கதம்பம் – 28-09-08

வலையில் தற்பொழுது நடக்கும் பிரச்சினை ஒன்றின் என் தனிப்பட்ட கருத்து இது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பிரச்சினையோட மூலகாரணம் என்ன? என்ன செஞ்சாச் சரியாகும்னு கண்டுபிடிச்சு அதச் செய்யனுங்கிறதுதான் இந்தக் குறளோட கருத்து.

சிலர் பிறர் மாதிரி எழுத முயற்சி செய்வது தவறு. அதுக்குத்தான் அவரு இருக்காரே. நமக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கு அத செம்மைப் படுததுவதுதான் சரி.

அவருக்கு அதிக ஹிட் வருது நமக்கு வரலையேங்குற ஏக்கமும் சிலருக்கு இருக்கு. இதுவும் தவறானதுதான். வலையில பதிவு எழுதறதே, நமக்குத் தோனுனத எழுத ஒரு வசதிங்குறதுனாலதான். அத எழுத மத்தவங்க மாதிரி பிரபலமா இருக்க அவசியமில்ல.

இவ்வளவு ஹிட் வாங்குன ஒரு ஆள நான் எப்படி கேள்வி கேட்டு மடக்குறேன் பாருன்னு ஒரு நோக்கத்தோட கேள்வி கேட்பதும் தவறு.

அதேபோல இன்னாரு இன்னாருக்கு ஜால்ரா, அல்லக்கை என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. இருந்தா என்ன தப்பு?. அது உங்கள நேரடியாப் பாதிக்குதா? ஒருவருக்கு நண்பர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது இயல்புதானே.

நம்ம பின்னூட்டத்த அவரு வெளியிடல, பின்னூட்டத்துக்குப் பதிலே தரலன்னும் சொல்றது தப்பு. வலையில இருக்க சுதந்திரமே அதுதானே. பிடிச்சாப் போடு, இல்ல போய்கிட்டே இரு.

ஒரு பொது விவாதத்துக்கு நீங்க ஒரு கேள்வி வச்சு அதுக்குப் பதில் வரல்லன்ன அத ஒரு பதிவா உங்க வலையில போடலாம். இது அவர் சொன்ன கருத்து, இது நான் கேட்ட கேள்வி உங்க கருத்து என்னன்னு, அத மேலும் பொதுவாக வைக்கலாம்.

உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமிடுவது குறித்து அசிங்கமா பேசியிருக்கவும்கூடாது; இத ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு மனவருத்தப்படவும் அவசியமில்ல. இதுல ரெண்டு சைடுலயும் கொம்பு சீவ ஆள் இருப்பது கண்கூடு.

இரண்டு தரப்பிற்கும் நான் சொல்வது இதுதான். வெற்றிகளை உங்க தலைக்கும் தோல்விகளை உங்கள் இதயத்திற்கும் எடுத்துச் செல்லாதீர்கள்.

******************************************

புதுகை அப்துல்லாவப் பாராட்டி பரிசல் போட்ட பின்னூட்டத்துல சுட்டு(ம்) விரலால் தீராப் பசியடங்கியவன் கதை தெரியுமான்னு கேட்டிருந்தேன். அதச் சொல்லச் சொல்லி நேரிலும், செல்லிலும், மெயிலிலும் கோரிக்கை வைத்த உங்களுக்காக இதோ.

ஒரு ஊர்ல ஒரு பண்ணையார். மகாக் கஞ்சன். அதுகூடப் பரவாயில்லை, அவருக்கு ஒரு வினோதப் பழக்கம். அவரு சாப்பிடும்போது வேலையாட்கள் எல்லாம் சுத்தி நின்னு அத வேடிக்கை பாக்கனும்.

எல்லாரும் சாவதைப் போல அவரும் ஒரு நாள் இறந்துவிடுகிறார். நம்மாளுக்கு நரகம்தானே கிடைக்கும். கூடவே ஒரு வித்தியாசமான தண்டனை கிடச்சது. எண்ணைக் கொப்பரையில போட்டு எடுக்க இடத்துல வரிசையில காத்திருக்க வேண்டியதாப் போச்சு. இவர் முறை வர கொஞ்சம் தாமதமாகும்.

