சார் நான் வேலைய விட்டு நின்னுக்குறேன்

ரேஸ் கோர்ஸ் ஏரியாவில் ஆபிஸ் போடுவதற்ககே ஒரு தகுதி வேண்டும். அதிலும் என் ஃப்ரெண்ட் நல்ல பணக்காரன். பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம கிரானைட்லயும், மார்பிள்லயும் இழைச்சிருக்கான். எல்லாம் இம்போர்டட் ஃபர்னிட்சர். நம்மள மாதிரி ஆளுகளுக்குத் தாழ்வு மனப்பான்மை வரனும்னே இவ்வளவு செலவு பண்ணுவாம் போல.

பூசாரியிடம் சொல்லி சாமி தரிசனத்துக்கு காத்திருந்தேன். அங்க இருந்த மேகசின்கள வெளிய வேற எங்கயும் பாக்க முடியாது. சுவத்துல இருக்க ஓவியத்தப் புரிஞ்சுக்க, அத வரைஞ்சவருக்கிட்ட டூசன் போகனும்.

பூசாரி அனுமதித்ததும் கதவைத்திறந்து உள்ளேறினேன்.

”டே ராசு, பாத்து ரெம்ப நாளாச்சு?”

“இல்ல தொழில் ஆரம்பிச்ச பின்ன கொஞ்சம் சுத்தரதக் கொறைச்சிட்டேன், அதான்”

“சரி சரி, வராதவன் வந்திருக்கே என்ன சாப்பிடுறே?”

“பிளாஸ்க்குல அண்ணபூர்ணா காப்பி வாங்கி வரச் சொல்லு”

“கோல்டு ஃபில்டர்?”

“இப்ப இல்ல, விட்டுட்டன்”

மணி அடித்து, வந்த பையனைடம் வாங்கிவரச் சொன்னான்.

“சரி சொல்லு. ஏதும் விசயமா வந்தியா?” என்றான் என்னிடம் திரும்பி.

“ஆமா, இரும்பு விலை தினம் தினம் ஏறுது. ஒரு பெரிய ஆர்டர் கையில இருக்கு. மொத்தமா மெட்டீரியல் எடுத்துப் போட்டா கொஞ்சம் லம்பா பாக்கலாம். அதுதான் நீ ஏதாவது?”

“எவ்வளவு?”

“ஒரு அம்பது….இருக்குமா? உனக்கேதும் சிரமமில்லையே”

“அடச்சே, நானே இன்னொரு பிஸினஸ் ஏதாவது பண்ணலாமான்னு இருக்கேன், பேங்கில இருக்கதுதானே. எவ்வளவு நாளுக்கு வேணும்”

“சப்ளை பண்ணா 15 நாள்ல பணம் வந்திரும். ஒரு மாசம்னு வச்சுக்கோயேன்”

“சரி, இருந்து வாங்கீட்டுப் போறயா? இல்ல அப்புறமா வந்து வாங்கிக்கிறியா?”

“இருந்தே வாங்கீட்டுபோறன். அப்படியே சரக்கு எடுத்துட்டுப் போயிடுவேன்.”

இண்டர்காமில் அக்கவுண்டண்டை அழைத்தான்.

வந்தவருக்கு 50 வயது இருக்கும், “நம்ம ராசுக்கு 50,000 தேவைப்படுது. என்னோட SB அக்கவுண்ட்லருந்து எடுக்கனும்.”

“சரவணன இப்பத்தான் P F ஆபீசுக்கு அனுப்ச்சன். வேற யாரு போவான்னு பாத்துச் சொல்றன். செக் எழுதுங்க” என்றார் அக்கவுண்டண்ட்.

அக்கவுண்டண்ட் திரும்ப வந்து, “சார், யாரும் இப்ப இல்ல, எல்லாம் ஃபீல்டுக்குப் போய்ட்டாங்க. நம்ம செல்வத்த அனுப்பலாமா? ஜாய்ன் பண்ணி 2 மாசந்தான் ஆச்சு, அதுதான் யோசிக்கிறேன்”

“பையன் எப்படி? உங்களுக்குச் சரின்னு பட்டாச் செய்யுங்க” என்று சொல்லியபடியே செக்கைக் கொடுத்தான்.

