கதம்பம் – 6-10-08

”அவன்தான் மனிதன்” திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் சிங்கப்பூர் மலர்க் கண்காட்சியில் படமாக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் கவியரசு கண்ணதாசன் அதற்கான பாடலை எழுத தாமதம் செய்து கொண்டிருந்தார். எம் எஸ் வி யும் அடிக்கடி கண்ணதாசனை போனில் அழைத்து, “அண்ணே மே மாதம் சூட்டிங் இன்னும் பாட்டு எழுதல” ன்னு சொல்லீட்டே இருந்திருக்காரு.

ஒரு முறை அவ்வாறு அழைக்கும் போது கண்ணதாசன், “என்ன விஸ்வநாதா மே மே ன்னு கத்துற, இந்தா பிடி ” ன்னு ஒரு பாட்டு சொன்னாரு.

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

அந்தப் பாட்டு முழுவதும் இப்படி மே – யில்தான் முடியும்.

நீங்களும் கேட்டுப் பாருங்க – இங்கே

*****************************************************************

இந்த முறை சென்னை சென்று, திட்டமிட்டபடி திரும்ப முடியாததால் பதிவு செய்திருந்த டிக்கட்டைக் கேன்சல் செய்துவிட்டு, அடுத்த நாள் ஓப்பன் டிக்கட்டில் திரும்ப வரும்படி ஆயிற்று.

இம்மதிரி சமயங்களில் ஓப்பன் டிக்கட் எடுத்து 3 a/c – ல் பர்த் வாங்கி வந்துவிடுவேன். இம்முறை கூட இருவர் வந்ததால் முடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே பிளாட்பார்மில் அமர்ந்திருந்தேன்.

வெஸ்ட் கோஸ்ட் வண்டியில் சார்ட் ஒட்டுபவர், இரண்டு பெட்டிகளில் கோச் எண் மட்டும் ஒட்டி விட்டு சார்ட் ஒட்டாமல் சென்றார். கேட்டதற்கு, “ இந்த ரெண்டு கோச்சும் ஈரோடு கோட்டா, அது வரைக்கும் காலியாகத்தான் போகும். நீங்க இதுல ஏறிக்குங்க TTE யிடம் சொல்லி பர்த் வாங்கிகுங்க” அப்படின்னார். அது போலவே வசதியாக 3 பேரும் வந்து சேர்ந்தோம்.

என் கேள்வி என்னனா; ஏன் ஈரோடு வரை அதைக் காலியா ஓட்டனும்? ஜெனெரல் கோச்சுல அவ்வளவு அடிதடி நடக்க இங்க கோச்சே காலியா வருவது சரியா? ரயில்வே நிர்வாகம் இந்தத் தகவலை பயனிகளுக்குச் சொல்லாமல் இருப்பது சரியா? இது போல் வசதி வேறு எந்த வண்டிகளில் எல்லாம் இருக்கு?

***************************************************************

டிப்ளொமோ படிக்கும் போது நண்பர்கள் மூலமாக எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் அறிமுகமானது. அவரின் சிந்தனை தொழில் செல்வம் புத்தகம் என்னை மிகவும் பாதித்த ஒன்று. அதன் தாக்கத்தில்தான் சொந்தத் தொழில் செய்வது என்று உறுதி பூண்டேன்.

வெவ்வேறு நிறுவனங்களில், பலதரப்பட்ட பதவிகளில் அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு 2001ல் தொழில் தொடங்கினேன். ஆரம்ப சிரமங்களைக் கடந்து நல்ல விதமாக நடந்து வருகிறது.

காசு பணம் கொஞ்சமாகச் சேர்த்தாலும், பத்திருபது பேருக்கு வேலை தரமுடிகிற சந்தோஷம் இருக்கிறது.

இதெல்லாம் இரு மாதங்கள் முன்பு வரை. இப்பொழுது மின் தடை என்னைப் போன்ற முதல் தலைமுறை தொழில் தொடங்கியவர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. அதிலும் இன்றிலிருந்து தினம் 8 மணி நேர மின் தடை என்பது குரல்வளையை நெரிப்பது போல்தான்.

