கோடி ரூபாய் புராணம் – வால் பையன்


எனக்கு பேங்க் அக்கவுண்ட் அறிமுகமானது நண்பன் அனந்த ராமன் மூலமாக. அதன் பிறகு சில நாட்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட் படிக்க மட்டும் செய்தேன். சென்ற நவம்பர் மாதத்தில் ஒரு நாள் (தேதி கிழமை ஞாபகம் இல்லை, பழைய பாஸ்புக் தொலைந்து விட்டது) ஒரு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்தேன். தற்செயலாகத்தான் இந்த பேங்கில் ஆரம்பித்தேன். 1000 ரூபாயுடன் ஆரம்பித்த எனது அக்கவுண்டில் இன்று ஒரு கோடி ரூபாய் இருக்கிறது.

ஆனால் சில நாட்களாக இத்தோடு இந்த அக்கவுண்டைக் குளோஸ் செய்துவிடலாமா என்னும் அளவுக்கு மன உளைச்சல். நான் ஏதோ பேங்க் ஊழியர்களிடம் விளையாட்டாகப் பேசப்போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன். நான் செய்த தவறு பேங்க் சீனியர் மேனேஜரிடமே வாதம் செய்தது.

சில மாதங்களுக்கு முன்னாள் அக்கவுண்டில் வரிசையாக பத்து சலான்கள் நிரப்பி கலக்சன் போட்டேன். ஆனால் ஒரு சலான் கவுண்டர் பாயில் எனக்குக் கிடைத்தது. உடனே அவரது அலைபேசிக்கு அழைத்துக் கேட்டேன். அவ்வளவு சலான்கள் தேவையில்லாதது, 10 செக்காக இருந்தாலும் ஒரே சலானில் எழுதலாம், அதனால் ஒன்றை மட்டும் கலக்சன் அனுப்பினேன் என்று கூறினார், அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு என் அக்கவுண்ட் பிடிக்காது என்று நினைத்தேன், அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

கடைசியாக வந்த சர்ச்சைக்குரிய ட்ரான்ஸாக்சன் பற்றி நான் ஏதும் தவறாக கூறவில்லை. ஸ்டேட்மெண்டில் இறுதியாக “இந்த ஸ்டேட்மெண்டுக்கு நீங்கள் கன்ஃபர்மேசன் கொடுத்து என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் அசிஸ்டண்ட் பார்த்து கொள்வார்” என்று எனது ஆடிட்டருக்கு எழுதியிருந்தார்.
நான் “என் அக்கவுண்டில் கிரிடிட் வரவில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது” என்று தான் எழுதியிருந்தேன். அது முதல் நான் எப்பொழுது பேங்கில் பணம் போட்டாலும் எடுத்தாலும் என் மொபைலுக்கு SMS வருவது போல் செட் செய்து விடுவேன், அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன். மற்ற ட்ரான்சாக்சன்கள் மட்டும் வந்ததால், என் அந்த குறிப்பிட்ட ட்ரான்ஸாக்சனை ரெக்கர்டு செய்வீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.

அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு கம்ளெயின்ட் எழுத வேண்டியதாயிற்று. சமீபத்தில் நண்டு நாகேந்திரன் , யாரு நிவேதிதா, ரமணா சுதாகர் போன்றவர்களின் ஸ்டேண்ட்மெண்டில் ட்ரன்சாக்சன்கள் சரியாக இருந்தன.

நான் என்ன துரோகம் அவர்களுக்கு செய்தேன், நான் ஸ்டேட்மெண்ட் கேக்கும்போதெல்லாம், ஸ்டேசனரி இல்லை, பிரிண்டர் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு வேறு பெயரில் பேங்க் அக்கவுண்ட் இருப்பதாகவும் சொல்லி ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது.

அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன், என் செக்குகளை என் அக்கவுண்டில் போடமுடியாமல் பினாமி அக்கவுண்ட் வைத்திருக்கும் அளவுக்கு இன்கம் டேக்ஸ் பிரச்சினை இல்லை.

இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் சத்தியம் என்ற வார்த்தை உண்மையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன். நான் கட்டிய ஒரே வீட்டின் மீது ஆணையாக நான் பினாமி அக்கவுண்ட் வைத்ததில்லை, வைத்திருக்கவில்லை, வைக்கப் போவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.

இந்த வீணாய் போன பேங்க் அக்கவுண்ட் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் வசதியும், பாதுகாப்பும் என்று சொல்லி வந்தேன். ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.

எனக்கு SB அக்கவுண்டைத் தவிர வேறொரு அக்கவுண்ட் உண்டு. அதுவும் இதே பேங்கில் தான் இருக்கிறது, எனது வியாபார நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன், பல ஊர்களிலிருந்து நான் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதால், அந்த பணத்திற்குன்டான தனிக் கணக்கு வைக்க வேண்டியுள்ளது. கணக்குச் சரி பார்க்க , அந்த அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டை எனது வாடிக்கையாளர்கள் கேட்கும் போது அளிக்கிறேன். இது தவிர நான் வேறு எந்த அக்கவுண்டிலும் போடுவதில்லை, எடுப்பதில்லை.

பொதுவாக நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை, வாழ்க, ஒழிக கோஷம் போடுவது எனக்கு பிடிக்காது, ஆனால் வங்கி அரசியல் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில நபர்களால் நான் மற்ற நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு.

நான் பேங்க் அக்கவுண்ட் தொடங்கி எந்த புரட்சியையும் செய்து வி்டப் போவதில்லை, சர்ச்சைக்குரிய அக்கவுண்டில் யாரும் எனக்காகப் பணம் போடப் போவதில்லை. எனக்கு மன உளைச்சலே மிச்சமாகிறது.

இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். நானே விவாதம் என்ற பெயரில் சுப்பையா வாத்தியார், நண்பர் கூடுதுறையின் ஸ்டேண்ட்மெண்டுகளில் சந்தேகம் எழுப்பி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அதே போல் வேறு எங்கும் தவறு நடந்திருக்கலாம்.
இந்த இடத்தில் நான் அப்படியேதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு கடன் கொடுக்கும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி கடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் எனது கோடி ரூபாய் புராணம் முடிந்தது.

டிஸ்கி : வால் பையனின் இந்தப் பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பரிசல்காரனின் இந்தப் பதிவுக்கு சம்பந்தம் இருக்கான்னு நீங்கதான் சொல்லனும்

Advertisements

38 comments

 1. கிரி படத்திலே வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது… ” ஒருத்தன் சிக்கி இருக்கான்……. “

 2. //நையாண்டி நைனா said…

  கிரி படத்திலே வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது… ” ஒருத்தன் சிக்கி இருக்கான்……. “//

  தப்பாப் புரிஞ்சுக் கிட்டீங்களோன்னு தோனுது.

  சூழ்னிலையின் இறுக்கத்தத் தனிக்க இப்படி ஒரு காமெடி ஷோ, அவ்வளவுதான்.

 3. //1000 ரூபாயுடன் ஆரம்பித்த எனது அக்கவுண்டில் இன்று ஒரு கோடி ரூபாய் இருக்கிறது.//

  சமீபத்துலதான் ஆடிட்டிங் முடிச்சீங்கன்னு நெனைக்கறேன். அவங்களுக்கு இந்த விஷய்ம தெரியுமா?

 4. வாலு புள்ளிவெக்க வேண்டிய இடத்துலயெல்லாம் கமா போட்டிருந்தார். நான் அதை மாத்தியிருந்தேன். என்னைவிடப் பெரிய புள்ளி நீங்க.. அதை கவனிக்கலியா?

 5. //இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு கடன் கொடுக்கும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி கடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.//

  கோடியா?

  நண்பர்கள்கிட்டயா?

  அதுசரி.. உலகவங்கி சேர்மன் உங்க நண்பர்ன்னு சொல்லவே இல்ல?

