அம்மாவுக்கும் அக்காவுக்கும் சண்டை

வீட்டினுள் நுழையும் போதே சின்னவள் ஜாடை காட்டினாள். கை கால் கழுவிவிட்டு டிரஸ் மாத்தும் போது சின்னவள் வந்து சொன்னாள், “ அக்காவுக்கும் அம்மாவுக்கும் சண்டை”

“எதுக்கு?”

“வழக்கம் போலத்தான், நோ சால்ட்” – உப்பில்லாத விஷயம்னு அர்த்தம்.

மெதுவாகச் சமையலறையில் நுழைந்தேன். பெரியவள் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நானும் டைனிங் டேபிளில் அமர்ந்தேன். எனக்கும் வந்து விழுந்த தோசையில், கோபத்தின் அளவு தெரிந்தது. இப்ப ஏதும் பேசக்கூடாது என முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் சென்றிருக்கும். சமையல் மேடையை ஒழித்துவிட்டு வந்தாள் சங்கரி.

“என்னப்பா பிரச்சினை?”

”பின்ன என்னங்க நானும் நாள் தவறாமச் சொல்லுதேன், ஷூவ ரேக்குல வை, டிபன் பாக்ஸ சிங்க்ல போடு, ஷாக்ஸத் தொவைக்கப் போடுன்னு. ஒன்னுகூடச் செய்ய மாட்டேங்கா. ஒரு உதவியும் செய்தது இல்ல.”

”ஆமா நான் வந்ததும் கை கால் கழுவிப் பாலக் குடிச்சிட்டு டியூசன் போகத்தான் நேரமிருக்கு என்னைய என்ன செய்யச் சொல்லுதீங்க?” பெரியவள்.

ரெண்டுபேரு சொல்றதும் சரியாத்தான் இருக்கு.

“இல்லீங்க வயசு 17 ஆவுது. இன்னும் பொறுப்பு வர மாட்டெங்குதுன்னுதான் கவலையா இருக்கு”

“செரி செரி விடு அந்தானிக்கு. எல்லாம் வேண்டிய சமயத்துல வரும்.”

“ஆமா இப்படிச் செல்லம் குடுத்து குடுத்துக் கெடுத்து வச்சிருக்கிய. வேறென்ன நாஞ்சொல்ல. நீங்களாச்சு உங்க புள்ளயாச்சு. அன்னிக்கு அப்படித்தான் எங்க அம்மா வந்திருக்காங்க இவ பாட்டுக்கு கால் மேல கால் போட்டுட்டு கத புஸ்தவம் படிக்கா. எங்க அம்மாதான் காய்கறி நறுக்கிக் கொடுத்தாங்க. என்னத்தானே நல்லா வஞ்சாங்க, உங்களையா?”

கோபத்தின் ரூட் காஸ் தெரிந்தது. ”அந்தக் காலத்துல நாங்க எவ்வளவு வேல செஞ்சோம். எனக்குப் பதினேழு வயசுல உனக்கு அடுத்தவ பொறந்துட்டா” வகை, தலை முறை தாண்டிய, பொருந்தாப் பேச்சு.

தூக்கம் கண்ணைச் சுழட்டியது.

ரு வாரம் கழித்து ஒரு நாள், அதிகாலை 4 மணி இருக்கும், சங்கரி எழுப்பினாள்.

“என்னங்க ஏதும் பெயின் கில்லர் இருக்கா”

“ஏங் கேக்க?”

”வயித்து வலிங்க”

”இன்னும் நாள் இருக்கில்ல”

“அது இல்லீங்க வயிறு குத்திக் குத்தி வலிக்கி”

“கண்ட மாத்திரயப் போட வேண்டாம். சரியாச் சொல்லு எங்கன வலிக்கி?”

மெதுவாகச் சேலையைத் தழையச் செய்து அடி வயிற்றில் தொட்டுக் காட்டினேன்.

“அங்கனதாம், அய்யோ”

“இது செரிப்படாது, ஏதும் கேஸ் ட்ரபுளா இருக்குமா?”

“அது மாதிரி இல்ல. குத்திக் குத்தி வலிக்கி”

“இரு வாரேன்” னு சொல்லி பெரியவள எழுப்பினேன்.

