கதம்பம் 15-09-08

ஜீவாவின் முந்தைய இரண்டு படங்களும் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்க, அவரது தாம் தூம் பயங்கர ஏமாற்றம்.

கதாநாயகன், பாவம் ஓடுகிறார், தாவுகிறார், அடுத்த கட்டிடத்திற்கு பறக்கிறார், தாவுகிறார், ஓடுகிறார். நடு நடுவே கொஞ்சம் காதல் மாதிரி ஏதோ முயற்சிக்கிறார். காப்பி அடித்துப் பாஸ் பண்ணியவன் முதல் முறை வேலைக்குப் போய்த் திருதிருன்னு முழிப்பது போல முழிக்கிறார்.

இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ.

கதா நாயகி, திருவிழாவில் தொலைந்தவர் மாதிரி என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறுகிறார். நல்ல ஹேன்ட்சம். தமிழ்ப் படங்களில் கதானாயகியாக இருக்க இனிமேல் கீழ்ப்பாகக்த்திலிருந்து கூட்டிவந்தால் ஒரிஜினாலிட்டி இருக்கும். அதெப்படி கதானாயகின்னா லூசாத்தான் இருக்கனும்னு யார் முடிவு பண்ணுனாங்கன்னு தெரியல? அப்பா மாமா எல்லாம் கண்டிப்பான பேர்வழிகளாம் இவர் மட்டும் பொடிப்பசங்களோட கும்மி அடிப்பாராம். அதிலும் அவர் கலரும், டிரசும், முகபாவமும்(?) கொஞ்சம் கூட ஒட்டவில்லை. கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.

ஹாரிஸ் 4 ஹிட் பாட்டு் போட்டுட்டமேன்னு தன்பாட்டுக்கு ரீரிக்கர்டிங்க் போட்டுட்டாரு. இது மாதிரி கேவலமான ரீரிக்கார்டிங் இதுவரை நான் பார்த்ததில்லை. படத்துக்கு ரீரிக்கார்டிங் ஒரு மைனஸ். ஜீவா இருந்திருந்தா நல்லா வேலை வாக்கியிருப்பார்.

ஹாரிஸுக்கும் பாட்டுக்கள் படமாக்கப்படும் விதத்துக்கும் ஏழாம் பொருத்தம் போல. ஹிட்டான பாட்டுக்கள் திரையில் பார்க்கும் போது ஒன்னு கொடுமையா இருக்கு இல்லன்னா காமெடியா இருக்கு.

படப்பிடிப்பு மிக ரம்யமாக இருப்பது போதும் என்று ஜீவா முடிவெடுத்து இருப்பார் போல.

***************************************************

இதுக்குப் பரிகாரமா இருக்கட்டும்னு, திலீப் நடிச்ச வேட்டம்-னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். (வேட்டம் – வார்த்தை உச்சரிப்பு சரியா?; என்ன அர்த்தம்?) பிரியதர்ஷன் இயக்கம். அருமையான காமெடி. திலீப் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும், மற்ற எல்லோரும் அவரவர் பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருந்தனர்.

காமெடிப் படம்ங்கிறதால லாஜிக்கெல்லாம் பார்க்காம நல்லா எஞ்சாய் பண்ணலாம். மைக்கேல் மதன காமராஜன் படக் கிளைமேக்ஸ் இங்க முக்காவாசிப் படம். ஆள் மாறாட்டம் காரணமா வருகிற குழப்பம்தான் அடிநாதம்.

ஆனாலும் இவ்வளவு பாத்திரங்களையும் வச்சுக்கிட்டு கையாண்டது, நிறைவாகச் செய்தது சாதனைதான்.

***********************************************************

தூர்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள் என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலை நீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

– நா முத்துக் குமார் – பட்டாம்பூச்சி விற்பவன்

******************************************************

வழக்கமாக வாங்கும் சேவிங் கிரீம் இல்லாததால் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்.

Mrp Rs. 50 என்றிருந்தது.

கீழே பொடி எழுத்தில்,

for combination of two packs.

இரண்டை எடுத்து பில் போட்டு வாங்கி வந்தேன்

இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்.

*****************************************************

அதிஷா வீட்டுக் காது குத்து விழா இனிதே நடைபெற்றது. நம்ம குடும்ப விழாவில் பங்கேற்றது போல் நிறைவாக இருந்தது.

அவர்கள் வீட்டுக்கு வரப்போகும் மருமகனையும் அறிமுகப் படுத்தினார்கள். மனிதர் இயல்பாகப் பேசிப் பழகினார். காது குத்தியபின், சின்னவளுக்குப் போட்டுவிட்ட நகையின் திருகாணி கழண்டு தொலைந்து விட்டது. இனிக் கிடைக்காது என்று எல்லோரும் நம்பிக்கை இழந்து, அவரவர் அபிப்ராயத்தைச் சேர்த்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர்.

குழந்தையைப் போட்டோ எடுத்த இடத்தில் தேடச் சென்றார் மருமகன் சார். எல்லோரும் நின்ற வாக்கில் தேடியதால் கிடைக்கவில்லை. இவர் சட்டெனத் தரையில் அமர்ந்து தேடி எடுத்துத் தந்தார். மற்றவர்களைபோல் வீனாகப் பேசிக் கொண்டிராமல் அவர் செயலில் காட்டியது சந்தோஷமாக இருந்தது. திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.

மேலும், ஒரு மெகா சீரியலுக்கான கதை எப்படி கிடைக்கிறது என்பது புலனாகியது.

