கதம்பம் – 22/09/08

கோர்ட்ல வசூல் பண்ணும் அபராதப் பணத்துல கள்ள நோட்டாம். அதனால அந்தப் பணத்த வங்கிகள்ல செலுத்தும் போது, கள்ள நோட்டுகளக் கிழிச்செறிஞ்சுட்டு அத அந்த கோர்ட் ஊழியர் கணக்குல பிடித்தம் செய்யுறாங்களாம்.

இந்தப் பணம் எங்க இருந்து வருதுன்னு பார்த்தா ATM மூலமாவாம். ATM ல பணம் செலுத்துறது நானும் நீங்களும் இல்ல. அந்தந்த வங்கிகள்தானே. அதுவும் நேரடியா இல்ல. இதுக்குன்னு தனி ஏஜென்சி இருக்கு அவங்கதான் ATM நிலவரத்த மானிட்டர் பண்ணித் தேவையான பணத்த செலுத்துறாங்க. அப்ப அங்க செக் பாயிண்ட் வச்சு அதத் தடுக்க வேண்ட்டியதுதானே. அத விட்டுட்டு அப்பாவி ஊழியர்கள பலியாக்குறது என்ன ஞாயம்?

வங்கிப் பணியில் இருக்கும் பதிவர்கள் யாராவது தெளிவு படுத்துங்கப்பா.

*************************************************

வாலி எழுதிய ’நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகம் படிக்கிறேன். பரிந்துரைத்த பரிசலுக்கு நன்றி.

ஒரு பெரிய எழுத்தாளர் வாலிய மட்டம் தட்ட நெனைச்சு, ”நீங்க ஏன், வாலின்னு பேர் வச்சுருக்கீங்க” ன்னு கேட்டாரு.

அதுக்கு வாலி, “ எதிராளி ஒருவன் வாலிக்கு முன் வந்து நின்றால், அவனது பலத்தில் பாதி வாலியை வந்தடையும் என்பது ராமாயண வழக்கு. அது மாதிரி எந்த அறிவாளி என் முன்னால் வந்து நின்றாலும் அவரது அறிவில் பாதி என்னை வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான்.”

உடனே எழுத்தாளர் கிண்டலா, “ உம்மைப் பார்த்தால் பெரிய அறிவாளி மாதிரித் தெரியலையே?” ன்னாரு.

அதுக்கு வாலி , “என்ன செய்ய இன்னும் நான் அறிவாளி யாரையும் பார்க்கலயே”ன்னாரு.

**************************************************

ஒரு அப்பாவும் பையனும் அவங்க கழுதைய விக்க சந்தைக்குப் போனாங்க.

எதுக்கால ஒருத்தர் வந்து, “என்ன அண்ணாச்சி தூரமோ?” ன்னாரு.

“இந்தக் கழுதைய வித்துட்டு கொஞ்சம் மளிகைச் சாமான் வாங்கலாம்னு” அப்படீன்னாரு அப்பா.

“போறதுதான் போறிய இந்தச் சின்னப் பயல கழுத மேல உக்கார வையுங்க” ன்னாரு.

சரீன்னு பையன கழுதமேல உக்கார வச்சு, கொஞ்ச தூரம் போயிருப்பாங்க, இன்னொருத்தர் சொன்னாரு, “ஏம்பா வயசாளி நடந்துவாராரு, நீ சின்னப் பையன் ஓடுற பாம்ப மிதிக்க வயசுல உக்காந்து வாறீயே?”

அதூம் சரிதான்னு, பையன இறக்கி விட்டுட்டு அப்பா ஏறி உக்காந்துட்டாரு. கொஞ்ச தூரம்தான் போயிருப்பாங்க இன்னொருத்தர் வந்து, “ஒன்னையெவே தாங்குற இந்தக் கழுத கேவலம் இந்தச் சின்னவனையா தாங்காது?” ன்னு ஒரு கொக்கிய போட்டாரு.

பையனும் ஏறிக் கழுதமேல உக்காந்து ஒரு பத்தடி தூரம் போயிருப்பாங்க, பேப்பய கழுத பப்பரப்பான்னு நாலு காலையும் விரிச்சுப் படுத்துருச்சு.

கெட்டுது கதைன்னு ஒரு மூங்கில் கம்பெ எடுத்து கழுதையக் காலைக் கட்டித் தூக்கீட்டுப் போனாங்க.

இது ஒரு கிராமியக் கதை. இதன் பல்வேறு வடிவங்களை வெவ்வேறு சமயத்தில் கேட்டிருக்கிறேன்.

இந்தக் கதையச் சொல்லுங்கன்னு மெயிலனுப்பிக் கேட்ட புதுகை அப்துல்லாவுக்கும், திருப்பூர் சிம்பாவுக்கும் இந்தப் பதிவ டெடிக்கேட் செய்யுறேன் (காசா? பணமா?)

********************************************************

வாழ்க்கையின் பெரிய சுவராசியமே அத வாழ்ந்துதான் தீரனும்கிறது. சில விசயங்கள முன்கூட்டித் தீர்மாணிக்க முடியாம, போற போக்குல அட்ஜஸ்ட் செஞ்சுதான் ஆகனும். புகாரியின் இந்தக் கவிதையப் பாருங்க.

ஓரணி உதைக்கும்
பந்து எதிராளியின்
வலைக்குள் விழுந்தால்
ஒரு புள்ளி
என ஆரம்பமானது
அந்த ஆட்டம்!

ஒருவன் பக்கவாட்டில்
தூரமாய்ச் செல்ல
துரத்தமுடியாமல் திணறினார்கள்
எதிர்முகாம் ஆட்கள்!