ஒரு வாரத்திற்கு 6 வேலை நாட்கள். 6×24 = 144 மணி நேரம்.

தினம் 8 மணி நேரம் மின்தடை. 5X8 = 40 மணி நேரம்

சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து ஞாயிறு காலை 6 மணிவரை தொழிலகங்கள் வேலை செய்யக் கூடாது ( பவர் ஹாலிடே) = 24 மணி நேரம்

மொத்தம் = 40 + 24 = 64 மணி நேரம்

சத வீதத்தில் 64/144 = 44 %

ஆக வெறும் 56% சதவீதம் மின்சாரத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும்.

இதில் கொடுமையான விஷயம் என்னன்னா, மதியம் 12 மணியிலிருந்து 3 மணிவரை மிந்தடை என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் அதற்கு முன்போ அல்லது பின்போ அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பகலில் ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை மின்சாரம் இல்லாததால் சம்பளத்துடன் ஓய்வும் அளித்து, அதே வேலையை இரவில் முடிக்க இரு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. எப்படிச் சமாளிப்பது?

என் தொழிலுக்கு ஜெனெரேட்டர் உதவாது. அப்படியே உபயோகித்தாலும் 5.40 காசுக்குக் கிடைக்கும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 11 முதல் 12 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இதை யாரிடம் சொல்லி முறையிடுவது. இதில் கொடுமை இந்த மாதம் அக்-2 காந்தி ஜெயந்தி, அக்-8,9 பூஜா விடுமுறை, அக் 25,26,27,28 வரை தீபாவளி விடுமுறை. 29 ஆம் தேதியும் பாதிபேர்தான் வேலைக்கு வருவார்கள்.

*********************************************************

ச.முத்துவேல் வலை முகவரி அனுப்பியிருந்தார் வெயிலான். நன்றாக எழுதும் இவருக்கு அதிகப் பின்னூட்டங்கள் இல்லை, எனினும் தொடர்ந்து எழுதுகிறார்.

அவரின் ஒரு கவிதையை இங்கே தருகிறேன் மீதியை அவர் வலைப்பூவில் படித்துப் பாருங்கள்.

தனியறையில்
பின்னிரவில்
பேய்க்கதைப் படித்துவிட்டு
எதற்கெடுத்தாலும்
மிரண்டுவிட்டுப் பின்
பகுத்தறிவோடு
சிரித்துக்கொள்கிறான்
‘நாளை படித்திருந்தால்
பேயும்
நாளை வந்திருக்குமோ!’

*************************************************************

டாக்டர் இந்த ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் பேஷண்ட் கிட்ட நாங்க பேசலாமா?

நீங்க தாராளமாப் பேசலாம்…!

Advertisements

43 comments

 1. அண்ணே… கதம்பம் வாசனையா இருக்கு… மொத நாந்தானோ?

 2. வெயிலானுக்கும்,உங்களுக்கும் எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும்.மிக்க நன்றி.

 3. சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுகிறீர்கள்.. வாழ்த்துகள்.. 🙂

 4. சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுகிறீர்கள்.. வாழ்த்துகள்.. 🙂

 5. சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுகிறீர்கள்.. வாழ்த்துகள்.. 🙂

 6. //இதை யாரிடம் சொல்லி முறையிடுவது. //

  ஆக ஆர்காட்டார் எபெக்ட் எங்கெயெல்லாம் பாதிக்குது ! 😦

  அண்ணாச்சி,

  விரைவில் நிலைமை சரியாக உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகள் !

 7. முந்தைய வாரங்களில் வாலி. இப்போது கண்ணதாசன். எப்பேர்ப்பட்ட கவிஞர்கள்! காலி கோச் புரியாத புதிர் என்றாலும், ரயில்வே நிர்வாகம் ஒரு பதில் வைத்திருக்கும். Should be interesting.