Advertisements

95 comments

 1. //முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு//

  சூப்பரு 🙂

 2. ஆனாலும் உங்களுக்கு நக்கல்தான். எல்லாரும்தான் தாம்தூம் ரொம்பக் கேவலமா இருக்குன்னு சொல்றாங்களே, ஆனாலும் போய் பார்த்திருக்கீங்களே:):):)
  //கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.//
  சூப்பர்.
  திலீப் படம் பார்த்தீங்களா? அட அப்போ உங்களுக்கும் அவரை பிடிக்குமா? எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அர்த்தம் தெரியாது.
  ஹி ஹி, கவிதை நிஜமாவே கவிதை மாதிரி இருக்கு. நான் எப்படி அதை விமர்சனம் பண்றது? புலவர்களுக்குள் போட்டி இருக்கறது சகஜம் இல்லைங்களா?:):):)
  //இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்.//
  ஏதாவது செய்யணும் பாஸ் :):):)(ஜாலியா சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க)
  //அவர்கள் வீட்டுக்கு வரப்போகும் மருமகனையும் அறிமுகப் படுத்தினார்கள்.//
  என்னது அந்தக் குழந்தைகளில் ஒருத்தர்க்கு இப்பவே மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………….(ஹி ஹி, தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதி இருக்கலாம்)

 3. ஆனாலும் உங்களுக்கு நக்கல்தான். எல்லாரும்தான் தாம்தூம் ரொம்பக் கேவலமா இருக்குன்னு சொல்றாங்களே, ஆனாலும் போய் பார்த்திருக்கீங்களே:):):)//கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.//சூப்பர்.திலீப் படம் பார்த்தீங்களா? அட அப்போ உங்களுக்கும் அவரை பிடிக்குமா? எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அர்த்தம் தெரியாது.ஹி ஹி, கவிதை நிஜமாவே கவிதை மாதிரி இருக்கு. நான் எப்படி அதை விமர்சனம் பண்றது? புலவர்களுக்குள் போட்டி இருக்கறது சகஜம் இல்லைங்களா?:):):)//இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்.//ஏதாவது செய்யணும் பாஸ் :):):)(ஜாலியா சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க)//அவர்கள் வீட்டுக்கு வரப்போகும் மருமகனையும் அறிமுகப் படுத்தினார்கள்.//என்னது அந்தக் குழந்தைகளில் ஒருத்தர்க்கு இப்பவே மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………….(ஹி ஹி, தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதி இருக்கலாம்)

 4. \\ திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.

  \\

  :-))))))))))))

 5. //சரவணகுமரன் said…

  //முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு//

  சூப்பரு :-)//

  நன்றி சரவணக்குமரன்.

 6. /*திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.*/

  அப்புறம் எப்படிங்க திருமணத்திலே போயி … மாட்டுராங்க….
  யாராவது தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்…… என்னைய காப்பாத்துங்களேன்

 7. /*திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.*/அப்புறம் எப்படிங்க திருமணத்திலே போயி … மாட்டுராங்க….யாராவது தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்…… என்னைய காப்பாத்துங்களேன்

 8. //rapp said…

  ஆனாலும் உங்களுக்கு நக்கல்தான். எல்லாரும்தான் தாம்தூம் ரொம்பக் கேவலமா இருக்குன்னு சொல்றாங்களே, ஆனாலும் போய் பார்த்திருக்கீங்களே:):):) //

  இல்ல ராப் run lola run – பட்ம் பத்திருக்கீங்களா. அந்தப் படத்தப் பாக்கும்போது நெனச்சேன். இந்தக் கதைய தமிழ் சூழலுக்குச் சொல்ல ஒரு புது இயக்குனர்தான் சரின்னு. அதே மாதிரி அவரு 12B படம் எடுத்தப்ப மிகவும் மகிழ்ந்தேன்.
  அவருடைய அடுத்த படம் உன்னாலே உன்னாலே எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு மேல்தட்டு வர்க்கக் காதல். அந்த சதா மாதிரி கேரக்டர் ஒன்றை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்/

  இந்தப் படம் பெருத்த ஏமாற்றம். இதுக்கு ஆஹா ஓஹோனு விமர்சனம் வேற வந்திருக்குது.

 9. //rapp said… ஆனாலும் உங்களுக்கு நக்கல்தான். எல்லாரும்தான் தாம்தூம் ரொம்பக் கேவலமா இருக்குன்னு சொல்றாங்களே, ஆனாலும் போய் பார்த்திருக்கீங்களே:):):) //இல்ல ராப் run lola run – பட்ம் பத்திருக்கீங்களா. அந்தப் படத்தப் பாக்கும்போது நெனச்சேன். இந்தக் கதைய தமிழ் சூழலுக்குச் சொல்ல ஒரு புது இயக்குனர்தான் சரின்னு. அதே மாதிரி அவரு 12B படம் எடுத்தப்ப மிகவும் மகிழ்ந்தேன்.அவருடைய அடுத்த படம் உன்னாலே உன்னாலே எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு மேல்தட்டு வர்க்கக் காதல். அந்த சதா மாதிரி கேரக்டர் ஒன்றை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்/இந்தப் படம் பெருத்த ஏமாற்றம். இதுக்கு ஆஹா ஓஹோனு விமர்சனம் வேற வந்திருக்குது.

 10. //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ//

  அண்ணாச்சி.
  இவ்வளவு எளிமையாகவும், அழுத்தமாகவும் உதாரணம் கொடுப்பது மிகக் கடினம்.

  மத்ததையெல்லாம் படிச்சுட்டு மீண்டும் பின்னூட்டுகிறேன்

 11. //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ//அண்ணாச்சி.இவ்வளவு எளிமையாகவும், அழுத்தமாகவும் உதாரணம் கொடுப்பது மிகக் கடினம்.மத்ததையெல்லாம் படிச்சுட்டு மீண்டும் பின்னூட்டுகிறேன்

 12. //திலீப் படம் பார்த்தீங்களா? அட அப்போ உங்களுக்கும் அவரை பிடிக்குமா? எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அர்த்தம் தெரியாது.//

  அவரைப் பிடிக்க எதுக்கு அர்த்தம் தெரியனும்? :-))))))

  ஜோக்ஸ் அபார்ட். நான் முதலில் எதேச்சையாக அவருடைய கல்யாணராமன் படம்தான் பார்த்தேன். என்ன ஒரு அனாயசமான நடிப்பு. தொடர்ந்து அவருடைய எல்லாப் படங்களையும் தேடித் தேடிப் பார்த்துவிட்டேன். எவ்வளவு வெரைட்டியாக நடிக்கிறார் தமிழில் சான்ஸே இல்லை. கடைசியாக அவருடைய “சாந்துப் பொட்டு” பார்த்தேன். பாடி லாங்குவேஜ்ல மனுசன் அசத்தீட்டாரு. நல்ல வேளை விகரம் நடிக்க மாட்டேனுட்டாரு.