கோடுகள் குறிக்கப்பட்டு
எல்லைகள் வரையறுக்கப்பட்டன!

அடுத்ததாய் கால்தடுக்கி
விழவைத்து முட்டியிலும்
நெற்றியிலும் ரத்தப்பொட்டு
வைத்து வெற்றி
தட்டினார்கள்! – நடுவர்கள்
நடுவில் வந்தார்கள்!

கொஞ்சமாய் தவறு
செய்தவன் எச்சரிக்கப்பட்டான்
திரும்பத் திரும்ப
செய்பவன் வெளியேற்றப்பட்டான்!

ஒவ்வொரு தவறிலும்
தப்பிலும் ஆட்டம்
கற்றுக் கொண்டது
புது விதி!

அவ்வாறே வாழ்க்கையும்!

– புகாரியின் ‘ஆடுகளக்கோடுகள்

********************************************************

மிஸ்டர் எக்ஸ் கிட்ட டாக்டர் சொன்னாரு,’”உங்க உடம்பு கண்டிசனுக்கு வரனும்னா தினமும் 5 கிலோ மீட்டர் நடக்கனும். இத ஒரு மாசம் பாலோ பண்ணுங்க”.

ஒரு மாசம் கழிச்சு எக்ஸ் போன்ல டாக்டரக் கேட்டாரு, “ டாக்டர் நா இப்ப வீட்டுக்குத் திரும்ப வரலாமா?”.

Advertisements

114 comments

 1. வாலியின் விடயம் ‘டச்’

  வாழ்க்கையை பற்றி சொன்னது நல்லா இருக்கு…

  வாழ்க்கையே போர்க்கலம்
  வாழ்ந்துதான் பார்க்கனும்
  போர்க்கலம் மாறலாம்
  போர்கள் தான் மாறுமா…

  இது எங்கயோ படிச்ச மாறி இருக்கு. உங்க பதிவுக்கு சரி வரும்னு எழுத்திட்டேன்…

  கதம்பம் தொடரட்டும்….

 2. வாலியின் விடயம் ‘டச்’வாழ்க்கையை பற்றி சொன்னது நல்லா இருக்கு…வாழ்க்கையே போர்க்கலம்வாழ்ந்துதான் பார்க்கனும்போர்க்கலம் மாறலாம்போர்கள் தான் மாறுமா…இது எங்கயோ படிச்ச மாறி இருக்கு. உங்க பதிவுக்கு சரி வரும்னு எழுத்திட்டேன்…கதம்பம் தொடரட்டும்….

 3. வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்). எனக்கும் புரியல, அதெப்படி கள்ள நோட்டு ஏடிஎம்ல வருதுன்னு:(:(:( கழுதை கதைல எதாவது உள்குத்து இருக்கா? கவிதயப் பத்தி நான் என்ன சொல்றது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………..ஜோக் இந்த முறை கொஞ்சம் பழைய ஜோக்தான்.

 4. வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்). எனக்கும் புரியல, அதெப்படி கள்ள நோட்டு ஏடிஎம்ல வருதுன்னு:(:(:( கழுதை கதைல எதாவது உள்குத்து இருக்கா? கவிதயப் பத்தி நான் என்ன சொல்றது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………..ஜோக் இந்த முறை கொஞ்சம் பழைய ஜோக்தான்.

 5. அந்த கவிதை அருமை… அதை விட அற்புதம் வாலியின் கவுன்ட்டர் டயலாக் 🙂

 6. இந்த வார கதம்பமும் சுவையோடு இருக்கு.

  ஏடிஎம் உள்ள எப்படி கள்ள நோட்டு போச்சு? கள்ள நோட்ட எல்லாம் ஒழிக்க கூடாதுங்க, லஞ்சம் கேட்குறாய்ங்கள்ல, அவனுங்களுக்கு எல்லாம் கள்ள நோட்டாத்தான் குடுக்கணும். அத வைச்சுக்கிட்டு அவன் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாம அல்லாடனும்.

  கவிதை, கதை ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கு. இந்த கழுதை கதைய எதுக்கு சொல்வாங்கன்னா, ஊருல ஒவ்வொருத்தனும் ஒரு ஒரு ஆலோசனை சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான். நாம தான் நாம செய்ய வேண்டியத முடிவுபண்ணணும்.

 7. இந்த வார கதம்பமும் சுவையோடு இருக்கு. ஏடிஎம் உள்ள எப்படி கள்ள நோட்டு போச்சு? கள்ள நோட்ட எல்லாம் ஒழிக்க கூடாதுங்க, லஞ்சம் கேட்குறாய்ங்கள்ல, அவனுங்களுக்கு எல்லாம் கள்ள நோட்டாத்தான் குடுக்கணும். அத வைச்சுக்கிட்டு அவன் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாம அல்லாடனும். கவிதை, கதை ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கு. இந்த கழுதை கதைய எதுக்கு சொல்வாங்கன்னா, ஊருல ஒவ்வொருத்தனும் ஒரு ஒரு ஆலோசனை சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான். நாம தான் நாம செய்ய வேண்டியத முடிவுபண்ணணும்.

 8. //ஒவ்வொரு தவறிலும்
  தப்பிலும் ஆட்டம்
  கற்றுக் கொண்டது
  புது விதி!

  அவ்வாறே வாழ்க்கையும்!

  //

  சூப்பரூ!

 9. //ஒவ்வொரு தவறிலும்தப்பிலும் ஆட்டம்கற்றுக் கொண்டதுபுது விதி!அவ்வாறே வாழ்க்கையும்!//சூப்பரூ!