“தங்கம், அம்மாவுக்கு வயித்துவலி, ஹாஸ்பிடல் போகனும். பெரிய கேட்டத் திற. கார்ல போய்ட்டு வாரோம்.”

“சுடு தண்ணி ஏதாவது வச்சுத்தரட்டுமாப்பா?”

“வேணாம்”

ஸ்ரீராம் ஹாஸ்பிட்டல், தூங்கி வழிந்து கொண்டிருந்தது. காரை நிறுத்தி ரிசப்ஷனுக்குப் போவதற்குள் மேலும் வலி அதிகமாகி விட்டது.

“டுட்டி டாக்டர் இருக்காராமா”

“இருக்கார், முதல்ல இந்த பெட்ல படுக்க வைங்க”

நர்ஸ் பல்ஸ் பார்ப்பதற்குள், டாக்டர் வந்துவிட்டார். என்னவென்று சொன்னதும், “நீங்க கொஞ்சம் வெளிய இருங்க”

10 நிமிடம் கழித்து வந்தார். “கல் இருக்கும்னு சந்தேகமா இருக்கு. எதுக்கும் பெரிய டாக்டர் வரட்டும் கேட்டுருவோம். ஒரு ஸ்கேன் எடுத்துக் கன்ஃபர்ம் பண்ணிக்கிடலாம். இப்பதைக்கு ஊசி போட்டிருக்கேன் வலி குறையும். ரூம்ல அட்மிட் பண்ணுங்க.”

கொஞ்ச நேரம் அனத்திக் கொண்டிருந்து விட்டுத் தூங்கிவிட்டாள். செல்லில் பெரியவளை அழைத்து தகவல் சொன்னேன்.

“செரிங்ப்பா, நீங்க அம்மாவப் பாத்துக்குங்க.”

மணி 4:30 சேரில் அமர்ந்தவாறே கட்டிலில் தலை வைத்து தூங்கிவிட்டேன். முழித்துப் பார்த்தால் மணி 7:00. குழந்தைகள் என்ன செய்தனரோ என்ற கவலையில், சங்கரியைப் பார்த்தேன். ஊசியின் தயவில் நல்ல உறக்கத்திலிருந்தவளை எழுப்ப வேண்டாம் என்று, நர்ஸை அழைத்தேன், “ வீடு வரைக்கும் போய் வருகிறேன், அதுக்குள்ள எந்திரிச்சா என் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க”

காலிங்க் பெல் அடித்ததும் பெரியவள்தான் வந்து திறந்தாள். “அம்மாவுக்கு இப்ப எப்படிப்பா இருக்கு?”

“தூங்கிட்டு இருக்கா. உங்களுக்கு டிபனுக்கு என்ன செய்யன்னுதான் வந்தேன்”

“ஒன்னும் பிரச்சினை இல்லப்பா. தோச மாவு எடுத்து வச்சிருக்கேன். சட்னி அரைச்சாச்சு. மதியத்துக்கு தக்காளி சாதம் செஞ்சுடுறேன். ரெண்டு குக்கர் வச்சிருக்காங்க எதுல எப்படின்னுதான் தெரியல. ”

“பெரிய குக்கர எடுத்து வை. இதுல ஒரு டம்ளர் அரிசி தலை தட்டிப் போடு, இந்த சொம்புல ஒரு சொம்பு தண்ணி வை செரியா இருக்கும் ”

“இந்தாங்க இதைக் குடிங்க. பிளாஸ்க்குல அம்மாவுக்குக் கலந்து வச்சிருக்கேன்”

அதற்குள் செல்லில் மிஸ்டுகால் வந்தது. “சரி தங்கம் நான் ஹாஸ்பிடல் போகிறேன். சின்னவள எப்படிக் கூட்டீட்டுப் போற?”

“அம்மா ஸ்கூட்டிய எடுத்துக்கிறன். ஒன்னும் பிரச்சினை இல்ல”

அன்றும் அதற்கடுத்த இரு தினங்களும், அவளேதான் சமையல் வீட்டுப் பராமரிப்பு எல்லாம். நடுவில் அப்பப்ப அம்மாவுக்குத் தேவையானதைக் கேட்டுச் செய்து கொடுத்தாள். இரு நாட்களும் தங்கைக்குத் தேவையானதையும் பார்த்துக் கொண்டாள்.