 13. //திலீப் படம் பார்த்தீங்களா? அட அப்போ உங்களுக்கும் அவரை பிடிக்குமா? எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அர்த்தம் தெரியாது.//அவரைப் பிடிக்க எதுக்கு அர்த்தம் தெரியனும்? :-))))))ஜோக்ஸ் அபார்ட். நான் முதலில் எதேச்சையாக அவருடைய கல்யாணராமன் படம்தான் பார்த்தேன். என்ன ஒரு அனாயசமான நடிப்பு. தொடர்ந்து அவருடைய எல்லாப் படங்களையும் தேடித் தேடிப் பார்த்துவிட்டேன். எவ்வளவு வெரைட்டியாக நடிக்கிறார் தமிழில் சான்ஸே இல்லை. கடைசியாக அவருடைய “சாந்துப் பொட்டு” பார்த்தேன். பாடி லாங்குவேஜ்ல மனுசன் அசத்தீட்டாரு. நல்ல வேளை விகரம் நடிக்க மாட்டேனுட்டாரு.

 14. //இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்.//
  ஏதாவது செய்யணும் பாஸ் :):):)(ஜாலியா சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க)//

  ஜாலியாச் சொன்னா எப்படி தப்பா எடுத்துக்குறது?

 15. //இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்.//ஏதாவது செய்யணும் பாஸ் :):):)(ஜாலியா சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க)//ஜாலியாச் சொன்னா எப்படி தப்பா எடுத்துக்குறது?

 16. ஜீவா இருந்திருந்தால் நன்றாக எடுத்திருப்பார்..என்ன செய்வது? ஒவ்வொருவருடைய கண்ணோட்டமும் மாறுகின்றதே?….

 17. //அவர்கள் வீட்டுக்கு வரப்போகும் மருமகனையும் அறிமுகப் படுத்தினார்கள்.//
  என்னது அந்தக் குழந்தைகளில் ஒருத்தர்க்கு இப்பவே மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………….(ஹி ஹி, தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதி இருக்கலாம்)//

  அடப்பாவிகளா, இப்படி ஒரு அர்த்தமா? 😦

  அந்தக் குடும்பத்து மருமகன்னுதான் போட்டிருக்கேன்.

 18. //அவர்கள் வீட்டுக்கு வரப்போகும் மருமகனையும் அறிமுகப் படுத்தினார்கள்.//என்னது அந்தக் குழந்தைகளில் ஒருத்தர்க்கு இப்பவே மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்……………………….(ஹி ஹி, தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதி இருக்கலாம்)//அடப்பாவிகளா, இப்படி ஒரு அர்த்தமா? :-(அந்தக் குடும்பத்து மருமகன்னுதான் போட்டிருக்கேன்.

 19. முத்துக்குமாரின் கவிதை நல்லா இருக்கு… 🙂

 20. கல்யாணத்து முன்னாடி நல்லவங்களா இருந்திருப்போம்… அப்ப அதுக்குப் பிறகு.. 😉

 21. //விஜய் ஆனந்த் said…

  :-)))…. //

  இப்பத்தானே ஒரு குழந்தைக்கு அப்பாவாகியிஉக்கீங்க. அப்புறம் அப்பப்பா ஆகிடுவீங்க.

 22. //விஜய் ஆனந்த் said… :-)))…. //இப்பத்தானே ஒரு குழந்தைக்கு அப்பாவாகியிஉக்கீங்க. அப்புறம் அப்பப்பா ஆகிடுவீங்க.

 23. //நையாண்டி நைனா said…

  /*திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.*/

  அப்புறம் எப்படிங்க திருமணத்திலே போயி … மாட்டுராங்க….
  யாராவது தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்…… என்னைய காப்பாத்துங்களேன்//

  நீங்க என்ன பண்ணுனாலும் அந்த ஆயுள் தண்டனையில இருந்து மட்டும் தப்பிக்கவே முடியாது. ஏன் நம்ம கடவுள்கள் கூட தப்ப முடியவில்லையே?

  இப்பவே தயாராகிடுங்க.

 24. //நையாண்டி நைனா said… /*திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.*/ அப்புறம் எப்படிங்க திருமணத்திலே போயி … மாட்டுராங்க…. யாராவது தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்…… என்னைய காப்பாத்துங்களேன்//நீங்க என்ன பண்ணுனாலும் அந்த ஆயுள் தண்டனையில இருந்து மட்டும் தப்பிக்கவே முடியாது. ஏன் நம்ம கடவுள்கள் கூட தப்ப முடியவில்லையே? இப்பவே தயாராகிடுங்க.

 25. கதம்பம் ரொம்ப அருமை அய்யா.

  //கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.//

  மிக‌ அருமையான‌ வார்த்தைப் ப‌த‌ம், அருமையான உவமை.ரொம்ப‌ பொருத்த‌மா சொல்லியிருக்கீங்க‌.

 26. //கோவி.கண்ணன் said…

  //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ//

  அண்ணாச்சி.
  இவ்வளவு எளிமையாகவும், அழுத்தமாகவும் உதாரணம் கொடுப்பது மிகக் கடினம்.//

  நன்றி கோவி. அவரு யோசிக்கும்போது ஒரு முகபாவம் காட்டுவாரு பாருங்க சூப்பரா இருக்கும். சின்ன வயசுல மாசத்துக்கு ஒருதடவ வயித்தக் கிளீன் பண்ண ஒரு குளிகை குடுப்பாங்க அப்ப னமக்கு இருக்கும் பாருங்க அந்த பாவம்.

 27. கதம்பம் ரொம்ப அருமை அய்யா. //கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.// மிக‌ அருமையான‌ வார்த்தைப் ப‌த‌ம், அருமையான உவமை.ரொம்ப‌ பொருத்த‌மா சொல்லியிருக்கீங்க‌.