 10. உங்களை, பரிசலை எல்லாம் நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. எவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்! என்னுடைய time management சுமாருக்கும் கீழ் என்று நினைக்கிறேன். வாலி இத்தகைய பதிலடிகளுக்கு (ஆங்கிலத்தில் reparties என்பார்கள்) பெயர் போனவர். கழுத்தைக் கதை சிறிது ‘சாமியார் போனை வளர்த்த கதை’ போலத் தோன்றினாலும், ஜோசப் சொல்வது சரி.

  கவிதைகளில், இரண்டுமே பிடித்தாலும், நா.மு.வின் கவிதை அருமை. எக்ஸ் ஜோக் (எக்ஸ் தாங்க) ஆ.வி.யில் முன்பே படித்த ஞாபகம் இருக்கிறது.

  இந்த வாரக் கதம்பம் ‘தக்க வைத்துக்கொள்ளும்’ தரம். In corporate world, after staggering growth in previous years, companies will deliberately go slow to retain the growth achieved. That is known as ‘consolidation phase’. நான் அதைத்தான் சொல்ல முயன்றேன்.

  வாழ்த்துக்கள் வேலன்.

  அனுஜன்யா

 11. உங்களை, பரிசலை எல்லாம் நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. எவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்! என்னுடைய time management சுமாருக்கும் கீழ் என்று நினைக்கிறேன். வாலி இத்தகைய பதிலடிகளுக்கு (ஆங்கிலத்தில் reparties என்பார்கள்) பெயர் போனவர். கழுத்தைக் கதை சிறிது ‘சாமியார் போனை வளர்த்த கதை’ போலத் தோன்றினாலும், ஜோசப் சொல்வது சரி. கவிதைகளில், இரண்டுமே பிடித்தாலும், நா.மு.வின் கவிதை அருமை. எக்ஸ் ஜோக் (எக்ஸ் தாங்க) ஆ.வி.யில் முன்பே படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த வாரக் கதம்பம் ‘தக்க வைத்துக்கொள்ளும்’ தரம். In corporate world, after staggering growth in previous years, companies will deliberately go slow to retain the growth achieved. That is known as ‘consolidation phase’. நான் அதைத்தான் சொல்ல முயன்றேன். வாழ்த்துக்கள் வேலன்.அனுஜன்யா

 12. விக்கி ஸ்டைலில் : கழுத்தை – கழுதை; போனை – பூனை என்று படிக்கவும். (நல்ல வேளை நான் விலங்கியல் படிக்கவில்லை).

 13. விக்கி ஸ்டைலில் : கழுத்தை – கழுதை; போனை – பூனை என்று படிக்கவும். (நல்ல வேளை நான் விலங்கியல் படிக்கவில்லை).

 14. // rapp said…

  வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்).//

  அண்ணாச்சி.. இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

  ஆப்பீசர், வாலி பிரபல பாடலாசிரியர்ங்க! அவருடைய சுய சரிதை இந்த நூல். நான் படிச்ச ரொம்ப இண்ட்ரஸ்டிங் புக்ஸ்ல ஒண்ணு!

  எனக்கு அளுவாச்சி அளுவாசியா வருது!

 15. // rapp said… வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்).//அண்ணாச்சி.. இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?ஆப்பீசர், வாலி பிரபல பாடலாசிரியர்ங்க! அவருடைய சுய சரிதை இந்த நூல். நான் படிச்ச ரொம்ப இண்ட்ரஸ்டிங் புக்ஸ்ல ஒண்ணு!எனக்கு அளுவாச்சி அளுவாசியா வருது!

 16. அப்படியே என் ப்ரொஃபைல்ல குறிப்பிட்டிருக்கற இன்னொரு புக்கையும் படிங்க அண்ணா. (ஏற்கனவே படிச்சிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!)

 17. அப்படியே என் ப்ரொஃபைல்ல குறிப்பிட்டிருக்கற இன்னொரு புக்கையும் படிங்க அண்ணா. (ஏற்கனவே படிச்சிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!)

 18. அடடா, பரிசல் ஏங்க இப்படி உதயமூர்த்தி கணக்கா பீலிங்? நான் கேட்டது, வாலி சார் கிட்ட அப்படிப் பேசின எழுத்தாளர் யார்னு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………………………அதுக்குத்தான் ஜாஸ்தி gaptain படம் பார்க்கக் கூடாதுங்கறது:):):)

 19. அடடா, பரிசல் ஏங்க இப்படி உதயமூர்த்தி கணக்கா பீலிங்? நான் கேட்டது, வாலி சார் கிட்ட அப்படிப் பேசின எழுத்தாளர் யார்னு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………………………அதுக்குத்தான் ஜாஸ்தி gaptain படம் பார்க்கக் கூடாதுங்கறது:):):)

 20. ஹி ஹி கோச்சுக்காதீங்க கிருஷ்ணா, நான் எழுதின விதம் உங்களுக்கு தப்பா புரிஞ்சிக்க வழக்கம்போல உதவிடுச்சி போலருக்கு. ஆனா நான் ஏன் கவிஞரைப் பத்தி பேசும்போது எழுத்தாளர் யார்னு கேக்கப்போறேன்:):):) அதேப்போல விக்கி ஏற்னவே தன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்க திருத்தி இருக்கார் பாருங்க:):):)

 21. ஹி ஹி கோச்சுக்காதீங்க கிருஷ்ணா, நான் எழுதின விதம் உங்களுக்கு தப்பா புரிஞ்சிக்க வழக்கம்போல உதவிடுச்சி போலருக்கு. ஆனா நான் ஏன் கவிஞரைப் பத்தி பேசும்போது எழுத்தாளர் யார்னு கேக்கப்போறேன்:):):) அதேப்போல விக்கி ஏற்னவே தன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்க திருத்தி இருக்கார் பாருங்க:):):)

 22. கதம்ப மலர்கள் அருமை.