  //இதில் கொடுமை இந்த மாதம் அக்-2 காந்தி ஜெயந்தி, அக்-8,9 பூஜா விடுமுறை, அக் 25,26,27,28 வரை தீபாவளி விடுமுறை. 29 ஆம் தேதியும் பாதிபேர்தான் வேலைக்கு வருவார்கள்.//

  சம்பளத்துக்கு வேலை பார்க்கும் எங்களுக்கு நாக்கில் நீர் ஊறும், இந்த தொடர் விடுமுறைகளைக் கண்டால். அதற்கும் மறுபக்கம் உள்ளது என்பது நீங்கள் சொல்லித்தான் புரிகிறது.

  முத்துவேல் கவிதைகள் எனக்கு முன்னமே பரிச்சயம். வைரமுத்துவிடம் விருது வாங்கிய, உயிர்மையில் கவிதைகள் வெளியான நல்ல கவிஞர். நீங்கள் சொல்வதுபோல் நிறைய பேர் அவர் வலைத்தளம் வருவதில்லை. வெறும் பின்னூட்டங்களுடன் நிறுத்திக்கொண்ட எனக்கு, வெயிலான், நீங்கள், பரிசல் போல சுட்டிக்காட்டத் தோன்றவில்லை. கொங்குத் தண்ணீரில் என்னவோ இருக்கிறது.

  அதேபோல் இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிட்டுள்ள bee’morgan (அட சும்மா ‘பாலா’ என்றே அழைக்கலாம்) இன்னொரு, எதிர்பார்ப்புகளை உருவாக்கும் இளைஞன். முடிந்தபோது அவனது வலைத்தளம் சென்று பாருங்கள். உங்கள்/பரிசல் பார்வை பட்டால் நல்லது. ஆனால் எதனாலோ அதிகம் எழுதுவதில்லை. என் பாட்டி சொல்வதுபோல் ‘நல்ல கதை நீளமில்லை’ போலும்.

  ஜோக்கில் ‘நீங்க’ பன்ச். ரசித்தேன். கலக்கறீங்க தலைவா.

  அனுஜன்யா

  ஹாங்காங் பதிவர்கள் யாரையாவது தெரியுமா?

 8. அண்ணா…

  வெறும் பாராட்டுக்களைச் சொல்லி உங்களைத் தள்ளிவைக்க விருப்பமில்லை.

  அதனால் நன்றியும் கூடச் சேர்த்துச் சொல்லிக் கொள்கிறேன்!

  நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்ததற்கு!!!

 9. கண்ணதாசன் பாடல்களை பற்றி சொல்லவேண்டுமா

 10. மின்சார பாதிப்பு எங்களுக்கும் உண்டு, தீர வழி தான் தெரியவில்லை

 11. சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் கொங்கு மண்டல வலைப்பதிவர்களின் சார்பில் வெற்றிகரமாக [கடைசியாய் :)] கலந்து கொண்டு ஓபன் டிக்கெட்டில் தாயகம் திரும்பியிருக்கும் அண்ணன் வடகரை வேலன் அவர்களை வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.

  ஏன் வலைப்பதிவர் சந்திப்பு பற்றி ஒரு பூவையும் கதம்பத்துல காணோமே? மத்தபடி கதம்பம் பல வண்ணங்களுடன் அம்சமாக இருக்கிறது.

 12. எத பத்தி எழுதினாலும், முழுசா உக்காந்து படிக்கிறது மாதிரி எழுதுறீங்க! எப்படிங்க ?

 13. // வால்பையன் said…
  வழக்கம் போல கதம்பம் அருமை //

  ரிப்பீட்டேய்…

 14. மகேஷ் – நன்றி.

  ச.முத்துவேல் – இதில என்னங்க இருக்கு, நல்லா இருந்துச்சு நாலு பேருக்குச் சொன்னோம்.

  bee’morgan – நன்றி பாலா

 15. //கோவி.கண்ணன் said…

  அண்ணாச்சி,

  விரைவில் நிலைமை சரியாக உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகள் !//

  நன்றி கோவி. வாழ்க்கைங்கிற சக்கரமே நம்பிக்கைங்கிற அச்சாணிலதான் ஓடிட்டிருக்கு.