இவருக்குக் கிடைச்ச வித்தியாசமான தண்டனை தீராப் பசி எடுப்பதுதான். தவியாத் தவிச்சார். என்ன பண்ணன்னு தெரியல. அப்ப அந்தப் பக்கமா வந்த சித்திர குப்தன்கிட்ட கேக்குறார். எதையாவது பண்ணி இதக் கொஞ்ச நேரம் நிறுத்துங்க தாங்க முடியலன்னு. சி.கு உடனே அவன் ஏட்டப் புரட்டிப் பாத்துட்டு உன் சுட்டு விரல எடுத்து வாயில் வைன்னுட்டுப் போயிட்டாரு. இவர் வச்ச ஒடனே பசி அடங்கிருச்சு.

என்ன காரணம்னு தெரிஞ்சுக்க ஆர்வமாகி சி.கு கிட்ட கேட்டா, அவரு சொன்னாரு ஒரு தடவை அண்ணதானம் எங்க நடக்குதுன்னு கேட்ட ஒருவனுக்கு இதோ இந்தப் பக்கம்னு உன் சுட்டு விரலாலச் சுட்டிக் காட்டிச் சொன்னாய் அதனால அந்தச் சுட்டு விரலுக்கு புண்ணியம் இருக்கு.

ஒரு பக்கமாச் சுட்டுனதுக்கே அப்படி, நம்ம பரிசல் உலகம் பூரா சுட்டியிருக்காரு, அப்ப எவ்வளவு புண்ணியம் சேத்துருக்காரு பாருங்க.

******************************************************

வாலி புத்தகத்தைப் படிச்சு முடிச்சாச்சு. மனுசன் ரெம்ப ரோஷக்காரர்தான். அவரு சண்டை போடாத ஆளே இல்ல போல. இருக்கட்டும் கர்வப் படுபவன்தானே கலைஞன். வித்யா கர்வம் பெருமைதான். வெறும் கர்வம்தான் சிறுமை.

இன்னொரு சுவராசியமான சம்பவம் அந்தப் புத்தகத்திலிருந்து.

எம்ஜியார் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்துக் கொண்டிருந்த நேரம்.

வாலி எம்ஜியார்கிட்ட கேட்டாரு ”பாட்டு ரெக்கர்டிங் எப்பண்ணே”

எம்ஜியார் பொய்க் கோபத்துடன், ”இந்தப் படத்துக்கு உங்க பாட்டு இல்ல, பட டைட்டில்ல உங்க பேரு வராது”

“எம்பேரு இல்லாம நீங்க படத்துக்கு டைட்டில் கார்டே போட முடியாதுண்ணே” அப்படின்னு வாலி சவால் விட்டாரு.

“ஏன்”

“எம்பேரு இல்லாமப் போட்டா ‘உலகம் சுற்றும் பன்’ அப்படீன்னுதான் போடனும்”

**************************************************

இவரு எழுதுன பல கவிதைகளை அந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கார். எனக்குப் பிடிச்ச கவிதை.

மனிதர்களை எங்களால்
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான் மீண்டும்
மனிதர்களாக்க முடியவில்லை.

******************************************

நமது வலை நண்பர் ராஜ நடராஜன் photocbe.com என்ற வலைச் சேவைத்தளத்தை தொடங்கியுள்ளார். நமது தயாரிப்புகளையும் சேவைகளயும் அதன் மூலம் விளம்பரப்படுத்தலாம். கட்டணம் இன்னும் தீர்மாணிக்க வில்லை. என் நிறுவனம் குறித்த தகவல்களை இணைப்பது குறித்து தேவையான விபரங்களைத் தருமாறு சொல்லியிருக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற உங்கள் வாழ்த்துக்களை rajanatcbe@gmail.com அனுப்புங்கள்.