ஹாஸ்பிடலுக்குத் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சங்கரி , “எம் மகள் நலல பொறுப்பா இருக்குதால எனக்கு ஒரு கவலையும் இல்லை” என்று பெருமையாக சொன்னாள்.

ரு வாரம் போயிருக்கும்.

வீட்டினுள் நுழையும் போதே சின்னவள் ஜாடை காட்டினாள். சங்கரி கோபமா இருக்கான்னு அர்த்தம். கை கால் கழுவிவிட்டு டிரஸ் மாத்தும் போது சின்னவள் வந்து சொன்னாள், “ அக்காவுக்கும், அம்மாவுக்கும் சண்டை”

“எதுக்கு?” “வழக்கம் போலத்தான், நோ சால்ட்”

Advertisements

107 comments

 1. அண்ணாச்சி,

  சூப்பர் சுழல் சிறுகதை !

  சண்டையும் இருந்தால் தானே மகிழ்வை நுகர முடியும், நல்ல தீம் !

  கைவசம் நிறைய சரக்கு வச்சிருக்கிங்க போல !

 2. அண்ணாச்சி,சூப்பர் சுழல் சிறுகதை !சண்டையும் இருந்தால் தானே மகிழ்வை நுகர முடியும், நல்ல தீம் !கைவசம் நிறைய சரக்கு வச்சிருக்கிங்க போல !

 3. :-)))..

  சூப்பர்!!!!

  சண்டையும், சமாதானமும்…
  இன்பமும், துன்பமும்…
  கஷ்டமும், இஷ்டமும்.. மாறி மாறி வந்தாதான் வாழ்க்கை இன்ட்ரெஸ்டிங்கா போகும், இல்லன்னா போரடிச்சுடும்….

  கலக்கலா அனுபவத்தை வச்சு சொல்லியிருக்கீங்க!!!!

 4. :-)))..சூப்பர்!!!!சண்டையும், சமாதானமும்…இன்பமும், துன்பமும்…கஷ்டமும், இஷ்டமும்.. மாறி மாறி வந்தாதான் வாழ்க்கை இன்ட்ரெஸ்டிங்கா போகும், இல்லன்னா போரடிச்சுடும்….கலக்கலா அனுபவத்தை வச்சு சொல்லியிருக்கீங்க!!!!

 5. கதை ரொம்ப நல்லா இருக்குங்க.
  கரையிலயே நிக்கிற வரைக்கும் யாரும் நீச்சலப் பத்தி கவலைப்படுறதுல்ல. ஆனா தண்ணியில தூக்கி போட்டோம்னு வையுங்க, எல்லாம் கையக்கால ஆட்டி தானா நீச்ச அடிக்கும். அதான் இது.

 6. கதை ரொம்ப நல்லா இருக்குங்க. கரையிலயே நிக்கிற வரைக்கும் யாரும் நீச்சலப் பத்தி கவலைப்படுறதுல்ல. ஆனா தண்ணியில தூக்கி போட்டோம்னு வையுங்க, எல்லாம் கையக்கால ஆட்டி தானா நீச்ச அடிக்கும். அதான் இது.

 7. நல்லா வந்துருக்கு.

  வாழ்க்கை இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கு.

 8. ////“வழக்கம் போலத்தான், நோ சால்ட்” – உப்பில்லாத விஷயம்னு அர்த்தம்.////

  கதையில் வழக்கம் போல ஸ்வீட் (அதுவும் வட்டார ஸ்வீட்)

 9. ////“வழக்கம் போலத்தான், நோ சால்ட்” – உப்பில்லாத விஷயம்னு அர்த்தம்.////கதையில் வழக்கம் போல ஸ்வீட் (அதுவும் வட்டார ஸ்வீட்)

 10. வேலன்,

  கையைக் கொடுங்கள். போன கதம்பத்திலே சொல்ல நினைத்தேன். உங்கள் அனுபவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து நீங்கள் கதை எழுதத் துவங்கலாமென்று. நல்ல, இயல்பான நடை. ஆஹா, இன்னொரு சிறுகதை எழுத்தாளர் பதிவுலகிலிருந்து. வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 11. வேலன், கையைக் கொடுங்கள். போன கதம்பத்திலே சொல்ல நினைத்தேன். உங்கள் அனுபவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து நீங்கள் கதை எழுதத் துவங்கலாமென்று. நல்ல, இயல்பான நடை. ஆஹா, இன்னொரு சிறுகதை எழுத்தாளர் பதிவுலகிலிருந்து. வாழ்த்துக்கள். அனுஜன்யா