 28. //கோவி.கண்ணன் said… //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ// அண்ணாச்சி. இவ்வளவு எளிமையாகவும், அழுத்தமாகவும் உதாரணம் கொடுப்பது மிகக் கடினம்.//நன்றி கோவி. அவரு யோசிக்கும்போது ஒரு முகபாவம் காட்டுவாரு பாருங்க சூப்பரா இருக்கும். சின்ன வயசுல மாசத்துக்கு ஒருதடவ வயித்தக் கிளீன் பண்ண ஒரு குளிகை குடுப்பாங்க அப்ப னமக்கு இருக்கும் பாருங்க அந்த பாவம்.

 29. //தமிழ் பிரியன் said…

  ஜீவா இருந்திருந்தால் நன்றாக எடுத்திருப்பார்..என்ன செய்வது? ஒவ்வொருவருடைய கண்ணோட்டமும் மாறுகின்றதே?….//

  ஆமா தமிழ் அவரு உதவியாளர்கள்தான் படத்தை முடித்திருக்கிறார்கள் ( இதற்கு இரண்டு அர்த்தமும் பொருந்தும்)

 30. //தமிழ் பிரியன் said… ஜீவா இருந்திருந்தால் நன்றாக எடுத்திருப்பார்..என்ன செய்வது? ஒவ்வொருவருடைய கண்ணோட்டமும் மாறுகின்றதே?….//ஆமா தமிழ் அவரு உதவியாளர்கள்தான் படத்தை முடித்திருக்கிறார்கள் ( இதற்கு இரண்டு அர்த்தமும் பொருந்தும்)

 31. உங்க கதம்பம் சூப்பர்!

  கதம்பத்துக்கு முன்னாடி மணக்காதுன்னுதான் நான் இப்ப அவியலே எழுதறதில்ல!

  தாம்தூம் பட விமர்சனம் அருமை!

  ஆனா, அப்படி ஒரு படத்துக்கு ஏன் போய் மாட்னீங்கன்னு தெரியல. பக்கத்துலதானே இருக்கோம்.. கூப்ட்டு ஒரு வார்த்தை கேக்கறதில்லையா?

 32. //தமிழ் பிரியன் said…

  கல்யாணத்து முன்னாடி நல்லவங்களா இருந்திருப்போம்… அப்ப அதுக்குப் பிறகு.. ;)//

  நல்லவனா இல்லையாங்குறது இல்ல இப்பக் கேள்வி. தங்கமணி என்ன சொன்னலும் கேக்குற அளவுக்கு வல்லவனா அகீட்டோம் பாருங்க அதுதான்.

 33. உங்க கதம்பம் சூப்பர்!கதம்பத்துக்கு முன்னாடி மணக்காதுன்னுதான் நான் இப்ப அவியலே எழுதறதில்ல!தாம்தூம் பட விமர்சனம் அருமை!ஆனா, அப்படி ஒரு படத்துக்கு ஏன் போய் மாட்னீங்கன்னு தெரியல. பக்கத்துலதானே இருக்கோம்.. கூப்ட்டு ஒரு வார்த்தை கேக்கறதில்லையா?

 34. //தமிழ் பிரியன் said… கல்யாணத்து முன்னாடி நல்லவங்களா இருந்திருப்போம்… அப்ப அதுக்குப் பிறகு.. ;)//நல்லவனா இல்லையாங்குறது இல்ல இப்பக் கேள்வி. தங்கமணி என்ன சொன்னலும் கேக்குற அளவுக்கு வல்லவனா அகீட்டோம் பாருங்க அதுதான்.

 35. //ஜோசப் பால்ராஜ் said…

  கதம்பம் ரொம்ப அருமை அய்யா.

  //கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.//

  மிக‌ அருமையான‌ வார்த்தைப் ப‌த‌ம், அருமையான உவமை.ரொம்ப‌ பொருத்த‌மா சொல்லியிருக்கீங்க‌.//

  அருமையான் மண்வாசனை வீசும் கிராமத்தக் கண்முன் நிறுத்தியதில் வெற்றி பெற்று, இந்தப் பெண்ணைத் தேர்வு செய்ததில் தவறி விட்டார்.

  கிராமியச் சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத அவரோட டிரஸ், பாவனைகள்.

 36. //ஜோசப் பால்ராஜ் said… கதம்பம் ரொம்ப அருமை அய்யா. //கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.// மிக‌ அருமையான‌ வார்த்தைப் ப‌த‌ம், அருமையான உவமை.ரொம்ப‌ பொருத்த‌மா சொல்லியிருக்கீங்க‌.//அருமையான் மண்வாசனை வீசும் கிராமத்தக் கண்முன் நிறுத்தியதில் வெற்றி பெற்று, இந்தப் பெண்ணைத் தேர்வு செய்ததில் தவறி விட்டார்.கிராமியச் சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத அவரோட டிரஸ், பாவனைகள்.

 37. //பரிசல்காரன் said…

  கதம்பத்துக்கு முன்னாடி மணக்காதுன்னுதான் நான் இப்ப அவியலே எழுதறதில்ல! //

  இந்த மாதிரி உயர்வு நவிற்சி எந்தப் பலாபலனும் தராது.

  நீங்க ஐயராத்து அவியல் செஞ்சா, நான் கொஞ்சம் கருவாடு மீன் சமையல் செய்யுறேனே.

  இரண்டையும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

  // ஆனா, அப்படி ஒரு படத்துக்கு ஏன் போய் மாட்னீங்கன்னு தெரியல. பக்கத்துலதானே இருக்கோம்.. கூப்ட்டு ஒரு வார்த்தை கேக்கறதில்லையா? //

  நண்பன லாட்ஜுல விடப் போனவந்தான் சும்ம இருக்காம படத்துக்குப் போலாமான்னு கேட்டான். விதி அறையின் ஒரு மூலையில் நின்று சிரித்ததுன்னு சுஜாதா சார் நக்கல் பண்ணுவாரே அஃதே.

 38. //பரிசல்காரன் said… கதம்பத்துக்கு முன்னாடி மணக்காதுன்னுதான் நான் இப்ப அவியலே எழுதறதில்ல! //இந்த மாதிரி உயர்வு நவிற்சி எந்தப் பலாபலனும் தராது.நீங்க ஐயராத்து அவியல் செஞ்சா, நான் கொஞ்சம் கருவாடு மீன் சமையல் செய்யுறேனே. இரண்டையும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். // ஆனா, அப்படி ஒரு படத்துக்கு ஏன் போய் மாட்னீங்கன்னு தெரியல. பக்கத்துலதானே இருக்கோம்.. கூப்ட்டு ஒரு வார்த்தை கேக்கறதில்லையா? //நண்பன லாட்ஜுல விடப் போனவந்தான் சும்ம இருக்காம படத்துக்குப் போலாமான்னு கேட்டான். விதி அறையின் ஒரு மூலையில் நின்று சிரித்ததுன்னு சுஜாதா சார் நக்கல் பண்ணுவாரே அஃதே.