 6. //பரிசல்காரன் said…

  //1000 ரூபாயுடன் ஆரம்பித்த எனது அக்கவுண்டில் இன்று ஒரு கோடி ரூபாய் இருக்கிறது.//

  சமீபத்துலதான் ஆடிட்டிங் முடிச்சீங்கன்னு நெனைக்கறேன். அவங்களுக்கு இந்த விஷய்ம தெரியுமா?//

  ஒரு கற்பனைக்குக் கூட சொல்லக் கூடாதா?

 7. //சூழ்னிலையின் இறுக்கத்தத் தனிக்க
  சூழ்னிலையின் இறுக்கத்தத் தனிக்க இப்படி ஒரு காமெடி ஷோ, அவ்வளவுதான்//

  இத நான் ஒத்துக்கல.

  //சூழ்நிலையின் இறுக்கத்தைத் தணிக்கஇப்படி ஒரு காமெடி ஷோ, அவ்வளவுதான்///

  இப்போ ஒத்துக்கர்றேன், நெக்ஸ்ட் மீட் பண்றேன்…!

 8. //பரிசல்காரன் said…

  வாலு புள்ளிவெக்க வேண்டிய இடத்துலயெல்லாம் கமா போட்டிருந்தார். நான் அதை மாத்தியிருந்தேன். என்னைவிடப் பெரிய புள்ளி நீங்க.. அதை கவனிக்கலியா?//

  மன உளைச்சல்ல(!?) கவனிக்கல.

 9. பரிசல்காரன் said…

  கோடியா?

  நண்பர்கள்கிட்டயா?

  அதுசரி.. உலகவங்கி சேர்மன் உங்க நண்பர்ன்னு சொல்லவே இல்ல //

  அவரு எங்க உறவுக்காரரு. கொஞ்சம் தூரத்துச் சொந்த்ம்.

 10. அடடா! இன்னும் எவ்வளவு பேர் எழுதப்போறாங்களோ 🙂

 11. //ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
  //

  சத்தியமா சொல்றேண்ணே.. இதை படிச்சுட்டு சிரிச்சதுல கண்ணுல தண்ணி வந்துடுச்சு.. கலக்கிட்டீங்க 🙂

 12. வாங்க சுந்தர்,

  இப்போதைக்கு ரெண்டு. இன்னும் வரும்னு எதிர்பாக்குறேன்.

 13. //சென்ஷி said…

  //ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
  //

  சத்தியமா சொல்றேண்ணே.. இதை படிச்சுட்டு சிரிச்சதுல கண்ணுல தண்ணி வந்துடுச்சு.. கலக்கிட்டீங்க :)//

  அனில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பாம இருந்தாச் சரி.

 14. அய்யா சாமிகளா ஒரு அப்பாவி சிக்கினான் என்றால் ஆளாளுக்கு ஏறி கும்மி அடித்து விடுவதா. இப்படி எத்தனை கொ.ப. செ. க்கள் லக்கி லுக்குக்கு இன்னும் புற்றிசல் போல் கிளம்ப போகீறிர்கள்…

 15. //Rajaraman said…

  அய்யா சாமிகளா ஒரு அப்பாவி சிக்கினான் என்றால் ஆளாளுக்கு ஏறி கும்மி அடித்து விடுவதா. இப்படி எத்தனை கொ.ப. செ. க்கள் லக்கி லுக்குக்கு இன்னும் புற்றிசல் போல் கிளம்ப போகீறிர்கள்…//

  ராஜாராமன், பிரச்சினை என்னன்னே தெரியாம கருத்துச் சொல்லாதீங்க.

  லக்கியவிட எனக்கு வால் அதிக நெருக்கம். பதிவில் இருக்கும் படமே வால் அனுப்பியதுதான்.

  ஓவரா உணர்ச்சி வசப் படாதீங்க.

  //பொதுவாக நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை, வாழ்க, ஒழிக கோஷம் போடுவது எனக்கு பிடிக்காது, ஆனால் வங்கி அரசியல் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில நபர்களால் நான் மற்ற நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு.//

  என்னோட பதிவுக்கே என்ன ரிபீட்டேய் போட வச்சுட்டீங்க. உண்மையிலே இதுதாங்க இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த காமெடி.