 12. சூப்பரான பதிவு வேலன் சார். நான் சொல்ல நினைச்சதை எல்லாம் மத்தவங்க பின்னூட்டத்தில சொல்லிட்டாங்க.. 🙂

 13. சூப்பரான பதிவு வேலன் சார். நான் சொல்ல நினைச்சதை எல்லாம் மத்தவங்க பின்னூட்டத்தில சொல்லிட்டாங்க.. 🙂

 14. vanakkam

  ungalukku enga tirunelveli pakkama?
  pechula antha jadai theriyuthu athan ketten!

  kathai arumai
  valkaiyin ovvoru vinadiyium rasikireergal polum!~

 15. வாவ்… சூப்பர இருக்கு… ம்ம் குடுப்பதில் அண்ணன் தங்கச்சி தம்பினு இருந்தா நல்லா தான் இருக்கும் இல்லையா.. ஹூம்ம்… எனக்குதான் அந்த குடுப்பினை இல்லை… இணையத்தில் நிறைய உறவுகள் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது… மேலும் இந்த மாதிரி எழுதி போடுங்க….

 16. வாவ்… சூப்பர இருக்கு… ம்ம் குடுப்பதில் அண்ணன் தங்கச்சி தம்பினு இருந்தா நல்லா தான் இருக்கும் இல்லையா.. ஹூம்ம்… எனக்குதான் அந்த குடுப்பினை இல்லை… இணையத்தில் நிறைய உறவுகள் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது… மேலும் இந்த மாதிரி எழுதி போடுங்க….

 17. அண்ணா..

  கைகுடுங்க.

  எழுத்து நடையும், எடுத்துக்கொண்ட கருவும் அருமை!

  இன்னும் இது போல நாலைந்து வலையில் எழுதிப் போடுங்கள்..

  அப்புறம்.. உங்களுக்கு நான் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுவேன்.

  அதுக்குப் பின்னால, நீங்க ப்ளாக்ல கதை எழுதாம வாரப்பத்திரிகைகளுக்கு அனுப்பணும். ஓக்கேவா??

  (இந்தக் கதையில சில மாற்றங்கள் செஞ்சா இது பரிசீலனையே பண்ணாம விகடன்ல வந்துடும்! சூப்பர்!)

 18. அண்ணா..கைகுடுங்க.எழுத்து நடையும், எடுத்துக்கொண்ட கருவும் அருமை!இன்னும் இது போல நாலைந்து வலையில் எழுதிப் போடுங்கள்..அப்புறம்.. உங்களுக்கு நான் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுவேன்.அதுக்குப் பின்னால, நீங்க ப்ளாக்ல கதை எழுதாம வாரப்பத்திரிகைகளுக்கு அனுப்பணும். ஓக்கேவா??(இந்தக் கதையில சில மாற்றங்கள் செஞ்சா இது பரிசீலனையே பண்ணாம விகடன்ல வந்துடும்! சூப்பர்!)

 19. //(இந்தக் கதையில சில மாற்றங்கள் செஞ்சா இது பரிசீலனையே பண்ணாம விகடன்ல வந்துடும்! சூப்பர்!)//

  இதுக்கு நான் ரிப்பீட்டு போட்டுகிறேன்

 20. //(இந்தக் கதையில சில மாற்றங்கள் செஞ்சா இது பரிசீலனையே பண்ணாம விகடன்ல வந்துடும்! சூப்பர்!)//இதுக்கு நான் ரிப்பீட்டு போட்டுகிறேன்

 21. //கோவி.கண்ணன் said…

  அண்ணாச்சி,

  சூப்பர் சுழல் சிறுகதை !

  சண்டையும் இருந்தால் தானே மகிழ்வை நுகர முடியும், நல்ல தீம் !

  கைவசம் நிறைய சரக்கு வச்சிருக்கிங்க போல !//

  நன்றி கோவி.

  //சண்டையும் இருந்தால் தானே மகிழ்வை நுகர முடியும், நல்ல தீம் !//

  அடுதூர்வது அஃதொப்பதில்.

  இதுதானே வாழ்க்கை.