***************************************************

இரண்டு நாட்கள் வெளியூர் செல்வதால் ஆசிப் அண்ணாச்சி, தமிழ்ப் பிரியன், புதுகை அப்துல்லா போன்றவர்களுக்கும் மற்ற வலை அன்பர்களுக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்

Advertisements

44 comments

 1. //“எம்பேரு இல்லாமப் போட்டா ‘உலகம் சுற்றும் பன்’ அப்படீன்னுதான் போடனும்”//

  :))

  சூப்பர் !

  அண்ணாச்சி,

  வலைப்பதிவாளர்களுக்கு நீங்கள் தந்திருக்கும் கருத்து டிப்ஸ் அருமை.

  பெரியவங்க சொன்னா கேட்டுகிறாம இருப்பாங்களா ?

 2. ஓ. இப்போ எல்லோரும் தம்பக்க நிலையை எடுத்துச்சொல்லும் நேரமா? அப்போ ஓகே – நானும் ஒரு பதிவு போட்டுடறேன் – ‘சமீபத்திய பிரச்சினை குறித்து என் இரண்டணாக்கள்’…..:-)))

 3. கதம்பம் வழக்கம்போல் அருமையோ அருமை….

 4. //கோவி.கண்ணன் said…

  வலைப்பதிவாளர்களுக்கு நீங்கள் தந்திருக்கும் கருத்து டிப்ஸ் அருமை.

  பெரியவங்க சொன்னா கேட்டுகிறாம இருப்பாங்களா ?//

  கோவி நீங்க எழுதுனதுதான், மேலும் உங்க வலையில கோவியானந்தாவின் பொன்மொழிகள் அருமை.

 5. //ச்சின்னப் பையன் said…

  ஓ. இப்போ எல்லோரும் தம்பக்க நிலையை எடுத்துச்சொல்லும் நேரமா? அப்போ ஓகே – நானும் ஒரு பதிவு போட்டுடறேன் – ‘சமீபத்திய பிரச்சினை குறித்து என் இரண்டணாக்கள்’…..:-)))//

  எழுதுங்க அப்பத்தான் பிரச்சினையின் அடர்த்தி குறையும்.

 6. சொல்ல வேண்டிய விசயத்தை சொல்லி இருக்கறிங்க…

 7. நானும் ரமழான் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்..

 8. வாலியின் ஆரம்பகால பாடல்கள்…கற்பகம்,செல்வம் ஆகிய படங்களில் இடம் பெற்றவை.செல்வம் படத்தில் ஒரு பாடலில் ,’அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்’என்ற வரி வரும்.அதற்கு அப்போது பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

 9. //T.V.Radhakrishnan said…

  வாலியின் ஆரம்பகால பாடல்கள்…கற்பகம்,செல்வம் ஆகிய படங்களில் இடம் பெற்றவை.செல்வம் படத்தில் ஒரு பாடலில் ,’அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்’என்ற வரி வரும்.அதற்கு அப்போது பலத்த எதிர்ப்பு கிளம்பியது.//

  அது நம்ப முடியவில்லை பாடல்தானே?

  உப்புக்கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்.
  முப்பது நாளிலும் நிலவைப் பார்க்கலாம்.
  சுட்ட உடல்கூட எழுந்து நடக்கலாம்
  நீ சொன்னது எப்படி உண்மையாகலாம்.

  என்று அதிர்ச்சியை வெளிப்படுத்த எழுதியிருபார்.

 10. முன்னாடி ஒரு வலை நண்பரை கடும் டோஸ் விட்டிருந்தேன். இப்போ உங்க பதிவை படிச்சு கூல் ஆகிவிட்டேன். இனி அவரது பதிவுக்கும் பின்னோட்டம் போடுவேன். நல்ல கருத்து நன்றி…

 11. சூப்பர். அபடியே சந்தையிலே தமிழ்மணத்துக்கும் ஒரு லிங்க் குடுங்க அண்ணாச்சி. பொளைச்சு போரானுவ

 12. பதிவுலகில் இருப்பவர்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் இது போல் நடக்கும் வாய்ப்பு குறைந்து விடும். வாலி கவிஞரல்லவா? அதனால் தான் வார்த்தையில் விளையாடியுள்ளார்.