 16. //அனுஜன்யா said…

  முந்தைய வாரங்களில் வாலி. இப்போது கண்ணதாசன். எப்பேர்ப்பட்ட கவிஞர்கள்!//

  ஆமாம் அனுஜன்யா. அவர்களைப் பார்த்தாவது சில வாழும் கவியரசுகளுக்குப் புரிந்தால் சரி.

  // காலி கோச் புரியாத புதிர் என்றாலும், ரயில்வே நிர்வாகம் ஒரு பதில் வைத்திருக்கும். Should be interesting.//

  இதுவரைத் தெரியவில்லை. இத்தனைக்கும் என் பெரியப்பா மகன் மதுரை ஸ்டேசன் மாஸ்டர்.

  //இதில் கொடுமை இந்த மாதம் அக்-2 காந்தி ஜெயந்தி, அக்-8,9 பூஜா விடுமுறை, அக் 25,26,27,28 வரை தீபாவளி விடுமுறை. 29 ஆம் தேதியும் பாதிபேர்தான் வேலைக்கு வருவார்கள்.//

  சம்பளத்துக்கு வேலை பார்க்கும் எங்களுக்கு நாக்கில் நீர் ஊறும், இந்த தொடர் விடுமுறைகளைக் கண்டால். அதற்கும் மறுபக்கம் உள்ளது என்பது நீங்கள் சொல்லித்தான் புரிகிறது.//

  எல்லா நாணயத்திற்கும் இரு பக்கமுள்ளது. நாம் எந்தப் பக்கம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது.

  // முத்துவேல் கவிதைகள் எனக்கு முன்னமே பரிச்சயம். வைரமுத்துவிடம் விருது வாங்கிய, உயிர்மையில் கவிதைகள் வெளியான நல்ல கவிஞர். நீங்கள் சொல்வதுபோல் நிறைய பேர் அவர் வலைத்தளம் வருவதில்லை. வெறும் பின்னூட்டங்களுடன் நிறுத்திக்கொண்ட எனக்கு, வெயிலான், நீங்கள், பரிசல் போல சுட்டிக்காட்டத் தோன்றவில்லை. கொங்குத் தண்ணீரில் என்னவோ இருக்கிறது. //

  இதுல என்ன இருக்கு அனுஜன்யா. பிடிச்சிருக்கிறத பிடிச்சிருக்குன்னு சொல்ல ஏதும் தயக்கம் இல்ல அவ்வளவுதான்.

  //அதேபோல் இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிட்டுள்ள bee’morgan (அட சும்மா ‘பாலா’ என்றே அழைக்கலாம்) இன்னொரு, எதிர்பார்ப்புகளை உருவாக்கும் இளைஞன். முடிந்தபோது அவனது வலைத்தளம் சென்று பாருங்கள். உங்கள்/பரிசல் பார்வை பட்டால் நல்லது. ஆனால் எதனாலோ அதிகம் எழுதுவதில்லை. என் பாட்டி சொல்வதுபோல் ‘நல்ல கதை நீளமில்லை’ போலும். //

  அவரைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. பார்க்கிறேன்.

  // ஜோக்கில் ‘நீங்க’ பன்ச். ரசித்தேன்.//

  நன்றி.

  // ஹாங்காங் பதிவர்கள் யாரையாவது தெரியுமா? //

  எதுக்கு கேக்குறீங்கன்னு புரியல?

 17. பரிசல், வால்பையன், விஜய் ஆனந்த், ஜீவன் – நன்றி.

  வெயிலான் – நான் போனதும் பதிவர் சந்திப்பு முடிந்து விட்டது. பின் நர்சிம், சுந்தர், புருனோ போன்றவர்களுடன் ஒரு சிங்கிள் டீ சாப்பிட்டுவிட்டு வந்தேன். இதில் விசேசமா எழுத ஏதும் இல்லை.