அரைமணி நேரம் இருக்கும், பிள்ளைகளோட படிப்பு, மச்சினிச்சி கல்யாணம், வேறு நண்பர்களைச் சந்தித்த விபரம் எல்லாம் பேசினோன்.

அக்கவுண்டண்டை அழைத்து, “என்ன இன்னும் பையனக் காணோம்?”

“வந்துருவான் சார், ஏதாவது ட்ராபிக் பிரச்சனையா இருக்கும்”

கொஞ்ச நேரம் கழித்து, கார் டிரைவரை அழைத்து, “பைக் ஏதும் இருக்கா? இருந்தா எடுத்துட்டு நம்ம பேங்க் வரைக்கும் போய் வா. புதுப் பையன அனுப்ச்சன் இன்னும் வரல்ல”

அடுத்த கால் மணி நேரத்துக்குள் இன்னும் இருவரை அழைத்துப் பையனப் பத்தி விசாரிச்சான்.

கொஞ்ச நேரத்தில் செல்வம் பணத்துடன் வந்து “ சாரி சார், பேங்க்ல சிஸ்டம் பிராப்ளம் அதுனால கொஞ்சம் டிலே ஆயிருச்சு”

“சரி சரி ஓக்கெ” னு சொல்லி பணத்த வாங்கி எங்கிட்டக் கொடுத்தான்.

கிளம்பும் போது, செல்வம் வேகமாக உள்ளே வந்து, “சார் நான் வேலைய விட்டு நின்னுக்குறேன்” அப்படின்னான். எனக்கு ஒன்னும் புரியல.

“ஏம்பா என்ன ஆச்சு” னு கேட்டான்

”இல்ல சார். எப்பவும் சரவணன் அண்ணந்தான் போவாரு. இன்னைக்கு என்னக் கூப்ட்டு போகச் சொல்லவும் நானும் சந்தோஷப் பட்டேன். நம்ம மேல நம்பிக்கை வைக்குறீங்க. இன்னும் நல்லா வேல செய்யனும்னு முடிவெல்லாம் எடுத்தேன். ஆனா உங்களுக்கு எம்மேல நம்பிக்கை இல்லாம எல்லாத்தையும் கூப்ட்டு விசாரிச்சுருக்கீங்க. எனக்கு இந்த மாதிரி இடத்துல வேலை செய்யப் பிடிக்கல சார்.”

“அட இருப்பா” என்று பையனைச் சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

“இல்ல சார். எதுக்கு என்ன நம்பனும், அப்புறம் சந்தேகப் படனும். இதுக்கு நீங்க பேங்க் மேனேஜருக்கு ஒரு போன் பண்ணிக் கேட்டிருந்தா இவ்வளவு கஷ்டம் இல்லையே?” சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினான்.

டிஸ்கி : இந்தக் கதைக்குப் பொருத்தமா ஒரு திருக்குறள் இருக்கு. யாராவது சொல்ல முடியுமா?

அப்டேட் : நமக்கல் சிபி அதச் சரியாச் சொல்லீட்டாரு.

Advertisements

84 comments

 1. இதனை இதனால் இவன் செய்வன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்?

 2. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
  தீரா இடும்பைத் தரும்!

 3. நன்கு விசாரித்து தெரிந்து கொள்ளாமல் ஒருவரை/ஒன்றை நம்புவதும் தெளிந்து ஆராய்ந்து அறிந்து நம்பின பிறகு ஒருவனை/ஒன்றைப் பற்றி ஐயம் கொள்ளுதலும் தீராத துன்பத்தைத் தரும்!

  (துன்பம் யாருக்கு? நம்பியவருக்கும் இருக்கலாம், நம்பப்பட்டவருக்கும் இருக்கலாம்)

 4. நன்கு விசாரித்து தெரிந்து கொள்ளாமல் ஒருவரை/ஒன்றை நம்புவதும் தெளிந்து ஆராய்ந்து அறிந்து நம்பின பிறகு ஒருவனை/ஒன்றைப் பற்றி ஐயம் கொள்ளுதலும் தீராத துன்பத்தைத் தரும்!(துன்பம் யாருக்கு? நம்பியவருக்கும் இருக்கலாம், நம்பப்பட்டவருக்கும் இருக்கலாம்)

 5. //இதனை இதனால் இவன் செய்வன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்?
  //

  இந்தக் குறள் புராஜெக்ட் மேனேஜர்ஸ்க்கு வரும்!