  “இருந்து என்ன செய்ய
  செத்துத் தொலைக்கலாம்
  செத்து என்ன செய்ய
  இருந்து தொலைக்கலாம்”

  (இது கல்யாண்ஜி அல்லது ஆத்மாநாமின் கவிதை)

 23. கதம்ப மலர்கள் அருமை. “இருந்து என்ன செய்யசெத்துத் தொலைக்கலாம்செத்து என்ன செய்யஇருந்து தொலைக்கலாம்”(இது கல்யாண்ஜி அல்லது ஆத்மாநாமின் கவிதை)

 24. அஸ் அயாம் சஃப்பரிங் ஃப்ரம் ஆடிட்டிங், பின்னூட்டங்களுக்குப் பதில் இரவில்தான் இடமுடியும்.

 25. ஆஹா ஆஹா ஆஹா, ச்சின்னப்பையனத் தவிர இதை வேற யார் நாட் பண்ணுவா. சூப்பர்:):):)

 26. ஆஹா ஆஹா ஆஹா, ச்சின்னப்பையனத் தவிர இதை வேற யார் நாட் பண்ணுவா. சூப்பர்:):):)

 27. வழக்கம் போல கதம்பத்தின் எல்லா மலர்களும் வாசனை

 28. //வழக்கம் போல கதம்பத்தின் எல்லா மலர்களும் வாசனை//

  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்

 29. பல பதிவுகளை ஒன்றாக அதையும் நன்றாக போட்டதற்கு பாராட்டுக்கள் வேலன்..

 30. பல பதிவுகளை ஒன்றாக அதையும் நன்றாக போட்டதற்கு பாராட்டுக்கள் வேலன்..

 31. // துளசி கோபால் said…

  Cat & Mouse இந்த வாரப்படம் அருமை:-)//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

 32. //விஜய் ஆனந்த் said…

  :-)))))…//

  இந்த சிரிப்பானுக்கு என்ன அர்த்தம் விஜய்.

 33. //ராமலக்ஷ்மி said…

  வாலியின் பதிலை ரசித்தேன்:))!//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

 34. VIKNESHWARAN said…

  வாலியின் விடயம் ‘டச்’

  வாழ்க்கையை பற்றி சொன்னது நல்லா இருக்கு…

  வாழ்க்கையே போர்க்களம்
  வாழ்ந்துதான் பார்க்கனும்
  போர்க்களம் மாறலாம்
  போர்கள் தான் மாறுமா…

  இது எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு. உங்க பதிவுக்கு சரி வரும்னு எழுதிட்டேன்…

  கதம்பம் தொடரட்டும்….//

  நன்றி விக்கி.

 35. VIKNESHWARAN said… வாலியின் விடயம் ‘டச்’ வாழ்க்கையை பற்றி சொன்னது நல்லா இருக்கு… வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா… இது எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு. உங்க பதிவுக்கு சரி வரும்னு எழுதிட்டேன்… கதம்பம் தொடரட்டும்….//நன்றி விக்கி.

 36. //rapp said…

  வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்).//

  அவரு 60கள்ல ரெம்ப பேமஸானவரு. ஜிப்பாதான் போட்டிருப்பார். அவர் நாவல் ஒன்றின் சின்னத்திரை காவியத்தில் தமிழகத்தின் எதிர்கால முதல்வர் கதானாயகனாக நடிச்சிருக்கார்.

  // எனக்கும் புரியல, அதெப்படி கள்ள நோட்டு ஏடிஎம்ல வருதுன்னு:(:(:( //

  பாதிக்கப் படுவது அப்பாவி ஜனங்கள்தான்.

  //கழுதை கதைல எதாவது உள்குத்து இருக்கா?//

  கழுத குத்தவெல்லாம் செய்யாது எத்தத்தான் செய்யும். (எத்துவது – உதைப்பது)

  // கவிதயப் பத்தி நான் என்ன சொல்றது? //

  உங்க அளவுக்கு இல்லைதானே.

  //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………..ஜோக் இந்த முறை கொஞ்சம் பழைய ஜோக்தான்.//

  ஆமாங்க எனக்கே தெரியும். கரண்ட் கட், ஆடிட்டிங் பிரஷர். அடுத்த வாரம் ஜமாய்ச்சுரலாம்.

 37. //rapp said… வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்).//அவரு 60கள்ல ரெம்ப பேமஸானவரு. ஜிப்பாதான் போட்டிருப்பார். அவர் நாவல் ஒன்றின் சின்னத்திரை காவியத்தில் தமிழகத்தின் எதிர்கால முதல்வர் கதானாயகனாக நடிச்சிருக்கார். // எனக்கும் புரியல, அதெப்படி கள்ள நோட்டு ஏடிஎம்ல வருதுன்னு:(:(:( //பாதிக்கப் படுவது அப்பாவி ஜனங்கள்தான்.//கழுதை கதைல எதாவது உள்குத்து இருக்கா?//கழுத குத்தவெல்லாம் செய்யாது எத்தத்தான் செய்யும். (எத்துவது – உதைப்பது)// கவிதயப் பத்தி நான் என்ன சொல்றது? //உங்க அளவுக்கு இல்லைதானே.//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………..ஜோக் இந்த முறை கொஞ்சம் பழைய ஜோக்தான்.//ஆமாங்க எனக்கே தெரியும். கரண்ட் கட், ஆடிட்டிங் பிரஷர். அடுத்த வாரம் ஜமாய்ச்சுரலாம்.