 22. //கோவி.கண்ணன் said… அண்ணாச்சி, சூப்பர் சுழல் சிறுகதை ! சண்டையும் இருந்தால் தானே மகிழ்வை நுகர முடியும், நல்ல தீம் ! கைவசம் நிறைய சரக்கு வச்சிருக்கிங்க போல !//நன்றி கோவி.//சண்டையும் இருந்தால் தானே மகிழ்வை நுகர முடியும், நல்ல தீம் !//அடுதூர்வது அஃதொப்பதில்.இதுதானே வாழ்க்கை.

 23. //விஜய் ஆனந்த் said…

  சண்டையும், சமாதானமும்…
  இன்பமும், துன்பமும்…
  கஷ்டமும், இஷ்டமும்.. மாறி மாறி வந்தாதான் வாழ்க்கை இன்ட்ரெஸ்டிங்கா போகும், இல்லன்னா போரடிச்சுடும்….//

  மிக்கச் சரி.

 24. //விஜய் ஆனந்த் said… சண்டையும், சமாதானமும்… இன்பமும், துன்பமும்… கஷ்டமும், இஷ்டமும்.. மாறி மாறி வந்தாதான் வாழ்க்கை இன்ட்ரெஸ்டிங்கா போகும், இல்லன்னா போரடிச்சுடும்….//மிக்கச் சரி.

 25. //ஜோசப் பால்ராஜ் said…
  கதை ரொம்ப நல்லா இருக்குங்க.
  கரையிலயே நிக்கிற வரைக்கும் யாரும் நீச்சலப் பத்தி கவலைப்படுறதுல்ல. ஆனா தண்ணியில தூக்கி போட்டோம்னு வையுங்க, எல்லாம் கையக்கால ஆட்டி தானா நீச்சல் அடிக்கும். அதான் இது.//

  சரியாப் புடிச்சீங்க ஜோ.

 26. //ஜோசப் பால்ராஜ் said… கதை ரொம்ப நல்லா இருக்குங்க. கரையிலயே நிக்கிற வரைக்கும் யாரும் நீச்சலப் பத்தி கவலைப்படுறதுல்ல. ஆனா தண்ணியில தூக்கி போட்டோம்னு வையுங்க, எல்லாம் கையக்கால ஆட்டி தானா நீச்சல் அடிக்கும். அதான் இது.//சரியாப் புடிச்சீங்க ஜோ.

 27. //துளசி கோபால் said…

  நல்லா வந்துருக்கு.

  வாழ்க்கை இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கு.//

  ஆமா மேடம். வாழ்க்கையோட சுவராஸ்யமே இதுதானே.

 28. //துளசி கோபால் said… நல்லா வந்துருக்கு. வாழ்க்கை இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கு.//ஆமா மேடம். வாழ்க்கையோட சுவராஸ்யமே இதுதானே.

 29. //SP.VR. SUBBIAH said…

  கதையில் வழக்கம் போல ஸ்வீட் (அதுவும் வட்டார ஸ்வீட்) //

  பாராட்டுக்கு நன்றி சார்.

 30. //அனுஜன்யா said…
  கையைக் கொடுங்கள். போன கதம்பத்திலே சொல்ல நினைத்தேன். உங்கள் அனுபவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து நீங்கள் கதை எழுதத் துவங்கலாமென்று. நல்ல, இயல்பான நடை. ஆஹா, இன்னொரு சிறுகதை எழுத்தாளர் பதிவுலகிலிருந்து. வாழ்த்துக்கள்.//

  உங்களுடைய ஊக்கமளிப்பும் உற்சாகப் படுத்துதலுமே என்னை எழுதத்தூண்டியது.

  நன்றி அனுஜன்யா.

 31. //அனுஜன்யா said… கையைக் கொடுங்கள். போன கதம்பத்திலே சொல்ல நினைத்தேன். உங்கள் அனுபவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து நீங்கள் கதை எழுதத் துவங்கலாமென்று. நல்ல, இயல்பான நடை. ஆஹா, இன்னொரு சிறுகதை எழுத்தாளர் பதிவுலகிலிருந்து. வாழ்த்துக்கள்.//உங்களுடைய ஊக்கமளிப்பும் உற்சாகப் படுத்துதலுமே என்னை எழுதத்தூண்டியது.நன்றி அனுஜன்யா.