  இதைப் பின்பற்றி ரிசோர்ஸ் அலகேஷன்ஸ் செய்ய வேண்டும்!

  யாராரிடம் என்ன மாதிரி வேலைகளை ஒப்படைத்தால் சரியாக செய்து முடிப்பார்களோ அவர்களிடம் அந்தந்த வேலைகளை ஒப்படைக்க வேண்டும் என்பதே இதன் பொருள்!

 6. //இதனை இதனால் இவன் செய்வன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்?//இந்தக் குறள் புராஜெக்ட் மேனேஜர்ஸ்க்கு வரும்! இதைப் பின்பற்றி ரிசோர்ஸ் அலகேஷன்ஸ் செய்ய வேண்டும்!யாராரிடம் என்ன மாதிரி வேலைகளை ஒப்படைத்தால் சரியாக செய்து முடிப்பார்களோ அவர்களிடம் அந்தந்த வேலைகளை ஒப்படைக்க வேண்டும் என்பதே இதன் பொருள்!

 7. அண்ணா, என் ஒத்த வயசா இருந்த உங்களைத் திட்டீருப்பேன். முடியல.

  எஸ்.பி.பி. இளையராஜாவைத் திட்டுவாரு தெரியுமா…? அப்படி!

  என்னமா உள்ள கொண்டு போகுது உங்க நடை!

  சும்மா பாராட்டின, உங்களுக்கு கோவம் வரும்.. அதுனால ஒரு மேட்டர்…

  அவங்க ரெண்டு பேர் பேசிக்கறதும், நடுவுல பிரெண்டு தன் அலுவலக ஆட்கள்கிட்ட வேலை சொல்றதும், தொடர்ச்சியா படிக்கறப்போ யாரு பேசறா, யாருகிட்ட பேசறா-ன்னு மைல்டா குழப்புது!

  பி.கு: கடைசீல குறள் கேள்வி கேட்டு முடிச்ச ஐடியா அபாரம்!

 8. அண்ணா, என் ஒத்த வயசா இருந்த உங்களைத் திட்டீருப்பேன். முடியல.எஸ்.பி.பி. இளையராஜாவைத் திட்டுவாரு தெரியுமா…? அப்படி! என்னமா உள்ள கொண்டு போகுது உங்க நடை! சும்மா பாராட்டின, உங்களுக்கு கோவம் வரும்.. அதுனால ஒரு மேட்டர்…அவங்க ரெண்டு பேர் பேசிக்கறதும், நடுவுல பிரெண்டு தன் அலுவலக ஆட்கள்கிட்ட வேலை சொல்றதும், தொடர்ச்சியா படிக்கறப்போ யாரு பேசறா, யாருகிட்ட பேசறா-ன்னு மைல்டா குழப்புது! பி.கு: கடைசீல குறள் கேள்வி கேட்டு முடிச்ச ஐடியா அபாரம்!

 9. சபாஷ் சிபி.

  ரெண்டு குறளுமே பிஸினெஸ், மற்றும் உயரதிகாரிகளுக்கானது.

  இனொன்னும் உள்ளது.

  செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
  செய்யாமை யானும் கெடும்

 10. சபாஷ் சிபி.ரெண்டு குறளுமே பிஸினெஸ், மற்றும் உயரதிகாரிகளுக்கானது.இனொன்னும் உள்ளது.செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும்

 11. முதல்ல வந்த அனானிக்கு நன்றி. பதில் சிபியோட பின்னூட்டத்தில இருக்கு.

 12. நல்ல கதை வேலன். ஆனா பாருங்க நாங்கல்லாம் படிக்கும்போதே வாத்தியார் கேள்வி கேட்டா அந்த வாத்தியாரை புடிக்காம போயிடும். நீங்க என்னாடான்னா திருக்குறள் எல்லாம் கேக்குறீங்க??? :)))))

  நமக்கு தெரிஞ்சதெல்லாம் 10வது படிக்குறப்ப வந்த 10 மனப்பாட குறள் மட்டும்தான் :))

 13. நல்ல கதை வேலன். ஆனா பாருங்க நாங்கல்லாம் படிக்கும்போதே வாத்தியார் கேள்வி கேட்டா அந்த வாத்தியாரை புடிக்காம போயிடும். நீங்க என்னாடான்னா திருக்குறள் எல்லாம் கேக்குறீங்க??? :)))))நமக்கு தெரிஞ்சதெல்லாம் 10வது படிக்குறப்ப வந்த 10 மனப்பாட குறள் மட்டும்தான் :))

 14. பரவாயில்ல வெண்பூ,

  இப்ப சிபி மூலமா 2 குறள் கத்துகிட்டீங்கல்ல.