 38. //rapp said…

  வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்).//

  அவரு 60கள்ல ரெம்ப பேமஸானவரு. ஜிப்பாதான் போட்டிருப்பார். அவர் நாவல் ஒன்றின் சின்னத்திரை காவியத்தில் தமிழகத்தின் எதிர்கால முதல்வர் கதானாயகனாக நடிச்சிருக்கார்.

  // எனக்கும் புரியல, அதெப்படி கள்ள நோட்டு ஏடிஎம்ல வருதுன்னு:(:(:( //

  பாதிக்கப் படுவது அப்பாவி ஜனங்கள்தான்.

  //கழுதை கதைல எதாவது உள்குத்து இருக்கா?//

  கழுத குத்தவெல்லாம் செய்யாது எத்தத்தான் செய்யும். (எத்துவது – உதைப்பது)

  // கவிதயப் பத்தி நான் என்ன சொல்றது? //

  உங்க அளவுக்கு இல்லைதானே.

  //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………..ஜோக் இந்த முறை கொஞ்சம் பழைய ஜோக்தான்.//

  ஆமாங்க எனக்கே தெரியும். கரண்ட் கட், ஆடிட்டிங் பிரஷர். அடுத்த வாரம் ஜமாய்ச்சுரலாம்.

 39. //rapp said… வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்).//அவரு 60கள்ல ரெம்ப பேமஸானவரு. ஜிப்பாதான் போட்டிருப்பார். அவர் நாவல் ஒன்றின் சின்னத்திரை காவியத்தில் தமிழகத்தின் எதிர்கால முதல்வர் கதானாயகனாக நடிச்சிருக்கார். // எனக்கும் புரியல, அதெப்படி கள்ள நோட்டு ஏடிஎம்ல வருதுன்னு:(:(:( //பாதிக்கப் படுவது அப்பாவி ஜனங்கள்தான்.//கழுதை கதைல எதாவது உள்குத்து இருக்கா?//கழுத குத்தவெல்லாம் செய்யாது எத்தத்தான் செய்யும். (எத்துவது – உதைப்பது)// கவிதயப் பத்தி நான் என்ன சொல்றது? //உங்க அளவுக்கு இல்லைதானே.//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………..ஜோக் இந்த முறை கொஞ்சம் பழைய ஜோக்தான்.//ஆமாங்க எனக்கே தெரியும். கரண்ட் கட், ஆடிட்டிங் பிரஷர். அடுத்த வாரம் ஜமாய்ச்சுரலாம்.

 40. //வெண்பூ said…

  அந்த கவிதை அருமை… அதை விட அற்புதம் வாலியின் கவுன்ட்டர் டயலாக் 🙂 //

  கவிதை எளிமையா இருந்தாலும் நல்ல கருத்தச் சொன்னதால எனக்குப் பிடிச்சுது வெண்பூ.

  வாலி கவுண்டர் இல்லீங்க.

 41. //வெண்பூ said… அந்த கவிதை அருமை… அதை விட அற்புதம் வாலியின் கவுன்ட்டர் டயலாக் 🙂 //கவிதை எளிமையா இருந்தாலும் நல்ல கருத்தச் சொன்னதால எனக்குப் பிடிச்சுது வெண்பூ.வாலி கவுண்டர் இல்லீங்க.

 42. //ஆயில்யன் said…

  //ஒவ்வொரு தவறிலும்
  தப்பிலும் ஆட்டம்
  கற்றுக் கொண்டது
  புது விதி!

  அவ்வாறே வாழ்க்கையும்!

  //

  சூப்பரூ!//

  நன்றி ஆயில்யன்

 43. //ஆயில்யன் said… //ஒவ்வொரு தவறிலும் தப்பிலும் ஆட்டம் கற்றுக் கொண்டது புது விதி! அவ்வாறே வாழ்க்கையும்! // சூப்பரூ!//நன்றி ஆயில்யன்

 44. //ஜோசப் பால்ராஜ் said…

  இந்த வார கதம்பமும் சுவையோடு இருக்கு.//

  நன்றி ஜோ.

  // ஏடிஎம் உள்ள எப்படி கள்ள நோட்டு போச்சு? கள்ள நோட்ட எல்லாம் ஒழிக்க கூடாதுங்க, லஞ்சம் கேட்குறாய்ங்கள்ல, அவனுங்களுக்கு எல்லாம் கள்ள நோட்டாத்தான் குடுக்கணும். அத வைச்சுக்கிட்டு அவன் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாம அல்லாடனும். //

  அட நல்ல யோசனையா இருக்கே.

  // கவிதை, கதை ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கு. இந்த கழுதை கதைய எதுக்கு சொல்வாங்கன்னா, ஊருல ஒவ்வொருத்தனும் ஒரு ஒரு ஆலோசனை சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான். நாம தான் நாம செய்ய வேண்டியத முடிவுபண்ணணும்.//

  அதுக்குத்தான்.

 45. //ஜோசப் பால்ராஜ் said… இந்த வார கதம்பமும் சுவையோடு இருக்கு.//நன்றி ஜோ. // ஏடிஎம் உள்ள எப்படி கள்ள நோட்டு போச்சு? கள்ள நோட்ட எல்லாம் ஒழிக்க கூடாதுங்க, லஞ்சம் கேட்குறாய்ங்கள்ல, அவனுங்களுக்கு எல்லாம் கள்ள நோட்டாத்தான் குடுக்கணும். அத வைச்சுக்கிட்டு அவன் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாம அல்லாடனும். //அட நல்ல யோசனையா இருக்கே.// கவிதை, கதை ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கு. இந்த கழுதை கதைய எதுக்கு சொல்வாங்கன்னா, ஊருல ஒவ்வொருத்தனும் ஒரு ஒரு ஆலோசனை சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான். நாம தான் நாம செய்ய வேண்டியத முடிவுபண்ணணும்.//அதுக்குத்தான்.