 32. //வெண்பூ said…

  சூப்பரான பதிவு வேலன் சார். நான் சொல்ல நினைச்சதை எல்லாம் மத்தவங்க பின்னூட்டத்தில சொல்லிட்டாங்க.. :)//

  வீட்ல சும்மாதான குந்திகினுகீறீங்க. எதுனா சொல்லுங்க எங்கைல.

 33. //வெண்பூ said… சூப்பரான பதிவு வேலன் சார். நான் சொல்ல நினைச்சதை எல்லாம் மத்தவங்க பின்னூட்டத்தில சொல்லிட்டாங்க.. :)//வீட்ல சும்மாதான குந்திகினுகீறீங்க. எதுனா சொல்லுங்க எங்கைல.

 34. //விகடகவி said…

  vanakkam

  ungalukku enga tirunelveli pakkama?
  pechula antha jadai theriyuthu athan ketten!

  kathai arumai
  valkaiyin ovvoru vinadiyium rasikireergal polum!~//

  நான் நெல்லைக் காரந்தாங்க. இப்ப இருக்கது கோவை.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 35. //விகடகவி said… vanakkam ungalukku enga tirunelveli pakkama? pechula antha jadai theriyuthu athan ketten! kathai arumai valkaiyin ovvoru vinadiyium rasikireergal polum!~//நான் நெல்லைக் காரந்தாங்க. இப்ப இருக்கது கோவை.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 36. //VIKNESHWARAN said…

  வாவ்… சூப்பர இருக்கு//

  நன்றி விக்கி

 37. பரிசல்காரன் said…

  // எழுத்து நடையும், எடுத்துக்கொண்ட கருவும் அருமை!//

  இது பாராட்டு

  // இன்னும் இது போல நாலைந்து வலையில் எழுதிப் போடுங்கள்..

  அப்புறம்.. உங்களுக்கு நான் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுவேன்.

  அதுக்குப் பின்னால, நீங்க ப்ளாக்ல கதை எழுதாம வாரப்பத்திரிகைகளுக்கு அனுப்பணும். ஓக்கேவா?? //

  இது என்ன மிரட்டலா?

  // (இந்தக் கதையில சில மாற்றங்கள் செஞ்சா இது பரிசீலனையே பண்ணாம விகடன்ல வந்துடும்! சூப்பர்!)//

  என்னன்னு மெயில் அனுப்புங்க.

  நன்றி பரிசல்

  வ வா பி ரி?

 38. பரிசல்காரன் said…// எழுத்து நடையும், எடுத்துக்கொண்ட கருவும் அருமை!//இது பாராட்டு// இன்னும் இது போல நாலைந்து வலையில் எழுதிப் போடுங்கள்.. அப்புறம்.. உங்களுக்கு நான் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுவேன். அதுக்குப் பின்னால, நீங்க ப்ளாக்ல கதை எழுதாம வாரப்பத்திரிகைகளுக்கு அனுப்பணும். ஓக்கேவா?? //இது என்ன மிரட்டலா?// (இந்தக் கதையில சில மாற்றங்கள் செஞ்சா இது பரிசீலனையே பண்ணாம விகடன்ல வந்துடும்! சூப்பர்!)//என்னன்னு மெயில் அனுப்புங்க.நன்றி பரிசல்வ வா பி ரி?

 39. //வால்பையன் said…

  இதுக்கு நான் ரிப்பீட்டு போட்டுகிறேன்//

  நன்றி வால் பையன்

 40. இது போன்ற அன்பான ஊடல்களில் தான் அன்பும் அதிகமாகின்றது… நல்லா இருக்கு… 🙂
  நெல்லை தமிழில் முயற்சி செய்துள்ளீர்கள் போல் உள்ளது.. 🙂

 41. இது போன்ற அன்பான ஊடல்களில் தான் அன்பும் அதிகமாகின்றது… நல்லா இருக்கு… :)நெல்லை தமிழில் முயற்சி செய்துள்ளீர்கள் போல் உள்ளது.. 🙂

 42. //தமிழ் பிரியன் said…

  இது போன்ற அன்பான ஊடல்களில் தான் அன்பும் அதிகமாகின்றது… நல்லா இருக்கு… :)//

  ஆமா தமிழ்.