  ஸ்டாக் வச்சுகிட்டு அப்பப்ப பயன் படுத்துங்க.

 15. பரவாயில்ல வெண்பூ,இப்ப சிபி மூலமா 2 குறள் கத்துகிட்டீங்கல்ல.ஸ்டாக் வச்சுகிட்டு அப்பப்ப பயன் படுத்துங்க.

 16. நல்ல கதை… அதோடு திருக்குறள் முயற்சி… தள இதில் எல்லாம் என்ஸ்பர்ட்… அதான் கரெக்டா சொல்லிட்டார்.

 17. //தமிழ் பிரியன் said…

  நல்ல கதை… அதோடு திருக்குறள் முயற்சி… தள இதில் எல்லாம் என்ஸ்பர்ட்… அதான் கரெக்டா சொல்லிட்டார்.//

  நன்றி தமிழ். போடும்போது கொஞ்சம் தயக்கத்துடந்தான் போட்டேன். ஆனா இப்ப சந்தோஷமா இருக்கு.

 18. //தமிழ் பிரியன் said… நல்ல கதை… அதோடு திருக்குறள் முயற்சி… தள இதில் எல்லாம் என்ஸ்பர்ட்… அதான் கரெக்டா சொல்லிட்டார்.//நன்றி தமிழ். போடும்போது கொஞ்சம் தயக்கத்துடந்தான் போட்டேன். ஆனா இப்ப சந்தோஷமா இருக்கு.

 19. நடை இந்தக் கதையில் சற்று வித்தியாசம். பூசாரி/சாமி உவமை அழகு. இரண்டாம் முறை ‘பூசாரி’ க்குப் பதில் ‘அவள்’ என்று சொன்னாலும் புரிந்து கொள்வோம். உரையாடல் யதார்த்தம். பரிசல் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

  நல்ல வேளை, சரியான குறள் போட்டீங்க. ‘எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
  எண்ணுவதென்பது இழுக்கு’ என்று போட்டு மூக்கு உடைபட்டிருக்கும். நல்ல உத்தி.

  அனுஜன்யா

 20. நடை இந்தக் கதையில் சற்று வித்தியாசம். பூசாரி/சாமி உவமை அழகு. இரண்டாம் முறை ‘பூசாரி’ க்குப் பதில் ‘அவள்’ என்று சொன்னாலும் புரிந்து கொள்வோம். உரையாடல் யதார்த்தம். பரிசல் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நல்ல வேளை, சரியான குறள் போட்டீங்க. ‘எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்எண்ணுவதென்பது இழுக்கு’ என்று போட்டு மூக்கு உடைபட்டிருக்கும். நல்ல உத்தி. அனுஜன்யா

 21. //அனுஜன்யா said…

  நடை இந்தக் கதையில் சற்று வித்தியாசம். பூசாரி/சாமி உவமை அழகு. இரண்டாம் முறை ‘பூசாரி’ க்குப் பதில் ‘அவள்’ என்று சொன்னாலும் புரிந்து கொள்வோம். உரையாடல் யதார்த்தம்.//

  கவனித்துப் பாராட்டியதற்கு நன்றி அனு.

  // பரிசல் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.//

  முடிந்தவரை மாற்றியிருக்கிறேன்.

  // நல்ல வேளை, சரியான குறள் போட்டீங்க. ‘எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
  எண்ணுவதென்பது இழுக்கு’ என்று போட்டு மூக்கு உடைபட்டிருக்கும். நல்ல உத்தி.

  அனுஜன்யா//

  சரியான குறளை சிபி சொல்லீட்டாரு. பாராட்டு அவருக்குத்தான்.

  முடிஞ்சா இந்தக் குறளுக்குப் பொருந்தும் ஒரு கதை நீங்கள் எழுதலாமே.