 18. அப்ப எங்கூட பேசினது விசேஷம் இல்லீங்கிறீங்க.. உங்க கூட டூ..!

 19. //நன்றி கோவி. வாழ்க்கைங்கிற சக்கரமே நம்பிக்கைங்கிற அச்சாணிலதான் ஓடிட்டிருக்கு.//

  இந்த மேட்டரை வச்சு தனிப்பதிவு போடலாம், பரிசல் முந்துவதற்குள் எழுதிடுங்க

  🙂

 20. மின்சார தட்டுப்பாடி பல தரப்பிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது… கதம்பம் மணக்குது.

 21. //வெஸ்ட் கோஸ்ட் வண்டியில் சார்ட் ஒட்டுபவர், இரண்டு பெட்டிகளில் கோச் எண் மட்டும் ஒட்டி விட்டு சார்ட் ஒட்டாமல் சென்றார். கேட்டதற்கு, “ இந்த ரெண்டு கோச்சும் ஈரோடு கோட்டா, அது வரைக்கும் காலியாகத்தான் போகும். நீங்க இதுல ஏறிக்குங்க TTE யிடம் சொல்லி பர்த் வாங்கிகுங்க” அப்படின்னார். அது போலவே வசதியாக 3 பேரும் வந்து சேர்ந்தோம்.//

  அடடே அப்டியா?.. மாதம் 2 ரயில் பயணம் மேற்கொள்ளும் எனக்கு இது புதிய தகவல்.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. இதுகெல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தான் பயன்படுத்தனும் போல.. கொடுமை..

 22. அந்த ரயில்வே மேட்டர் ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே… காலியாவா ஓட்டறாங்க?

 23. /
  அனுஜன்யா said…

  சம்பளத்துக்கு வேலை பார்க்கும் எங்களுக்கு நாக்கில் நீர் ஊறும், இந்த தொடர் விடுமுறைகளைக் கண்டால். அதற்கும் மறுபக்கம் உள்ளது என்பது நீங்கள் சொல்லித்தான் புரிகிறது.
  /

  :((((((((
  கொடுமை

 24. முத்துவேலின் கவிதை சூப்பர்.. இடப்பக்க பட்டையில் படித்ததுமே சுரீரென்றிருந்தது. எதிர்பார்த்திருந்த படியே உள்ளே அவரது வலைமுகவரி.. நன்றிகள் பல 🙂

 25. //ச.முத்துவேல் said…
  வெயிலானுக்கும்,உங்களுக்கும் எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும்.மிக்க நன்றி.
  //

  ரிப்பீட்டே :))

 26. /உங்கள் கையில் உள்ள ரேகைகள் உங்கள் எதிர்காலத்தைச் சொல்லக் கூடுமெனில், கையில்லாதவனுக்கு எதிர்காலமே இல்லையா?//
  இந்த கமெண்ட் பதிவை பற்றியல்ல. மேலே இடது ஓரத்தில் உள்ள தத்துவத்தை பற்றி. அந்த தத்துவத்தில் கை ரேகை பார்த்து எதிர் காலம் பற்றி சொல்ல முடியும்னு தான் பொருள் இருக்கு. கை ரேகை இருந்தா தான் எதிர் காலம் இருக்குன்னு இல்லை. ஆக “கையில்லாதவனுக்கு எதிர்காலமே இல்லையா?” என்பது தவறு. கை இல்லாதவனின் எதிர் காலத்தை கணிக்க முடியாது அவ்வளவுதான். தத்துவத்தை படிக்கும் பொது இதுதான் தோணிச்சி. தவறாக என்ன வேண்டாம்.

 27. மிக அருமையானக் கதம்பம்.

  மின் வெட்டால் எங்களுக்கும் மிக அதிக அளவில் பாதிப்புகள் அண்ணாச்சி, காசு குடுக்குற உங்களுக்கே இந்த நிலமைன்னா, இலவச மின்சாரம் வாங்கி விவசாயம் செய்யிற எங்களுக்கு ? சர்வ சாதாரணமா நிறுத்துறாங்களாம். பயிர் எல்லாம் காஞ்சு கிடக்குன்னு ஊருக்கு பேசுறப்ப சொல்றாங்க. கேட்கவே கவலையா இருக்கு.