 39. எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும்போது ஏமாற்றம் தான் ஏற்படும்..என்பதற்கு மற்றுமொரு உதாறணம்..தாம்தூம்

 40. எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும்போது ஏமாற்றம் தான் ஏற்படும்..என்பதற்கு மற்றுமொரு உதாறணம்..தாம்தூம்

 41. நல்ல கதம்பம். அதிலும் உதாரணங்கள் (டாய்லெட் போகும் முன், பின், கருவாட்டு குழம்பு முந்திரி) சூப்பர்.

  அந்த கவிதை அருமை.

 42. நல்ல கதம்பம். அதிலும் உதாரணங்கள் (டாய்லெட் போகும் முன், பின், கருவாட்டு குழம்பு முந்திரி) சூப்பர்.அந்த கவிதை அருமை.

 43. //திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.//

  குற்றாலத்தில் பிறந்து, பழனியில் வளர்ந்து, கோவையில் பெருக்கெடுத்துவிட்டது.

  என்னது ?
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  குசும்பு !
  :)))))))

 44. //திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.//குற்றாலத்தில் பிறந்து, பழனியில் வளர்ந்து, கோவையில் பெருக்கெடுத்துவிட்டது.என்னது ?……………..குசும்பு !:)))))))

 45. //\\ திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.

  \\

  :-)))))

 46. //kanchana Radhakrishnan said…

  எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும்போது ஏமாற்றம் தான் ஏற்படும்..என்பதற்கு மற்றுமொரு உதாரணம்..தாம் தூம் //

  அதுதாங்க கருத்தே.

 47. //kanchana Radhakrishnan said… எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும்போது ஏமாற்றம் தான் ஏற்படும்..என்பதற்கு மற்றுமொரு உதாரணம்..தாம் தூம் //அதுதாங்க கருத்தே.

 48. //வெண்பூ said…

  அந்த கவிதை அருமை.//

  நன்றி வெண்பூ.

  பாராட்டு நா முத்துக்குமாருக்குப் பார்சேல்.

 49. //கோவி.கண்ணன் said…

  குற்றாலத்தில் பிறந்து, பழனியில் வளர்ந்து, கோவையில் பெருக்கெடுத்துவிட்டது.

  என்னது ?
  .
  குசும்பு !
  :))))))) //

  அவ்வ்வ்வ்வ், கோவி நீங்களுமா?

 50. //கோவி.கண்ணன் said… குற்றாலத்தில் பிறந்து, பழனியில் வளர்ந்து, கோவையில் பெருக்கெடுத்துவிட்டது. என்னது ? . குசும்பு ! :))))))) // அவ்வ்வ்வ்வ், கோவி நீங்களுமா?

 51. // ச்சின்னப் பையன் said…

  திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.

  :-))))) //

  வாங்க ச்சின்னப் பையன். முன்னெல்லாம் நீங்க ரெம்ப ஷார்ப்புன்னு கேள்விப்பட்டேன்.

 52. // ச்சின்னப் பையன் said…திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.:-))))) //வாங்க ச்சின்னப் பையன். முன்னெல்லாம் நீங்க ரெம்ப ஷார்ப்புன்னு கேள்விப்பட்டேன்.

 53. ஊர்ல சேவுக்கடையில கதம்ப பூந்தினு ஒண்ணு விப்பாங்க. ஒண்ணு மஞ்ச,பச்சை, சிகப்புனு இருக்கும். இனிப்பும் இருக்கு. காரமும் இருக்கு. அதும்மாதிரி இருக்கு கதம்பம்.

  நீங்க கருவாட்டு கொழம்பு, முந்திரிப்பருப்பெல்லாம் சொல்லும் போது நாங்களும் சொல்லணும்ல!!

 54. ஊர்ல சேவுக்கடையில கதம்ப பூந்தினு ஒண்ணு விப்பாங்க. ஒண்ணு மஞ்ச,பச்சை, சிகப்புனு இருக்கும். இனிப்பும் இருக்கு. காரமும் இருக்கு. அதும்மாதிரி இருக்கு கதம்பம்.நீங்க கருவாட்டு கொழம்பு, முந்திரிப்பருப்பெல்லாம் சொல்லும் போது நாங்களும் சொல்லணும்ல!!

 55. //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ//

  என்னங்க! வேலன் இப்படி அநியாயத்துக்கு ஓட்டிட்டீங்க பாவம்

  //இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்//

  ஹி ஹி ஹி அதெல்லாம் கண்டுக்கப்படாது

 56. //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ//என்னங்க! வேலன் இப்படி அநியாயத்துக்கு ஓட்டிட்டீங்க பாவம் //இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்//ஹி ஹி ஹி அதெல்லாம் கண்டுக்கப்படாது

 57. கதம்பம் கலக்கல்…

  //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ.//

  அசத்திட்டீங்க.. :)))

  //மேலும், ஒரு மெகா சீரியலுக்கான கதை எப்படி கிடைக்கிறது என்பது புலனாகியது.//

  ரொம்ப நேரம் தேடுனாங்களோ 🙂

 58. கதம்பம் கலக்கல்…//இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ.//அசத்திட்டீங்க.. :)))//மேலும், ஒரு மெகா சீரியலுக்கான கதை எப்படி கிடைக்கிறது என்பது புலனாகியது.//ரொம்ப நேரம் தேடுனாங்களோ 🙂

 59. //வெயிலான் said…

  ஊர்ல சேவுக்கடையில கதம்ப பூந்தினு ஒண்ணு விப்பாங்க. ஒண்ணு மஞ்ச,பச்சை, சிகப்புனு இருக்கும். இனிப்பும் இருக்கு. காரமும் இருக்கு. அதும்மாதிரி இருக்கு கதம்பம்.//

  எனக்கு ரெம்பபிடிக்கும். அதே போல் சாத்தூர் காரச்செவுக்கு ஈடு இஅணை இல்லை.