 13. பதிவர்களுக்கு நீங்கள் சொன்ன அட்வைஸ் சூப்பர் அண்ணாச்சி.

 14. கலக்கல் கதம்பம் அண்ணாச்சி.. பிரச்சினையை குறித்து மிகச் சரியாக அலசியிருக்கிறீர்கள். நன்றி.

 15. நன்றி.

  சுட்டுவிரலால் தீராப்பசி கதையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதையே வேறு மாதிரி கர்ணனுக்கும் சொல்வார்கள்.. தெரியுமா? (கர்ணன், எல்லா தானமும் செய்திருந்தாலும், அன்னதானம் செய்ததில்லையாம்.. ஒரு முறை அன்னதானம் நடக்கும் இடத்தை சுட்டிக்காட்டியதால்… அப்ப்டிப் போகும் கதை!)

  வாலிபற்றி இன்னொரு விடயம்:-

  பாண்டிச்சேரி தமிழ்சங்க விழாவுக்கு சென்று தமிழால் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருத்தர் கேட்டாராம்… ‘இவ்ளோ நல்லா தமிழ்ல கலக்குறீங்க. அப்புறம் எதுக்கு ’லாலாக்கு டோல் டப்பீம்மா’ வெல்லாம்?” என்று. வாலி சொன்னாராம்:-

  ‘இங்கே நான் வண்ணத்தமிழ்ப் பெண்ணுக்கு பாலூட்டும் தாய். அங்கே.. விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்!”

  அவர் அடிக்கடி சொல்லுவார்… ‘மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டாங்கறத விடுங்க. எங்கிட்ட துட்டுக்குப் பாட்டுதான்!”

  அவர் ஒரு பல்கலைக்கழகம்!

  மதங்களால் வேறாகப் பேசப்பட்டாலும் மனங்களால் ஒன்றாயிருக்கும் என் இசுலாமியச் சகோதரர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

 16. இரண்டு நாட்கள் லீவுங்கறதால நானும், நம்ம, ஆசிப் அண்ணாச்சி, தமிழ்ப் பிரியன், புதுகை அப்துல்லா போன்றவர்களுக்கும் மற்ற வலை அன்பர்களுக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :))))

 17. //tamil cinema said…
  முன்னாடி ஒரு வலை நண்பரை கடும் டோஸ் விட்டிருந்தேன். இப்போ உங்க பதிவை படிச்சு கூல் ஆகிவிட்டேன். இனி அவரது பதிவுக்கும் பின்னோட்டம் போடுவேன். நல்ல கருத்து நன்றி…//

  யாரையும் கடுமையாகப் பேசுவதால் நாம் சொல்லவந்த கருத்து அடிபட்டுப் போய் திட்டியதுதான் நினைவில் நிற்கும்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 18. //தமிழ் பிரியன் said…
  பதிவுலகில் இருப்பவர்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் இது போல் நடக்கும் வாய்ப்பு குறைந்து விடும்.//

  என் விருப்ப‌மும் அதுதான் த‌மிழ்

 19. //அத்திரி said…
  பதிவர்களுக்கு நீங்கள் சொன்ன அட்வைஸ் சூப்பர் அண்ணாச்சி//

  பிர‌ச்சினை தீர்ன்தால் ச‌ரி.

  வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

 20. மொத பத்தியில என்னவோ? யாருக்கோ? சொல்லியிருக்கீங்க. வெளங்குன மாதிரியும் இருக்கு. வெளங்காத மாதிரியும் இருக்கு.

 21. வெண்பூ said…
  கலக்கல் கதம்பம் அண்ணாச்சி.. பிரச்சினையை குறித்து மிகச் சரியாக அலசியிருக்கிறீர்கள். நன்றி.//

  ந‌ன்றி வெண்பூ.