  ட்ரெயின்ல காலி பெட்டிகள் இருப்பது ஒரு சாபக்கேடு. கொஞ்சம் முறையா சிந்திச்சா திட்டமிட்டு இதை சரி செய்யலாம்.

  சென்னை பதிவர் சந்திப்பில் வெற்றிகரமாக கலந்து கொண்டு சிறப்பித்த அண்ணாச்சி வெகு விரைவில் சிங்கை பதிவர் சந்திப்பிலும் கலந்து கொள்வார் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். ( இப்டி கிளப்பி விட்டா கட்டாயம் அண்ணாச்சி வந்துருவாருல!!).

 28. //தாமிரா said…

  அப்ப எங்கூட பேசினது விசேஷம் இல்லீங்கிறீங்க.. உங்க கூட டூ..! //

  எனக்கு ஏமாற்றம்தான் தாமிரா.நான் நினைத்தபடி வர இயலவில்லை. வேலையும் முடியவில்லை.சரி சன்னமா யாராவது ரெண்டுபேரத் தேத்திக்கிட்டு ஏதாவது படத்துக்கு போலாம்; விடியவிடிய மொக்கை போடலாம்னு வந்தேன்.

  சரியான சூழ்நிலை அமையல. நான் வந்த உடனே நீங்க கெளம்பீட்டிங்க. அது வேற ரெம்பக் கஷ்டமாப் போச்சு.

 29. //கோவி.கண்ணன் said…

  //நன்றி கோவி. வாழ்க்கைங்கிற சக்கரமே நம்பிக்கைங்கிற அச்சாணிலதான் ஓடிட்டிருக்கு.//

  இந்த மேட்டரை வச்சு தனிப்பதிவு போடலாம், பரிசல் முந்துவதற்குள் எழுதிடுங்க

  :)//

  நான் எழுதுவதைவிட பரிசல் எழுதினால் இன்னும் சுவராஸ்யமாக இருக்கும் இல்லையா?

 30. சஞ்சய்,

  இது போல எந்தெந்த வண்டியில இந்த வசதி இருக்குன்னு தெரிஞ்சா வசதியா இருக்கும்.

 31. //இலவசக்கொத்தனார் said…

  அந்த ரயில்வே மேட்டர் ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே… காலியாவா ஓட்டறாங்க?//

  ஆமாங்க அன்னைக்கு அந்தப் பெட்டியில வந்ததுல பாதிப்பேர் ரயில்வே ஊழியர்கள். மீதி என்னப் போல் ஓப்பன் டிக்கட் வாங்கி வந்தவர்கள்.

 32. சென்ஷி,

  பதிவெழுதும் போதே இந்தக் கவிதை உங்களைப் பாதிக்கும் என்று நினைத்தேன், சரிதான்.

  நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார் அதிகக் கவனம் பெறவில்லை.

 33. மொக்கை,

  //கை ரேகை இருந்தா தான் எதிர் காலம் இருக்குன்னு இல்லை. ஆக “கையில்லாதவனுக்கு எதிர்காலமே இல்லையா?” என்பது தவறு. கை இல்லாதவனின் எதிர் காலத்தை கணிக்க முடியாது அவ்வளவுதான்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  உட்கருத்தைப் புரிஞ்சுக்கல நீங்க. கைரேகையப் பாத்துக்கிட்டு எனக்கு நேரம் சரியில்ல, என் ராசி என்பது போன்ற மொக்கை வாதங்களில் ஈடுபடாமல் செய்ய வேண்டிய காரியங்களை தயங்காமச் செய்யனும்ங்கிறதுக்குச் சொன்னது அது.

  கையே இல்லாதவனும் வெற்றி பெருகிறான், என்று நம்பிக்கை விதைதூவ எழுதியது அது.