 60. //வெயிலான் said… ஊர்ல சேவுக்கடையில கதம்ப பூந்தினு ஒண்ணு விப்பாங்க. ஒண்ணு மஞ்ச,பச்சை, சிகப்புனு இருக்கும். இனிப்பும் இருக்கு. காரமும் இருக்கு. அதும்மாதிரி இருக்கு கதம்பம்.//எனக்கு ரெம்பபிடிக்கும். அதே போல் சாத்தூர் காரச்செவுக்கு ஈடு இஅணை இல்லை.

 61. //கிரி said…

  //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ//

  என்னங்க! வேலன் இப்படி அநியாயத்துக்கு ஓட்டிட்டீங்க பாவம் //

  நான் எங்க ஓட்டுறேன். அவரத்தான் பாவம் படம் பூராவும் ஓடவிட்டுட்டங்க. ஒரு வேளை குடுத்த காசுக்கு வேல வாங்கனும்னு நினைச்சாங்களோ என்னவோ?

  //இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்//

  ஹி ஹி ஹி அதெல்லாம் கண்டுக்கப்படாது //

  அத விடக் கொடுமை, கம்பெனியில் இருந்து அது ட்வின் பேக்காத்தான் பேக் பண்ணி வருது. நம்மாளுகதான் அதத் தனித்தனியா விக்குறாங்க.

 62. //கிரி said… //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ// என்னங்க! வேலன் இப்படி அநியாயத்துக்கு ஓட்டிட்டீங்க பாவம் //நான் எங்க ஓட்டுறேன். அவரத்தான் பாவம் படம் பூராவும் ஓடவிட்டுட்டங்க. ஒரு வேளை குடுத்த காசுக்கு வேல வாங்கனும்னு நினைச்சாங்களோ என்னவோ? //இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்// ஹி ஹி ஹி அதெல்லாம் கண்டுக்கப்படாது //அத விடக் கொடுமை, கம்பெனியில் இருந்து அது ட்வின் பேக்காத்தான் பேக் பண்ணி வருது. நம்மாளுகதான் அதத் தனித்தனியா விக்குறாங்க.

 63. //சென்ஷி said…

  கதம்பம் கலக்கல்…//

  நன்றி சென்ஷி.

  //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ.//

  அசத்திட்டீங்க.. :))) //

  நொந்துட்டங்க.

  //மேலும், ஒரு மெகா சீரியலுக்கான கதை எப்படி கிடைக்கிறது என்பது புலனாகியது.//

  ரொம்ப நேரம் தேடுனாங்களோ 🙂 //

  எல்லோர் குடும்பத்திலயும் நடப்பதுதான்.

 64. //சென்ஷி said… கதம்பம் கலக்கல்…//நன்றி சென்ஷி. //இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ.// அசத்திட்டீங்க.. :))) //நொந்துட்டங்க. //மேலும், ஒரு மெகா சீரியலுக்கான கதை எப்படி கிடைக்கிறது என்பது புலனாகியது.// ரொம்ப நேரம் தேடுனாங்களோ 🙂 //எல்லோர் குடும்பத்திலயும் நடப்பதுதான்.

 65. ஜெயம் ரவி எஸ்கேப்பாயுடு.
  உன்னை வெச்சு காமெடி,கீமெடி
  செய்றாங்க.

  //கதாநாயகன், பாவம் ஓடுகிறார், தாவுகிறார், அடுத்த கட்டிடத்திற்கு பறக்கிறார், தாவுகிறார், ஓடுகிறார். நடு நடுவே கொஞ்சம் காதல் மாதிரி ஏதோ முயற்சிக்கிறார்.//

  ஸபைடர்மேன் படம் போல் டிரை
  பன்னிருப்பாய்ஙகளோ?????????

 66. ஜெயம் ரவி எஸ்கேப்பாயுடு. உன்னை வெச்சு காமெடி,கீமெடி செய்றாங்க.//கதாநாயகன், பாவம் ஓடுகிறார், தாவுகிறார், அடுத்த கட்டிடத்திற்கு பறக்கிறார், தாவுகிறார், ஓடுகிறார். நடு நடுவே கொஞ்சம் காதல் மாதிரி ஏதோ முயற்சிக்கிறார்.//ஸபைடர்மேன் படம் போல் டிரைபன்னிருப்பாய்ஙகளோ?????????

 67. கதம்பம் கலக்க ஆரம்பித்துவிட்டது. ‘கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த மு.பருப்பு, டாய்லெட் முன்/பின்’ என்று தேர்ந்த விமர்சகராகி விட்டீர்கள்.

  அப்துல்லா சொல்லியிருந்தார் ‘தூர்’ பிடித்த கவிதை என்று. உண்மையிலேயே ஆழமான கவிதை.

  சேவிங் கிரீம் – இரண்டுக்குப் பிறகு ‘வேண்டவே வேண்டாம்’ என்று விட வேண்டியதுதான்.

  ஷார்ப்பா இருக்கும் நாம செய்யும் முதல் தவறுக்கே இவ்வளவு பெரிய தண்டனையா என்று எண்ணுகையில்… ‘என்னங்க, காபி போட ஏன் இவ்வளவு நேரமாகுது’ என்ற குரல். அப்புறம் வர்றேன்.

  அனுஜன்யா

 68. கதம்பம் கலக்க ஆரம்பித்துவிட்டது. ‘கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த மு.பருப்பு, டாய்லெட் முன்/பின்’ என்று தேர்ந்த விமர்சகராகி விட்டீர்கள். அப்துல்லா சொல்லியிருந்தார் ‘தூர்’ பிடித்த கவிதை என்று. உண்மையிலேயே ஆழமான கவிதை. சேவிங் கிரீம் – இரண்டுக்குப் பிறகு ‘வேண்டவே வேண்டாம்’ என்று விட வேண்டியதுதான். ஷார்ப்பா இருக்கும் நாம செய்யும் முதல் தவறுக்கே இவ்வளவு பெரிய தண்டனையா என்று எண்ணுகையில்… ‘என்னங்க, காபி போட ஏன் இவ்வளவு நேரமாகுது’ என்ற குரல். அப்புறம் வர்றேன். அனுஜன்யா

 69. //அனுஜன்யா said…

  கதம்பம் கலக்க ஆரம்பித்துவிட்டது. ‘கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த மு.பருப்பு, டாய்லெட் முன்/பின்’ என்று தேர்ந்த விமர்சகராகி விட்டீர்கள். //

  நன்றி அனுஜன்யா. இந்த மாதிரி வாழ்வனுபவ உதாரனம் தருவதில் எஸ் ராமகிருஷ்ணந்தான் நம்ம குரு.