 22. //அனுஜன்யா said… நடை இந்தக் கதையில் சற்று வித்தியாசம். பூசாரி/சாமி உவமை அழகு. இரண்டாம் முறை ‘பூசாரி’ க்குப் பதில் ‘அவள்’ என்று சொன்னாலும் புரிந்து கொள்வோம். உரையாடல் யதார்த்தம்.//கவனித்துப் பாராட்டியதற்கு நன்றி அனு.// பரிசல் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.//முடிந்தவரை மாற்றியிருக்கிறேன்.// நல்ல வேளை, சரியான குறள் போட்டீங்க. ‘எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு’ என்று போட்டு மூக்கு உடைபட்டிருக்கும். நல்ல உத்தி. அனுஜன்யா//சரியான குறளை சிபி சொல்லீட்டாரு. பாராட்டு அவருக்குத்தான்.முடிஞ்சா இந்தக் குறளுக்குப் பொருந்தும் ஒரு கதை நீங்கள் எழுதலாமே.

 23. இதழ்களில் கதைகளை வாசிப்பது குறைந்து வருகின்ற வேளையில் உங்கள் பணி சிறப்பானது. நானும் விரைவில் கதை முயற்சிகளில் இறங்குவேன். (மற்றவர்கள் ஜாக்கிரதை.)

 24. இதழ்களில் கதைகளை வாசிப்பது குறைந்து வருகின்ற வேளையில் உங்கள் பணி சிறப்பானது. நானும் விரைவில் கதை முயற்சிகளில் இறங்குவேன். (மற்றவர்கள் ஜாக்கிரதை.)

 25. //தாமிரா said…

  இதழ்களில் கதைகளை வாசிப்பது குறைந்து வருகின்ற வேளையில் உங்கள் பணி சிறப்பானது. நானும் விரைவில் கதை முயற்சிகளில் இறங்குவேன். (மற்றவர்கள் ஜாக்கிரதை.)//

  உங்க கதைக்காக ஆவலாக இருக்கோம் தாமிரா.

 26. //தாமிரா said… இதழ்களில் கதைகளை வாசிப்பது குறைந்து வருகின்ற வேளையில் உங்கள் பணி சிறப்பானது. நானும் விரைவில் கதை முயற்சிகளில் இறங்குவேன். (மற்றவர்கள் ஜாக்கிரதை.)//உங்க கதைக்காக ஆவலாக இருக்கோம் தாமிரா.

 27. புத்திசாலி & தன்மானச்செல்வம்!!!

  கதை நச்சுன்னு இருக்கு…

 28. எங்க ஊர் பாஷயில பொல்லனும்னா கதை சும்மா நறுக்குனு இருக்கு 🙂

 29. //நாமக்கல் சிபி said…
  தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
  தீரா இடும்பைத் தரும்!
  //

  REPEATEY 🙂

 30. //நாமக்கல் சிபி said… தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பைத் தரும்!//REPEATEY 🙂

 31. ஒரு டீ சாப்டு முடிக்கல, ஆனா கதை முடுஞ்சது, அந்த கேப்ல தலை, உடம்பு, வாழ் என்று எல்லாமே… அண்ணே கலக்குறீங்க…

 32. ஒரு டீ சாப்டு முடிக்கல, ஆனா கதை முடுஞ்சது, அந்த கேப்ல தலை, உடம்பு, வாழ் என்று எல்லாமே… அண்ணே கலக்குறீங்க…

 33. வேகமா அடிச்சதுல ‘வால்’ என்பதற்கு ‘வாழ்’ என்று அடிச்சு அனுப்பிட்டேன்…. slip of the hand… sorry…

 34. வேகமா அடிச்சதுல ‘வால்’ என்பதற்கு ‘வாழ்’ என்று அடிச்சு அனுப்பிட்டேன்…. slip of the hand… sorry…

 35. நன்றி ச்சின்னப் பையன்

  பட்டியல் போட்டபட் வேலைகளை எல்லாம் முடிச்சிட்டிங்களா?