  //நெல்லை தமிழில் முயற்சி செய்துள்ளீர்கள் போல் உள்ளது.. :)//

  முழுவதும் நெல்லைத் தமிழில் ஒரு கதை எழுத ஆசை. பார்ப்போம்.

 43. //தமிழ் பிரியன் said… இது போன்ற அன்பான ஊடல்களில் தான் அன்பும் அதிகமாகின்றது… நல்லா இருக்கு… :)// ஆமா தமிழ். //நெல்லை தமிழில் முயற்சி செய்துள்ளீர்கள் போல் உள்ளது.. :)//முழுவதும் நெல்லைத் தமிழில் ஒரு கதை எழுத ஆசை. பார்ப்போம்.

 44. பிரமாதம்ங்க.. நம்ப ‘சொல்வழக்கை’ நல்லாவே கொண்டு வந்திருக்கீங்க.. நிறைய வசனங்கள் வரும்படி எனக்கும் அப்படி ஒன்று எழுதனும்னு ஆசைங்க.. பார்க்கலாம்.

 45. பிரமாதம்ங்க.. நம்ப ‘சொல்வழக்கை’ நல்லாவே கொண்டு வந்திருக்கீங்க.. நிறைய வசனங்கள் வரும்படி எனக்கும் அப்படி ஒன்று எழுதனும்னு ஆசைங்க.. பார்க்கலாம்.

 46. பரிசல் ஏதும் மெயில் அனுப்பிச்சாக்கா எனக்கும் பார்வேர்ட் பண்ண‌வும். ஹி ஹி.. யாரிடமும் சொல்லவேண்டாம்.

 47. பரிசல் ஏதும் மெயில் அனுப்பிச்சாக்கா எனக்கும் பார்வேர்ட் பண்ண‌வும். ஹி ஹி.. யாரிடமும் சொல்லவேண்டாம்.

 48. //தாமிரா said…

  பிரமாதம்ங்க.. நம்ப ‘சொல்வழக்கை’ நல்லாவே கொண்டு வந்திருக்கீங்க..//

  பாராட்டுக்கு நன்றி தாமிரா.

  // நிறைய வசனங்கள் வரும்படி எனக்கும் அப்படி ஒன்று எழுதனும்னு ஆசைங்க.. பார்க்கலாம்.//

  நல்லா எழுதும்வே. என்ன தலையா போவுது, எழுத எழுத்தானே வரும்வே.

 49. //தாமிரா said… பிரமாதம்ங்க.. நம்ப ‘சொல்வழக்கை’ நல்லாவே கொண்டு வந்திருக்கீங்க..//பாராட்டுக்கு நன்றி தாமிரா.// நிறைய வசனங்கள் வரும்படி எனக்கும் அப்படி ஒன்று எழுதனும்னு ஆசைங்க.. பார்க்கலாம்.//நல்லா எழுதும்வே. என்ன தலையா போவுது, எழுத எழுத்தானே வரும்வே.

 50. //ச்சின்னப் பையன் said…

  :-)))..

  சூப்பர்!!!!//

  நன்றி சத்யா.

 51. அண்ணே அருமையான கதையும்,நடையும்ணே…

 52. // புதுகை.அப்துல்லா said…

  அண்ணே அருமையான கதையும்,நடையும்ணே..//

  டேங்க்ஸ்பா.

  செல்லு வச்சிகினு சூப்பரா போஸூ குடுத்துக்கின. ஷோக்கா கீற மாமே.

 53. // புதுகை.அப்துல்லா said… அண்ணே அருமையான கதையும்,நடையும்ணே..//டேங்க்ஸ்பா.செல்லு வச்சிகினு சூப்பரா போஸூ குடுத்துக்கின. ஷோக்கா கீற மாமே.

 54. அண்ணாச்சி!

  அருமையோ அருமை!

  இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்!

 55. //இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்!//

  வெயிலான் ஊக்கப்படுத்தியதிற்கு நன்றி

 56. // rapp said…
  கலக்கலான கதை. ரொம்ப ரொம்ப நல்லாருக்கு:):):) //

  நன்றி ராப்.

  எங்க திடீர் திடீர்னு காணாமப் போறீங்க?