  // அப்துல்லா சொல்லியிருந்தார் ‘தூர்’ பிடித்த கவிதை என்று. உண்மையிலேயே ஆழமான கவிதை.//

  ஆனாலும் எனக்கு அந்த்த் தொகுதியில் பிடித்த கவிதை தையல் எந்திரம்தான்.

  காதலைத்தாண்டி ஜடப் பொருட்கள்மீது அவர் பாடிய கவிதைகள் என்னக் கவர்ந்தவை.

  நாள் தோறும்
  இரண்டு முறை
  சரியான நேரம் காட்டும்
  ஓடாத கடிகாரம்.

  // சேவிங் கிரீம் – இரண்டுக்குப் பிறகு ‘வேண்டவே வேண்டாம்’ என்று விட வேண்டியதுதான்.//

  என் முகத்துக்குத் தாடி ரெம்ப அசிங்கமா இருக்குமே.

  // ஷார்ப்பா இருக்கும் நாம செய்யும் முதல் தவறுக்கே இவ்வளவு பெரிய தண்டனையா என்று எண்ணுகையில்… ‘என்னங்க, காபி போட ஏன் இவ்வளவு நேரமாகுது’ என்ற குரல். அப்புறம் வர்றேன்.//

  பரபோலிக் கர்வ்ல அதுதான் உச்சி.

 70. //அனுஜன்யா said… கதம்பம் கலக்க ஆரம்பித்துவிட்டது. ‘கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த மு.பருப்பு, டாய்லெட் முன்/பின்’ என்று தேர்ந்த விமர்சகராகி விட்டீர்கள். //நன்றி அனுஜன்யா. இந்த மாதிரி வாழ்வனுபவ உதாரனம் தருவதில் எஸ் ராமகிருஷ்ணந்தான் நம்ம குரு.// அப்துல்லா சொல்லியிருந்தார் ‘தூர்’ பிடித்த கவிதை என்று. உண்மையிலேயே ஆழமான கவிதை.//ஆனாலும் எனக்கு அந்த்த் தொகுதியில் பிடித்த கவிதை தையல் எந்திரம்தான்.காதலைத்தாண்டி ஜடப் பொருட்கள்மீது அவர் பாடிய கவிதைகள் என்னக் கவர்ந்தவை.நாள் தோறும்இரண்டு முறைசரியான நேரம் காட்டும்ஓடாத கடிகாரம்.// சேவிங் கிரீம் – இரண்டுக்குப் பிறகு ‘வேண்டவே வேண்டாம்’ என்று விட வேண்டியதுதான்.//என் முகத்துக்குத் தாடி ரெம்ப அசிங்கமா இருக்குமே.// ஷார்ப்பா இருக்கும் நாம செய்யும் முதல் தவறுக்கே இவ்வளவு பெரிய தண்டனையா என்று எண்ணுகையில்… ‘என்னங்க, காபி போட ஏன் இவ்வளவு நேரமாகுது’ என்ற குரல். அப்புறம் வர்றேன்.//பரபோலிக் கர்வ்ல அதுதான் உச்சி.

 71. எனக்குப் பிடித்த முத்துக்குமாரின் தூர் கவிதையை வெளியிட்ட அண்ணனுக்கு நன்றி. தையல் எந்திரமும் எனக்குப் பிடித்த ஓன்றுதான். இதே போல மூத்திரச் சந்து என்று ஓரு கவிதை அந்தத் தொகுப்பில் இருக்கும் :))

 72. எனக்குப் பிடித்த முத்துக்குமாரின் தூர் கவிதையை வெளியிட்ட அண்ணனுக்கு நன்றி. தையல் எந்திரமும் எனக்குப் பிடித்த ஓன்றுதான். இதே போல மூத்திரச் சந்து என்று ஓரு கவிதை அந்தத் தொகுப்பில் இருக்கும் :))

 73. //புதுகை.அப்துல்லா said…

  எனக்குப் பிடித்த முத்துக்குமாரின் தூர் கவிதையை வெளியிட்ட அண்ணனுக்கு நன்றி. தையல் எந்திரமும் எனக்குப் பிடித்த ஓன்றுதான். இதே போல மூத்திரச் சந்து என்று ஓரு கவிதை அந்தத் தொகுப்பில் இருக்கும் :)) //

  அப்துல்லா, நா மு வின் இந்த்க் கவிதையை அனுஜன்யாவுக்கு அனுப்பினேன் ரசித்தார். உங்களுக்காக் இங்கே

  அன்பின் அனு,

  நா முத்துக் குமாரின் பிடித்த கவிதைகளுள் மற்றொன்று.

  மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்(ஒரிஜினல்)
  எட்டாம் வகுப்பில்
  அறிவியல் எடுத்த
  கே.எஸ்.கே வாத்தியார்
  எங்களை முன்வைத்து
  தமிழ்ப் பேரகராதிக்கு
  இரண்டு பெயர்ச் சொற்களை
  தானமாக கொடுத்திருந்தார்.

  சாதுவான பையன்களென்றால்
  ‘ஆரிய பவன்.’
  சட்டாம்பிள்ளைகளுக்கு
  ‘முனியான்டி விலாஸ்.’

  காலத்தின் சதுரங்க பலகையில்
  முனியான்டி விலாஸும் நானும்
  ஆடும் ஆட்டத்தில்
  இரண்டே இரண்டு
  நேர் எதிர்ப் புள்ளிகளில்
  எப்போதும்
  சந்தித்துக் கொள்வோம்.