 36. //சிம்பா said…
  ஒரு டீ சாப்டு முடிக்கல, ஆனா கதை முடுஞ்சது, அந்த கேப்ல தலை, உடம்பு, வாழ் என்று எல்லாமே… அண்ணே கலக்குறீங்க… //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 37. //சிம்பா said… ஒரு டீ சாப்டு முடிக்கல, ஆனா கதை முடுஞ்சது, அந்த கேப்ல தலை, உடம்பு, வாழ் என்று எல்லாமே… அண்ணே கலக்குறீங்க… //வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 38. அண்ணா மின்னஞ்சல் முகவரி கொடுக்காம போய்டீங்களே.

 39. //சிம்பா said…

  அண்ணா மின்னஞ்சல் முகவரி கொடுக்காம போய்டீங்களே.//

  பின்னூட்டப் பெட்டி மேலேயே இருக்கே. பாக்கலையா?

 40. //சிம்பா said… அண்ணா மின்னஞ்சல் முகவரி கொடுக்காம போய்டீங்களே.//பின்னூட்டப் பெட்டி மேலேயே இருக்கே. பாக்கலையா?

 41. வர்குகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்.

 42. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கொத்ஸ்.

 43. ரொம்ப ரொம்ப அழகானக் கதை. ஆனா முடிவில்தான் எனக்கு உடன்பாடில்லை:(:(:( கதையைக் கொண்டுபோன விதம் கலக்கல்:):):)

 44. ரொம்ப ரொம்ப அழகானக் கதை. ஆனா முடிவில்தான் எனக்கு உடன்பாடில்லை:(:(:( கதையைக் கொண்டுபோன விதம் கலக்கல்:):):)

 45. கதை போக்கு நல்லா இருக்கு. ஆனால் அவ்வளவு நேர்மையான பையன், மேனேசர் சந்தேகப்படுகிறார் என்பதற்காக முடிவெடுப்பானா ? சந்தேகம் எல்லா இடத்திலும் இருக்குமே.

  பையனுக்கு கதையில் புரோமோசன் கொடுத்து இருக்கலாம், உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கி, நேர்மைக்கு விலை வைத்துவிட்டீர்கள்

 46. கதை போக்கு நல்லா இருக்கு. ஆனால் அவ்வளவு நேர்மையான பையன், மேனேசர் சந்தேகப்படுகிறார் என்பதற்காக முடிவெடுப்பானா ? சந்தேகம் எல்லா இடத்திலும் இருக்குமே.பையனுக்கு கதையில் புரோமோசன் கொடுத்து இருக்கலாம், உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கி, நேர்மைக்கு விலை வைத்துவிட்டீர்கள்

 47. //கோவி.கண்ணன் said…

  கதை போக்கு நல்லா இருக்கு. ஆனால் அவ்வளவு நேர்மையான பையன், மேனேசர் சந்தேகப்படுகிறார் என்பதற்காக முடிவெடுப்பானா ? சந்தேகம் எல்லா இடத்திலும் இருக்குமே.//

  இல்ல கோவி. சந்தேகம் இருக்குமிடத்தில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியாது. நானே ஒரு முறை அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல ராஜினாமா பண்ணியிருக்கேன்.

  // பையனுக்கு கதையில் புரோமோசன் கொடுத்து இருக்கலாம், உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கி, நேர்மைக்கு விலை வைத்துவிட்டீர்கள்//

  அப்படி பண்ணுனா இயல்பா இல்லாமப் போயிருக்குமோ?

 48. //கோவி.கண்ணன் said… கதை போக்கு நல்லா இருக்கு. ஆனால் அவ்வளவு நேர்மையான பையன், மேனேசர் சந்தேகப்படுகிறார் என்பதற்காக முடிவெடுப்பானா ? சந்தேகம் எல்லா இடத்திலும் இருக்குமே.//இல்ல கோவி. சந்தேகம் இருக்குமிடத்தில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியாது. நானே ஒரு முறை அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல ராஜினாமா பண்ணியிருக்கேன். // பையனுக்கு கதையில் புரோமோசன் கொடுத்து இருக்கலாம், உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கி, நேர்மைக்கு விலை வைத்துவிட்டீர்கள்//அப்படி பண்ணுனா இயல்பா இல்லாமப் போயிருக்குமோ?

 49. அருமையா இருக்கு
  முதலில் இது உண்மை சம்பவமொன்னு நினைச்சேன்.

 50. நன்றி வால்.

  நடந்த நிகழ்ச்சி கொஞ்சம் கற்பனை கலந்து கொடுத்திருக்கேன். 50:50

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s