுடன், அவர்கள் கனவுகள் போட்ட திட்டம் முதலியவற்றை எழுதி இப்படி ஆயிற்று என்று முடிக்கத் திட்டமிட்டிருந்தேன்.

  அவசரமாக எழுதியதில் பி பி கு மு க ஆகிவிட்டது

 14. //லதா said…
  உங்கள் கதை போலவே சுஜாதாவும் ஒரு கதை எழுதியிருக்கிறார்.//

  அவரு எழுதுனது கதை.

  நான் பன்ணியது கொலை.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 15. //இலவசக்கொத்தனார் said…
  //rapp said…

  ஆரம்பித்த விதத்திலே கதையின் முடிவு தெரிஞ்சாலும், கொண்டு போன விதம் ரொம்ப ரொம்ப அருமை
  //

  ரிப்பீட்டேய். ஒரு ஒட்டுதல் இல்லாமப் படிச்சதும் நிஜம். //

  ஆமாங்க கொத்ஸ். ரெண்டு நாள் கழிச்சுப் படிச்சா எனக்கே திருப்தி இல்ல.

  இனிமே எழுதி ஒரு வாரம் கழித்துத்தான் பதிவேத்தனும்னு இருக்கேன்.

 16. செய்தியை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுதலாம்னு நெனைச்சேன். அதுதான்.

  நல்லா இருக்கு !!

 17. ரொம்பவுமே மனதை கணமாக்கிவிட்டீர்.
  பக்கத்தில் இருக்கும் குரங்கு யாரு?….
  இந்த வார நகைச்சுவையும், கவிதையும் அருமை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s