 46. //அனுஜன்யா said…

  உங்களை, பரிசலை எல்லாம் நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. எவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்!//

  நெனச்ச அளவுக்குப் படிக்க முடியலங்கறதுதான் உண்மை.

  // வாலி இத்தகைய பதிலடிகளுக்கு (ஆங்கிலத்தில் reparties என்பார்கள்) பெயர் போனவர்.//

  அவர் அதில் வித்தகர்.

  // கழுதைக் கதை சிறிது ‘சாமியார் பூனை வளர்த்த கதை’ போலத் தோன்றினாலும், ஜோசப் சொல்வது சரி.//

  ஆமாங்க.

  // கவிதைகளில், இரண்டுமே பிடித்தாலும், நா.மு.வின் கவிதை அருமை.//

  எனக்கும் பிடித்த ஒன்று.

  // எக்ஸ் ஜோக் (எக்ஸ் தாங்க) ஆ.வி.யில் முன்பே படித்த ஞாபகம் இருக்கிறது. //

  ஆமா அது ஒப்பேத்தல்.

  // இந்த வாரக் கதம்பம் ‘தக்க வைத்துக்கொள்ளும்’ தரம். In corporate world, after staggering growth in previous years, companies will deliberately go slow to retain the growth achieved. That is known as ‘consolidation phase’. நான் அதைத்தான் சொல்ல முயன்றேன்.

  வாழ்த்துக்கள் வேலன்.

  அனுஜன்யா //

  ஆமாங்க sustaining is to succeed.

  நன்றி அனு.

 47. //அனுஜன்யா said… உங்களை, பரிசலை எல்லாம் நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. எவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்!//நெனச்ச அளவுக்குப் படிக்க முடியலங்கறதுதான் உண்மை.// வாலி இத்தகைய பதிலடிகளுக்கு (ஆங்கிலத்தில் reparties என்பார்கள்) பெயர் போனவர்.//அவர் அதில் வித்தகர்.// கழுதைக் கதை சிறிது ‘சாமியார் பூனை வளர்த்த கதை’ போலத் தோன்றினாலும், ஜோசப் சொல்வது சரி.//ஆமாங்க. // கவிதைகளில், இரண்டுமே பிடித்தாலும், நா.மு.வின் கவிதை அருமை.//எனக்கும் பிடித்த ஒன்று.// எக்ஸ் ஜோக் (எக்ஸ் தாங்க) ஆ.வி.யில் முன்பே படித்த ஞாபகம் இருக்கிறது. //ஆமா அது ஒப்பேத்தல். // இந்த வாரக் கதம்பம் ‘தக்க வைத்துக்கொள்ளும்’ தரம். In corporate world, after staggering growth in previous years, companies will deliberately go slow to retain the growth achieved. That is known as ‘consolidation phase’. நான் அதைத்தான் சொல்ல முயன்றேன். வாழ்த்துக்கள் வேலன். அனுஜன்யா //ஆமாங்க sustaining is to succeed.நன்றி அனு.

 48. // பரிசல்காரன் said…

  // rapp said…

  வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்).//

  அண்ணாச்சி.. இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

  ஆப்பீசர், வாலி பிரபல பாடலாசிரியர்ங்க! அவருடைய சுய சரிதை இந்த நூல். நான் படிச்ச ரொம்ப இண்ட்ரஸ்டிங் புக்ஸ்ல ஒண்ணு!

  எனக்கு அளுவாச்சி அளுவாசியா வருது! //

  அது சரி அவர மட்டம் தட்ட நினைச்ச எழுத்தாளர் யாருன்னுதான் ராப் கேக்குறாங்க.

 49. // பரிசல்காரன் said… // rapp said… வாலி பதில் சூப்பர்(யாருங்க அந்த எழுத்தாளர்).// அண்ணாச்சி.. இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? ஆப்பீசர், வாலி பிரபல பாடலாசிரியர்ங்க! அவருடைய சுய சரிதை இந்த நூல். நான் படிச்ச ரொம்ப இண்ட்ரஸ்டிங் புக்ஸ்ல ஒண்ணு! எனக்கு அளுவாச்சி அளுவாசியா வருது! //அது சரி அவர மட்டம் தட்ட நினைச்ச எழுத்தாளர் யாருன்னுதான் ராப் கேக்குறாங்க.

 50. //பரிசல்காரன் said…

  அப்படியே என் ப்ரொஃபைல்ல குறிப்பிட்டிருக்கற இன்னொரு புக்கையும் படிங்க அண்ணா. (ஏற்கனவே படிச்சிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!)//

  பரிசல் வண்ணதாசன் கடிதங்கள் ஏற்கன்வே படித்திருக்கிறேன். அதவிட அவரது சிறுகதைகள் சிறப்பு. முடிந்தால், நிலை, வரும் போகும், தனுமை முதலான சிறுகதைகளை வாசியுங்கள். பிறகு புரியும் அவருதான் சிற்பி நாமெல்லாம் அம்மி கொத்துபவர்கள் என்பது.