 57. நல்ல நடை; கதையமைப்பு முறை நன்றாக வந்திருக்கிறது. நெல்லைத் தமிழில் எழுதும் ஆர்வம் மிகுந்து இருந்தால் விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கும், ‘சீவலப்பேரி பாண்டி’ நூலினை வாங்கி நான்கைந்து முறை படித்துப் பாருங்கள்.

  ஒரு நல்ல கதை எழுத்தாளர் கண்களுக்குத் தெரிகிறார். மனமார்ந்த பாராட்டுக்கள்.

 58. நல்ல நடை; கதையமைப்பு முறை நன்றாக வந்திருக்கிறது. நெல்லைத் தமிழில் எழுதும் ஆர்வம் மிகுந்து இருந்தால் விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கும், ‘சீவலப்பேரி பாண்டி’ நூலினை வாங்கி நான்கைந்து முறை படித்துப் பாருங்கள்.ஒரு நல்ல கதை எழுத்தாளர் கண்களுக்குத் தெரிகிறார். மனமார்ந்த பாராட்டுக்கள்.

 59. என்னாது இது கதையா?.. அட மெய்யாலுமே என் பெரிய தங்கச்சி பத்தி தான் சொல்லி இருக்கிங்கனு நெனைச்சேன்…. பின்னூட்டம் படிக்கிற வரைக்கும் இது கதையென்று எங்கும் நினைக்க தோனலை… கை குடுங்க அண்ணாச்சி… கரற்பனைன்னா இப்படி தான் ஏமாத்தனும்.. கலக்கல்.. வாழ்த்துக்கள் 🙂

 60. என்னாது இது கதையா?.. அட மெய்யாலுமே என் பெரிய தங்கச்சி பத்தி தான் சொல்லி இருக்கிங்கனு நெனைச்சேன்…. பின்னூட்டம் படிக்கிற வரைக்கும் இது கதையென்று எங்கும் நினைக்க தோனலை… கை குடுங்க அண்ணாச்சி… கரற்பனைன்னா இப்படி தான் ஏமாத்தனும்.. கலக்கல்.. வாழ்த்துக்கள் 🙂

 61. //பின்னூட்டம் படிக்கிற வரைக்கும் இது கதையென்று எங்கும் நினைக்க தோனலை//

  பாராட்டுக்கு நன்றி சஞ்சய்.

 62. அருமையாக இருக்கு. ஒங்க தின்னவேலி நடை நெம்ப நல்லா இருக்கு. கெட்டிமா அதப் புடிச்சிக்குங்க.

  எல்லாம் செரிதான். ‘சிறுகதை’னு லேபில் குடுத்தது சரியா?

 63. அருமையாக இருக்கு. ஒங்க தின்னவேலி நடை நெம்ப நல்லா இருக்கு. கெட்டிமா அதப் புடிச்சிக்குங்க.எல்லாம் செரிதான். ‘சிறுகதை’னு லேபில் குடுத்தது சரியா?

 64. //லதானந்த் said…

  அருமையாக இருக்கு. ஒங்க தின்னவேலி நடை நெம்ப நல்லா இருக்கு. கெட்டிமா அதப் புடிச்சிக்குங்க.//

  அண்ணாச்சி, ரெம்ப நன்றிங்க.

 65. //லதானந்த் said… அருமையாக இருக்கு. ஒங்க தின்னவேலி நடை நெம்ப நல்லா இருக்கு. கெட்டிமா அதப் புடிச்சிக்குங்க.//அண்ணாச்சி, ரெம்ப நன்றிங்க.

 66. நண்பரே, முதல் வருகை! பின்றீங்க! இன்னும் ஒரு வாசகன்!

 67. நன்றி அணிலன்

  நன்றி மணி, ஆனா என்ன சொல்றீங்கன்னுதான் புரியல.

 68. ரெம்ப நல்ல இருக்கு, நிறைய எழுதுங்கள், வாழ்த்துகள்!

 69. வருகைக்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி டாக்டர்

 70. சொல்றதுக்கு வெட்கமாத்தானிருக்கு.
  இது மாதிரில்லாம் படிச்சா நான் அழுதுடுவேன்.இங்கயும் அப்டித்தான். அருமை.

 71. சொல்றதுக்கு வெட்கமாத்தானிருக்கு.இது மாதிரில்லாம் படிச்சா நான் அழுதுடுவேன்.இங்கயும் அப்டித்தான். அருமை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s