  திசையைத் தொலைத்த
  திசையிலிருந்து
  சதுரமான தட்டுடன்
  எதிர்ப்படும் சர்வர்கள்.
  அந்தப் பெருந்தட்டில்
  வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்
  என் இருப்புக்குச் சவால் விடும்.
  நண்டு, காடை, கோழி, ஆடு,
  மீன், எறா, சுறா,
  மூளை, குடல், ஈரல்
  எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு
  தட்டுக்கு தகுதியற்ற
  ‘சிங்கிள் ஆம்லெட்’ என்பேன்.
  புறக்கணிப்பின் பெரும் வலியை
  எனக்களித்து
  உள்ளே செல்வார்கள்.

  இரண்டு:
  கைநிறைய காசுடன்
  வேண்டியதை வரவழைத்து
  சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
  என் எதிரில் யாரோ ஒருத்தர்
  கசங்கிய சட்டையுடன்
  ‘மீன் குழம்பாவது கிடைக்குமா?’
  எனக் கேட்டு
  நிறம் மங்கிய
  பீட்ரூட் பொறியலையும்,
  நீர்த்துப் போன கீரையையும்,
  என் குற்றவுணர்ச்சியையும்
  கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.

  பெருந்தட்டுக்கள் மறைந்து
  விலைப்பட்டியல் அட்டையை
  நீட்டும்துரித உணவகங்கள்
  பெருகிவிட்ட இன்றும்
  முனியான்டி விலாஸ்களுக்கே
  மனம் விரும்பிச் செல்கிறது.
  உணவின் ருசி
  உணவில் இருப்பதில்லை.
  புறக்கணிப்பின் கசப்பிலும்
  குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
  அது ஒளிந்திருக்கிறது.

  கடைசி 5 வரிகள் முத்தாய்ப்பு.

 74. //புதுகை.அப்துல்லா said… எனக்குப் பிடித்த முத்துக்குமாரின் தூர் கவிதையை வெளியிட்ட அண்ணனுக்கு நன்றி. தையல் எந்திரமும் எனக்குப் பிடித்த ஓன்றுதான். இதே போல மூத்திரச் சந்து என்று ஓரு கவிதை அந்தத் தொகுப்பில் இருக்கும் :)) //அப்துல்லா, நா மு வின் இந்த்க் கவிதையை அனுஜன்யாவுக்கு அனுப்பினேன் ரசித்தார். உங்களுக்காக் இங்கேஅன்பின் அனு,நா முத்துக் குமாரின் பிடித்த கவிதைகளுள் மற்றொன்று.மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்(ஒரிஜினல்)எட்டாம் வகுப்பில்அறிவியல் எடுத்தகே.எஸ்.கே வாத்தியார்எங்களை முன்வைத்துதமிழ்ப் பேரகராதிக்குஇரண்டு பெயர்ச் சொற்களைதானமாக கொடுத்திருந்தார்.சாதுவான பையன்களென்றால்’ஆரிய பவன்.’சட்டாம்பிள்ளைகளுக்கு’முனியான்டி விலாஸ்.’காலத்தின் சதுரங்க பலகையில்முனியான்டி விலாஸும் நானும்ஆடும் ஆட்டத்தில்இரண்டே இரண்டுநேர் எதிர்ப் புள்ளிகளில்எப்போதும்சந்தித்துக் கொள்வோம்.திசையைத் தொலைத்ததிசையிலிருந்துசதுரமான தட்டுடன்எதிர்ப்படும் சர்வர்கள்.அந்தப் பெருந்தட்டில்வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்என் இருப்புக்குச் சவால் விடும்.நண்டு, காடை, கோழி, ஆடு,மீன், எறா, சுறா,மூளை, குடல், ஈரல்எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டுதட்டுக்கு தகுதியற்ற’சிங்கிள் ஆம்லெட்’ என்பேன்.புறக்கணிப்பின் பெரும் வலியைஎனக்களித்துஉள்ளே செல்வார்கள்.இரண்டு:கைநிறைய காசுடன்வேண்டியதை வரவழைத்துசாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.என் எதிரில் யாரோ ஒருத்தர்கசங்கிய சட்டையுடன்’மீன் குழம்பாவது கிடைக்குமா?’எனக் கேட்டுநிறம் மங்கியபீட்ரூட் பொறியலையும்,நீர்த்துப் போன கீரையையும்,என் குற்றவுணர்ச்சியையும்கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.பெருந்தட்டுக்கள் மறைந்துவிலைப்பட்டியல் அட்டையைநீட்டும்துரித உணவகங்கள்பெருகிவிட்ட இன்றும்முனியான்டி விலாஸ்களுக்கேமனம் விரும்பிச் செல்கிறது.உணவின் ருசிஉணவில் இருப்பதில்லை.புறக்கணிப்பின் கசப்பிலும்குற்றவுணர்ச்சியின் காரத்திலும்அது ஒளிந்திருக்கிறது.கடைசி 5 வரிகள் முத்தாய்ப்பு.

 75. சினிமா நிறைய இடத்தை ஆக்கிரமித்து விட்டது!
  இருந்தாலும் பரவாயில்லை, மற்ற செய்திகள் அதை மறைத்து விட்டது.

 76. சினிமா நிறைய இடத்தை ஆக்கிரமித்து விட்டது!இருந்தாலும் பரவாயில்லை, மற்ற செய்திகள் அதை மறைத்து விட்டது.

 77. //வால்பையன் said…

  சினிமா நிறைய இடத்தை ஆக்கிரமித்து விட்டது!
  இருந்தாலும் பரவாயில்லை, மற்ற செய்திகள் அதை மறைத்து விட்டது.//

  நன்றி வால்.

  எங்க ரெம்ப நாளா ஆளைக்காணோம்?

 78. //வால்பையன் said… சினிமா நிறைய இடத்தை ஆக்கிரமித்து விட்டது! இருந்தாலும் பரவாயில்லை, மற்ற செய்திகள் அதை மறைத்து விட்டது.//நன்றி வால்.எங்க ரெம்ப நாளா ஆளைக்காணோம்?

 79. //கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.//

  🙂

 80. //கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.//:)

 81. தூயா,

  இதுதான் முதல் வருகை அல்லவா.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s