  நல்லா இருங்க.

 16. ஐயோ ஐயோ…..

  கொல்லுறாங்களே….வாலு நீ எங்காவது போய் ஒரு பத்து நாள் தலைமறைவு ஆகிடு.

 17. ஆனா அவ்ரோட பதிவை விட இது கொஞ்சம் நல்லத்தான் இருக்கு!

 18. யாரு..இது.? நம்ப வேலன் அண்ணாச்சியா? நாடு தாங்குமா….?

 19. //கோவி.கண்ணன் said…

  ஐயோ ஐயோ…..

  கொல்லுறாங்களே….வாலு நீ எங்காவது போய் ஒரு பத்து நாள் தலைமறைவு ஆகிடு.//

  அவரு தலைமறைவா ஆனாலும், ஏன் தலைமறைவா ஆனேன்னு ஒரு பதிவு போடுவாரு. நானும் அதுக்கு எதிர் பதிவு போடுவேன். ஐடியா தந்த கோவிக்கு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்ப்பா ஒரு கிலோ பார்சேல்ல்ல்ல்ல்.

 20. //நல்லதந்தி said…

  ஆனா அவ்ரோட பதிவை விட இது கொஞ்சம் நல்லத்தான் இருக்கு!//

  எனக்கு இப்ப கன்ஃப்ர்ம் ஆயிருச்சு. நல்லதந்திதான் வால்பையன்னா அப்ப பிலீச்சிங் பவுடர்தான் நல்ல தந்தியா?

  அப்ப பிலீச்சிங்க் பவுடர் யாரு?

 21. //தாமிரா said…

  யாரு..இது.? நம்ப வேலன் அண்ணாச்சியா? நாடு தாங்குமா….?//

  என்னைய ஏதுஞ் சொல்லாதீய, கோவி அண்ணாச்சிதாம் நாந்தே வடிவேலு கட்சி வேட்பாளர்ன்னாக. அதாம் பிராக்டீசு பண்ணுதேம். எப்படீ?

 22. நீங்களுமா… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

 23. அய்யய்யோ.. என்னால முடியல… நிஜமா இந்தளவுக்கு சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சி.. அண்ணாச்சி எப்டி இப்டி எல்லாம்.. செம கலக்கல்.. :))))

 24. //Saravana Kumar MSK said…

  நீங்களுமா… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

  வாங்க msk ஏதோ நம்மால முடிஞ்சது.

 25. //Blogger பொSaடிnயJaன்i said…

  அய்யய்யோ.. என்னால முடியல… நிஜமா இந்தளவுக்கு சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சி.. அண்ணாச்சி எப்டி இப்டி எல்லாம்.. செம கலக்கல்.. :)))) //

  சிரிச்சீங்களா? அதுதான் நோக்கம்.

 26. //ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
  //

  இது க‌ல‌க்க‌ல்… அருமையான‌ எதிர்வினை.. வாய்விட்டு சிரிக்க‌ வைத்த‌து.. 🙂

 27. //வெண்பூ said…

  //ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
  //

  இது க‌ல‌க்க‌ல்… அருமையான‌ எதிர்வினை.. வாய்விட்டு சிரிக்க‌ வைத்த‌து.. :)//

  வாங்க வெண்பூ,

  வாரக் கடைசில எல்லோரும் சிரிக்கனும்னுதான்

 28. //
  ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
  //

  அப்ப அந்த அக்கவுண்ட் உங்கள்து இல்லையா????

 29. //
  முக்குஏஸ் அம்ப்பாணி said
  //
  ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
  //

  அப்ப அந்த அக்கவுண்ட் உங்கள்து இல்லையா????

  //

  ரிப்பீட்ட்டேய்

 30. வாங்க சிவா,

  எங்க நம்ப பக்கம் ஆளையே பாக்க முடியவில்லை.

 31. மிகவும் கோர்வையாக அமைந்துள்ளது..விஷயம் எதுவாக இருப்பினும்., அருமையான எழுத்து நடை…வாழ்த்துக்கள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s