  ஒன்னா இருந்தா ந‌ல்லா இருக்குமே, அதுதான்.

 22. பரிசல்காரன் said…
  நன்றி.

  சுட்டுவிரலால் தீராப்பசி கதையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதையே வேறு மாதிரி கர்ணனுக்கும் சொல்வார்கள்.. தெரியுமா? (கர்ணன், எல்லா தானமும் செய்திருந்தாலும், அன்னதானம் செய்ததில்லையாம்.. ஒரு முறை அன்னதானம் நடக்கும் இடத்தை சுட்டிக்காட்டியதால்… அப்ப்டிப் போகும் கதை!) //

  அதுவும் உண்டு.

 23. //பரிசல்காரன் said…

  வாலி ஒரு பல்கலைக்கழகம்! //

  ஆமா பரிசல்.கம்பன் கழகத்தில் அவர் சொன்னது,”இம்மதிரி இலக்கியக் கூட்டங்களில் நான் பாட்டுக்குப் பொருளுரைப்பேன். திரைத்துறையில் நான் பொருளுக்குப் பாட்டுரைப்பேன்.”

 24. //வால்பையன் said…

  கவிதை பொட்டிலரைந்தது போல் இருந்தது //

  வாங்க‌ வால், ந‌ன்றி.

 25. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆயில்யன்.

 26. வெயிலான் said…
  மொத பத்தியில என்னவோ? யாருக்கோ? சொல்லியிருக்கீங்க. வெளங்குன மாதிரியும் இருக்கு. வெளங்காத மாதிரியும் இருக்கு.//

  வெயிலான்,

  வெள‌ங்குன‌வ‌ங்க‌ளுக்கு வெளங்கும். வெள‌ங்காட்டி வெள‌ங்குனாப்ல‌தான்.

 27. ஐயா அனானியாரே நீங்கள் போட்ட பின்னூட்டதை நீக்கி விட்டேன்.

  நான் வலைக்கு வருமுன் இருந்த அரசியல் எனக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ளவும் நான் முயலவில்லை. வேறு வேலை இருக்கிறது.

  இந்தப் பின்னூட்டம் மூலம் யார் மனதாவது காயப்பட்டிருக்குமாயின், தயவு செய்து புரிந்து கொள்ளவும், இது என் தவறு இல்லை.

 28. அருமை அருமை ஒவ்வொரு வரிகளும் அதின் கருத்துக்களும்

 29. “எம்பேரு இல்லாமப் போட்டா ‘உலகம் சுற்றும் பன்’ அப்படீன்னுதான் போடனும்”
  அருமை !!!

 30. //Blogger Madurai citizen said…

  அருமை….சூப்பர் ! //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 31. // நசரேயன் said…

  அருமை அருமை ஒவ்வொரு வரிகளும் அதின் கருத்துக்களும்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி //

 32. வேலன்,

  வெளியூர் சென்றிருந்ததால் தாமதமான பின்னூட்டம்.

  சர்ச்சைகளே இல்லாவிடில் மந்தமாக இருக்கும். ஆனால், ஓரளவுக்கு மேல் வாதங்கள், எதிர் வாதங்கள் நீடித்து, தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் என்று தொடர்ந்தால், குளிர் காயும் வெகு சிலரைத் தவிர்த்து மற்றவர்க்கு ஒரு கசப்பு உணர்வு மற்றும் ஆயாசமே மிஞ்சுகிறது. கணிணியில் எழுதும் அளவு படித்தவர்கள், பதிவிடும் அளவு புத்திசாலிகள் என்றெல்லாம் இருந்தால் மட்டும் போதாது. முதிர்ச்சியும் வேண்டும் என்று சொல்லும் உங்கள் கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

  இனிமே பரிசலை யாராலும் தைரியமாத் திட்ட முடியாது. புண்ணியவானைத் திட்டினால் பாவம் தானே! வாலி – ரசித்தேன்.

  அனுஜன்யா

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s