 51. //பரிசல்காரன் said… அப்படியே என் ப்ரொஃபைல்ல குறிப்பிட்டிருக்கற இன்னொரு புக்கையும் படிங்க அண்ணா. (ஏற்கனவே படிச்சிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!)//பரிசல் வண்ணதாசன் கடிதங்கள் ஏற்கன்வே படித்திருக்கிறேன். அதவிட அவரது சிறுகதைகள் சிறப்பு. முடிந்தால், நிலை, வரும் போகும், தனுமை முதலான சிறுகதைகளை வாசியுங்கள். பிறகு புரியும் அவருதான் சிற்பி நாமெல்லாம் அம்மி கொத்துபவர்கள் என்பது.

 52. // RATHNESH said…

  கதம்ப மலர்கள் அருமை.

  “இருந்து என்ன செய்ய
  செத்துத் தொலைக்கலாம்
  செத்து என்ன செய்ய
  இருந்து தொலைக்கலாம்”

  (இது கல்யாண்ஜி அல்லது ஆத்மாநாமின் கவிதை)//

  ரத்னேஷ் அது கல்யாண்ஜிதான். உங்க பதிவுலயே ஒரு முறை படிச்சிருக்கேன்.

 53. // RATHNESH said… கதம்ப மலர்கள் அருமை. “இருந்து என்ன செய்ய செத்துத் தொலைக்கலாம் செத்து என்ன செய்ய இருந்து தொலைக்கலாம்” (இது கல்யாண்ஜி அல்லது ஆத்மாநாமின் கவிதை)//ரத்னேஷ் அது கல்யாண்ஜிதான். உங்க பதிவுலயே ஒரு முறை படிச்சிருக்கேன்.

 54. //தமிழ் பிரியன் said…

  நல்லா வந்திருக்கு கதம்பம்… :)//

  நன்றி தமிழ்

 55. //ச்சின்னப் பையன் said…

  Is this next year’s KIadhambam???//

  சரி பண்ணீட்டேங்க. தப்புப்பண்ணுனா துப்பாக்கியக் காட்டி பயமுறுத்துறீங்களே.

 56. //ச்சின்னப் பையன் said… Is this next year’s KIadhambam???//சரி பண்ணீட்டேங்க. தப்புப்பண்ணுனா துப்பாக்கியக் காட்டி பயமுறுத்துறீங்களே.

 57. // T.V.Radhakrishnan said…

  வழக்கம் போல கதம்பத்தின் எல்லா மலர்களும் வாசனை//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

 58. //The Rebel said…

  பல பதிவுகளை ஒன்றாக அதையும் நன்றாக போட்டதற்கு பாராட்டுக்கள் வேலன்..//

  நன்றிங்க. உங்க வார்த்தை விளையாட்டும் நன்றாக இருக்கு.

 59. //The Rebel said… பல பதிவுகளை ஒன்றாக அதையும் நன்றாக போட்டதற்கு பாராட்டுக்கள் வேலன்..//நன்றிங்க. உங்க வார்த்தை விளையாட்டும் நன்றாக இருக்கு.

 60. இந்தப் பணம் எங்க இருந்து வருதுன்னு பார்த்தா ATM மூலமாவாம். ATM ல பணம் செலுத்துறது நானும் நீங்களும் இல்ல. அந்தந்த வங்கிகள்தானே. அதுவும் நேரடியா இல்ல. இதுக்குன்னு தனி ஏஜென்சி இருக்கு அவங்கதான் ATM நிலவரத்த மானிட்டர் பண்ணித் தேவையான பணத்த செலுத்துறாங்க. அப்ப அங்க செக் பாயிண்ட் வச்சு அதத் தடுக்க வேண்ட்டியதுதானே. அத விட்டுட்டு அப்பாவி ஊழியர்கள பலியாக்குறது என்ன ஞாயம்?
  /
  /
  / வருத்தமான உண்மை கோர்ட் இந்த விசயத்தில் தப்பு பண்ணுகிறது

 61. இந்தப் பணம் எங்க இருந்து வருதுன்னு பார்த்தா ATM மூலமாவாம். ATM ல பணம் செலுத்துறது நானும் நீங்களும் இல்ல. அந்தந்த வங்கிகள்தானே. அதுவும் நேரடியா இல்ல. இதுக்குன்னு தனி ஏஜென்சி இருக்கு அவங்கதான் ATM நிலவரத்த மானிட்டர் பண்ணித் தேவையான பணத்த செலுத்துறாங்க. அப்ப அங்க செக் பாயிண்ட் வச்சு அதத் தடுக்க வேண்ட்டியதுதானே. அத விட்டுட்டு அப்பாவி ஊழியர்கள பலியாக்குறது என்ன ஞாயம்?/// வருத்தமான உண்மை கோர்ட் இந்த விசயத்தில் தப்பு பண்ணுகிறது

 62. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்கிங்

 63. //குடுகுடுப்பை said…

  நல்லா இருக்குங்க.//

  ஜக்கம்மா சொன்னாச் சரி.

 64. நம்பள மதிச்சு டெடிகேட் பண்ணுன உங்க நல்ல உள்ளத்த நினைக்கும் போது அழுவாச்சி அழுவாச்சியா வருது…. ஆனந்தத்துல :))

 65. //வாலி , “என்ன செய்ய இன்னும் நான் அறிவாளி யாரையும் பார்க்கலயே”ன்னாரு.//

  நச்சு வசனம்

 66. //இந்தக் கதையச் சொல்லுங்கன்னு மெயிலனுப்பிக் கேட்ட புதுகை அப்துல்லாவுக்கும், திருப்பூர் சிம்பாவுக்கும் இந்தப் பதிவ டெடிக்கேட் செய்யுறேன் (காசா? பணமா?)//என்ன கதை அனுப்பினாலும் போடுவிங்களா எங்கிட்ட ஒரு சிங்க கதை இருக்கு ஒரு ஊர்ல ஒரு சிங்கமாம் அதுக்கு மேல சொன்னா அசிங்கமாம்