  மாற்றுப் பொருள்தருமாறு எழுதியிருப்பின் பிழை என்னுடையதுதான்.

 34. //ஜோசப் பால்ராஜ் said…

  மிக அருமையானக் கதம்பம்.//

  நன்றி ஜோசப்.

  //மின் வெட்டால் எங்களுக்கும் மிக அதிக அளவில் பாதிப்புகள் அண்ணாச்சி, காசு குடுக்குற உங்களுக்கே இந்த நிலமைன்னா, இலவச மின்சாரம் வாங்கி விவசாயம் செய்யிற எங்களுக்கு ? சர்வ சாதாரணமா நிறுத்துறாங்களாம். பயிர் எல்லாம் காஞ்சு கிடக்குன்னு ஊருக்கு பேசுறப்ப சொல்றாங்க. கேட்கவே கவலையா இருக்கு. //

  விவ்சாயிகளுக்கு இன்னும் கொடுமைங்க. எங்களுக்கு எப்ப கட்டாகும்னு சொல்லுவதில்லை. அது போல விவசாயிகளுக்கு எப்ப கரண்ட் இருக்கும்னு சொல்லுவதில்லை.

  // ட்ரெயின்ல காலி பெட்டிகள் இருப்பது ஒரு சாபக்கேடு. கொஞ்சம் முறையா சிந்திச்சா திட்டமிட்டு இதை சரி செய்யலாம். //

  ரயில்ல்வேயில் பாராட்டத் தக்க மாற்றங்கள் வந்துவிட்டன. இதை யாரும் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

  //சென்னை பதிவர் சந்திப்பில் வெற்றிகரமாக கலந்து கொண்டு சிறப்பித்த அண்ணாச்சி வெகு விரைவில் சிங்கை பதிவர் சந்திப்பிலும் கலந்து கொள்வார் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். ( இப்டி கிளப்பி விட்டா கட்டாயம் அண்ணாச்சி வந்துருவாருல!!) //

  சிங்கபூர் வர வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். கூட பரிசல் அல்லது வெயிலான் வந்தால் உடனே கிளம்ப வேண்டியதுதான்.

 35. //சிங்கபூர் வர வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். கூட பரிசல் அல்லது வெயிலான் வந்தால் உடனே கிளம்ப வேண்டியதுதான்.//

  வாங்க வாங்க ஏர்போர்ட்டுக்கே வந்து வரவேற்கிறேன், எங்க வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள்.

 36. //கோவி.கண்ணன் said…

  //சிங்கபூர் வர வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். கூட பரிசல் அல்லது வெயிலான் வந்தால் உடனே கிளம்ப வேண்டியதுதான்.//

  வாங்க வாங்க ஏர்போர்ட்டுக்கே வந்து வரவேற்கிறேன், எங்க வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள்.//

  நன்றி கோவி. ஆனா நீங்கதான் அமெரிக்கா போய்விடுவீர்களே?

 37. //// ஹாங்காங் பதிவர்கள் யாரையாவது தெரியுமா? //

  //எதுக்கு கேக்குறீங்கன்னு புரியல?//

  ஹி ஹி, நானும் ஹாங்காங் போயிருக்கேன் அப்பிடீன்னு நேரா சொன்னா சுயதம்பட்டம் என்பீங்க. சனிக்கிழமை திரும்பணும்.

  அனுஜன்யா

 38. //ஹி ஹி, நானும் ஹாங்காங் போயிருக்கேன் அப்பிடீன்னு நேரா சொன்னா சுயதம்பட்டம் என்பீங்க. சனிக்கிழமை திரும்பணும்.

  அனுஜன்யா//

  என் பதிவுகளில் ஆளைக்காணோமே என வருத்தமாயிருந்தேன்.இதுதான் காரணமா.அப்பாடா.
  இதுவரை வந்த பின்னூட்டங்களில் என்னைப் பற்றிய பதிவுகளை எழுதியுள்ள அன்புள்ளங்களுக்கு தனித்தனியாக நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s