 67. //ஒவ்வொரு தவறிலும்தப்பிலும் ஆட்டம்கற்றுக் கொண்டதுபுது விதி!//ஆட்டத்தையும் வாழ்க்கையையும் இது போல் ஒப்பிடுவது சரியாக படவில்லை ஆட்டத்தில் விதிகள் முன்கூட்டியே விதிக்க பட்டன.வாழ்க்கையில் ஆட்களுக்கு ஏற்றாற்போல் விதிகள் மாறிக்கொள்ளும்

 68. //சென்ஷி said…
  வாலி கருத்து சும்மா நச்சுன்னு இருக்குது :)//

  அதுனாலதான் அவரு இன்னும் அடிச்சு ஆடீட்டு இருக்காரு.

 69. //சென்ஷி said… வாலி கருத்து சும்மா நச்சுன்னு இருக்குது :)//அதுனாலதான் அவரு இன்னும் அடிச்சு ஆடீட்டு இருக்காரு.

 70. //தாமிரா said…

  கலக்கல் அண்ணாச்சி.!//

  நன்றி தாமிரா

 71. //புதுகை.அப்துல்லா said…

  நம்பள மதிச்சு டெடிகேட் பண்ணுன உங்க நல்ல உள்ளத்த நினைக்கும் போது அழுவாச்சி அழுவாச்சியா வருது…. ஆனந்தத்துல :))//

  உங்களுக்கு ஒரு பதிவே டெடிக்கேட் பண்ணனும் அப்துல்லா, நீங்க செஞ்ச நல்ல காரியத்துக்கு. ஆடிட்டிங் இருப்பதால் அப்பப்ப வந்து காக்கா குளியல் போட்டுட்டு இருக்கேன்.

  நன்றி. வாழ்த்துக்கள்.

 72. //புதுகை.அப்துல்லா said… நம்பள மதிச்சு டெடிகேட் பண்ணுன உங்க நல்ல உள்ளத்த நினைக்கும் போது அழுவாச்சி அழுவாச்சியா வருது…. ஆனந்தத்துல :))//உங்களுக்கு ஒரு பதிவே டெடிக்கேட் பண்ணனும் அப்துல்லா, நீங்க செஞ்ச நல்ல காரியத்துக்கு. ஆடிட்டிங் இருப்பதால் அப்பப்ப வந்து காக்கா குளியல் போட்டுட்டு இருக்கேன்.நன்றி. வாழ்த்துக்கள்.

 73. //வால்பையன் said…

  எங்கிட்ட ஒரு சிங்க கதை இருக்கு

  ஒரு ஊர்ல ஒரு சிங்கமாம்
  அதுக்கு மேல சொன்னா அசிங்கமாம் //

  உண்மைத் தமிழன்கிட்ட கொடுத்தீங்கன்னா நல்ல குறும்படமா எடுப்பாரு.

 74. //வால்பையன் said… எங்கிட்ட ஒரு சிங்க கதை இருக்கு ஒரு ஊர்ல ஒரு சிங்கமாம் அதுக்கு மேல சொன்னா அசிங்கமாம் //உண்மைத் தமிழன்கிட்ட கொடுத்தீங்கன்னா நல்ல குறும்படமா எடுப்பாரு.

 75. //வால்பையன் said…

  ஆட்டத்தையும்
  வாழ்க்கையையும்
  இது போல் ஒப்பிடுவது சரியாக படவில்லை
  ஆட்டத்தில் விதிகள் முன்கூட்டியே விதிக்க பட்டன.
  வாழ்க்கையில் ஆட்களுக்கு ஏற்றாற்போல் விதிகள் மாறிக்கொள்ளும் //

  இல்ல வால், வாழ்க்கையின் விதிகள் முன்கூட்டியே தீர்மாணிக்கப் பட்டவை. விளையாட்டின் விதிகளைத்தான் நாம் தேவைக்கேறப மாற்றிக் கொள்கிறோம். டெஸ்ட், ஒண்டே, 20 20 மாதிரி.

 76. //வால்பையன் said… ஆட்டத்தையும் வாழ்க்கையையும் இது போல் ஒப்பிடுவது சரியாக படவில்லை ஆட்டத்தில் விதிகள் முன்கூட்டியே விதிக்க பட்டன. வாழ்க்கையில் ஆட்களுக்கு ஏற்றாற்போல் விதிகள் மாறிக்கொள்ளும் //இல்ல வால், வாழ்க்கையின் விதிகள் முன்கூட்டியே தீர்மாணிக்கப் பட்டவை. விளையாட்டின் விதிகளைத்தான் நாம் தேவைக்கேறப மாற்றிக் கொள்கிறோம். டெஸ்ட், ஒண்டே, 20 20 மாதிரி.

 77. //உடனே எழுத்தாளர் கிண்டலா, “ உம்மைப் பார்த்தால் பெரிய அறிவாளி மாதிரித் தெரியலையே?” ன்னாரு.

  அதுக்கு வாலி , “என்ன செய்ய இன்னும் நான் அறிவாளி யாரையும் பார்க்கலயே”ன்னாரு.//

  :-)))))

 78. //உடனே எழுத்தாளர் கிண்டலா, “ உம்மைப் பார்த்தால் பெரிய அறிவாளி மாதிரித் தெரியலையே?” ன்னாரு.அதுக்கு வாலி , “என்ன செய்ய இன்னும் நான் அறிவாளி யாரையும் பார்க்கலயே”ன்னாரு.//:-)))))

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s